நவீன சிகிச்சை மூலம் கருவை தேர்ந்தெடுக்க&

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
சிறப்பான கருவை உருவாக்கி அதில் மிகவும் சிறப்பான கருவை தேர்ந்தெடுப்பது எப்படி? எம்ப்ரியோஸ்கோப் என்பது மிகவும் அதிநவீன கருவி. இந்த இன்குபேட்டரில் கரு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இதில் கேமரா உள்ளதால் கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நிமிஷமும் பதிவு செய்ய முடியும்.

இதனால் வளர்ச்சியில் குறை இருந்தால் அதைக் கண்டுபிடித்து கருப்பையில் செலுத்தும் முன் சிறந்த கருவை தேர்ந்தெடுக்க முடியும். இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பை 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கலாம். கர்ப்பப் பையின் உட்புறச் சுவரின் ஒட்டும் தன்மையை அதிகரிப்பதற்கு எம்ப்ரியோக்ளு எனும் பசை உள்ளது.

இதைத் தவிர, ஹிஸ்டெரோஸ்கோப்பி மூலம் கர்ப்பப்பையின் உள் பகுதியை நோக்கி ஸ்கிராட்ச் டெஸ்ட் மூலம் சிறு அளவில் சதையை சுரண்டி எடுப்பதால் வளர்ச்சிக் காரணிகள் அதிகரித்து கரு கருப்பையில் ஒட்டி வளருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு விந்து, கரு, கருப்பை ஆகியவைகளின் ஆரோக்கியம் நவீன சிகிச்சை முறைகளாலும் நவீன சாதனங்களாலும் சிறப்பாக்கப்படுவதால் கர்ப்பமாகும் வாய்ப்பு 10-20 சதவீதம் அதிகரிக்கிறது. கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு 10 சதவீதம் குறைகிறது.

திருமணம் ஆன ஓர் ஆண்டுக்குள் கர்ப்பம் அடையவில்லையென்றால், மருத்துவரை அணுகலாம். முக்கியமாக மாதவிடாய் தாமதமாக இருந்தாலும், மிகவும் வலியோடு இருந்தாலும் தாம்பத்யத்தில் சிக்கல் இருந்தாலும் மருத்துவரை அணுகலாம்.

முக்கியமாக 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் காலம் தாழ்த்தாமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. எல்லோருக்கும் எவ்வளவு வயதானாலும் அவர்களுடைய முட்டைதான் வேண்டும் என்று நினைப்பது சகஜம். இன்றைய மருத்துகளும் உபயோகிக்கும் முறையில் உள்ள முன்னேற்றங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது.

"ஐவிஎஃப் லைட் ப்ரோட்டாக்கால்' என்ற முறையைக் கடைப்பிடித்து பிறகு 42 வயது வரை உள்ள பெண்களுக்கு தன்னுடைய முட்டையை உபயோகித்து கரு உருவாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. விந்தணு தரத்தை அதிகரிக்க மருந்துகளும் லாப்ரோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சையும் உள்ளன.

இதைத் தவிர, மிகவும் அதிநவீன (ஐ.எம்.எஸ்.ஐ) முறையினால் விந்தணுவை கணினி (கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் இமேஜ்) மூலம் 7000 மடங்கு பெரிதாக பார்த்து மிகவும் சிறப்பான விந்தை தேர்வு செய்யலாம்.
 

Attachments

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: நவீன சிகிச்சை மூலம் கருவை தேர்ந்தெடுக்&#29

Useful information! thank you Jaya!
 

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#3
Re: நவீன சிகிச்சை மூலம் கருவை தேர்ந்தெடுக்&#29

அறிவியல் பதிவு.......
சிறப்பான விஞ்ஞான வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு
நன்றி ஜெயா :)
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4
Re: நவீன சிகிச்சை மூலம் கருவை தேர்ந்தெடுக்&amp

Useful information! thank you Jaya!
Welcome sis.....
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
Re: நவீன சிகிச்சை மூலம் கருவை தேர்ந்தெடுக்&amp

அறிவியல் பதிவு.......
சிறப்பான விஞ்ஞான வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு
நன்றி ஜெயா :)
Welcome sis.......:)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.