நாக்குதான் மருத்துவர்! சுவைதான் மருந்து!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]நாக்குதான் மருத்துவர்! சுவைதான் மருந்து![/h]
நோய்கள் ஏற்படும்பொழுது நாக்கு என்ற மருத்துவர் மூலமாகச் சுவை என்ற மருந்தை உடல் எப்பொழுதும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் வித விதமான சுவைகளில் உணவைத் தேடுகிறார்கள்? கர்ப்பமான பெண்கள் சும்மா இருக்கவே முடியாது. அவர்கள் ஏதாவது ஒரு பொருளைச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதிலும், பொருளை மாற்றி மாற்றிச் சாப்பிடுவார்கள். “கர்ப்பிணிகளிடம் அவர்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ளுங்கள். அவர்கள் மனதுக்குப் பிடித்த உணவை வாங்கித் தாருங்கள்” என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதில் மிகப் பெரிய அர்த்தம் உள்ளது!


கர்ப்பப்பையில் குழந்தை உருவாகும்பொழுது எந்தெந்த உறுப்புகள் சேர்ந்து அந்த வேலையைச் செய்கின்றனவோ, அந்தந்த உறுப்புகளுக்கு சம்பந்தப்பட்ட சக்தி உடலில் குறையும். எந்த சக்தி குறைந்து விட்டதோ அது சம்பந்தப்பட்ட சுவையை நாக்குக் கேட்கும். இதனால்தான் அந்தப் பெண்கள் திடீரென்று இனிப்புச் சாப்பிட வேண்டும் போல் இருப்பதாகக் கூறுவார்கள்; சாம்பலை அள்ளிச் சாப்பிடுவார்கள்;

திடீரெனக் கீரை சாப்பிடுவார்கள். அவர்கள் நாக்கு எதையாவது சாப்பிட வேண்டும் போலவே இருக்கும். இரவு 2 மணிக்கு எழுந்து திடீரென எதையாவது எடுத்துச் சாப்பிடுவார்கள். ஏனென்றால், குழந்தை உருவாகும்பொழுது நம் உடம்பு சத்துப் பொருட்களையோ மருந்து மாத்திரைகளையோ கேட்பதில்லை; சுவைகளைத்தான் கேட்கிறது.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: நாக்குதான் மருத்துவர்! சுவைதான் மருந்த&#30

சுவைகள் நம் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமான மருந்துகள். எனவேதான் நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு, ‘சோறு கட்டிப் போடுதல்’ என்கிற ஒரு வைபவம் வைத்திருந்தார்கள். ‘சீமந்தம்’ என்று கூறுவார்கள்.
அந்த நேரத்தில் ஆறு வகைச் சுவையான உணவுகளைத் தயாரித்து அனைவருக்கும் பந்தியிட்டு மகிழ்ந்தார்கள். நாம் அனைவரும் அந்த விழாவிற்குச் சென்று நன்றாகச் சாப்பிட்டு விட்டு வருகிறோம். ஆனால், அது ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை இதுவரை யாரும் யோசித்ததில்லை. நாம் சாப்பிடுவதற்காக அந்தத் திருவிழா அல்ல, அந்தப் பெண் எந்தெந்தச் சுவையைக் கேட்கிறாளோ அவற்றையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை அந்தக் குடும்பத்தினருக்குப் புரிய வைப்பதற்காகவே.


இப்படி கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு அவர்கள் நாக்குக் கேட்கும் சுவையைச் சரியாகக் கொடுப்பது மூலமாக சுகப்பிரசவத்தையும், அழகான, ஆரோக்கியமான குழந்தையையும் பெற்று வந்தார்கள். ஆனால் இப்பொழுது, ஸ்கேனிங் வைபவம், ஆன்டி பயாடிக் வைபவம், மருந்து மாத்திரை வைபவம் என்று நடத்திக் கொண்டிருப்பதால் ஊனமான குழந்தைப் பிறப்பும், சிசேரியனும் நடந்து வருகிறது.

எனவே, யார் யாருக்கெல்லாம் நோய் வருகிறதோ அவர்களெல்லாரும் தங்களைக் கர்ப்பமான பெண்ணாக நினைத்துக் கொண்டு மனதிற்குப் பிடித்த மாதிரி, உங்கள் நாக்குக்குப் பிடித்த உணவுகளைத் தாராளமாகச் சாப்பிடுங்கள்! அப்பொழுதுதான் நோய்கள் குணமாகும்.

கசப்பு, துவர்ப்பு என்ற இரு சுவைகளை நாம் பொதுவாகச் சாப்பிடுவதில்லை. இனிப்புச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள். உப்புச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் எகிறிவிடும் என்கிறார்கள். காரம் சாப்பிட்டால் தோல் நோய் வருமென்று கூறுகிறார்கள். புளி சேர்த்தால் மூட்டு, முழங்கால் வலி வருமென்று கூறுகிறார்கள். இப்படி, இருக்கும் ஆறு சுவைகளையும் ஒவ்வொரு காரணம் காட்டி மருத்துவர்கள் சாப்பிட வேண்டாம் எனக் கூறுகிறார்களே, நாம் எதைத்தான் சாப்பிடுவது? எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் அதில் ஆறு சுவைகளில் ஏதோ ஒரு சுவை மிகுதியாகவோ, குறையாகவோ இருக்கும். இப்படி ஒவ்வொரு சுவையும் வேண்டாமென்று கூறினால் நாம் பட்டினிதான் கிடக்க வேண்டும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: நாக்குதான் மருத்துவர்! சுவைதான் மருந்த&#30

எனவே, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். எந்தச் சுவைக்கும், எந்த நோய்க்கும் சம்பந்தமே கிடையாது! உங்கள் நாக்குதான் மருத்துவர்! சுவைதான் மருந்து! எனவே, நீங்கள் எந்தச் சுவையைச் சாப்பிட வேண்டும், எந்தச் சுவையைச் சாப்பிடக் கூடாதென்று எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. அவரவர் நாக்குக்கு மட்டுமே தெரியும். இனிப்பான பொருளை வாயில் வையுங்கள். பிடித்திருந்தால் சாப்பிடுங்கள்.

பிடிக்கவில்லையென்றால் சாப்பிட வேண்டாம். மறுபடியும் பிடித்தால் இன்னொரு இனிப்பைச் சாப்பிடுங்கள். மூன்றாவது இனிப்பைச் சாப்பிடும்பொழுது நாக்குத் திகட்டும். அப்பொழுது நிறுத்திக் கொள்ளுங்கள். நாக்குத் திகட்டிய பிறகு இனிப்புச் சாப்பிட்டால் உங்களுக்கு இனிப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரும்.
அதேபோல், உப்பு உணவில் அதிகமாக இருந்தால் சாப்பிட முடியுமா? முடியாது. ஆனால், குறைவாக இருந்தால் சாப்பிடுகிறோமே!

அந்தக் காலத்தில், சாப்பிடும்பொழுது இலையில் உப்பு வைப்பார்களே, அது எதற்கு? நீங்கள் உணவைச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்; உப்புக் குறைவாக இருந்தால் உங்கள் நாக்குக்கு எவ்வளவு உப்புச் சாப்பிட்டால் நன்றாக இருக்குமோ அதை நீங்கள் உங்கள் சாப்பாட்டில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பலர், சாப்பிடும்பொழுது உப்புக் குறைவாக உள்ளதென்று மொத்தத்திலும் உப்பைக் கொட்டுகிறார்கள்.

ஒவ்வொருவருடைய நாக்கின் சுவையும் வேறுவேறாக இருக்கும். நம் நாக்குக்கு ஒரு சுவை அதிகமாக, குறைவாக இருக்கிறதென்றால், அடுத்தவர்களுக்கு அதேபோல் இருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. எனவே, சமைக்கும் பொழுது உப்பு, புளி, காரம் அனைத்தையும் அளவாகச் சேர்த்து செய்யுங்கள். அவரவர்களுக்கு உப்புத் தேவையென்றால் அவரவர் உணவில் மட்டுமே அவரவர் உப்புச் சேர்த்துக் கொள்ளலாம். காரம் தேவையென்றால் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி அவரவர் தட்டில் மட்டுமே சுவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காகத்தான் பலவிதமான பொரியல், அவியல், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை நமது முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: நாக்குதான் மருத்துவர்! சுவைதான் மருந்த&#30

எனவே தயவு செய்து, இனிமேல் யாரும் எந்தச் சுவையைப் பார்த்தும் பயப்படாதீர்கள்! சுவைகளனைத்தும் நமக்கு நல்லது செய்வதற்கு மட்டுமே உள்ளன.

ஆனால், உங்கள் நாக்குத் திகட்டிய பிறகு அல்லது உங்கள் நாக்குக்குப் பிடிக்காத எந்தச் சுவையையும் சாப்பிடாதீர்கள்! நாக்குதான் மருத்துவர். சுவைதான் மருந்து என்பதைப் புரிந்து கொண்டு இனி நாக்குக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுங்கள்! நோயின்றி வாழலாம்.

சர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சாப்பிடுங்கள், ஒன்றும் ஆகாது. இரத்த அழுத்த நோயாளிகள் உங்கள் நாக்குக்குத் தேவைப்படும் அளவுக்கு உப்புச் சாப்பிடுங்கள், உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும். இப்படி எந்தச் சுவையையும் ஒதுக்காமல் உங்கள் நாக்கு எதைக் கேட்கிறதோ, அதைச் சாப்பிடுவது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

நன்றி – ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.