நாத்தனாருடன் நல்ல உறவு - Good relations with Sister in law

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#1
நாத்தனாருடன் நல்ல உறவு

கீழே உள்ள ஆலோசனைகள் , புதிதாக கல்யாணம் ஆகும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் , அனைத்து திருமணமான பெண்களுக்கும் உதவக்கூடும் .

பெண்களே , உங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனவுடன் , உங்களுக்கு வரக்கூடிய வருங்கால மாமியார் மற்றும் நாத்தனார், இவர்களைப் பற்றி ஒரு வித பயத்தை உண்டுபண்ணி இருப்பார்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் .

ஆனால் அவர்கள் எண்ணப்படி நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை .

நீங்கள் உங்கள் திருமணத்திற்கு முன்னரே, எந்த ஒரு நிலைமையையும் சமாளிக்க உங்கள் மனதைத் தயார் செய்துவிட்டால் , கிஞ்சித்தும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை .

இந்த ஆலோசனைகள் நான் ஆங்கிலத்தில் கொடுத்துள்ள
Tips to maintain good relations with SILதிரியின் தமிழாக்கம் .

 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
நாத்தனாருடன் நல்ல உறவில் இருக்க உங்களுக்கான ஆலோசனைகள் இதோ :

** உங்களுக்கு கல்யாணம் நிச்சயமானவுடன் , உங்கள் வருங்கால கணவருடன் பேசும்போது , அவருடைய அக்கா அல்லது தங்கையின் படிப்பு , வேலை, அவர் கல்யாணம் ஆனவரா , அவரது இருப்பிடம் போன்ற அனைத்து விவரங்களையும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் .

**அடுத்ததாக , உங்கள் நாத்தி உங்களுடன் பேச விரும்பினால் தயங்காமல் அவருடன் பேசி வரவும் .

** உங்கள் கல்யாணத்திற்கான பொருட்கள் வாங்கும்போது அவரும் தன் பெற்றோருடன் கடைகளுக்கு வரலாம் . அப்போது உங்கள் நட்பான புன்னகையை அவர் மீது வீசி, சிறு சிறு விசாரிப்புகளை வைத்துக் கொள்ளலாம் .

**இதனால் உங்கள் புகுந்த வீட்டினருக்கு உங்கள் மீதான மதிப்பு கூடும் .

**கல்யாணத்திற்குப் பிறகு , உங்கள் வயதை ஒட்டிய நபராக இருக்கக் கூடியவர் , நீங்கள் தோழமை பாராட்டக் கூடிய நபர் ,(மாமியார் , மாமனார் இதர பலரின் மத்தியில்), உங்கள் நாத்தனார் மட்டுமே என்பதை மனதில் கொள்ளவும் . அதனால் அவரை முதலிலிருந்தே நட்புடன் அணுகவும் .

**ஒருவேளை அவர் உங்களை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் பரவாயில்லை . அவரிடம் மரியாதை கலந்த நட்புடன் பழகுங்கள் .என்ன இருந்தாலும் உங்கள் தலைமுறையைச் சேர்ந்தவர் அவரே .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3

**என்னதான் மிகுந்த நட்புடன் பழகினாலும் , கல்யாணம் ஆன புதிதிலேயே, உங்கள் பிறந்த வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் விலாவரியாக அவருடன் பகிர்ந்து கொண்டுவிட வேண்டாம் .

**ஆரம்பத்தில், உங்கள் படிப்பு , நண்பர்கள் (இங்கேயும் கவனம் தேவை – உங்களுக்கு ஆண்கள் நண்பர்களாக இருப்பின் , அவர்களைப் பற்றி இவரிடம் சொல்லவே வேண்டாம். இதனால் பின்னால் பிரச்சினைகள் எழ வாய்ப்புகள் உருவாகலாம் ), வேலை, விருப்பு வெறுப்பு , போன்றவற்றையும் அறிந்து கொள்ளவும் .

** அதே போல அவரது அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளவும் . இதில் முக்கியமாக , அவரது விருப்பு வெறுப்புகளைப் பற்றி எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவும் .

**என்னதான் நட்புடன் பழகினாலும் , அவரிடம் குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி புகார் கூறுவதோ , அவர்களைப் பற்றிக் கிண்டல் செய்வதோ , ஏன் , உங்கள் குடும்பத்தினரைப் பற்றி குறை , கிண்டல் போன்றவற்றையோ கூட மேற்கொள்ள வேண்டாம் . பின்னர் ஏதேனும் ஒரு சமயத்தில் , உங்கள் குடும்பத்தினரை அவர் கேலி செய்து பேசினால் , உங்கள் மனம் நிச்சயம் நோகும் .

**கல்யாணத்திற்கு பிறகு , ஒரு மாதம் உங்கள் கணவருடன் நீங்கள் தனியாக வெளியிடங்களுக்கு சென்று நன்றாக அனுபவித்த பிறகு , உங்கள் நாத்தனாரையும் அடுத்து நீங்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைக்க மறக்க வேண்டாம் .

**நீங்கள் கடைகளுக்கு செல்லும்போதெல்லாம் அவரையும் அழைத்துச் சென்று , உங்களுக்கு வாங்கும் பொருட்களைப் போன்றே அவருக்கும் வாங்கித் தாருங்கள் .

**அவரது பிறந்தநாளை மறக்காமல் , எதிர்பாராத அன்பளிப்புகளை அளித்து அசத்துங்கள் .

**அவர் உங்களை விட வயதில் சிறியவராக இருப்பின் , எப்போதாவது மட்டுமே அவருக்கு சிறு சிறு ஆலோசனைகளை வழங்கவும் . இல்லாவிட்டால், அடிக்கடி ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தால், அவர் உங்களைத் தவிர்க்கக்கூடும்.

**அவர் படித்துக் கொண்டிருப்பவராக இருந்தால் , அவரது படிப்பில் உங்களால் முடிந்த அளவில் உதவலாம் .

**ட்யூஷன் வகுப்புகளுக்கு அவருடன் துணைக்குச் செல்ல வேண்டிய தேவையிருந்தால் , தவறாமல் சென்று வரவும் .
**படிப்பு , பாடங்களைப் பற்றி அவ்வப்போது விசாரித்துக் கொண்டும் , பரிட்சையின் போது அவருடன் கூட அமர்ந்துகொண்டும் உற்சாகத்தை கொடுக்கலாம் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4

**அவரது கல்யாணத்தின் போது, பொருட்கள் வாங்குவதற்கு உதவியும் , கல்யாண வேலைகளில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக் கொண்டும் , உங்கள் துணையை அவருக்கு உறுதிபடுத்தும் விதமாகவும் நடந்துகொள்ளலாம் .

**அவரே திருமணமானவராக இருந்தால் , வாரம் ஒரிரு முறையாவது போனில் அவருடன் பேசி நட்பை வளர்க்கலாம் .

**அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் நலனை விசாரிக்கலாம் .

**உங்களது சமையல் குறிப்புகளை அவருக்கும் , அவரிடமிருந்து நீங்களும் சமையல் குறிப்புகளை பரிமாறிக்கொள்ளலாம் . அவரது குறிப்புகளை நீங்கள் அறிந்து கொள்ளும்போது அவருக்கு மிகவும் திருப்தியாக இருக்கும் .

**நீங்கள் இருக்கும் ஊரிலேயே அவரும் இருந்தால் , மாதம் ஒரு முறையாவது உங்கள் மாமியார் அல்லது கணவருடன் அவரது வீட்டிற்குச் சென்று சந்திப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் .

**வெளியூரில் அவர்கள் இருப்பாராயின் , வருடத்திற்கு ஒரு முறை என்பது போல சென்று தங்கி வரவும் . இதில் ஒன்றை கவனிக்க வேண்டும் . உங்கள் குடும்பத்தினர் வந்து அதிக நாட்கள் தங்குவதை அவர் விரும்பாவிட்டால் , வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே அவரது வீட்டில் தங்குமாறு பிளான் செய்து கொள்ளுங்கள் .

**அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்தாலோ நீங்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்றாலோ , அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் சிறிய அளவிலாவது ஏதேனும் அன்பளிப்புகளை வழங்க மறக்காதீர்கள் . அவை விலை உயர்ந்ததாக இருக்க வேண்டியது அவசியமே இல்லை . இதனால் நீங்கள் அவர்கள் பால் வைத்திருக்கும் அன்பு வெளிப்படும் .

**ஒருவேளை உங்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் உங்கள் நாத்தி தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி , அதனால் உங்கள் மாமியார் மாமனார் உங்களை வசைபாட நேர்ந்தால் , நீங்கள் அதற்கு உடனே பதிலளிக்காமல் பேசாமல் இருந்துவிடுங்கள் . சிறிது நேரம் பொறுத்து, உங்கள் செயலில் உள்ள நியாயம் /உண்மை நிலையை தன்மையாக அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் .இதனால் அவர்களுக்கு உண்மை நிலை புரிய வரலாம் . தங்கள் பெண்ணையும் கண்டிக்க வாய்ப்புண்டு . ஒருவேளை அவர்கள் உங்கள் கூற்றை புரிந்து கொள்ளாமல் போனாலும், அதற்காக வருந்தாமல் , இதை , உங்கள் மாமியார் மாமனார் , நாத்தனார் ஆகியோரைப் பற்றிப் புரிந்து கொள்ள அமைந்த ஒரு நல்ல சந்தர்ப்பமாக எண்ணி , இனிமேல் இவர்களிடம் விஷயங்களை பகிரும்போது கவனமாக இருக்க வேண்டியதை உணருங்கள் .

**ஒருவேளை உங்களைப் பற்றி உங்கள் கணவரிடம் , உங்கள் நாத்தனார் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி , அதனால் உங்கள் கணவர் அவர்கள் எதிரிலேயே உங்களிடம் சண்டை வளர்த்தால். அதற்கும் உடனே நீங்கள் திருப்பி சண்டை போடாமல் பேசாமல் இருந்துவிடவும் . சிறிது நேரம் பொறுத்து, உங்கள் அறைக்குச் சென்று , உங்கள் கணவரிடம் அனைத்து விஷயங்களையும் விலாவரியாக விளக்கி , உங்கள் மீது எந்த தவறும் இல்லை எனவும் , இனிமேல் தயவுசெய்து மற்றவர் எதிரில் உங்களை எந்தக் குறையையும் கூற வேண்டாம் , தனியறையில் என்ன வேண்டுமானாலும் சொல்லவும் எனவும் கேட்டுக் கொள்ளுங்கள் .

**அதே போல உங்கள் கணவரிடம் மற்றொன்றைக் கூறவும் . உங்கள் மாமியார் , மாமனாரோ , நாத்தனாரோ வேறு யாருமோ உங்களைப் பற்றி அவரிடம் குறை கூறினால் ,அடுத்த நிமிடம் கோபத்தில் கொந்தளிக்காமல் , தான் பின்னர் தன் மனைவியிடம் அதைப் பற்றி விளக்கம் கேட்பதாக சொல்லிவிட்டால் , நிலைமை விபரீதமாகாமல் தடுத்து விடலாம் என்று முதலிலேயே புரியவைத்து விடுங்கள் .

**உங்கள் நாத்தனாரைப் பற்றி உங்கள் கணவரிடம் எப்போதும் குறை கூறிக் கொண்டிருந்தால் , உங்களைப் பற்றி ஒரு கெட்ட எண்ணம்தான் உருவாகும் . நாத்தனாரிடம் உள்ள நல்லனவற்றை அவ்வப்போது , கணவரிடம் கூறிக்கொண்டு இருந்தால் அவர் மனம் குளிரும் . அதே சமயம் , நாத்தனாரிடம் உள்ள கெட்ட குணங்களை அவர் கொஞ்சம் முயன்றால் மாற்றிக் கொள்ளலாம் என்பதை மென்மையாகக் கூறலாம் .

**இப்படிச் சொல்வதால் , ஒருவேளை உங்கள் கணவர் தானாகவே தன் அக்கா /தங்கையிடம் அவரது குறைகளை களையும் முறைகளை எடுத்துச் சொல்லலாம் . முதலிலேயே உங்கள் கணவரிடம் , இந்த அறிவுரைகளை வழங்கும்போது , எந்த ஒரு இடத்திலும் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு விடவேண்டாம் என்று வேண்டிக்கொள்ளவும் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5

**உங்கள் மாமியார் –மாமனாரின் பிறந்த நாள் , திருமண நாள் கொண்டாட்டங்கள் , பரிசளிப்புகள் ஆகியவற்றில் , உங்கள் நாத்தனாரையும் இணைத்துக் கொண்டால் , உங்களது அக்கறை , அன்பு ஆகியவற்றைக் கண்டு நன்மதிப்பு கிட்டும் .

**அவர் உங்களை விட வயதில் பெரியவரோ சின்னவரோ , எப்போதும் அவருடன் நாத்தனார் என்கிற ஸ்தானத்தை விட நட்பாக இருப்பதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை எடுத்துச் சொன்னால் உங்கள் மீதான நட்பும் மரியாதையும் நிச்சயம் கூடும் .

**உங்கள் நாத்தனாரின் குழந்தைகள் , உங்கள் குழந்தைகளை அடித்தோ கடித்தோ விட்டால் , நீங்கள் உடனே அந்தக் குழந்தைகளை அடிக்காமல் , அவர்களிடம் , யாருக்குமே மற்றவர் அடித்தால் கடித்தால் மிகவும் வலிக்கும் , இதே போலத்தான் உங்கள் குழந்தைகள் அடித்தாலும் அவர்களுக்கும் வலிக்கும் என்பதை புரியவையுங்கள் .

**இதைப் போன்ற சம்பவங்கள் எல்லாரது குழந்தைப் பருவங்களிலும் சகஜமானவை என்பதை உங்கள் மற்றும் அவரது குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் . இதை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றிவிட வேண்டாம் .

**ஒருவேளை உங்கள் நாத்தனார் இது போன்ற விஷயத்தை பெரிய பிரச்சனையாக நினைத்தால் , அவரிடமும் இதையே சொல்லி , நீங்கள் இதை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்பதை விளக்கிவிடவும்.

** ஒருவேளை உங்கள் நாத்தனார், தன்னுடைய கணவர் , மற்றும் புகுந்த வீட்டினரைப் பற்றி உங்களிடம் குறைகளைக் கூறினால் , அதைக் கேட்டுக்கொள்வதை மட்டுமே நீங்கள் செய்யுங்கள் . எந்த ஒரு அறிவுரைகளையும் வழங்க வேண்டாம் . வீட்டிலுள்ள பெரியவர்கள் அதைச் செய்யலாம் . அதே சமயம் இந்த விஷயத்தில் உங்கள் ஆலோசனைகளை, உங்கள் கணவரிடம் மட்டுமே சொல்லவும் . அவர் அதை தன் பெற்றோர் மற்றும் சகோதரியிடம் சொல்லி தகுந்த தீர்வுகளைக் காணட்டும் . உங்களின் நேரடி தலையீட்டை புகுந்த வீட்டினர் விரும்ப மாட்டார்கள் .

**எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்கள் நாத்தனாரிடம் அவரின் கணவரைப் பற்றியோ புகுந்த வீட்டினரைப் பற்றியோ குறையாகக் கூறி விட வேண்டாம் .பிறிதொரு நாளில் உங்களுக்கே அது வினையாக முடியலாம் .

**உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாத்தனார்கள் இருந்தால் , ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் கோள் சொல்லிவிட வேண்டாம் . அனைவரிடமும் ஒரே போல அன்பாகவே பழகி வரவும் .

**அவர் மற்றும் அவரின் குடும்பத்தார்க்கு ஒரு நெருக்கடி நேரிட்டால் , முதல் ஆளாகச் சென்று வேண்டிய உதவிகளை உடனடியாகச் செய்யவும் .

**உங்கள் இருவருக்கும் என்றேனும் ஏதேனும் கருத்து வேற்றுமைகள் ஏற்படுமாயின் , அவரது பக்கத்தை அவர் விளக்கினால் , அதைக் காது கொடுத்து கேட்டுவிட்டு பிறகு உங்கள் தரப்பையும் எடுத்துச் சொல்லி , சுமுகமாக பிரச்சினையை முடிக்கப் பாருங்கள் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#6
ஆகவே , உங்கள் நாத்தனார்(கள் ) சம்மந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் , அதை எளிதாக கையாள உங்களால் நிச்சயமாக முடியும் என்பதை திடமாக நம்பி இறங்குங்கள் . அவர்கள் முதலில் சுமுகமாக இல்லாவிட்டாலும் , உங்களின் அன்பான நடவடிக்கைகளினால் தங்கள் எண்ணங்களை மாற்றி கொண்டுவிட வாய்ப்புகள் அதிகம் . இவ்வாறு நீங்கள் உங்கள் நாத்தனார்களுடன் நல்உறவைப் பேணலாம் .


மொத்தத்தில் உங்கள் நாத்தனார்களையும் உங்கள் சகோதரிகளாகவே பாவித்தால் நல் உறவு நீடிக்கும் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.