நானும் நான்மாடக்கூடலும்

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,808
Likes
12,315
Location
Chennai
#1
Chennai to Madurai


என் முதல் தனி பயணம்:


“முதல்” என்னும் வார்த்தை தன் தலையில் சுயகிரீடம் சூடி கொண்டே அலையும் தன்மையுடையது:). “புரிந்துணர்வு” என்று ஒரு அழகிய சொல் உண்டு நம்மொழியில். பயண கதையில் சொல்லாராய்ச்சியா என்று யாரும் பதறாதீர்கள்:oops::rolleyes:.

இயற்கையின் ஆசீர்வாதத்தால் உணரும் அடிப்படை தேவை சார்ந்த பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை taken for granted ஆக நினைப்பதால் இதெற்கெல்லாம் நாம் தனி முக்கியத்துவம் தருவதில்லை. விருப்பு-வெறுப்பு எனும் இருமை உணர்வுகளை ஓரளவுக்கு நாம் பகுத்துணர்ந்து புரிந்து கொள்ளும் பருவத்தை எட்டும் பரிணாம வளர்ச்சி கால கட்டத்தில் தான் இந்த “முதல்” என்னும் வார்த்தை ஒரு Elite status அடைகிறது என்று நினைக்கிறேன்.


நாம் உள்ளிழுத்த முதல் மூச்சு, பார்த்த முதல் காட்சி, நுகர்ந்த முதல் வாசம், ருசித்த நாவின் முதல் சுவை, கேட்ட முதல் குரல், ஸ்பரிசித்த முதல் தீண்டல், மேனியில் பதிந்த சுகந்தமான முதல் முத்தம், மனதின் முதல் எண்ணம், இப்படியாக நம் வாழ்கையின் பெரும்பாலான “முதல்களின்” உணர்வை நம்மால் நினைவுகூற முடியாது என்பதே இந்த முதல் எனும் வார்த்தைக்கு இத்துணை சிறப்பு சேர்க்கிறதோ!!!!!

புரிந்துணரவியலா விடயங்களின் மீது இயல்பிலேயே நமக்கிருக்கும் சுவாரசியமும் கூட “முதல்” எனும் வார்த்தை தனிசிறப்பெய்துவதற்கு ஒரு காரணியாக இருக்கலாமோ என்றெண்ண தோன்றுகிறது:).புறப்பாடு புராணம்:

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த உலகமயமாக்கல் வாழ்கையில் பயணங்கள் என்பது தவிர்க்கவியலா நிகழ்வாகிவிட்டது. சொந்த வேலையாகவோ அல்லது பணி நிமித்தமாகவோ நான் இதுவரை செய்த நெடுந்தூர பயணங்கள் அனைத்திலும் நட்போ, உறவோ என்று யாரேனும் என்னுடன் வருவர். போன மாதம் முதன் முதலாக மதுரை வரை தனித்த பயணம் போக ஒரு சூழல் கூடி வந்தது.

1.40 p.m புறப்படும் விரைவு இருப்பூர்திக்கு ( Express Train) மதியம் 1.00 மணி வரை வீட்டிலேயே சாவகசமாக பொழுதை கழித்து கடைசி நிமிடம் வண்டியை பிடித்தேன். நான் கடைசி நிமிடம் தான் வருவேன் என்று துப்பறிந்தோ என்னவோ என்னை பழிவாங்கும் விதமாக ரயிலின் கடைசி பெட்டியில் எனக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஓடும் தொடர்வண்டியினுள் நடை பழகி ஒருவாறு என் இடத்தை தேடி பிடித்து அடைந்த போது எனது உடலின் வியர்வை ஊற்றில் நான் தீர்த்தவாரி ஆடியிருந்தேன்:cry:.

தடதடவென்று ஓடிய தொடர்வண்டியினுள் ஒலித்த சலசலவென்ற மாந்தர் குரலோசைக்கு ஈடாக இதயம் படபடவென்று அடிக்க யாம் அமர, இளைப்பாறலோடு இனிதே தொடங்கியது பாண்டிய தேச பயணம்;);).நெளிந்து வளைந்தோடிய பாம்பூர்தி பயணம்:

ஓடும் வண்டியின் பின்னனிசைகேற்ப, நம் மக்கள் அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு தங்களின் வாயினால் சுருதி சேர்க்க, வாசனையின் வாசகியாக மட்டுமே எனது நுகர்தல் நேர்த்திகடனை யான் நிறைவேற்றியபடி, எனது சாளர இருக்கையில் (Window seat) சாய்ந்து இமைமூடி சிறிது ஓய்வெடுக்க, மழலைகுரலின் சுந்தர தெலுங்கில் என் கவனம் கலைந்தேன். என்னருகே அமர்ந்து இருந்த பெண்மணியின் மடியில் இருந்த பெண் குழந்தை தானும் ஜன்னலின் அருகே நின்றுகொண்டு வருவேன் என்று உரையாடி கொண்டே என்னை உரசியபடி கம்பியை பிடித்து நின்று கொண்டாள். அவளின் அம்மாவை தவிர மற்றவரிடம் பேசா விதியை பின்பற்றியவள் அவ்வபோது என்னை பார்த்து சிரிக்க மட்டுமே செய்தாள்.

அவளுடன் சேர்ந்து வழக்கம்போல் என் வாடிக்கையான வேடிக்கை பார்க்கும் படலத்தை செவ்வனேயாற்ற, இடையில் ஒரு நிறுத்தத்தில் வண்டி நிற்க
“ம்மா... ம்மா.. இக்கட சூடு, ட்ரைன்க்கு டயர் உந்தி” என்று தனது கண்டுபிடிப்பை தாயிடம் பகிர்ந்து கொண்டாள் அந்த 3 வயது மழலை:cool:.

குழந்தைகளின் உற்றுநோக்கல் திறன் எப்போதும் போல் வியப்பையும், மகிழ்வையும் ஒருசேர உண்டாக்கியது என்னுள். வளர வளர நமது நுண்ணுணர்வும், ஆர்வமும் அதி வேககதியில் எவ்வாறு தொலைகிறது??:unsure:

(நான்லாம் ஏழு குட்டி குரங்கு வயசாகி அன்னைக்கு தான் train wheel கவனிச்சி பார்த்தேன்...அதற்கப்புறம் ஏக கற்பனை எனக்குள்ள, அதையெல்லாம் சொன்னா என் மேல கரப்பான்பூச்சி விட்ருவீங்க எல்லாரும்:p:p)அந்தி சாய தொடங்கி அச்சிறுமி உறக்கத்திலாழ, நானும் Shiva Trilogy திறந்து படிக்க தொடங்கி ஒருவாறு கதையில் ஒன்ற முயலும்போது மறுபடியும் ஒரே பரபரப்பு, களேபர கூச்சல். பகல் பயணம் வேண்டுமென்பதால் செகண்ட் சிட்டரில் வந்தது தவறோ என்று ஏற்கனவே உள்ளுர அசௌகரியமாக உணர்ந்த எனக்கு இந்த களேபர கூச்சல் வெறுப்பை கூட்டியதில் என்னவென்று கவனிக்க, ஒரு பெண்மணி தன் கணவரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு "Chain-னை இழுத்து train-ஐ நிறுத்து" என ரைமிங்காக உச்ச சத்தத்தில் கத்தி சண்டையிட்டு கொண்டிருந்தார்.

அப்பெண்ணின் குரல் தொனியும், வார்த்தைகளின் வீச்சும் அவரது மனசுமையின் அழுத்தத்தை பட்டவர்த்தனமாக காட்ட, பொதுவெளி தந்த பாதுகாப்பு போர்வையில் தன் குமுறல்களுக்கு வடிகால் தேடும் விதமாக அவருடைய கணவரை நெருக்கடியில் தள்ளி இருவருக்கிடையேயான கணக்கை சமன் செய்கிறார் என்று புரிந்த போது கஷ்டமாக உணர்ந்தேன்.

பொதுயிடத்தில் நம்முணர்ச்சிகள் கட்டிழந்தால் மனித வாழ்க்கை கேலிப்பொருள் தான் என்று மற்றுமொருமுறை எனக்கு நிரூபிக்கும் விதமாக , ஏனைய சக மனிதர்கள் நக்கல் நகைப்போடும், கோபத்தோடும், ஒருவித ஒவ்வாமையோடும் அந்நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றியதை கண்ட போது என்னுள் மனித மனதின் அறியாமை குறித்து பெரும் பரிதாபமே எழுந்தது.

ஒருவாறு நிலைமை கட்டுக்குள் அடங்கியபின், எனக்கு புத்தகம் படிக்கும் மனநிலை முற்றும் தொலைந்து “ ஷப்பா எப்போடா ஈஸ்வரா உன் மண்ணை தொடுவேன்” என்ற வேண்டதலுடன் காலதர் கம்பியின் (window grill) மீது தலைசாய்த்து, பௌர்ணமி நிலவோடு உலா சென்றபடியே காலத்தை நெட்டி தள்ளி திருச்சி நெருங்குகையில், பசியுணர்வு என் சிந்தனைகளை சாப்பிட தொடங்க, இந்திய ரயில்வேயின் நளபாகத்தை ருசிபார்க்கும் விதமாக இரு தோசைகளை வாங்கி வாயுவேகத்தில் வயிற்றினுள்ளிட்டேன். திண்டுக்கல், கொடை ரோடு என இயற்கை தன்னிருப்பை எனக்கு உணர்த்தும் விதமாக வாடைகாற்றும், இளங்குளிரும், சாரல் மழையுமென எனது உடலூறி விளையாடிய வண்ணம் தமிழ் நீர் ஊறிய பாண்டிய நன்னிலத்தில் பாதம் பதித்த போது இரவு மணி சுமார் 9.15:love::love::love: .

-பயணம் தொடரும்
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,808
Likes
12,315
Location
Chennai
#2
@gkarti and @RathideviDeva

Un uru perumaiyai pada poren poren poren.....porkizhi, puthaiyal, maalai, mariyathai ellam ready paniko paniko soliten @mollllllll:love:;);)

Gurusamy @ Sissy ipdi mouna vratham irunthavala senti ah seendi vituteengalay...ippo vilaivugalai anubavinga:p:p;)
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,148
Likes
14,794
Location
California
#4
Thooya Thamizhla polandhu katringa. Andha thani train payanatha innum detaila ezhudhi irukkalaam. Maybe neenga book padikkaama suthi muthi nigal ulagathula irundhirundha mayba suvarasyamaana rayil payanamaa kooda amaindhirukkalaam
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,028
Likes
37,708
Location
karur
#5
பயணம்

ஒவ்வொரு நிமிடத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தருணங்கள் அவை . தன்னை தொலைத்து அந்த சனத்தில் கலந்து கரைந்து போகும் சுகமான அனுபவம் .

காத்திருக்கிறோம் அடுத்த அனுபவத்திற்கு :):love:
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,028
Likes
37,708
Location
karur
#6
ரதி சொன்னது போல் நிழல் மாந்தர்களை விட நிஜ மனிதர்கள் இன்னும் சுவாரசியமானவர்கள் .....தொடர்வண்டியும், பயண ஊர்தியும் இன்னுமொரு பல்கலைகழகம் என்றே கூறலாம். வாழ்க்கையை கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,808
Likes
12,315
Location
Chennai
#8தங்கமீனாள் தரிசனம்

திரிலோக அரசியும், அவளின் உடையவரையும் தரிசித்த பின்பு தான் மற்ற இடங்கள் செல்ல வேண்டும் என்று முன்தீர்மானம் செய்திருந்தபடியால், பயண அலுப்பு தீர்ந்த மறுதினம் மாலையே நான் பார்த்த திருத்தலம் அங்கையற்கண்ணி - சொக்கநாதர் உறைமாளிகை தான்.

மெய்யுணர்சார் குறியீடு

வள்ளற் பெருமான் பிரம்ம அண்டம்,விஷ்ணு அண்டம், ஈசன் அண்டம், சதா சிவ அண்டம்.......... என்று பிரபஞ்ச வெளி பற்றி நெடுங்கணக்கு வாய்ப்பாடுடன் கூடிய வரையறை ஒன்று தந்துள்ளார்
(பொறுமையும், ஆர்வமும் இருப்பவர் தேடி படித்தறிந்து கொள்க).
நம் அறிவியலும் இத்தேடலை இடைவிடாமல் நடத்தி கொண்டே தான் இருக்கிறது.

நம்மறிவுக்கு சவால் விட்டு தன் ரகசியங்களை இலக்கம் எண்ணி எண்ணி ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்ளும் இப்பிரம்மாண்ட பேரதியச அண்டத்தின் குறியீட்டு வடிவம் தான் நம் மூதாதையர்கள் நமக்கு விட்டு போன பெருங்கோவில்கள். தெய்வம், பக்தி சார்ந்த நம்பிக்கைகள் ஏதுமின்றி கூட, வெறும் திறந்த மனதோடு மட்டும் மனிதர்கள் நமது கோவில்களினுள் நுழையும்போது அங்கே அனுபவிக்கும் ஏகாந்த நிலை என்றுமே, எங்குமே அவ்வளவு சுலபத்தில் கைகூடாது.

எல்லையின்றி எங்கும் வியாபித்திருக்கும் சக்தியே பிரபஞ்சமெனும் பிரமாண்டம் என்று நம் மெய்ஞானிகளும், விஞ்ஞானிகளும் ஏற்றுகொண்டதின் சாட்சியாக உயரத்தோடும், உறுதியோடும் நிலமகள் மடியேந்த கம்பீர பொலிவோடு காட்சியளிக்கிறது அன்னை மீனாட்சியம்மன் திருக்கோவில்:love::love:.


தாய் மட்டும் தான் சேய் தாங்க வேண்டுமா என்ன?

மகளின் மடியில் அளவளாவும் அன்னையும் கூட பேரழகு அன்றோ!!!:)


அதிஉயர் மேல்தளங்கள்(Ceiling) அழகையும் பிரம்மிப்பையும் தரவல்லது என்பது கட்டிடக்கலையின் பாலபாடம். அதை மெய்ப்பிக்கும் விதமாக கையில் கட்டிகொள்ளா முடியாத செழுமையான தூண்களும், பார்ப்போரின் மனதையும், கண்களையும் கட்டியிழுத்து ஒருசேர அதிரடிக்கும் கட்டிடத்தின் உயர் மேல்தளங்களும், நடை பழக ஆசை தூண்டும் நீள் பிரகார அமைப்பும் என எல்லாம் என் எண்ண சுழலின் வேகத்தை பெருமளவு குறைத்து விட்டன.
கோவில்கள் மட்டுமல்ல தேவாலயங்களும், மசூதிகளும் விண்ணோடு கதை பேசுவதன் அர்த்தமும் மர்மமும் அன்று விளங்கியது எனக்கு.

நமது கோவில்களின் விலைமதிக்கவொண்ணா பொக்கிஷ கலைசெல்வங்களான சிலைகளும், நுண்ணிய கட்டமைப்பு படைப்பாக்கங்களும் வெறுமனே நம்மண்ணின் பொருட் செழுமையை மட்டுமே காட்டுவதோடன்றி, நம் முன்னோர்களின் உள்ளத்தினுள் பிராவகித்த அளவற்ற அன்பையும், கருணையையும், ஞானத்தையும் பறைசாற்றுவதாக தான் எப்போதுமே எனக்கு தோன்றும்.

காஞ்சி மற்றும் மதுரை மாநகரத்தாருக்கு உலகின் எந்த பெரிய கட்டிடங்களும் ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் அவ்வளவு சுலபத்தில் ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். அட்டைபெட்டி அடுக்கினார் போல் நிற்கும் தளங்களின் எண்ணிக்கையிலும், ஒளிரும் கண்ணாடி பெட்டகத்தின்னுள்ளும், செயற்கை ஒளிகூட்டமாநாட்டினுள்ளும் என்றாவது மனித இதயத்தால் அமைதியை உணர முடியுமா என்ன?


மாயழகியும், மெய்யன்பரும்

கோவில் நுழைவின் ஆக்கிரமிப்பில் ஆழ்ந்திருந்த என்னுள்ளம் அரைமணித்தியாலம் கடந்தபின் மனித சத்தத்தில் சிறிது சிறிதாக அதன் இதத்தை தொலைக்க தொடங்கியது.
ஜனசந்தடி அதிகமிருக்கும் இடத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து மற்றவர்களின் பேச்சில் கவனம் வைக்காமல் வெறும் ஒலிகளை மட்டும் சிறிது நேரம் உள்வாங்கி பாருங்கள். நம்முடைய வெற்று கூச்சலினால் பெருவெளியின் லயத்தை எவ்வாறெல்லாம் சீர்குலைக்கிறோம் என்ற அசூயை உணரும்போது அவசியதிற்கன்றி மற்ற நேரம் வாயசைப்பதே நமக்கு சுமையாகி போவதை உணர்வீர்கள்:rolleyes:.

நிறைகூட்டமும், மாலைநேர வழிபாட்டிற்காக திரைபோட்டதால் ஆகிய கூடுதல் நேரமுமென நான் செல்லக்கிளி நாயகியை தரிசிக்க நீண்டநேரம் பிடித்தது.
அதுவரையான கால இடைவேளையில் மனித குரலின் சத்தத்தில் சிதறும் இதத்தை, கருங்காரை தரையின் மேல் என் பாதம் நகரும் கணங்களில் ஏற்படும் அதிர்வுகளை அனுபவித்து உணர்ந்தவாறு “பஞ்சாட்சரம்” உச்சரித்து கொண்டே பதமாக என் சிந்தையை பாதுகாத்து ஒருவாறு மீனுவை பார்க்க போகிறோம் என்று என் மூளை கவுன்ட்டவுன் வைக்க தொடங்கி வரிசையில் நெருங்கி நெருங்கி அருகில் சென்று அன்னையை தரிசித்து கொண்டே இறுதியாய் குருக்களின் குங்குமத்திற்கு இயந்திரமாய் நான் கரம் நீட்டி பெற்று கொண்டு வெளியே வந்த பின் இயல்புக்கு திரும்பி மீனு திருமுகத்தை நினைவிற் கொண்டு வர முயல, அந்தோ!!! பரிதாபமாய் எனக்குள் அன்னையின் மூக்குத்தியை தவிர வேறொன்றுமே அகபார்வையில் பிடிபடவில்லை என்று பெரும் ஏமாற்றமாய் உணர்ந்தேன்:confused::confused:.

அய்யோ ஈஸ்வரா...... எதை மறந்தாலும் கண்டிப்பாக நான் கிளி பாக்கணும் தானே நினச்சிட்டே இருந்தேன், இப்டி மொத்தமா off ஆகி, ஆப்ரிக்க காட்டு வழியில் தொலைஞ்ச அரேபிய பொண்ணு மாதிரியா திக்கு தெரியாம நின்னுட்டு வருவேன்னு என்னை நானே நொந்துகொள்ள தான் முடிந்தது. சரி அட்லீஸ்ட் தலைவரை என்னுடைய கண்ணு கேமராவில் கரெக்டா capture பண்ணிடனும் என்று தீர்மானித்து கொண்டு சொக்கரை தரிசிக்கும் வரிசையில் நிற்க தொடங்கினேன்:cautious:.

எனக்கு ஈஸ்வரன் இஷ்டதெய்வம் என்பதாலோ அல்லது மீனுவை விட சிவாவை அருகே பார்க்க அனுமதித்ததாலோ அன்றி ஆதிரையான் அலங்காரமின்றி மிகவும் எளிமை கோலம் கொண்டதாலோ என்னப்பன் தரிசித்த அதே நொடியில் straight to heart என்று ஒளிவேகத்தில் என்னுள் நுழைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்போ இந்த நொடியும் கூட என் மனக்கண்ணில் தீபங்களுக்கிடையில் கொலுவீற்றிருந்த ஆவுடையார் எழுந்தருளுகிறார்.
இதை தட்டச்சும் போது
“சிவபெருமானே! எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?” எனும் மணிவாசகரின் வரி தான் என் நினைவை தட்டுகிறது.

தன்னை சிக்கென பிடிக்கும் மணிவாசகரின் சாமர்த்தியம் சாதாரண பெண்ணான என்னால் ஆகாது என்று தெரிந்தோ என்னவோ அவரே சிக்கென என்னுள் புகுந்து பதிந்தார்:love::love::love:.

எந்த ஊர் சென்றாலும் சிவாலயங்கள் தேடி போவது என் பழக்கமென்றாலும் எனக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் மீது தான் கூடுதல் பக்தியும் பாசமும். அவருக்கு பின் மதுரையின் சிறுமூர்த்தியும் இப்போது செல்லமாகி போனார். சென்னை வரும் போது அனைவரும் தவறாமல் மயிலாப்பூர் சென்று தரிசியுங்கள்:).


பிரகார பிரதாபங்கள்:

அடிப்பிரதட்சினம் செய்து அணு அணுவாய் ரசிக்க ஆயிரமாயிரம் அழகும், நயமும், தகவல்களும் கொட்டியிருக்க என் சூழ்நிலையின் காரணமாக என்னால் போதுமான அளவிற்கு அன்று நேரம் செலவிட இயலவில்லை. முத்த பருவம் என்று அன்னையின் வாழ் – வளர் காதையை வடித்து வைத்திருந்த சிற்பங்களை மட்டுமே என்னால் அரைகுறையாக பார்க்க முடிந்தது.
(அந்த தகவல்களை பார்த்தவுடன் திருவிளையாடல் புராணம் படிக்க வேண்டும் என்று மனதினுள் சங்கல்பம் செய்து கொண்டேன்)

அதிக நேரம் செலவிட இயலவில்லை எனும் மனசுணக்கத்திற்க்கு மருந்தாக, திருமால் தன் தங்கையை, ஈசனுக்கு தாரை வார்க்கும் நிகழ்வை ஆளுயுற சிலைவடிவில் காட்சிப்படுத்தி வைத்திருந்த திருகல்யாண மண்டப தரிசனம் கண்ணுற்ற போது தானாக நிறைவும், மகிழ்வும் என்னுள் நிரம்பியது:love::love::love:.
நம் வழிபாட்டு முறையில் ஏன் உருவ வழிபாட்டுக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறோம் என்று புரிவது போல இருந்தது இக்காட்சி.


மீனு .jpgபொற்றாமரை குளம் ஒரு ஏக்கர் என்று படித்ததில் என் கற்பனையில் நான் கட்டிய குளத்தினோடு ஒப்பிட்டு பார்த்த போது எனது பார்வைக்கு சிறியதாகவே தோன்றியது. மீன்கள், வாத்து என்று என் வழக்கமான நீள்நோக்கல் படலம் நிகழாததால் எனக்கு அவ்வாறு தோன்றியதோ என்னவோ தெரியவில்லை.

(மீன் இருக்கா என்னனு நான் கூர்ந்து பாக்கல, ஆனா வாத்துலா இல்லை ;))

நிஜமாகவே பொன்னிற தாமரை பிரதிஷ்டை செய்து நீர்சுழற்சிமுறை தொழில்நுட்பத்தில் சுத்தமாகவே பராமரிக்கிறார்கள். கோவிலினுள் குளங்கள் இருப்பது எப்போதுமே சுத்தத்திற்கு அடிகோலும்.

ஒருவாறு மதுரை வந்ததின் சாபல்யம் அடைந்த உணர்வோடு மானசீகமாக மீனாக்ஷி-சொக்கரிடம் மீண்டும் வரும் வரம் தர வேண்டும் என்ற வேண்டுதலோடு விடை பெற்றேன்(y):):).
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,808
Likes
12,315
Location
Chennai
#9
மேல போட்ருக்க படம் நெட்ல எடுத்தது....நான் மண்டபத்துல பார்த்தது இல்லை ....அந்த பிக்சர் நெட்ல காணோம்..பொறுமையா தேடி கிடைச்சா ஷேர் பண்றேன்.யுனஸ்கோ குறியீடு, இந்திய தேச சுற்றுலா தலங்களின் தலைமை மாநிலத்தின் தலைக்கோவில், சைவ சமயத்தின் ஜீவநாடி என்று இப்படி வரிசையிட்டு கொண்டு செல்ல எண்ணற்ற பெருமை கொண்ட பெருங்கோயிலை சுற்றி ஏன் இவ்வளவு நெருக்கடியான சாலைகளும் கடைகளும் என்று எழும் நெருடலை என்னால் தவிர்க்க முடியவில்லை.

அந்த அளவிற்கு கடைகளும், கட்டிடங்களும், மக்கள் கொள்ளா குறுகிய இடப்பரப்பளவு என்று அவ்வளவு ஆக்கிரமிப்புகள்.

சாதாரண தினங்களிலேயே இப்படியென்றால் திருவிழா காலங்களில் கண்டிப்பாக அம்மையும் அப்பனும் சுவாசம் திணறுவார்கள்.

உலகேமே உடமையானவர்களுக்கு நாம் உலா வர கூட போதுமான இடம் விடாமல் அழிச்சாட்டியம் செய்து வைத்திருக்கிறோம்:sick:.

கோவில் நகரம் என்பது மாறி கோவிலை சுற்றி நகரை அடைத்து வைத்து கோவிலின் அமைப்பிற்கு நாம் மாபாதகம் புரிகிறோம்:mad:.

கிழக்கு கோபுர வாயில் வழி மட்டுமே நான் பார்த்தேன், மற்ற வாயில்கள் நன்றாக இருக்குமானால் பெருத்த நிம்மதியடைவேன்.

எது எப்படி இருந்தாலும் கோவில் வாயிலை சுற்றி இன்னும் குறைந்தபட்சம் இரண்டு தெருவீதிகளையாவது முழுக்க முழுக்க காலியிடமாக பராமரிக்க முடியுமானால் அழகு அன்னையின் கோவிலின் அற்புதம் பன்மடங்கு கூடும்.


பி.கு: எழுத கூடாதுன்னு தான் நினச்சேன்:mad:
ஆனா மனதின் ஆற்றாமை அடங்க வேற வழி தெரியல:cry:
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,808
Likes
12,315
Location
Chennai
#10
Ezhuthungo.. Ezhuthungo! List Perusa pogum Sure ah.. ;)
Hahhaha.... kandupidichiteya:LOL::LOL:
Totally 5 to 6 posts finish panidren:cool:
Ana oru oru post laiyum kathai vasanam tamil movie pola thookala thaan irukum:p...thairiyam irukavanga padikatum;)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.