நாளொன்றுக்கு நமக்கு எவ்வளவு கலோரி தேவை? &#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,544
Location
chennai
#1
நாளொன்றுக்கு நமக்கு எவ்வளவு கலோரி தேவை? தெரிஞ்சுக்கலாமா!?


லோரி... கலோரி... என்று சொல்கிறார்களே அது என்ன தெரியுமா? சாப்பிடும் உணவு வகைகளில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவைதான் நம் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. இந்த சக்திதான் கலோரியில் கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் உடலில்


சேமித்துவைத்திருக்கும் சக்தி, நாம் செய்யும் வேலைகளுக்குத் தக்கவாறு செலவு செய்யப்படுகிறது. கடின உழைப்பாளிகள், கூடுதல் கலோரிகள் தரக்கூடிய உணவுமுறையைக் கையாள வேண்டும். ஆஃபீஸ் வேலை போன்ற உடலை வருத்தாமல் வேலைகள் செய்பவர்களுக்கு, சற்று குறைந்த அளவு கலோரிகள் தரக்கூடிய உணவுப் பொருட்கள் தேவைப்படும் என்கிறார், டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.

வயது, பாலினம், எடை, உயரம், உடல் உழைப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் கலோரி அளவு மாறுபடும் என்கிறார். ஒவ்வொரு உணவு வகைக்கும் கலோரி அளவு உண்டு. உதாரணத்துக்கு 100 கிராம் எடைகொண்ட ஆப்பிளில் 59 கலோரி இருக்கும். வாழைப்பழத்தில் 116 கலோரி, 300 கிராம் சாதத்தில் 346 கலோரிகள் கிடைக்கின்றன.

எண்ணெய், நட்ஸ் மற்றும் தானியவகைகளில் கலோரிகள் அதிகமாக உள்ளன. 100 கிராம் நட்ஸில் 550 முதல் 600 கலோரிகள் கிடைக்கும். அதேபோல 100 கிராம் எண்ணெயில் 900 கலோரிகள், 100 கிராம் சமைத்த பருப்பில் 339 கலோரிகள் இருக்கும் என்று சொல்லும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, காய்கறிகளில்தான் குறைவான கலோரிகள் இருக்கும் (100 கிராம் காய்கறியில் 40 கலோரி) என்கிறார். நம் உடல் எடை கூடுவதற்கும் குறைவதற்கும் இந்த கலோரிகள்தான் காரணம். அதற்காக டயட்டீஷியனை அணுகி, நமக்குத் தேவையான கலோரிகள் பற்றித் தெரிந்துகொள்வது நல்லது என்கிறார்.

எந்த வயதில் எவ்வளவு கலோரி தேவை...
வயதுக்கு ஏற்றவாறு உணவு தேவைப்படும். உதாரணத்துக்கு 3 அல்லது 4 வயது என்றால் ஒரு தோசை சாப்பிடுவார்கள். அதுவே ஏழு வயது இருப்பவர்களுக்கு இரன்டு தோசை தேவைப்படும். இப்படி வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவின் அளவு மாறுபடும். குறிப்பாக 14 வயது முதல் வளர்ச்சி நிலை என்பதால், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுவகைகளைச் சாப்பிடுவது நல்லது. எந்த வயதில் எவ்வளவு கலோரிகள் தேவை என்று பட்டியலைப் பார்க்கவும்.


உழைப்புக்கு ஏற்றவாறு கலோரிகள் தேவை:

மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு குடும்பப் பெண் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது என ஒரு மணி நேரம் வீட்டு வேலைகளைச் செய்தால், 120 கலோரி செலவாகும். ஆனால், ஒரு ஆண் ஒரு மணி நேரம் ரன்னிங் செல்லும்போது, 470 கலோரிகள் செலவாகும். அலுவலக வேலை, கடினமான வேலை என பல விதமான வேலைகளைச் செய்துவருகிறோம். இதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவைப்படும் கலோரிகளின் அளவு வித்தியாசப்படும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலைப் பார்க்கவும். கவனம்: அவரவர் வேலை அளவுக்கும் உடல் எடைக்கும் ஏற்றவாறு உணவை உட்கொள்ள வேண்டும். இது ஒரு சராசரி மனிதனுக்குத் தேவைப்படும் கலோரிகளின் அளவு.


பேலன்ஸ் டயட்:

ஒரு சராசரி மனிதன் மதிய சாப்பாட்டின் அளவு இப்படி இருக்க வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.