நாள் முழுக்க ஃப்ரெஷ்!

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#1
காலையில் அழகாக உடுத்தி, அசத்தலாக மேக்-அப் செய்து கொண்டு முழு எனர்ஜியோடுதான் அலுவலகம் செல்கிறீர்கள். ஆனால், மதியத்துக்குள்ளேயே அத்தனை புத்துணர்வும் காணாமல் போக, சோர்வாகி விடுகிறீர்கள். மாலையில், எண்ணெய் வழியும் முகமும் சோர்வு அப்பிய கண்களுமாக.. கேட்கவே வேண்டாம் அந்தக் கோலத்தை!
இதைத் தவிர்த்து, நாள் முழுக்க உங்களை "ஃப்ரெஷ்" ஆக வைத்துக் கொள்ள இதோ சில...
தலைக்கு எண்ணெய் வைப்பது முகத்தை டல்லாகக் காட்டும். கூடவே, சிலர் எண்ணெய் பசையுடன் இருக்கும் தலையைத் தொட்டு விட்டு, அதே கையால் முகத்தையும் துடைப்பார்கள். அதனால் முகத்தில் அதிக எண்ணெய் வழிவது போலத் தோன்றும். இதைத் தவிர்க்க, ஒட்டுகிற தன்மை இல்லாத "நான் ஸ்டிக்கி" எண்ணெயை தலைக்குத் தேய்க்கலாம்.
உடை விஷயத்தில் அதிக கவனம் தேவை. காட்டன், சிந்தடிக் என்று எந்த உடை அணிந்தாலும், பிறரின் கிண்டலுக்கு ஆளாகும் வகையில் மிகவும் தொள தொளப்பாக இல்லாமல், மற்றவர்கள் கண்களை உறுத்தும் வகையில் மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல், உங்களுக்கான சரியான அளவுடன் நேர்த்தியாக உடுத்துங்கள். காலையில் மீட்டிங் இருந்தால் காட்டன் புடவை உடுத்தலாம். அதே மீட்டிங் மாலையில் இருக்கும் பட்சத்தில், காட்டன் சீக்கிரமே கசங்கி விட வாய்ப்புண்டு என்பதால் அதைத் தவிர்க்கலாம்.
ஆபீஸ் கிளம்புவதற்கு முன் சில ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் சிறிது நேரம் ஒற்றி எடுங்கள். இதனால் உங்கள் சருமம் புத்துணர்வு பெறும். பின் உங்கள் விருப்பப்படி பவுடர் அல்லது மேக்-அப் போட்டுக் கொண்டால் அடுத்த ஐந்து மணி நேரம் வரை முகம் அப்படியே இருக்கும்.
பொதுவாக நம் பெண்கள் காலையில் போடும் மேக்-அப் உடனேயே மாலை வரை இருந்து விடலாம் என்று நினைக்கின்றனர். சிலர், மேக்-அப் லேசாகக் கலைந்தால்கூட அதன் மேலேயே மீண்டும் போட்டுக் கொள்கின்றனர். இது தவறு. ஏனெனில், ஏற்கெனவே போட்டிருக்கும் மேக்-அப் சரும துவாரங்களை அடைத்திருக்கும். அதன் மீதே மறுபடியும் பவுடர் அல்லது மேக்-அப் போடுவது உங்கள் முகத்தில் படிந்திருக்கும் வியர்வையையும் அழுக்கையும் மேலும் அதிகமாக்கும். அதனால் சிரமம் பார்க்காமல் நடுவில் ஒருமுறையாவது முகத்தைக் கழுவி விட்டோ, "வெட் டிஷ்யூ" பேப்பர் கொண்டு நன்றாகத் துடைத்து விட்டோ மீண்டும் மேக்-அப் போட்டுக் கொள்வதே சிறந்தது. முகம் கழுவ சோப்பைக் காட்டிலும் ஃபேஸ் வாஷ் உபயோகிப்பது நல்லது.
ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்கும்போது, முகத்தின் நிறத்துக்கேற்ற ஷேட்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஏ.சி அறையில் வேலை செய்பவர்கள் லோஷன் ஃபவுண்டேஷனையும், ஏ.சி இல்லாத அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் கிரீம் அல்லது கேக் ஃபவுண்டேஷனையும் உபயோகிக்கலாம்.
லைட் கலர் லிப்ஸ்டிக் உபயோகிப்பதுதான் தற்போது ஃபேஷன். புதிதாக லிப்ஸ்டிக் உபயோகிக்கத் துவங்குகிறவர்களும் லைட் கலர் லிப்ஸ்டிக் போடலாம். லிப்ஸ்டிக் வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் கலர்லெஸ் லிப்ஸ்டிக், லிப் பாம் அல்லது வேஸலின் போட்டுக் கொள்ளலாம். கண்ணுக்கு ஐ லைனர் மற்றும் லைட் ஷேடில் ஐ ஷேடோ போடுவது முகத்துக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தரும். மஸ்காராவில் இப்போது "ஐ காஷா பென்சில்"கள் வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பது கண்ணுக்கு புதுப் பொலிவைத் தரும்.
சிலர் தாங்கள் "ஃப்ரெஷ்" ஆக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். ஆனால், நிஜத்தில் அவர்கள் முகம் சோர்ந்திருக்கும். அதனால் அடிக்கடி கண்ணாடி பாருங்கள். உடையை சரிசெய்து கொள்வது, கலைந்திருக்கும் தலையை வாரிக் கொள்வது, வழிந்திருக்கும் ஐ லைனரை அட்ஜஸ்ட் செய்து கொள்வது.... என உங்களை எப்போதும் சரியாக வைத்துக் கொள்ள இந்தப் பழக்கம் உதவியாக இருக்கும்" என்கிற வசுந்தரா, வீட்டில் என்னவெல்லாம் செய்து புத்துணர்வூட்டிக் கொள்ளலாம் என்பதற்கும் டிப்ஸ் தருகிறார்.
"குளிர்ந்த நீரில் "யூடிகோலன்" (Eaudecologne) என்ற லோஷனை கலந்து முகத்தில் தெளித்துக் கொண்டால், முகம் பளிச் என்றிருக்கும். பொதுவாக முகத்தில் சதை தளர்வாகத் தெரியும்போதுதான் வயதான தோற்றம் ஏற்படும். இந்த லோஷனை உபயோகிக்கும்போது, தளர்ந்த சதை இறுகி முகத்தில் பொலிவு கூடும்.
பத்து ரோஜாப் பூக்களின் இதழ்களை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு காற்று புகாமல் மூடி விட வேண்டும். மூன்று மணி நேரத்தில் ரோஜா சாறு அந்த தண்ணீரில் இறங்கியிருக்கும். இதழ்களை வடிகட்டிவிட்டு சாறு இறங்கிய அந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டால், ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதற்கு "ஸ்கின்" டானிக்" என்று பெயர். அடிக்கடி இந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும். கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையமும் மறைந்து விடும்"
"இவை எல்லாவற்றையும் விட எப்போதும் உங்களிடமே ஒரு பொலிவு ஒட்டிக் கிடக்கிறது. அது... உங்களின் இன்முகம்! எப்போதும் சிரித்த முகத்துடன், கனிவான வார்த்தைகளையே பகிர்ந்து கொள்ளுங்கள். அது கூடுதல் அழகையும் புத்துணர்ச்சியையும் தரும்" என்கிறார் வசுந்தரா... உண்மைதாங்க...

-அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.