நாள் முழுக்க மியூசிக் கேட்பவரா நீங்கள்?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நாள் முழுக்க மியூசிக் கேட்பவரா நீங்கள்?

இதப் படிச்சுட்டு இனிமே சந்தோசமாகேளுங்க!!!இசை என்பது யாராலும் வெறுக்க முடியாத ஓர் கலை. ஒருவேளை ஒருவர் இசையை வெறுக்கிறார் என்றால் அவருக்கு மனநிலையில் ஏதேனும் கோளாறு அல்லது உயர் அழுத்தம் இருக்க வாய்பிருக்கிறது.

இதில் விசித்திரம் என்னவென்றால், இந்த இரண்டிற்கும் சிறந்த மருந்தாக திகழ்வதே இந்த இசை தான். இசை என்பது நமது மனதை பக்குவப்படுத்த, மனநிலையை கட்டுப்படுத்த, மேலோங்க வைக்க உதவும் ஓர் கருவி ஆகும்.

ஒவ்வொரு வகையான இசை ஒவ்வொருவருக்கு பிடிக்கும். ஆனால், மெல்லிசை, இன்னிசை போன்றவற்றை கேட்பதால் நமது உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.....

நினைவாற்றல்
இனிமையான இசையை நீங்கள் தினமும் கேட்பதால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் ஞாபகமறதியும் குறைகிறதாம். இதற்கு காரணம் நீங்கள் இனிமையான இசையை கேட்கும் போது வெளிப்படும் டோபமைன் என்று கூறப்படுகிறது.


மனநிலை
மேலும் நீங்கள் இனிய இசையை கேட்கும் போது வெளிப்படும் நியூரோ கெமிக்கல் டோபமைன் உங்கள் மனநிலையை மேலோங்க செய்கிறது, மனநிலை மேன்மையடைய ஊக்குவிக்கிறது.


உற்பத்தி திறன்
ஒருவர் அவருக்கு பிடித்த இனிமையான இசையைக் கேட்டுக் கொண்டே அவரது வேலையில் ஈடுபடும் போது அந்த வேலைகளில் சிறந்து ஈடுபடுகிறார் மற்றும் அந்த வேலையின் முடிவுகளும் சிறந்த முறையில் வெளிபடுகிறது என்று கூறப்படுகிறது.


இரத்த அழுத்தம்
நீங்கள் கேட்கும் இசை உங்கள் இரத்த அழுத்தத்தை ஏற்றவும், குறைக்கவும் செய்கிறது. இனிமையான இசை உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. மற்றும் குத்துப் பாடல்களை கேட்கும் போது நாடி, நரம்புடன் சேர்ந்து இரத்தமும் கொஞ்சம் ஆட ஆரம்பித்துவிடுகிறது. எனவே, இனிமையான இசையை கேட்பது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும் ஓர் மருந்தாக இருக்கிறது.


உடற்பயிற்சி
சிலர் ஏன் உடற்பயிற்சி மையத்தில் பாடல்கள் ஒலிக்க செய்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புவது உண்டு. ஆனால், உண்மையில் பாடல் அல்லது இசையைக் கேட்டுக் கொண்டே உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கடினமாகவும், நீண்ட நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபட முடிகிறது என்று கூறப்படுகிறது.


நல்ல உறக்கம்
நல்ல இசையைக் கேட்பது, உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, இதயத் துடிப்பை சீராக்கி, நல்ல உறக்கத்தை தருகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


நோய் எதிர்ப்பு சக்தி
தினமும் இனிமையான இசையை கேட்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு காரணம் மன அழுத்தத்தால் வெளிப்படும் கார்டிசோல் எனும் ஹார்மோனை இது குறைக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம், இதய கோளாறுகள், ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் குறைகின்றன.


 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,585
Likes
140,720
Location
Madras @ சென்னை
#4
Goodonyaa.

:cheer:​
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.