நிழலாய் தொடர்வேன் - Nizhalai Thodarven By DurgaC

Status
Not open for further replies.

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
187
Likes
382
Location
Chennai
#11
நிழலாய் தொடர்வேன்....

நிழல் 6


உற்சாகமாகத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த சகிக்கு அன்று காலை நடந்தது நினைவு வந்தது. 'ச்ச... AC-அ இன்டர்வியூ பண்ண வேண்டியது, அவனால போச்சு.. சரியான காட்டான். எப்டி பேசுறான்.. JP அங்கிள் கூப்டதுனால சீக்ரம் வர வேண்டியதா போச்சு.. இல்லனா அவன் பின்னாடியே போய் அவனை ஒரு வழி பண்ணிருப்பேன்' என்று மனதில் அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து அவனைப் பிறகு திட்டிக்கொள்ளலாம் என்று தள்ளி வைத்து விட்டுச் சோலை குறிச்சி செல்ல வீட்டிலும் தோழிகளிடமும் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். 'சுத்தி பாக்க போறோம்ன்னு அம்மாட்ட சொல்லிட்டு லட்சு நிலா இல்லாம நான் தனியா போனா சந்தேகம் வருமே.. இதுங்க கிட்ட உண்மைய சொன்னா அதுகளும் வராதுக, அம்மா கிட்டயும் போட்டு குடுத்திருங்க.. பேசாம ஏதாச்சு பொய் சொல்லி அதுகளையும் இழுத்துட்டு போயிற வேண்டியதான்' என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.


காலை எட்டரைக்குக் காவலர் குடியிருப்பிற்குச் சென்ற ரகு, அங்கு AC-யின் வீடு பூட்டி இருக்கவே வெளியே நின்றான். பத்து நிமிடங்கள் அவனைக் காக்க வைத்து விட்டு வந்த ருத்ரன், தாமதத்திற்கு தன் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு ஒரு ஐந்து நிமிடங்களில் தயார் ஆகி வருவதாகக் கூறி, அவனை ஒரு இருக்கையில் அமர்த்தி விட்டு உள்ளே சென்று சொன்னதுபோல் ஐந்து நிமிடங்களில் வந்தான். சில பல கேள்விகளும் பதிலுமாய் சென்ற அந்த நேர்க்காணல் அரை மணி நேரத்தில் முடிவு பெற்றது. 'அவளால தான் லேட்.. வந்து வண்டில இடிச்சது மட்டும் இல்லாம வேணும்னே சண்டைக்கு இழுத்து லேட் பண்ணி விட்டா.. சரியான சண்டைக்கோழி.. இதுல நானும் கவனம் இல்லாம வந்து இடிச்சேன்னு வேற சொல்லறா...' என்று சகியைத் திட்டியவனின் மனசாட்சி 'அவளா உன்ன சண்டைக்கு இழுத்தா? நீ அவள நினைச்சுட்டு தான வேண்டிய ஓட்டிட்டு இருந்த?' என்று தட்டிக் கேட்டது. அவன் அதைத் திட்டி அடக்கினான்.

மாலை வீடு வந்த சகி தன் திட்டத்தைச் செயல் படுத்த எண்ணினாள். வீட்டிற்குள் நுழைந்தவளிடம், "என்னடி ஆச்சு? கைல என்ன கட்டு?" என்று பதறினார் பத்மா. "வண்டில இருந்து ஸ்கிட் ஆகி..." என்று முடிப்பதற்குள் பத்மா, "இதுக்கு தான் இந்த வேலையே வேணாம்ன்னு சொன்னா கேக்குறியாடி நீ? ஆம்பள பிள்ள மாதிரி வெயில்லையும் இருட்டுலயும் போய் அலைஞ்சுட்டு இப்போ பாரு கைய ஒடச்சுட்டு வந்து நிக்குற.. எல்லாம் உங்க அப்பா குடுக்குற செல்லம்.." என்று வசை பாடத் துவங்கினார். "மா..மா... என்ன கொஞ்சம் பேச விட்றியா.. நான் இந்த வேலைல இல்லனாலும் பைக்ல ஸ்கிட் ஆகி விழுந்திருப்பேன்.. அப்புறம் எனக்கு கை ஒடையெல்லாம் இல்ல, லேசான ஸ்க்ரேட்ச் தான்.. JP அங்கிள் தான் இப்டி பெரிய கட்டா போட்டு விட்டுட்டாரு" என விளக்கினாள். "வேண்டாம்ன்னு சொல்ல சொல்ல உனக்கு அந்த வேலையும் குடுத்து இப்போ கட்டும் போட்டு விட்றாரா அவரு? இங்க வரட்டும் கேக்குறேன்" என்று JPக்குத் திட்டு விழும்போது சரியாக அங்கு வந்தார் JP.

"என்னமா என் பேரு அடி படுது?" என்றவர், 'ஒருவேளை இவ அந்த ஊருக்கு போறத உளறிட்டாளோ..' என்று நினைத்துச் சகியைக் கேள்வியாக நோக்கினார். அவர் மனதை சரியாய்ப் புரிந்த சகி, இல்லை என்று வேகமாகத் தலையை ஆட்டி எச்சரித்தாள். "அண்ணா இவளுக்கு அந்த ரிப்போர்ட்டர் வேலைலாம் வேணாம்ன்னு சொன்னேன் கேட்டீங்களா நீங்களும் இவரும்? அவ ஆசைப்படி இருக்கட்டும்ன்னு சொல்லி என் வாய அடைச்சுட்டிங்க.. இப்போ எங்கயோ விழுந்து வாரிட்டு வந்திருக்கா" என்று JPயிடம் முறையிட்டார் பத்மா. மேலும் தொடர்ச்சியாக, "சரி கல்யாணம் ஒன்னு பண்ணி வச்சுட்டா இவ பாடு இவ புருஷன் பாடுன்னு இருக்கலாம்ன்னு பாத்தா, ஒரு வருஷமா அதுக்கும் மழுப்பிகிட்டே வர்றா.. அதையாச்சு கேளுங்கண்ணா" என்று முடித்தார். "அது விஷயமா தான்மா பேச வந்தேன். என்னோட கஸின் ஒருத்தன் அமெரிக்கால இருக்கான் இல்லையா, அவன் பையனுக்கு நம்ம சகிய கேக்கறாங்க. பையன் பிறந்து வளந்தது அமெரிக்கானாலும் நல்ல பையன்... நம்ம கல்ச்சர மதிக்கிறவன். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி சொந்தமா வச்சு நடத்துறான். நம்ம சகி ஃபோட்டோவ பாத்ததுமே அவனுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. உங்களுக்கு ஓகேனா நெக்ஸ்ட் மன்த் நேர்ல வந்து பேசி முடிக்கலாம்ன்னு சொல்லறாங்க" என்று தன் பங்குக்கு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார் JP. "அங்கிள் நீங்களுமா?" என்று நொந்து கொண்டாள் சகி. "என்ன குட்டிமா... கல்யாணம் பண்ணிக்கிறதுல்ல உனக்கு என்ன பிரச்சன. எனக்கு பையன் இருந்திருந்தா உங்க அப்பன்ட்ட வந்தா கேட்டுட்டு இருப்பேன்? உன்ன எப்போவோ மருமகளா கூட்டிட்டு போயிருப்பேன்.. ரெண்டும் பொண்ணா போச்சு" என்றவர், அவள் பதிலுக்காகக் காத்திருந்தார்.

பாவமாக முகத்தை வைத்துக் கொண்டுத் தன் செல்லத் தந்தையை நோக்கினாள். இன்றைக்கு ஒரு முடிவு தெரிந்து தான் ஆக வேண்டும் என்பது போல இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு அவரும் சகியைப் பார்த்துக் கொண்டிருந்தார். 'ஆஆஹா.. ஒன்னு கூடிட்டாய்ங்களே... சகி ஏதாச்சு சமாளி' என்று மனதிற்குள் எண்ணியவளின் கண்ணில் பாவம் சூர்யா தான் தென்பட்டான். "ஃபர்ஸ்ட் இவனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க, ஆல்ரெடி அரக்கிழவன் ஆயிட்டான். அப்பறமா எனக்கு பாக்கலாம்" என்று அவனை மாட்டிவிட்டாள். இதை எதிர் பாராத சூர்யா என்ன சொல்வது என்று விழித்துக் கொண்டிருக்கையில் பத்மாவே அவனைக் காப்பாற்றினார். "தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் நான் பண்ணிக்குவேன்ன்னு உன் அண்ணன் உக்காந்திருக்கான்... அவனுக்கும் வயசு ஏறிட்டே இருக்கு, உன்னால என் பிள்ளைக்கு பொண்ணே கிடைக்காம தான் போகப்போது" என்று பத்மா புலம்ப, "டேய் தடியா, எல்லா திருட்டுத்தனமும் செஞ்சுட்டு அதெப்படிடா நல்லவன் மாதிரியே சீன் போட்ற" என்று அவன் காதுகளில் முணுமுணுத்தாள். அவன் கேட்டும் கேட்காதவன் போல் நிற்க, மீண்டும் எல்லார் பார்வையும் சகி பக்கம் திரும்பியது. "யாரையாச்சு விரும்புறியா குட்டிமா? அப்டி இருந்தா நாங்க வேண்டாம்ன்னா சொல்ல போறோம்.. சொல்லுடா" என்றார் நடராஜன். இப்படி கேட்டதும் அவள் மனதில் ஒரு நொடி ருத்ரன் தோன்றி மறைந்தது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. பின் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "அப்டிலாம் ஒன்னும் இல்லப்பா... சரி சரி எப்டியோ தள்ளி விடணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க... நான், லட்சு, நிலா எல்லாம் அவங்க சொந்த ஊருக்கு ஜாலியா ஒரு ஒன் மன்த் வெக்கேஷன் போலாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம்... அதுக்கு அப்புறம் இத பத்தி பேசலாம்" என்று இரு விஷயங்களையும் ஒன்றாகக் கூறிவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடி விட்டாள்.

அவள் சென்றது லட்சுவின் வீட்டிற்கு. முன் அறையில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஜெயராமனுக்கு ஒரு புன்னகையைத் தந்துவிட்டு லட்சு-வின் அறைக்குள் நுழைந்தாள். அங்கு இருந்த நிலாவைக் கண்டு, "நீயும் இங்கதான் இருக்கியா... நல்லதா போச்சு. நாம இன்னும் ரெண்டு நாள்ல உங்க பாட்டி வீட்டுக்கு போறோம் லட்சு. ஒன்னு மன்த் ரிலேக்ஸ்டா என்ஜாய் பண்ண போறோம்" என்றாள். 'என்ன முத்திருச்சா' என்பது போல இருவரும் அவளைப் பார்த்தனர். "என்னடி சொல்ற!!!" என்று நிலா கத்தியே விட்டாள். "ஹேய் லட்சு உனக்கு ஒன் மன்த் இப்போ செமஸ்டர் லீவு தான.... நானும் JP அங்கிள் கிட்ட ஒன் மன்த் பிரேக் கேட்ருக்கேன்.. நிலா நீயும் லாங் லீவு சொல்லு, இல்லனா ஒர்க்-ஃப்ரம்-ஹோம் எடுத்துக்கோயேன், ப்ளீஸ்டி... நாம ஜாலியா அங்க இருந்துட்டு வரலாம்" என்றாள். "எல்லாம் ஓகேடி பட் என்ன அவசரம் இப்போ?" என்று லட்சு கேட்டதற்குத் தன் வீட்டில் நடந்த நிகழ்வுகளையும் அதிலிருந்து தப்பிக்க இப்படிச் சொல்லி விட்டதையும் விளக்கினாள் சகி. ஒருவாறாக அவர்களைச் சம்மதிக்க வைத்து, லட்சு நிலா வீடுகளிலும் அனுமதி வாங்கியாயிற்று.

அன்று இரவு சகி-யை அழைத்த JP, "சோலை குறிச்சி ஆர்ட்டிகிள் நீ பண்ண போறேல்ல, நான் அந்த AC கிட்ட சொல்லி நீ அவரை மீட் பண்றதுக்கு நாளைக்கு மதியம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிருக்கேன்மா... நாளைக்கு இங்க ஆஃபீஸ்க்கு வந்துட்டு மதியம் அவர் குவார்டர்ஸ் போய் மீட் பண்ணிட்டு வந்திரு. ஜஸ்ட் ஒரு இன்ட்ரோ மாதிரி தான்மா... அவரே டைரக்ட்டா இந்த கேஸ எடுக்கிறனால நமக்கு நிறைய இன்ஃபர்மேஷன் கிடைக்கலாம்... உனக்கும் ஒரு ஸேஃப்ட்டியா இருக்கும்" என்றார். சரி என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள் சகி. பின் கண்களை மூடி அதில் தெரிந்த ருத்ரனைத் திட்டிக்கொண்டே தூங்கினாள்.


நிழல் தொடரும்..!!
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
187
Likes
382
Location
Chennai
#13
நிழலாய் தொடர்வேன்....

நிழல் 7அடுத்த நாள் அலுவலகம் வந்த சகி, தங்கள் பத்திரிக்கையின் பிரதியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். மதுரையின் புதிய AC பற்றி ரகு எழுதிய குறிப்பில் இருந்த ருத்ரனின் புகைப்படத்தில் அவள் கண்கள் நிலைத்து நின்றன. 'இவன் தான் ACயா?!! இது தெரியாம அவன்ட்ட வேற சண்டை இழுத்து வச்சிருக்கோமே.... சகி உனக்கு எல்லாத்துலயும் அவசரம் தான்டி' என்று தன்னையே நொந்து கொண்டவள் பின், 'அவன் யாரா இருந்தா எனக்கென்ன... அவன் தான ஃபர்ஸ்ட் திட்ட ஆரம்பிச்சான்' என்று முறுக்கி கொண்டு, அவனைப் பற்றிய சிறு சிறு குறிப்புகள் இருந்த பகுதியை வாசிக்கத் தொடங்கினாள். அதன் கடைசி வரியைக் கண்டதும் அவளுக்குக் கோவம் தலைக்கேறியது. 'இன்டர்வியூக்கே லேட்டா வந்த நம்ம புது AC, கேஸயாச்சு சீக்ரம் முடிப்பாரா? ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்....' என்று கிண்டலாக முடித்திருந்தான் ரகு.

அதை எடுத்துக் கொண்டு ரகுவின் இடத்திற்குச் சென்றாள் சகி. “ரகு.. என்ன பண்ணி வச்சிருக்க நீ? எதுக்கு இப்டி ACய கிண்டல் பண்ணி எழுதியிருக்க?” என்று கிட்டத் தட்டக் கத்தினாள். ஏளனமாக அவளை நிமிர்ந்து பார்த்த ரகு, “அத கேட்க நீ யாரு? என்னோட பாஸா, இல்ல அந்த ACக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப வேண்டப்பட்டவளா?” என்று அழுத்தம் கொடுத்து ஒரு மாதிரிக் குரலில் கேட்டவனை எரிக்கும் பார்வை பார்த்து விட்டு JPயின் அறைக்குள் நுழைந்தாள். நடந்ததைக் கேட்ட JP, ரகுவையும் தன் அறைக்கு அழைத்துப் பேசத் துவங்கினார். “இந்த வார ஆர்ட்டிகிள்ஸ் எல்லாம் ஆல்ரெடி வெரிஃபை பண்ணிட்டேன். AC ஆர்ட்டிகிள் மட்டும் நேத்து ஈவினிங் ரெடி ஆனதால நான் அத வெரிஃபை பண்ணல. ரகு, நான் உங்கிட்ட சொல்லிட்டு தான போனேன்? எனக்கு கொஞ்சம் பர்சனல் ஒர்க் இருக்கு, உன்ன நம்பி அந்த ஆர்ட்டிகிள விட்றேன், பாத்துக்கோன்னு. அப்புறம் எப்டி நீ இப்டி செய்யலாம்?" என்று கேட்டார். ரகு, “நான் ஒன்னும் பொய்யா எழுதலையே நடந்தத தான எழுதினேன்” என்று பதில் கூறினான். “அவ்ளோ பெரிய போலீஸ் ஆஃபிசர், அவருக்கு எவ்ளோ திறமை இருந்தா அவரை இங்க உடனே மாத்தி இந்த கேஸ ஹண்டில் பண்ண சொல்லிருப்பாங்க.... அப்டிபட்டவருக்கு எவ்ளோ வேல இருக்கும்... அப்டி அவரு லேட்டா வந்தது உனக்கு தப்பா தெரிஞ்சிருந்தா நேத்தே நேர்ல அவர்கிட்ட கேட்ருக்கணும், இல்லனா இன்டர்வியூ பண்ணாம திரும்பி வந்திருக்கணும்... அத விட்டுட்டு இப்டி இன்சல்ட் பண்ண கூடாது” என்று பொறிந்து தள்ளினாள் சகி. “ஏய் நிறுத்துடி.... பெரிய இது மாதிரி கத்திட்டே போற.. நான் சார் கிட்ட தான பேசிட்டு இருக்கேன்.. உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல..” என்றவனை JP நிறுத்தி, “பிஹேவ் யுவர்ஸெல்ஃப் ரகு. அவ கேட்டதுல என்ன தப்பு இருக்கு? ஃபர்ஸ்ட் கொஞ்சம் மேனர்ஸோட பேச கத்துக்கோ... அப்புறம் உண்மைய எழுதலாம்” என்று அவனை அடக்கினார். “ஓஹ்.... தெரிஞ்ச பொண்ணுனால சப்போர்ட் பண்றீங்க, அப்டித்தான? எனக்கு இப்டிபட்ட வேலையே தேவ இல்ல. நான் போய் உங்களுக்கு என் ரெசிக்நேஷன் லெட்டர் அனுப்புறேன்” என்று எழுந்தவனை நிறுத்தி, “தேவ இல்ல ரகு.... உங்க டிஸ்மிஸல் லெட்டர் உங்க மெயில்க்கு வரும், உங்க சேலரி பேலன்ஸ் உங்க பேங்க் அக்கௌன்ட்க்கு வரும்... யு மே கோ நவ்.." என்று கதவைக் காட்டினார் JP. சகியை முறைத்து கொன்டே அவன் வெளியே சென்று விட்டான்.

“சாரி மா... இந்த வார காப்பீஸ்லாம் எப்படியும் ஈவினிங் தான் சேல்ஸ்க்கு போகும்.... நான் அத நிறுத்திறேன். இன்னைக்குள்ள அந்த ஆர்ட்டிகிள சரி பண்ணி நாளைக்கு நாம சேல்ஸ்க்கு அனுப்பலாம்.. நீ போய் ACய மீட் பண்ணிட்டு வந்திரு....” என்று சகியிடம் கூறினார். “என்ன அங்கிள் அந்த ராஸ்கல்காக நீங்க சாரிலாம் கேட்டுகிட்டு.. சரி நான் கிளம்பறேன் அங்கிள்..." என்று விடை பெற்று வண்டியைக் கிளப்பியவள், 'இதுக்கெல்லாம் நான் தான் காரணமோ? என்னால தான லேட்டா ஆயிடுச்சு அன்னைக்கு..' என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்த இருபது நிமிடங்களில் காவலர் குடியிருப்பிற்குள் நுழைந்து, ருத்ரனின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினாள். சற்றுத் தயங்கிக் கொண்டே அழைப்பு மணியை அழுத்த, “கதவு திறந்து தான் இருக்கு, உள்ள வாங்க...” என்று உள்ளிருந்து அவன் குரல் கேட்டது. உள்ளே வந்தவளைக் கண்டு திகைத்தான். “நீயா... நீ எப்படி.. என்ன வேணும்” என்று அவன் குழம்பிக் கொண்டிருக்கையில் “ஐ ஆம் சக்தி, உங்கள் தமிழகம் பத்திரிக்கைல ரிப்போர்ட்டர்...” என்று முடிக்கும் முன் பத்திக்ரிகையின் அந்த வாரப் பிரதியை அவள் முகத்தில் விட்டெறிந்தான். “எவ்ளோ தைரியம் இருந்தா இப்டி ஒரு ஆர்ட்டிகிள போட்டுட்டு, என்ட ஹெல்பும் கேக்க வருவ...” என்று உறுமினான். வெளியாகாத இந்தப் பிரதி எப்படி இவனிடம் வந்தது என்று குழம்பி, “இல்ல சார் இந்த காப்பி...” என்று நடந்ததை விளக்க எண்ணியவளின் கையை இறுகப் பற்றிய ருத்ரன், “எல்லாம் உன்னால தான்டி... அன்னைக்கு நீ வந்து என் வண்டில மோதினனால வந்தது.. உன்னால எவன் எவனோ இந்த ஆர்ட்டிகிள பாத்து சிரிக்க போறான்.. இனிமேல் என் கண்ணு முன்னாடி வந்த... என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது...” என்று முகம் நிறையக் கோபத்துடன் திட்டித் தள்ளினான். சகிக்குக் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. 'என்ன நடந்துச்சுனு ஒரே ஒரு வார்த்தை கேக்க மாட்டியா?' என்பது போல அவனைப் பார்த்தாள். அதைக் கண்ட அவன் பிடி இறுகியது. “என்ன? செய்றது எல்லாம் செஞ்சுட்டு இப்போ அழுதுட்டு நிக்குறியா? போடி... போய் நான் இப்போ திட்டுனதையும் உன் பத்திரிக்கைல எழுது... நீயே வெளிய போய்ட்டா மரியாதையா இருக்கும்...” என்று பொறிந்துகொண்டு இருக்கையில், அவன் அலைபேசிச் சத்தம் கேட்டது. அதைத் தன் படுக்கை அறையில் விட்டதை நினைவு கூர்ந்தவன், படிகளில் ஏறி மேலே சென்று அதை எடுத்துப் பேசினான்.

“ஹலோ சார் திஸ் இஸ் JP. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் வெரி சாரி... அந்த ஆர்ட்டிகிள நான் வெரிஃபை பண்ணாம விட்டதுனால வந்தது. அந்த காப்பிஸ் சேல்ஸ் போறதுக்கு முன்னாடியே நான் ஸ்டாப் பண்ணிட்டேன், பட் உங்களுக்கு அதுக்கு முன்னாடியே அனுப்பி வச்ச காப்பி பத்தி எனக்கு இப்போ தான் தோணுச்சு... அதான் கால் பண்ணி இன்ஃபார்ம் பன்றேன் ...இன்னைக்கு அத கரெக்ட் பண்ணி, நாளைக்கு தான் சேல்ஸ்க்கு அனுப்ப போறோம்” என்று கடகடவெனப் பேசினார் JP. அதைக் கேட்டவனுக்கு அதிர்ச்சி. “என்ன அத ஸ்டாப் பண்ணிட்டீங்களா?” என்று முணுமுணுத்தான். “ஆமா சார்.... நான் நேத்து சொன்னனே ரிப்போர்ட்டர் சக்தி, இன்னைக்கு காலைல அந்த ஆர்ட்டிகிள ரீட் பண்ணதுமே, எப்டி நீங்க இப்டி போடலாம்... அவர் எவ்ளோ பெரிய ஆஃபிசர்.. அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும்ன்னு என்ன ஒரு புடி புடிச்சுட்டா.. இன் ஃபேக்ட், அந்த ஆர்ட்டிகிள எழுதுன ரிப்போர்ட்டரோட அவ சண்ட போட்டு, அவன் வேலைய விட்டே போய்ட்டான்... இப்போ கூட அங்க வந்திருப்பாளே... ஓகே சார் நான் வைக்கிறேன்.. அப்புறம் ஒரு பர்சனல் ரெக்வஸ்ட், சகி என் ரிப்போர்ட்டர் மட்டும் இல்ல.. என் க்ளோஸ் ஃபிரண்டோட டாட்டர்... இன்வால்வ்மென்ட் ரொம்ப ஜாஸ்தி... போற எடத்துல எந்த ஆபத்துலயும் சிக்காம அவள கொஞ்சம் பாத்துக்கோங்க சார்..." என்றவற்கு, “கண்டிப்பா...” என்று பதிலளித்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் ஓடின. பின், படிகளில் விரைந்தான். கீழே அவள் இல்லை. 'பாவம் அவள பேசவே விடாம அழ அழ திட்டி அனுப்பிட்டனே' என்று தன்னையே நொந்து கொண்டான். அதற்குப் பிறகு அவனுக்கு வேறு வேலையே ஓடவில்லை. அவளின் நினைவுகளே. இரவு உணவு உண்ணத் தோன்றாமல் படுக்கச் சென்றான். மூடிய கண்களுக்குள் அவள் அழுது கொண்டே நின்ற காட்சி தெரியத் தூக்கமும் வரவில்லை. 'சோலை குறிச்சில பாக்குறப்போ கண்டிப்பா சாரி சொல்லிறனும்' என்று நினைத்துக் கொண்டான். 'சக்தி...சகி... அப்டித்தான அந்த எடிட்டர் சொன்னாரு.. எவ்ளோ தைரியமா சண்ட போட்டா அன்னைக்கு...' என்று அவளை முதன் முதலில் பார்த்ததும் இரண்டாம் முறை பார்த்தபோது அவளுடன் சண்டை போட்டதும் நினைவிற்கு வந்து, அவன் உதடுகளில் லேசான முறுவல் தோன்றியது. அவள் ஒருமையில் அவனை அழைத்தது மனதின் ஓரத்தில் இனித்தது. அந்தச் சுகமான நினைவுகளிலேயே தூங்கிப் போனான். அவனுக்கும் அவளுக்கும் திருமணம் ஆவது போல் கனவு கண்டு அதிகாலையில் கண் விழித்தான். பின் அவன் அன்று மால்-இல் கண்ட காட்சி நினைவிற்கு வர, 'ச்ச.... அவ இன்னோருத்தனோட காதலி... இனிமேல் இப்டி நினைக்க கூடாது' என்று மனதிற்குக் கடிவாளம் போட்டுக் கொண்டான்.

காவலர் குடியிருப்பில் இருந்து மாலை வீடு திரும்பிய சகி, நேராகத் தன் வீட்டிற்குச் சென்று, தன் அறைக்குள் புகுந்து கதவை அடைத்து விட்டு கட்டிலில் விழுந்தாள். அவன் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்து மீண்டும் அழத் தொடங்கி, அப்படியே உறங்கியும் போனாள். அடுத்த நாள் அவள் எப்போதும் போல இருப்பதாகக் காட்டி கொண்டாலும், வீடு முதல் அலுவலகம் வரை எல்லோரும், "ஏன் டல்லா இருக்க சகி?” என்று கேட்க, 'ச்ச... அவ்ளோ வெளிப்படையாவா தெரியுது.. நாம ஏன் கவலை படணும்.. கோவம் தான வரணும்... இனிமேல் அவனுக்கும் எனக்கும் அஃபீஷியல் டாக்ஸ் தான் இருக்கணும்.. மத்தபடி ஒன்னும் வச்சுக்க கூடாது' என்று நினைத்தவளின் மனம், 'இதுவரைக்கும் அவன அஃபீஷியலா நினைக்கலயா?' என்று கேட்டுப் பதில் கிடைக்காமல் விட்டுட்டுவிட்டது.

அடுத்த நாள் காலை, மூன்று தோழிகளும் சோலை குறிச்சிக்குக் கிளம்பிச் சென்றனர். அவர்களுக்காக அங்கு அவள் காத்திருந்தாள்.நிழல் தொடரும்..!!
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
187
Likes
382
Location
Chennai
#15
நிழலாய் தொடர்வேன்....

நிழல் 8
ருத்ரன் அன்று மதுரையில் பதவி ஏற்றான். சோலை குறிச்சி கேஸ் முடியும் வரை தான் அங்கேயே தங்கி அந்த மர்மங்களைக் கண்டு பிடிக்கப் போவதாய்க் கூறிவிட்ட படியால், அந்த ஊர்த் தலைவரிடம் சொல்லி அவனுக்கு அங்கேயே ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஊரில் இருந்த காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்றே சோலை குறிச்சிக்குத் தன் பைக்-இல் சென்றான். அங்கே அவனது உதவிக்காக ஒரு வேலையாள் அவ்வப்போது வந்து போனான்.


சோலை குறிச்சி வந்த தோழியரை லட்சு-வின் பாட்டி காமாட்சி வரவேற்றார். மாடியில் இருந்த அறைகளை எடுத்துக் கொள்ளச் சொன்னார். தங்கள் காதலர்களுடன் இரவில் பேச வேண்டும் என்று தனித் தனி அறையை எடுத்துக் கொண்டனர் தோழியர். சகிக்கும் தான் வந்த வேலைக்கு அது தான் சரி என்று படவே, ஒத்துக் கொண்டாள். மூவரும் தங்கள் அறைகளுக்குச் சென்று அவர்களது பொருட்களை அதற்கு உரிய இடத்தில அடுக்கி விட்டு, மதிய சாப்பாட்டுக்குக் கீழே வந்தனர். ஒரு பெரிய விருந்தே செய்து வைத்திருந்த பாட்டியைப் பாராட்டிவிட்டு, நாளையில் இருந்து ஏதேனும் சாதாரணமாகச் செய்தால் போதுமெனக் கூறித், தோட்டதுப் பக்கம் சென்று அமர்ந்தனர்.


“ஹேய் லட்சு, உங்க ஊரு சூப்பர்.... எவ்ளோ க்ரீனிஷா சுத்தி வயல்.. வெயிலே தெரியாம குளு குளுன்னு காத்து வீசுது.. அப்டியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாமா?” என்று கேட்ட சகியை முறைத்தாள் நிலா. “ஏன்டி முறைக்குற? நான் என்ன அப்டி கேட்டேன்?” என்ற சகியிடம், “இது அவ தூக்கத்துல ஏழாவது உலகத்துக்கு ட்ரேவல் பண்ற டைம்... இப்போ போய் வெளிய கூப்பிட்டா கடுப்பாகாம என்ன செய்வா?” என்று லட்சு சிரித்துக் கொண்டே கூறினாள். மேலும், “இப்போ நாமளும் போய் கொஞ்சம் படுக்கலாம்... ஈவினிங் ஒரு நாலு மணி போல வெளிய போலாம்” என்றாள் லட்சு. “சரிடி... நீங்க போய் படுங்க.... நான் கொஞ்ச நேரம் இந்த எதுத்தாப்ல இருக்க வயல பாத்துட்டு வர்றேன்” என்று சகி கூற, லட்சுவும் நிலாவும் சரி என்று வீட்டிற்குள் சென்றனர்.


சகி அங்கு இருந்த வயல் வழியாகச் சென்று பக்கத்தில் இருந்த மாந்தோப்பிற்குள் நுழைந்தாள். அப்போது, “ஹலோ” என்று அவள் பின்னே இருந்து குரல் கேட்கவே திரும்பிப் பார்க்க, அங்கு ருத்ரன் ஒரு மெல்லிய புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான். 'இவனுக்கு சிரிக்க கூட தெரியுமா' என்று ஆச்சர்யத்தில் ஒரு நொடி கண்ணை விரித்தவள், அன்று அவன் திட்டியது நினைவிற்கு வரவே அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அங்கு இருந்து செல்ல எத்தனித்தாள். “ஒரு நிமிஷம் சகி, உன் கூட கொஞ்சம் பேசணும்” என்று அவள் வழியை மறைத்தான். “என்ன பேசணும் ஏதாச்சு இன்னும் திட்டுறதுக்கு மிச்சம் மீதி இருக்கா?” என்று அவள் கேட்க, அவனுக்கு அவள் மனம் புரிந்தது. “நான் அன்னைக்கு உன்ட என்ன ஏதுன்னு கேக்காம கத்திட்டேன்... அம் ரியலி சாரி... எனக்கு அப்போ JP சார் கால் பண்ணி எல்லாம் சொன்னாரு... அப்பறம் கீழ வந்து பாத்தா உன்ன காணும்.. எனக்காக ஆஃபிஸ்ல சண்டைலாம் போட்டியாமே.. தேங்க்ஸ்...” என்று விளக்கினான். “உனக்காகலாம் ஒன்னும் இல்ல... அது தப்புன்னு தோணுச்சு அதான்.. அப்பறம் கழுத்த புடிச்சு தள்ளாத குறையா வெளில போன்னு சொன்னதுக்கு அப்பறமும் அங்கயே நிக்க நான் என்ன உன்னோட...” என்று ஏதோ சொல்ல வந்தவள் பாதியில் நிறுத்தினாள். “நீ என்ன என்னோட...??” என்று கேட்டவனின் கண்களில் குறும்பு மின்னியது. அவன் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, எங்கோ பார்த்துக் கொண்டு, “சாரி தான் கேட்டாச்சுல்ல... வழிய விடு” என்றாள். அவன் விடாமல், “வீட்டுக்கு வந்தப்போ கைல ஏதோ கட்டு போட்டிருந்தியே.. அன்னைக்கு விழுந்ததா சகி..” என்று அக்கறையாக அவள் கையைப் பற்றிக் காயத்தை ஆராய்ந்தான். அதற்குள் அன்று விழுந்த போது அவன் கத்தியது நினைவிற்கு வரத், தன் கையை உருவிக் கொண்டு, “இங்க பாரு, இந்த கேஸ் விஷயத்த தவற நமக்குள்ள எதுவும் கிடையாது..” என்றாள். “சரி உன் ஃபோன் நம்பர் குடு..” என்று கேட்டவனை முறைத்தாள். அதைப் புரிந்து கொண்டு, “கேஸ் விஷயமா தான்..." என்று பதில் அளித்தான். “உன் நம்பர் குடு.. ஏதாச்சு வேணும்னா நானே கூப்பிட்றேன்” என்று கூறியவளுக்கு, அவன் எண்ணைக் கொடுத்தான். “ஓகே தேங்க்ஸ்...” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள். 'நல்ல பொண்ணு தான்... சின்ன புள்ளையாவே இருக்கா இன்னும்.. எப்டி கோவம் வருது.. அப்பறம் ஏதோ சொல்ல வந்தாளே...' என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு மால்-இல் நடந்தது நினைவிற்கு வந்துத் தொலைந்தது. இனி அவளைப் பற்றி நினைக்க வேண்டாம் என்று தன்னையே திட்டிக் கொண்டு கிளம்பினான்.


தன் அறைக்குள் நுழைந்த சகி, சிறிது நேரம் கட்டிலில் படுத்திருந்தாள். தன் அலைபேசியை எடுத்து அவன் எண்ணை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். 'அன்னைக்கு அவ்ளோ திட்டினான்... இன்னைக்கு எவ்ளோ ஸ்வீட்டா பேசுறான்... இது தான நான் என் ட்ரீம் பாய் பத்தி யோசிச்சு வச்ச கேரக்டர்... அப்பறம் ப்ரொஃபஷனும் கூட கெத்தா இருக்கனும்ன்னு நினைச்சேன்.. அதே மாதிரி போலீஸ் ஆஃபிசர்.. ஒருவேளை எனக்கு அவனை.... ச்ச ச்ச... அப்டிலாம் எதுவும் இல்ல..' என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவளது அரைக் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால், லட்சுவும் நிலாவும் நின்று கொண்டிருந்தனர். “சுத்தி பாக்கணும்ன்னு சொன்னேல்ல, வா கீழ போய் காபி குடிச்சுட்டு போலாம்” என்று லட்சு அழைத்தாள். உடனே தன் கேமராவை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சகி. கீழே சென்று பாட்டியுடன் பேசிவிட்டு, பால் குடித்து விட்டு, வெளியே கிளம்பினர். இருட்டுவதற்குள் வந்து விட வேண்டும் என்று பாட்டி அவர்களை எச்சரித்து அனுப்பினார்.


வயல் வெளிகள், தோப்பு, ஆறு என்று ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்து விட்டு ஊர் எல்லைக்கு வந்தவர்களுக்குத், தூரத்தில் அந்தப் பெரிய வீடு தெரிந்தது. “ஹேய் அந்த வீடு செமயா இருக்குல்ல. அங்க போய் ஃபோட்டோஸ் எடுத்துக்கலாம் வாங்க..” என்று சகி அழைத்ததற்கு, லட்சு தயங்கி, “வேணாம்டி... அது பேய் வீடுன்னு ஊருக்குள்ள அந்த வீட்டை பத்தி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கத சொல்றாங்க..” என்றாள். நிலாவும் அங்கு வேண்டாம் என்று கூறச் சகி, “அதெல்லாம் ஒன்னும் இருக்காதுடி.. சும்மா வெளிய நின்னு பாத்துட்டு வந்துரலாம்” என்று கூறி அவர்களை இழுத்துச் சென்றாள். அங்கே சென்று வீட்டின் முன் நின்று புகைப்படங்கள் எடுத்ததும் சகி, “ஹேய் கதவு திறந்து தான் இருக்கு... வா உள்ள எட்டி பாக்கலாம்” என்றாள். அவர்கள் மறுக்கவே, “இருங்க நான் பாத்துட்டு வரேன்” என்று கூறி அந்த வீட்டிற்குள் நுழைந்தாள்.


வீடு இருள் சூழ்ந்து இருந்தது. ஆங்காங்கே இடிந்து கிடந்த துவாரங்கள் வழியாகவும் ஜன்னல் இடுக்குகளின் வழியாகவும் திட்டுத் திட்டாக வெளிச்சம் தெரிந்தது. கீழ்த் தளத்தைச் சுற்றிப் பார்த்த சகி, அங்கு இருந்த பொருட்களை ஆராய்ந்தாள். மாடியில் ஏதோ சத்தம் கேட்டதும், தயக்கமாகப் படிகளில் ஏறி மேலே சென்றாள். இங்கு லட்சுவிற்கும் நிலாவிற்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. “என்னடி போனவள இன்னும் காணும்.. இவ இப்டித்தான் சொன்னா கேக்கவே மாட்டா...” என்று நிலா பதறிக் கொண்டிருக்கையில் , “ஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ...” என்ற சகியின் அலறல் அவர்களுக்குக் கேட்க, எந்த யோசனையும் இன்றி அந்த வீட்டிற்குள் தன் தோழியைத் தேடி ஓடினர்.நிழல் தொடரும்..!!
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
187
Likes
382
Location
Chennai
#17
நிழலாய் தொடர்வேன்....

நிழல் 9உள்ளே வந்த தோழியர் இருவரும் ஒவ்வொரு பக்கமாகச் சென்று சகியைத் தேடினர். நிலா மேலே சென்று தேடலாம் எனப் படிகளில் ஏறினாள். மேலே ஒரு அறையில் எதோ சத்தம் கேட்க, உள்ளே எட்டிப் பார்த்தாள். அப்போது அவள் பின்னிருந்து யாரோ அவள் பெயரைக் கோரமாக, “நிலாஆஆஆ....” என்று அழைக்கப் பின்னே திரும்பிப் பார்த்தாள். தன் முகத்தில் அலைபேசி வெளிச்சத்தைப் பரப்பிப் பேய் போலச் செய்து காட்டிய சகியைப் பார்த்து "வீஈஈஈல்....." என்று கத்தியே விட்டாள் நிலா. பின் சகி தான் அது என்று தெரிந்ததும், “லூசு லூசு... ஏண்டி இப்டி பண்ண..” என்று அவளை மொத்த ஆரம்பித்தாள்.

கீழே லட்சு சகியைத் தேடிக் கொண்டு இருந்தாள். அவள் பின்னே யாரோ வருவது போலவே இருந்தது, ஆனால் திரும்பிப் பார்த்தல் அங்கு யாரும் இருக்கவில்லை. ஒரு அறைக்குள் நுழைந்தாள். அங்கு இருந்த நாற்காலியில் ஏதோ ஒரு உருவம் அமர்ந்து இருப்பது போலத் தெரிந்தது. இருட்டில் சரியாய்த் தெரியவில்லை. அவள் “சகி... சகி..” என்று அழைத்துக் கொண்டே அந்த உருவத்தை நெருங்கினாள். “இங்க தான் இருக்கேன் வா...” என்று அந்த உருவத்திடம் இருந்து சத்தம் வந்தது. ஆனால் அது சகியின் குரல் போல இல்லை. அந்த உருவத்தை நெருங்கித் தன் அலைபேசியின் வெளிச்சத்தை அதன் மேல் பரப்பிய அதே நேரம், “லட்சு... லட்சு...எங்க இருக்க?" என்று சகி மற்றும் நிலாவின் குரல் வெளியே கேட்டுத் திரும்பினாள். இந்தப் பக்கம் அலைபேசியின் வெளிச்சத்தில் தெரிந்தது 'அவள்'. சத்தம் கேட்டதும் லட்சு வெளியே ஓடி வந்து விட்டாள், அவளைப் பார்க்காமல்.

மூவரும் வெளியே வந்ததும் சகி விழுந்து விழுந்து சிரிக்க, லட்சுவும் நிலாவும் சேர்ந்து அவளை அடிக்கத் துவங்கினர். அதன் பின் வீடு வந்து, பாட்டியுடன் சிறிது நேரம் கதை பேசி விட்டு இரவு உணவை உண்டு விட்டு, மூவரும் மாடியில் இருந்த தொலைக்காட்சி அறையில் உக்கார்ந்து தாங்கள் எடுத்த படங்களை மடிக்கணினியில் பார்த்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அந்த வீட்டிற்குப் பக்கத்தில் எடுத்த படங்கள் வரவே, ஏதோ ஞாபகம் வந்தவளாக லட்சு, “சகி நான் உன்ன கீழ தேடிட்டு இருந்தப்போ, ஒரு ரூம்ல யாரோ சேர்ல உக்காந்து இருந்த மாதிரி இருந்துச்சு டி... நான் நீ தான்னு நினைச்சு உன்ன கூப்டுகிட்டே பக்கத்துல போனேனா... 'இங்கதான் இருக்கேன் வா' ன்னு ஒரு குரல் கேட்டுச்சு. அதுக்கு பக்கத்துல போனப்போ உங்க சத்தம் வெளிய கேட்டு ஓடி வந்துட்டேன்” என்றாள். “ஏன்டி எங்களுக்கு தெரியாம தண்ணி கிண்ணி அடிச்சிருகியா?” என்று கேட்ட சகியை முறைத்தாள் லட்சு. “எல்லாம் உன் மன பிராந்தி லட்சு குட்டி... நாம வேணும்ன்னா நாளைக்கு போய் பாக்கலாம் அது யாருன்னு...” என்று சொன்னதும், “ஒன்னும் வேண்டாம்.... இனிமேல் அந்த வீட்டு பக்கம் யாரும் போக வேணாம்... இப்போ போய் படுக்கலாம்” என்று முடிவாகச் சொல்லி விட்டு, எழுந்து விட்டாள் லட்சு.

தன் அறைக்கு வந்த சகி, லட்சு சொல்லியது போல் ஒரு வேளை அங்கே யாராவது இருப்பார்களோ என்று சிந்திக்கத் துவங்கினாள். எதற்கும் நாளை நேரிலேயே போய் பார்த்து விடலாம் என்று முடிவு செய்தவள், 'இதுங்களுக்கு தெரிஞ்சா விடாதுகளே.. எப்படி சமாளிச்சு போறது...' என்று யோசிக்க ஆரம்பித்து அப்படியே உறங்கியும் விட்டாள்.

அடுத்த நாள் விடிந்தது. அதிகாலையிலேயே கண் விழித்துக் கீழே இறங்கி வந்த லட்சு, அங்கே இருந்த சமையல்கார அம்மாவிடம் காபியை வாங்கிப் பருகி கொண்டே, “பாட்டி இல்லையா அக்கா?” என்று கேட்டாள். “இப்போ தான் கோயிலுக்கு போனாங்க மா.. இன்னைக்கு வெள்ளி கிழமைல.. வர ஒரு மணி நேரம் ஆகும்” என்று கூறினார். சரி என்றுவிட்டுக் கோப்பையை மேசை மீது வைத்துவிட்டுத் தோட்டதுப் பக்கம் நடந்தாள். மனம் நேற்று அந்த வீட்டில் நடந்ததையே அசை போட்டுக் கொண்டிருந்தது. அப்போது வலிய கரம் ஒன்று அவளை மரத்தின் பின் இழுக்கப் பதறிக் கத்தப் போனவள், அந்த கரத்திற்குச் சொந்தக்காரனைப் பார்த்து வாயை மூடிக் கொண்டாள். அங்கு விஷ்ணு நின்றிருந்தான். “ஹேய் விசு, என்ன இப்டி திடீர்னு வந்திருக்கீங்க நிஜமாவே நீங்கதானே.... என்று கேட்டவளை முறைத்து அவள் கன்னத்தைக் கிள்ளினான். “ஆஆஆஆஆஆ வலிக்குது..” என்று அவன் கையில் செல்லமாக அடி வைத்தாள் லட்சு. “உனக்கு என்னடி சந்தேகம்...” என்று வினவினான். “அதில்ல.. நேத்து தான இங்க வந்தேன், அதுக்குள்ள நீங்களும் வந்து நிக்குறீங்களே அதான் கேட்டேன்” என்றவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டு, “என் டீச்சரம்மாவா பக்காம இருக்க முடியல... அதான்..” என்றான். “உண்மைய சொல்லுங்க விசு என்னனு...” என்று விடாமல் கேட்டவளை முறைத்து, “இன்னைக்கு என்ன டே?” என்று கேட்டான் விஷ்ணு. சற்றும் யோசிக்காமல், “ஃப்ரைடே..” என்று பதில் கொடுத்தவளை என்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. “இன்னைக்கு ஃபெப் 14 டி... வேலெண்டின்'ஸ் டே...” என்று அவன் சொன்னதும் அசடு வழிந்த லட்சு, “ஆமால்ல... நான் மறந்தே போய்ட்டேன்..” என்றாள். “உனக்கு எது தான் ஞாபகம் இருந்திச்சு...” என்று அவளிடம் ஒரு பார்சலை நீட்டினான். அதைப் பிரித்துப் பார்த்தவள் அசந்து போனாள். அதில் அவர்களுக்குத் திருமணம் உறுதியாகிய இந்த ஒரு வருடத்தில், அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒரு தொகுப்பு போல் அமைத்திருந்தான். “தேங்க்ஸ் ங்க..” என்றாள். “வெறும் தேங்க்ஸ்காகவா இவ்ளோ தூரம் வந்தேன்....” என்று கூறி அவன் கண் சிமிட்ட, அவள் செம்மை பூசிக் கொண்டாள். அதை ரசித்துக் கொண்டே, “சரி நாம வெளிய போகலாம்.. இன்னைக்கு ஃபுல்லா என் கூடத்தான்.... பாட்டி வந்ததும் சொல்லிட்டு போலாம்” என்றான்.

அவள் அறையில் கண் விழித்த சகிக்கு ஒரு யோசனை தோன்றியது. 'நாம அங்க போனதையும், லட்சு சொன்னதையும் அந்த சிடு மூஞ்சி கிட்ட சொன்ன என்ன?' என்று யோசித்து, உடனே ருத்ரனின் எண்ணிற்கு அழைத்தாள். இரவு எல்லாம் அந்தக் கிராமத்தைச் சுற்றி வந்து விட்டு, அதிகாலையில் தூங்கிய ருத்ரன், தனது அலைபேசி அலறும் சத்தத்தைக் கேட்டு அழைப்பை ஏற்றுக் கண்ணை மூடிக் கொண்டே, “ஹல்லோஓஓஓஓஓ” என்று தூக்கம் கலையாமல் சொன்னான். அதைக் கேட்ட சகிக்கு என்னவோ செய்தது. 'ச்ச பாவம்... நல்ல தூக்கத்துல எழுப்பிட்டேன் போல' என்று எண்ணினாள். மீண்டும் அவன், “ஹலோ யாரு...?” என்றதும், “ஹலோ.. நான்... நான் தான்...” என்று அவளுக்கு வார்த்தை வரவில்லை. குரலைக் கேட்டதும் அது சகி தான் என்று தெரிந்து கொண்ட ருத்ரனுக்குத் தூக்கம் போயே போய் விட்டது. அவளைச் சற்று சீண்டிப் பார்க்கலாம் என்று நினைத்தவன், “நான் தான்னா யாரு?” என்றான். “நான்... நான்... சகி... உங்கட்ட கொஞ்சம் பேசணும்..." என்று தயங்கித் தயங்கிச் சொல்லி முடித்தாள். “சொல்லு சகி, எதுவும் ப்ராப்ளமா?” என்றான் அக்கறையாக. “இல்ல ப்ராப்ளம்லாம் இல்ல... கொஞ்சம் பேசணும், ஃபோன்ல வேண்டாம் நேர்ல மீட் பண்ண முடியுமா?” என்றதும் அவனுக்குச் சந்தோசம் தாங்கவில்லை. “சரி எங்க வரணும்” என்றவனின் கேள்விக்கு, “ஊரு எண்ட்ரன்ஸ் பக்கத்துல ஒரு பெரிய அரச மரம் இருக்குல்ல... அங்க ஒரு ஒன் ஹவர்ல வர முடியுமா?” என்றாள். “சரி... பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். களைப்பு எல்லாம் பறந்து போகக் கட கடவெனத் தயார் ஆகி, அவசரமாக உணவு தயாரித்து உண்டு விட்டுத் தன் வண்டியைக் கிளப்பினான்.

சகி சொன்ன நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்று அவளுக்காகக் காத்திருந்தான். சகி சரியான நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்தாள். அவள் வரும் பொழுது அவள் கேசம் காற்றில் கலைந்து பறந்து அவள் முகத்தில் ஆடிய காட்சியை ரசித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். “சீக்கிரமே வந்துட்டியா? எனக்கு கால் பண்ணிருந்தா நானும் வந்திருப்பேன்ல.. இங்க பக்கத்துல தான் வீடு..” என்றாள். “லேட்டா வந்தா மறுபடியும் மேகசின்ல போட்ருவீங்கன்னு பயந்து தான்...” என்று குறும்பாக அவன் சொன்னதைக் கேட்டு அவள் முகம் சற்று சுருங்க, “ஓய் சும்மா சொன்னேன்... நான் இப்போதான் ஒரு ஃபைவ் மினிட்ஸ் முன்னாடி வந்தேன்... என்ன பேசணும்? சொல்லு” என்றான். நேற்று அந்தப் பெரிய வீட்டிற்குச் சென்றது முதல் லட்சு சொன்னது வரை அனைத்தையும் சொல்ல, அவன் கவனமாகக் கேட்டுக் கொண்டான். “சரி.. நான் பாத்துக்குறேன்.. நீ இனிமேல் அந்த பக்கம் எல்லாம் போகாத.. உன் ஆர்ட்டிகிள்க்கு எதுவும் இன்ஃபர்மேஷன் வேணும்னா என்கிட்ட கேளு சரியா....” என்று அக்கறையாகச் சொன்னவனைப் பார்த்துத் தலையை மட்டும் உருட்டினாள். “அப்பறம்...” என்றவனை, 'வேறென்ன' என்பது போல் பார்த்தாள். “அவ்ளோதானா.. மேடம் காலங்காத்தாலையே ஃபோன் பண்ணீங்களா... வேற ஏதாச்சு இருக்கும்ன்னு நினைச்சேன்” என்று குறும்பாகக் கூறினான். “வேற என்ன நினைச்ச.?” என்று புரியாமல் கேட்டாள் சகி. “ஹ்ம்ம்... நேத்து நீ ஏதோ சொல்ல வந்து பாதில ஸ்டாப் பண்ணியே.. அது என்னனு சொல்லு, நானும் சொல்றேன்..” என்று குறும்பாகக் கூறி அவன் கண் அடித்துக் காட்டத், தன்னை அறியாமல் கன்னங்கள் சிவந்தன சகிக்கு. அதை அவன் ரசித்துக் கொண்டிருக்கையில் ஒரு பைக்-இன் ஹாரன் சத்தம் அவர்களைக் கலைத்தது.

அந்தப் பல்சர் பைக்-இல் இருந்தவனைப் பார்த்தவுடன் இருவரின் முகங்களும் மாறின. சகிக்கு மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் என்றால், ருத்ரனுக்குப் பொறாமையும் கோவமும். இதற்குக் காரணமானவன் நம் சூர்யாவே தான். அவனைப் பார்த்ததும் சகி துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினாள். “டேய் நாங்க நேத்து தானடா வந்தோம், அதுக்குள்ள இப்டி வந்து நிக்குற?” என்றாள். “இன்னைக்கு வேலெண்டின்'ஸ் டே டி... அதான் என் செல்லக்குட்டிய பாக்க ஓடி வந்துட்டேன்... சாரி பைக்ல வந்துட்டேன்... இன்னைக்கு ஃபுல்லா மூவி, கேன்டில் லைட் டின்னர்ன்னு ஒரே என்ஜாய்மென்ட் தான்... சரி சரி ஏறு... எனக்கு வீடு தெரியாது” என்று கூறி, அவளையும் அழைத்துச் சென்றான். போகும் பொழுது ருத்ரனிடம், 'ஃபோன் பண்றேன்' என்று சைகையில் காட்டிச், சூர்யாவுடன் பறந்து விட்டாள். பைக் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்த ருத்ரனுக்கு எரிச்சலும் கோவமும் வந்தது. 'ச்ச... நான் பாட்டுக்கு இருந்தேன்... இங்க வா அங்க வான்னு சொல்லி... அவன் என்னமோ செல்லக்குட்டின்னு சொல்றான், டி போட்டு பேசுறான்.. இவளும் உரிமையா டான்னு சொல்றா.. இதெல்லாம் பாக்கத்தான் கூப்டாளா.. இவ கூப்பான்னு தூக்கத்த விட்டு வந்தேன் பாரு என்ன சொல்லணும்.. இனிமேல் இவள பத்தி நினைக்கவே கூடாது' என்று மனதில் அவளைத் தாளித்து எடுத்தான்.


நிழல் தொடரும்..!!
 

DurgaC

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 18, 2011
Messages
187
Likes
382
Location
Chennai
#19
நிழலாய் தொடர்வேன்....

நிழல் 10விஷ்ணு-வைப் பார்த்த பாட்டி, “என்னடா இந்த பக்கம்?” என்று கேட்டார். “அது... அது.. நம்ம வயல் வேலைலாம் கொஞ்சம் இருக்குல்ல... ஒரு ரெண்டு நாள் அதெல்லாம் பாத்துட்டு அப்டியே வேல செய்றவங்களுக்குலாம் சம்பளம் குடுக்கலாம்ன்னு...” என்று இழுத்தவனைப் பார்த்து, “வழக்கமா உங்க அப்பா தான வருவான்..” என்று சந்தேகமாகக் கேட்டார். அதைக் கேட்ட லட்சு கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க விஷ்ணுவோ, “இவ ஏதோ மதுரை வர போயிட்டு வரணும்ன்னு சொன்னா... அதான் அப்பா கிட்ட இந்த வாரம் நான் அப்டியே வேலையெல்லாம் முடிச்சிட்டு வர்றேன்னு சொல்லிட்டேன்” என்று லட்சுவை இழுத்துவிட்டான். அவள் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கையில் உள்ளே நுழைந்த சகி, “ஆமா பாட்டி, அவ காலேஜ்ல நேத்து கால் பண்ணி ஏதோ வர சொன்னாங்க.. இங்க இருந்து மூணு பஸ் மாறி போகணுமேன்னு அண்ணாவ வர சொல்லிருந்தா..” என்று கூறிக் காப்பாற்றினாள். “சரி போயிட்டு வாங்க” என்று பாட்டி அவர்களை அனுப்பி வைத்தார்.

'ஹப்ப்பாடா... ஒரு டிக்கெட்ட கிளப்பியாச்சு' என்று சகி நிம்மதி அடைகையில், பாட்டி சூர்யாவைப் பார்க்க, “இது என்னோட அண்ணன் பாட்டி.. இவனுக்கு இந்த இயற்கை எல்லாம் ஃபோட்டோ எடுக்க புடிக்கும்... நான் இந்த ஊர பத்தி சொன்னதும் இங்க வந்துட்டான்... நானும் நிலாவும் இவன் கூட போய் ஊர சுத்தி காட்டிட்டு வர்றோம் பாட்டி” என்று அடுத்த டிக்கெட்டையும் கிளம்பினாள். நிலா அறைக்குச் சென்று அவளை அழைத்து வெளியே வந்த சகி, சூர்யாவிடம் “என் வேல முடிஞ்சுது... இனிமேல் நீயாச்சு என் அண்ணியாச்சு” என்றாள். “எப்டி டி இன்ஸ்டன்ட்டா இப்டி பொய் சொல்ற.. ஒரு லாயர், எனக்கு கூட இப்டிலாம் வராது..” என்று ஆச்சர்யப்பட்டான் சூர்யா. “அதெல்லாம் அப்டித்தான்...” என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக்கொண்டாள் சகி. “என்ன சூரி இது, இவள தனியா விட்டுட்டு நாம எப்படி போறது? லட்சுவும் இல்ல... பாட்டிகிட்ட வேற வெளிய போறோம் சொல்லி வச்சிருக்கா... எங்க போவா?” என்று முக்கியமான கேள்வியைக் கேட்டாள் நிலா. சூர்யா சற்று குழம்பி யோசிக்கத் தொடங்கியதைக் கண்ட சகி, “இந்த ஊரோட இயற்கை வளம் எல்லாம் பத்தி ஒரு ஆர்ட்டிகிள் எழுதலாம்ன்னு இருக்கேன்... நீங்க போயிட்டு வர்றதுக்குள்ள கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுக்கலாம்ன்னு இருக்கேன்.. ஊருக்குள்ள நாலு அஞ்சு சின்ன பசங்கள புடிச்சு வச்சிருக்கேன்.. அவங்க கூட தான் போறேன்” என்று சமாளித்தாள். சரி என்று சூர்யாவும் நிலாவும் கிளம்பப் பெரு மூச்சு விட்டவள், 'ஆனாலும் இந்த நிலா இன்னைக்கு பாத்து இவ்ளோ புத்திசாலியா இருக்க கூடாது... இதுகள கிளப்புறதுக்குள்ள....' என்று நினைத்துக் கொண்டாள்.

தன் பையில் ஃபோன், தண்ணீர் பாட்டில், மதியம் உண்பதற்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டும், ஒரு ஆப்பிளும் எடுத்துப் போட்டுக் கொண்டு, கேமராவை எடுத்துக் கொண்டு ஊருக்குள் நடந்த சகி, தனக்குச் சந்தேகமாகப்பட்ட இடங்களை எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். சில ஊர் மக்களிடம் மெதுவாகப் பேச்சு குடுத்து, இதற்கு முன் இதே போல் இறந்தவர்களைப் பற்றி விசாரித்தாள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்ல, அதில் பெரும்பாலும் பொதுவாகப் பொருந்தியது அந்த பெரிய வீடு தான். அதற்குள் மதியம் இரண்டு மணி ஆகி விடத் தான் கொண்டு வந்திருந்த ஆப்பிளை எடுத்துச் சாப்பிட்டாள்.

'அந்த வீட்டுக்கும் இந்த கொலைகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு, உண்மையிலேயே பேயா இருக்குமா.. இல்ல வேற யாரும்... சம்திங் ராங்' என்று எண்ணினாள் சகி. எதற்கும் அந்த வீட்டிற்கு இன்னொரு முறை போய் பார்க்கலாம் என்று நினைத்தவளுக்கு, அங்கு செல்ல வேண்டாம் என்று ருத்ரன் சொன்னது நினைவு வந்தது. 'பேசாம அவனையும் வர சொன்ன என்ன' என்று நினைத்தவள், தன் அலை பேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள். வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ருத்ரனின் அலைபேசி ஒலிக்க, ஓரமாக நிறுத்தி விட்டு அதை எடுத்துப் பார்த்தான். 'இவள நினைக்க கூடாதுன்னு நினைச்சா இவ வேற...' என்று அழைப்பைத் துண்டித்தான். மீண்டும் ஒரு முறை அவள் அழைக்க, மீண்டும் துண்டித்தான். அவள் விடாமல் அழைத்துக் கொண்டே இருக்க, அதை ஏற்றவன், “என்ன வேணும் உனக்கு?” என்று சற்றே எரிச்சலாகக் கேட்டான். “உங்கள பாக்கணும், ஒரு இடத்துக்கு..” என்றவளை முடிக்க விடாமல், “எனக்கென்ன உன் கூடயே சுத்துறது தான் வேலைனு நினைச்சியா.. உன் இஷ்டத்துக்கு அங்க வா இங்க வான்னு கூப்டுகிட்டே இருக்க.. இன்னொரு தடவ என்ன டிஸ்டர்ப் பண்ண... நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று பொறிந்து விட்டு அழைப்பைத் துண்டித்தான். சகிக்குக் கண்களில் கண்ணீர்க் குளம் கட்டியது. அதைக் கஷ்டப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டு, 'நம்ம தப்பு தான்... அவன் அப்டித்தான்னு தெரிஞ்சும் அவன்ட லிமிட் மெயின்டைன் பண்ணாம இப்டி அசிங்க பட்டுகிட்டே இருக்கோம்.. ச்ச... தனியாவே அந்த வீட்டுக்கு போகலாம்' என்று அந்த வீட்டின் பாதையில் நடந்தாள்.

ஆள் நடமாட்டமே அந்த இடத்தில் இல்லை. அந்த வீட்டை அடைந்த சகி, மேலும் முன்னேரத் தயங்கி நின்றாள். பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அந்த வீட்டின் தோட்டம் வழியே நடந்து அந்த வீட்டின் கதவருகே சென்றாள். கதவைத் தள்ள வந்தவள் ஒரு நொடி தயங்கி, 'ஜன்னல் வழியா ஃபர்ஸ்ட் பாப்போம்...' என்று எண்ணினாள். பல வருடங்களாகத் திறக்கப் படாத ஜன்னல்கள், அவள் தள்ளத் திறக்கவில்லை. பின் அங்கும் இங்கும் தேடித் தோட்டத்தில் இருந்து ஒரு இரும்புக் கம்பியை எடுத்து வந்து ஜன்னலைத் தள்ளினாள். அது லேசாகத் திறந்தது. அதன் வழியே தன் அலைபேசியின் வெளிச்சத்தைப் பரப்பி உள்ளே பார்த்தாள். ஒரு உருவம் படிகளில் ஏறிச் சென்றது போலத் தெரிந்தது. இதற்குள், அந்த வீட்டின் மறுப்புற தோட்டத்தை ஆராய்ந்து கொண்டிருந்த ருத்ரனுக்கு ஏதோ சத்தம் கேட்க, அவன் வீட்டின் முன் பக்கம் வந்தான். ஜன்னல் வழியே யாரோ தனக்கு முதுகு காட்டி வீட்டினுள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய, அது சகி போல் தோன்றவும், அவன் அருகில் சென்று சகியின் தோள்களில் கரம் பதித்தான். அதிர்ச்சியுடன் “ஆஆஆஆஆஆ...” என்று கத்தித் திரும்பியவளின் அலைபேசி கீழே விழுந்தது. அங்கு ருத்ரனைப் பார்த்தவள் சற்று நிம்மதி அடைந்தாள். “உன்ன இங்க வர கூடாதுன்னு சொன்னனா இல்லையா...” என்றவனின் அதட்டலில் சற்றே மிராண்ட சகி, தன்னைத் தேத்திக் கொண்டு, “நீ சொல்றதெல்லாம் நான் ஏன் கேக்கணும்? நான் ஃபோன் பண்ணப்போ டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்லிட்டு, இப்போ எதுக்கு என்ன கேள்வி கேக்கற?” என்று திருப்பிக் கேட்டாள். “இந்த மாதிரி ஏட்டிக்குப் போட்டியா பேசுறதெல்லாம் அவன் கிட்ட வச்சுக்கோ... என்கிட்ட பேசுனா பல்ல தட்டிருவேன்...” என்று அவன் கடுகடுக்க, 'இவன் எவன பத்தி சொல்றான்?' என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சகி. “இப்போ இங்க இருந்து போக போறியா இல்லையா.. இல்லனா JP சார் கிட்ட சொல்லி இந்த கவர் ஸ்டோரிய நிறுத்த சொல்லிருவேன்” என்று மிரட்ட, அவனை முறைத்துக் கொண்டே சற்று தூரம் சென்றவள், “போடா லூசு..” என்று கத்திவிட்டுக் குடுகுடுவென ஓடிவிட்டாள். கோவம் தலைக்கேற அங்கிருந்து கிளம்ப எண்ணியவன், ஜன்னல் அருகே கிடந்த சகியின் அலைபேசியைப் பார்த்து, அதை எடுத்துப் பத்திர படுத்திக்கொண்டான்.

மாலை சகி வீட்டிற்கு வரவும் மற்றவர்கள் வரவும் சரியாக இருந்தது. உள்ளே சென்றவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். இரவு உணவு முடித்து விட்டுத்தான் கிளம்ப வேண்டும் என்று சூர்யாவை வலுக்கட்டாயமாய் இருக்கச் சொல்லிவிட்டார் பாட்டி. எல்லோரும் அமர்ந்து இரவு உணவு உண்டனர். சூர்யாவிடம் ஊரைப் பற்றி விசாரித்தார் பாட்டி. “ரொம்ப புடிச்சிருக்கு பாட்டி.. இதெல்லாம் சுத்தி பாக்க ஒரு நாள் பத்தல..” என்று அடித்துவிட்டான். அதை உண்மை என்று நம்பிய பாட்டி, “விஷ்ணு இன்னும் ஒரு மூணு நாள் இங்க தான் இருப்பான்.. நீயும் அவன் கூட இருந்து சுத்தி பாத்துட்டு போயேன்” என்று சகிக்குச் சாதகமாக எடுத்துக் கொடுக்கச் சகியும், “ஆமா சூரி.. இங்க இரேன்.. ஜாலியா இருக்கும்.. விசு அண்ணாக்கும் ஒரு கம்பெனி கிடைக்கும்” என்று அவனை ஊக்குவித்தாள். அவளைச் சந்தேகமாகப் பார்த்த சூர்யாவும் கடைசியில், நிலாவுடன் ஊர் சுற்றலாமே என்று ஒத்துக் கொண்டான். இன்று வீட்டிற்குச் சென்று தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு நாளை வருவதாகக் கூறி விடைபெற்றான். சிறிது நேரம் கழித்துத் தன் அலைபேசியைக் காணவில்லை என்று வீட்டில் அங்கும் இங்கும் தேடிய சகி, நிலாவின் அலைபேசியில் இருந்து தன் எண்ணிற்கு அழைத்தாள். அது தொடர்பு எல்லைக்குள் இல்லாமல் போகவே, அந்தப் பெரிய வீட்டில் தான் இருக்க வேண்டும், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டுவிட்டாள்.

இரவு தன் வீட்டிற்கு வந்த ருத்ரன், உணவு சமைத்து உண்டு விட்டுப் படுக்கை அறைக்குச் சென்று அலுப்பாகக் கட்டிலில் விழுந்தான். பின் நினைவு வந்தவனாக, அவன் சட்டைப் பையில் இருந்து சகியின் அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அதில் ஏதோ ஒரு கார்ட்டூன் படம் வால் பேப்பராக இருக்க லேசாக முறுவல் தோன்றியது அவன் உதடுகளில். அது ஏதோ பேட்டர்ன் போட்டு லாக் ஆகி இருந்ததால், அவனால் அதற்க்கு மேல் ஆராய முடியவில்லை. அதை அப்படியே அவன் அலைபேசிக்கு அருகிலேயே வைத்துவிட்டுக் கண்ணை மூடித் தூங்க முயற்சிதான். அப்போது சகியின் அலைபேசி அலறியது. எடுத்துப் பார்த்தவன் அதில், அவள் பின்னே இருந்து சூர்யாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு நிற்பதைப் போல் எடுத்த புகைப்படம் மின்னியத்தைக் கண்டு பல்லைக் கடித்தான். பின் படத்திற்கு மேலே, “அண்ணா காலிங்...” என்ற எழுத்துக்களைபஃ பார்த்தவனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கட்டிலில் இருந்து குதித்து எழுந்தவன், 'இவன்...இவன் சகியோட அண்ணனா.. ச்ச இப்டி யோசிக்கவே இல்லையே நாம... அப்போ அவ என்னோட சகி தானா..' என்று நினைத்து மகிழ்ந்தான். மீண்டும் கட்டிலில் படுத்து, 'பாவம் அந்த வீட்டுக்கு போகத்தான் நம்மள கூப்டருக்கா போல.. நாம கோவத்துல திட்டிட்டோம்.. என்ன நினைச்சிருப்பா?' என்று சிந்திக்கத் துவங்கினான். 'அதான் போகும் போது சொல்லிட்டு போனாளே, போடா லூசுன்னு' என்று அவன் மனசாட்சி பதில் கொடுக்க, அவன் உதடுகள் புன்னகைத்தன.ஏதோ நினைவு வந்தவனாக, 'நாம நம்பர என்னன்னு சேவ் பண்ணிருப்பா?' என்று, அவன் அலைபேசியிலிருந்து அவள் எண்ணிற்கு அழைத்தான். சகியின் அலைபேசி 'சிடு மூஞ்சி காலிங்...' என்ற வாக்கியம் மின்ன அலறியது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவன், 'சரியான ஆளுதான்... ஃபோன்லயே இப்டி வச்சிருக்கான்னா, மனசுல என்னல்லாம் திட்டிருப்பாளோ... ராட்சசி' என்று எண்ணிச் சிரித்தான். பின் அதில் மின்னிய படத்தைக் கண்டு அதிர்ந்தான். அது அவன் அந்த மால்-இல் காபி குடித்துக் கொண்டிருந்தபோது எடுத்திருக்க வேண்டும். 'அப்போ அன்னைக்கு அவளும் என்ன பாத்தாளா.. ஃபோட்டோ எடுத்து வச்சிருக்கான்னா, என்ன அவ்ளோ புடிக்குமா...' என்று நினைத்து மகிழ்ந்தான். அந்தச் சுகமான நினைவுகளிலேயே உறங்கியும் போனான்.


நிழல் தொடரும்..!!
 
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.