நீங்கள் எந்த வகை?

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#1
எம்புள்ள நல்லவனா, வல்லவனா வளரணும்!' என்பதுதான் இங்கு எல்லா பெற்றோர்களின் பொது விருப்பமும்! ஆனால், அதற்கான சரியான சூழ்நிலையை, மனநிலையை எத்தனை பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தருகிறார்கள் என்பதற்கான விடை, திருப்திகரமானதாக இல்லை!

நல்ல ஸ்கூல், கம்ப்யூட்டர், கராத்தே, டிரெஸ், டூர்னு என்ன குறை வச்சோம் அவங்களுக்கு...?" என்று பொங்கும் பெற்றோர்களிடம், [TABLE="width: 250, align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
''நீங்க அவங்களுக்கு என்னல்லாம் பண்ணிக் கொடுத்திருக்கீங்கனு 'மெட்டீரியலிஸ்டிக்'-ஆ பட்டியல் போடாம, நீங்க அவங்ககிட்ட எவ்வளவு தூரம் புரிதலோட நடந்திருக்கீங்கறதை யோசிச்சுப் பாருங்க. குறிப்பா, பருவ வயதுப் பிள்ளைங்ககிட்ட

ஒரு நிமிஷம் யோசிங்க

பெற்றோர்களில் நான்கு வகையுண்டு

. பிள்ளைகள் செய்வதற்கெல்லாம் 'சரி' சொல்லும் சப்மிஸ்ஸிவ் பேரன்ட் (Submissive Parent),

பிள்ளைகளை தங்களின் விருப்பங்களுக்கு அடிபணிய வைக்கும் அரகன்ட் பேரன்ட் (Arrogant Parent),

பிள்ளைகளின் விருப்பத்துக்கும் இடம் தரும் சப்போர்ட்டிவ் பேரன்ட் (supportive parent)'

அதெல்லாம் உனக்குத் தெரியாது' என்று ஒதுக்காமல், எல்லாவற்றிலும் பிள்ளைகளை முழுமையாக ஈடுபட வைத்து, அவர்களின் முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் டைரக்ட்டிவ் பேரன்ட் (Directive Parent).

இதில் 'டைரக்ட்டிவ் பேரன்ட்'-ஆக இருப்பதுதான், டீன் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களை தன்னிச்சையான, அதேசமயம் சரியான முடிவெடுக்கும் மனிதர்களாக உருவாக்கும்!

இந்த காலப் பிள்ளைகள் விரும்புவது மரியாதைக்குரிய பெற்றோரை அல்ல, ஃப்ரெண்ட்லியான பெற்றோரை. அப்படியிருக்கும் பெற்றோர்களிடம்தான் அவர்கள் பயம், தயக்கங்கள் இன்றி தங்களின் பட்டாம்பூச்சி வயது நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வார்கள்

வீட்டுக்குப் புதிதாக நண்பர், தூரத்து உறவினர், தெரிந்தவர்கள் என்று யாராவது ஒருவரை அம்மா அல்லது அப்பா அழைத்து வரும்போது, அவர்களைப் பற்றிய விவரங்களை குழந்தைகளுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்.

90 சதவிகிதம் பேர் நல்லவர்களாக இருக்கலாம். மீதி 10 சதவிகிதத்தைப் பற்றி நமக்குத் தெரியாதே! அப்படிப்பட்டவர்களால் சமயங்களில் விபரீதமாக ஏதாவது நடக்கும்போது... 'அன்னிக்கு வந்தாரே' என்று குழந்தைகள் ஈஸியாக அடையாளம் காட்டுவதற்கு வசதியாக இருக்கும்.

நடை, உடையில் தவறான நபராக தெரிந்தால், 'அந்த அங்கிளை இனிமே வீட்டுக்கு வரச் சொல்லாதப்பா' என்றுகூட தைரியமாக குழந்தைகள் சொல்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கும்

இந்த மன்வித்தை புரிந்து சரியான பெற்றோராக இருப்பது உங்கள் கையில்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.