நீங்கள் கமகமக்க...

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
"பூக்களுக்கு நீயே வாசமடி' என்றும், "மங்கை அவள் வாய் திறந்தால் மல்லிகை பூ வாசம்' என்றும், பெண் வாசம் பற்றி பெருமை பேசும் பாடல்கள் நிறைய. நிஜத்திலும் அது சாத்தியமாக..

இதோ சில வாசனை டிப்ஸ்...:

பெண்ணின் உடலமைப்பு, செயல்பாடு காரணமாக பலருக்கும் உடல் துர்நாற்றம் என்பது தவிர்க்க முடியாமல் போகிறது. நாற்றத்துக்கு காரணங்கள் பல. முதலில் வியர்வை. இது ஆண்,பெண் எல்லாருக்கும் பொது. வியர்வைக்குத் தனியே எந்த வாசனையும் கிடையாது. அது, பாக்டீரியாவுடன் சேரும் போதுதான், ஒரு வித துர்நாற்றம் வெளிப்படுகிறது. வியர்வையை அசுத்தமாக நினைப்பவர்கள் பலர்; ஆனால், அது ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. வியர்வையின் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்பும் வெளியேறும். சருமத்தில் ரோம வளர்ச்சி அதிகமுள்ள இடங்களில், வியர்வை அதிகம் சுரக்கும். தினம் இரு வேளைகள் குளிப்பது, டியோடரன்ட் உபயோகிப்பது, காட்டன் உடைகளை அணிவது போன்றவை இப்பிரச்னைக்கு தீர்வளிக்கும்.

மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவற்றின் காரணமாகவும், பெண்களின் உடலில் துர்நாற்றம் வரும். மாதவிலக்கு நாட்களில் தரமான சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பது, அடிக்கடி அவற்றை மாற்றுவது போன்றவை இம்மாதிரி துர்நாற்றங்களை தவிர்க்கும். தினம் இரண்டு வேளை பல் தேய்த்தாலும், சிலருக்கு வாய் நாறும்; இவர்கள், மவுத் வாஷ் உபயோகிக்கலாம். கிராம்பை ஊற வைத்த தண்ணீரால் அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தாலும் நாற்றம் அகலும். அதே மாதிரி ஏலக்காயையும் மெல்லலாம்.

உடலை நாள் முழுதும் நறுமணத்துடன் வைத்திருக்க...:

குளிக்கும் தண்ணீரில் வேப்பிலை, கற்பூரம் அல்லது எலுமிச்சை பழத்தின் தோல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டுக் குளிக்கவும்; உடல் மணக்கும். ரொம்பவும் வாசனையான சோப்புகள் சருமத்துக்கு நல்லவையல்ல. சோப்புக்கு பதிலாக பச்சைப்பயறு மாவு அல்லது கடலை மாவுடன், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், வெட்டி வேர், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ் போன்றவற்றை காய வைத்து, அரைத்து, உடம்புக்கு தேய்த்து குளிக்கலாம். இது, சரும அழகையும் அதிகரிக்கும்; உடலையும் இயற்கை நறுமணத்துடன் வைக்கும்.
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
poo vaikkum poovaiyarkku nalla puthumanamana tips kuduthirukke ganga... nalla informations than konjam menakkettu ellam seiyanum... Thanks for sharing dear.
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#3
Latha chechi, Unga comments illama..ithanai naal vadi poi irundhom....ippadi adikadi vandhu boost kudunga....Thanks for your comments chechi...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.