நீங்கள் நடுவயதைத் தாண்டியவரா? - Are you middle aged?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நீங்கள் நடுவயதைத் தாண்டியவரா?கீழககண்ட அறிகுறிகளில் எவையேனும் இருந்தால், உங்களுககு சர்ககரை நோய் இருககலாம், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் அவசியம்.
• அடிக்கடி சிறுநீர் கழித்தல்
• தண்ணீர் குடிப்பதில் ஆர்வம்
• உணவில் அதிக விருப்பம்
• உடல் எடை குறைதல்
• வேலையில் ஆர்வம் குறைதல்
• கட்டி, கொப்புளம் தோன்றுதல்
• உடலில் அரிப்பு
• உடல் வலியும் களைப்பும்
• பார்வை மங்குதல்
• உடலுறவில் ஆர்வம் குன்றுதல்

‘சர்க்கரை’ டாக்டர்கள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்பதால் நீரிழிவு நோய் என்பது புதுமையான நோய் என்றோ, அதைக் கண்டு பிடித்து சில பல ஆண்டுகள்தான் ஆகிறது என்றோ நினைத்து விடாதீர்கள். நீரிழிவு நோய் மிகப்பழமையான நோய். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் இது பற்றி அறிந்திருக்கிறார்கள்.

சர்க்கரை நோய் எனவும் டயாபெடிஸ் எனவும் அழைக்கப்படுகின்ற இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களது இரத்தத்திலும் சிறுநீரிலும் அளவிற்கு அதிகமான சர்க்கரை காணப்படும். உடலிலுள்ள சில சுரப்பிகள் செயல்திறன் குன்றுகின்றதால் ஏற்படுகின்ற விளைவு இது.

உலக மக்கள் தொகையில் பல கோடிப் பேர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம்நாட்டைப் பொறுத்த வரை நூற்றுக்கு 8 அல்லது 10 பேர் இந்நோய் உடையவர்களாக இருக்கின்றனர்.

நீரிழிவு நோய் பிறநோய்களைப் போல் மனிதனைச் செயலிழக்கச் செய்யக்கூடியதோ அல்லது உயிரை மாய்க்கக்கூடியதோ அல்ல. (ஆனா, கண்டுக்காம விட்ட டேஞ்சர்தான்.) உடலின் சில குறைபாடுகளினால் ஏற்படுகின்ற இந்நோயை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். ஓரளவு கல்வியறிவு உள்ளவர்கள் கூட இதன் தன்மைகளை அறிந்து கொண்டு உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை போன்றவற்றில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தமக்குத் தாமே மருத்துவர்களாக இருந்து இதன் தொல்லைகளின்றி நீண்ட நாள் வாழ முடியும்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#2
Thanks for the useful info Lakshmi.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#3
Very useful sharing, Latchmy.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#4
Useful sharing Lashmi.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5
Thanks for the suggestions
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.