நீங்கள் முடிவு செய்யலாம்..!

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,848
Likes
75,306
Location
Chennai
#1
[h=1]உங்களுக்குப் பிறக்கபோகும் குழந்தையின் உயரத்தை நீங்கள் முடிவு செய்யலாம்..![/h]
சிம்பன்சிகள் 98.8% மனிதர்களை ஒத்த மரபணுக்களை பெற்றிருக்கின்றன நம்மை சிம்பன்சிகளிடமிருந்து வேறுபடுத்துவது நம் உருவாக்கத்தின் பின்புலம்குறித்து நாம் பெற்றிருக்கும் அறிவுதான். Rocket science தெரிந்த நமக்கு, நம்மை உருவாக்கும் மரபணு குறித்தும், அந்தத் துறையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் குறைவாகத்தான் தெரிந்திருக்கிறது.இதற்கு நாம் முதலில் ஜீன்களை புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்களும், ஒரு நூலகத்தின் அறை என வைத்துக்கொள்வோம். அந்த அறையின் புத்தக அலமாரி தான் நியூக்ளியஸ் (Nucleus). ஒவ்வொரு அலமாரியிலும் 23 புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் தான் நமது க்ரோமோசோம்கள். ஒவ்வொரு புத்தகமும் 2 தொகுதிகளை உடையது அதாவது, 23 இணைகள். உயிரினத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களின் எண்ணிக்கை மாறுபடும்.புத்தகங்கள் முழுக்க A, T, G, C எழுத்துகளால் எழுதப்பட்டு, ஒரு மனிதனை உருவாக்கத் தேவையான செய்திகளைத் தாங்கி நிற்கும். அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கம் உயரத்தை தீர்மானிக்கும். மற்றொரு பக்கம் கண் விழியின் நிறத்தைத் தீர்மானிக்கும். இப்படி ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு குணாதிசியத்தை தீர்மானிக்கும். இந்த ஒவ்வொரு பக்கமும் ஜீன் என்றழைக்கப்படுகிறது.மனிதர்களை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு DNA புத்தகம் எழுதப்பட்டிருக்கும் மொழி தெரியாது. அதனால் DNA புத்தகங்கள் RNA (A,U,G,C) மொழியில், மொழி பெயர்க்கப்படும். அதைப் படிக்கும் படைப்பாளி, மூன்றுமூன்று எழுத்துகளாக கூட்டிப் படித்து, அமினோ அமிலங்களை (Amino acid) உருவாக்குகிறார். பல அமினோ அமிலங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, புரதங்கள்( protein) உருவாக்கப்படுகின்றன. இதுதான், நீங்களும் நானும் உருவான கதை. எண்பதுகளின் தொடக்கத்தில். ஒரு கணினி உங்களுடன் உரையாடும் என்றாலோ, உங்களுக்காக வேலை செய்யும் என்றாலோ உங்களால் நம்பியிருக்க முடியாது. ஆனால், இப்போது இவற்றுடன் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.அதுபோல, உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையின் உயரத்தையும், கண் விழியின் நிறத்தையும் உங்களால் தேர்வுசெய்ய முடியும் என்றால் நம்ப மாட்டீர்கள்தான். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்துகிறது CRISPR (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats,) தொழில்நுட்பம்.ஒரு ஜீன் உருவாக்கப்பட்டிருக்கும் எழுத்து வரிசையில், ஒரு எழுத்து மாறினாலோ, அல்லது, Mutations(பிறழ்வு)ல் மாற்றப்பட்டாலோ மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஓர் எழுத்து மாற்றத்தால் என்ன பிரச்னை வந்துவிடும் என்கிறீர்களா? சிலப்பதிகாரத்தின் "கொண்டு வா" வுக்கும்,"கொன்று வா" வுக்கும், ஆன வித்தியாசத்தைத்தான் இதுவும் ஏற்படுத்தும்.
மரபணு மாற்றத்தால் ஏற்படும் நோய்களை மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது. மரபணு குறைபாட்டை சரி செய்ய Gene therapy பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஓர் எழுத்துப் பிழைக்காக ஒரு புத்தகத்தை திரும்பி எழுதுவது போன்று சிக்கலானதாக அது அமைந்தது. எழுத்துப் பிழை இருக்கும் பக்கத்தை மட்டும் பிரித்து விட்டு புதிய பக்கத்தை உட்செலுத்தும் முறையை CRISPR சாத்தியப்படுத்தியது. CRISPR தொழில்நுட்பம் ஸ்பெயின் நாட்டின் அலிகேனட் பல்கலைக்கழகத்தைச் (university of Alicante) சேர்ந்த பிரான்ஸ் சிஸ்கோ மொஜிக்கோவின்(Francisco Mojica,) ஆய்வுக் குழுவால் பாக்டீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வைரஸ், பாக்டீரியாவை தாக்கும்பொழுது அந்த வைரஸின் DNA மாதிரிகளை பாக்டீரியா தன்னுடைய DNA அமைப்புக்குள் செலுத்திக் கொள்ளும். அந்த DNAவுக்கு இணையான RNA மாதிரி உருவாக்கப்பட்டு, பாக்டீரியாவின் செல் முழுக்க அனுப்பப்படும். வைரஸின் DNAக்களை கண்டுபிடிக்கும் இந்த RNAக்கள், கேஸ் 9 (Cas 9) என்னும் வெட்டும் திறனுடைய புரதங்களைப் (protein) பயன்படுத்தி வைரஸின் DNA க்களை வெட்டிவிடும்.இதேக் கொள்கையைப் மற்ற DNA க்களை குறிப்பிட்ட இடங்களில் வெட்டவும் பயன்படுத்தலாம் என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த RNAக்கள் நம் உட்செலுத்தும் கட்டளைகளுக்கு ஏற்றவாறு இயங்கி நமக்குத் தேவையான இடத்தை வெட்டும். வெட்டப்பட்ட இடம் இயற்கையாகவே, நிரப்பப்படும்.எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகள் போலவும் CRISPR தொழில்நுட்பமும் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒரு சேர பெற்றிருக்கிறது. இது இயற்கைக்கு எதிரானது என்றும் மனித இனத்துக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் விவசாயப் பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்தவும் பயிரின் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்புத்திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படலாம்.

இது எதிர்காலத்தில் வரப்போகும் தொழில்நுட்பமல்ல; ஏற்கெனவே வந்துவிட்ட தொழில்நுட்பம். சீன ஆராய்ச்சியாளர்கள் CRISPR துணையுடன், HIV மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நம் கையில் ஒரு கத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதும் நம் கையில்தான் இருக்கிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.