நீட் தேர்வுக்கு சென்ற மாணவர்களுக்கு கடு&

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
#91
நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்பை நீக்க கோரிய வழக்கு - மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்புக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பதன் அடிப்படையில் நீட் தேர்வு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையில் நாடு முழுவதும் மாணவர்கள் வேறு வழியின்றி நீட் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்கின்றனர்.

நீட் தேர்வில் அதிகமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் என்பதால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இதன்மூலம் சிரமத்தை சந்தித்தனர். மேலும், தேர்வறைக்கு செல்லும் போது நடைபெறும் பலகட்ட சோதனைகளும் மாணவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது.

நீட் தேர்வுக்கு தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசோ அதனை கண்டுகொள்ளாமல் வருடந்தோறும் தேர்வை தவறாமல் நடத்தி வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே இன்று வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பினை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்தது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்ட அறிக்கையில் பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் வயது உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஎஸ்சியின் அறிவிப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், வயது உச்சவரம்பை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் பலர் தொடர்ந்த பல்வேறு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் இன்று ஒப்புக்கொண்டது. மேலும், இதுதொடர்பாக ஜூலை 2-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
#92
Girl from Bihar tops NEET, 8 Delhi students in top 50Highlights

  • While Delhi has the highest number of candidates in the top 50, Uttar Pradesh has the highest number of students who qualified (76,778)
  • Kalpana, the topper, secured 691 marks out of 720. Delhi topper Himanshu Sharma, who got the overall third position, secured one mark less (690)

Eight candidates from Delhi are among the top 50 in the National Eligibility cum Entrance Test (NEET-UG 2018) results announced by CBSE on Monday. The all-India exam was topped by Kalpana Kumari from Bihar, who too had studied in Delhi.

NEET is a single entrance test for admissions to more than 66,000 MBBS and BDS seats across the country. This was the last NEET conducted by CBSE. From next year, the National Testing Agency will hold the exam.

Helped by a drop in cutoff marks, as many as 7,14,298 students cleared the test this year, up from 6,11,739 in 2017. This means over one lakh more candidates will have a chance of getting an MBBS seat this year.

While Delhi has the highest number of candidates in the top 50, Uttar Pradesh has the highest number of students who qualified (76,778), followed by Kerala with 72,682 and Maharashtra with 70,184.

Kalpana, the topper, secured 691 marks out of 720. Delhi topper Himanshu Sharma, who got the overall third position, secured one mark less (690). Another Delhi boy, Aarosh Dhamija, was ranked fourth.

There was a significant increase of 16.5 percentage points in the number of candidates who registered for the test, with a majority of the aspirants (56%) being girls.

Just as in the previous editions, this year’s exam too was dogged with controversies, be it inconsistencies in translation of the question papers in regional languages or alleged errors in answer keys and mission question papers.

The exam was conducted in 13 languages and complaints were received from many states. West Bengal CM Mamata Banerjee wrote to Union HRD minister Prakash Javadekar alleging “gross irregularities” in the NEET-UG 2018. She said students were not provided question papers in their language on time.

“Many were given photocopies of question papers which bore the same candidate code for multiple students, and in many cases, the photocopies of questions were illegible. It is also reported that many students were forced to write answers using English or Hindi question papers,” Banerjee said.

The Calcutta high court on May 30, 2018, asked the NEET authorities to reserve a seat for an examinee till a regular bench decides her petition challenging the error-ridden Bengali question paper. Apala Debnath had moved the HC alleging that the Bengali version of the NEET paper had 180 mistakes, though the English version had none.

Students also moved the Madras high court alleging that a uniform question paper was not given and that there was a vast difference between the one in English and Tamil. There were 14 errors in the answer keys as well, they alleged.

CBSE has provided all India rank to the candidates. Now admitting authorities will draw merit lists based on the all India rank for MBBS/BDS seats in their jurisdiction. The Directorate General of Health Services will conduct online counselling for the 15% all-India quota seats, which include deemed universities, central universities, seats of ESIC Medical College and AFMC, BHU and AMU.

Exam topper Kalpana Kumari said she was taken aback with the top rank, though she was expecting to figure in the top five. “My sister checked my result and told me that I had secured the top rank. I had to ask her to double-check. Being a top ranker has been a totally amazing experience,” said the Bihar girl.

Kalpana was in Delhi for the past few months, staying with relatives after her Bihar board exams. “I want to get a seat in Maulana Azad Medical College. My focus is to complete the five-year MBBS, though I have not thought about what I would like to do beyond that,” she told TOI.

Aarosh Dhamija, one of the Delhi toppers did not make much of the ranking secured by him. “Everyone till rank 1,100 gets the same college. In fact, there are hundreds of students competing for the same spot, and it’s a matter of luck who gets ranked first,” he told TOI. “My aim was primarily to get a seat in Delhi, and I hope once the counselling and other procedures are over, I manage to stay home,” he said.

Aarosh, a student of Ryan International School in Rohini, already knew his score before the results came out, but was not expecting the high rank. He had scored 91.2% in his Class 12 boards, with 98 out of 100 in Biology.

Other Delhi rankers include Aditya Gupta (rank 11) with score of 680, Abhishek Kumar (rank 17, 675), Amulya Gupta (rank 20, 675).
 
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
#93
நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் - மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ முடிவு

நீட் தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று அடுத்த சில நாள்களிலேயே அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. பின்பு இந்த கல்வியாண்டுக்கான மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும் நடந்து முடிந்துள்ளது. இதில் தேர்வான மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளைத் தேர்வு செய்து தற்போது அதில் சேரவும் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 மதிப்பெண்கள் தவறாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்னதாக பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ‘தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும்; இந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இரண்டு வாரக் காலத்துக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும்’ என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

மருத்துவ சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இதற்கு முன்னதாக, நீட் தேர்வில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ மேல்முறையீடு செய்தால் அதற்கு தங்கள் தரப்பு கருத்தையும் கேட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதற்காக கேவியட் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , `` நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ.யின் முடிவைப் பொறுத்தே தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும். நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்குச் சாதகமாகதான் அரசு செயல்படும்” என கூறியுள்ளார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
#94
நீட் கருணை மதிப்பெண்கள் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது சிபிஎஸ்இ

நீட் தேர்வின் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது.இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று தகவல் வெளியானதும், வழக்கு தொடுத்த டி.கே.ரங்கராஜன் எம்.பி, ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
#95
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு கூடாது - தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வின் மூலம் கலந்தாய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி சி.பி.எஸ்.இ.-க்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கவுன்சிலிங்கை எப்படி நடத்துவது? என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதன்பின்னர், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தக்கூடாது என்றும், பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.