நீரழிவை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்த&

#1
சர்க்கரை வியாதி இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வியாதி. இதுக்கு முந்தைய காலங்களில் வயதானவர்களுக்கு மட்டுமே வந்த இது இப்போது சிறிய வயதினருக்கும் வந்துவிட்டது.

காரணம் உணவுப் பழக்கம், நேரங்கெட்ட நேரத்தில் தூங்குவது, மது, புகை என இவற்றை சொல்லலாம். உங்களுக்கு சர்க்கரை வியாதியின் அறிகுறி வந்திருக்கிறதா? கவலையை விடுங்கள்.

இயற்கையான ஆயுர்வேதத்தின் மூலம் சர்க்கரை வியாதி வராமல் முழுமையாக தடுக்கலாம். ஏனெனில் நமது நாட்டிலுள்ள வீரியமிக்க இயற்கை மூலிகைகளின் நன்மைகள் எந்த வித நோயையும் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. எப்படி என பார்க்கலாம். முதலில் சர்க்கரை வியாதியின் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

சர்க்கரை வியாதியின் அறிகுறிகள் :
திடீரென உடல் பல கிலோ வரை குறைகிறதா? அடிக்கடி தொண்டை வறண்டுபோகும் அளவிற்கு தாகம் எடுக்கிறதா? அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டுமென தோன்றுகிறதா? உடல் சோர்வு. பார்வை மங்குவது, கை, கால் நடுங்குவது இவை அனைத்தும் சர்க்கரை வியாதியின் அறிகுறிகள்தான்.

டைப்- 1 சர்க்கரை வியாதி :
இந்த வகை வியாதியில் இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று போயிருக்கும். காரணம் பீட்டா செல்களில் உண்டாகும் பாதிப்புகளால் இன்சுலின் சுரக்காமல் போயிருக்கும். இந்த வகையினர் இன்சுலினை வெளியிலிருந்து அதாவது ஊசிகளின் மூலம் பெற்றுக் கொள்வார்கள்.

டைப்-2 சர்க்கரை வியாதி :
இந்த வகையினருக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் அவை சரிவர வேலை செய்யாது. இதனால் ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிக்கும். இவர்கள் இன்சுலின் ஊசி போடத் தேவையில்லை. ஆனால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டோடு வைத்திருக்க வேண்டும்.

எப்படி குணப்படுத்தலாம்?
மாவிலைகளில் பல அரிய குணங்களும் சத்துக்களும் உண்டு. முந்தைய நாள் இரவில் முதலில் புதிதான 10- 15 மாவிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள்.


5 நிமிடங்கள் கொதித்தபின் அடுப்பை அணைத்து நீரை இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள். அடுத்த நாள் நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.

இதய நோயையும் தடுக்கும் :
இது போல் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாவிலை நீரை குடித்தால் உங்களுக்கு வந்த அறிகுறிகள் நின்று விடும்.

மாவிலைகளில் அதிக விட்டமின், என்சைம், ஆன்டி ஆக்ஸிடென்ட், மினரல் ஆகியவைகள் உள்ளன. இவை ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். இதய நோய்களை தடுக்கும். முயன்று பாருங்கள்.


 

gkarti

Super Moderator
Staff member
#2
Re: நீரழிவை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்&#29

Worth Sharing Ka.. It will be helpful for Many :)
 
#4
Re: நீரழிவை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்&#29

Thanks for information
 

Important Announcements!