"நீரின்றி அமையாது உலகு"

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#1
"நீரின்றி அமையாது உலகு"1. பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .
2.நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது.
3. இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது .
4.இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது .
5.RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது .
6.இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும் மாறி வரும் கால நிலைக்கேற்ப்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க. இதை முயற்சி செய்யலாம்.
மிளகு 25 கிராம்
சீரகம் 25 கிராம்
தேத்தாங்கொட்டை 1
வெட்டி வேர் சிறிது
வெந்தயம் 20 கிராம்
இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண் பாணை மிகவும் நல்லது .
சித்த மருத்துவர் உமா வளவன்
தேற்றாங்கொட்டை பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள்.
தேற்றாங் கொட்டை நீரைத் தெளிய வைக்கும் விதை என்ற பொருளைத் தருகிறது. சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது
ஆற்றில் வரும் கலங்கல் நீரைப் பருகவேண்டிய நிலை வரும்போது, ஆற்றுநீரைக் கொண்டுவந்து பானையில் ஊற்றி அதில் தேத்தாங்கொட்டையைப் போட்டு வைப்பர். கலங்கல் அடியில் படிந்து தேளிந்த நீர் மேலே நிற்கும். அதனைத் மேலாக மொண்டு பருகுவர்.
பொற்கொல்லர்கள் பழைய அணிகலன்களில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேத்தாங்கொட்டையை ஊறிய நீரில் நுரை பொங்கத் தூரியத்தால் தேய்த்துத் தூய்மை செய்வர். தாய்மார் தேத்தாங்கொட்டை நீரில் சில மணி நேரம் ஊறவைத்து எடுத்தே தூய்மை செய்துகொள்வர்.

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.