நீர் மருத்துவம் - Water Therapy

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நீர் மருத்துவம்

தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் !

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,
மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவ முறை

1. காலையில் துயில் நீவி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், l மதிய போசனம் இராப் போசனத்தின் போதும்
2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி – 30 நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) – 10 நாட்கள்

புற்றுநோய் – 180 நாட்கள்

காச நோய் – 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.
நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். “நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
[h=3]சாப்பிட்டதும் ஜில் தண்ணீர் வேண்டாமே![/h][h=5]சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

வெது வெதுப்பான தண்ணீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.

ஜில் தண்ணீர் வேண்டாமே

ஜில்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

ஜில் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக ஜீல் தண்ணீரை எடுக்ககூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
[/h]
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா

எப்போதும் உட்கார்ந்து கொண்டே உடல் உழைப்பு இல்லாமல் வேலைப் பார்ப்பதால், உடலின் பல இடங்களில் வலி அதிகம் ஏற்படும். அப்போது நல்ல சூடான நீரில் குளிக்க வேண்டுமென்று தோன்றும்.

இப்படி சுடுநீரில் குளிப்பதால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, உடல் வலி பறந்து, தசைகள் ரிலாக்ஸாகும். ஆனால் குளிர்ந்த நீரில் குளித்தால், இந்த சுகம் கிடைக்காது. ஆனால் குளிர்ந்த நீரில் குளித்தால் வேறு சில நன்மைகள் எல்லாம் கிடைக்கும்.

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் அருமையான 10 நன்மைகள்!!!

குளிர்ந்த நீரில் அல்லது ஐஸ் கட்டி நீரில் குளிர்ப்பதை க்ரையோதெரபி என்று சொல்வார்கள்.

இதனை விளையாட்டு வீரர்கள் பொதுவாக மேற்கொள்வார்கள். ஆனால் எப்போது உடல் ரிலாக்ஸ் ஆக வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அப்போது மட்டும் சுடுநீரில் குளிக்கலாம்.

மேலும் ஒவ்வொருவம் குளிர்காலத்தில் சுடுநீரில் அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது குளிர்காலத்தில் ஏன் குளிர்ந்த நீரில் குளிர்ப்பது சிறந்தது என்று பார்ப்போம்.

எச்சரிக்கையுணர்வை அதிகரிக்கும்

குளிர்காலத்தில் மந்தமாகவே இருப்போம். அப்போது சுடுநீரில் குளித்தால், இன்னும் மந்தமாகத் தான் இருக்குமே தவிர, எச்சரிக்கையுடன் செயல்பட முடியாது.

ஆகவே எச்சரிக்கை உணர்வை அதிகரிக்க குளிர்ந்த நீரில் குளிப்பது தான் மிகவும் சிறந்தது. அதுமட்டுமின்றி, நன்கு ஆழ்ந்த சுவாசத்தை நாள் முழுவதும் நிறைய முறை விட வேண்டும். இதனால் ஆக்ஸிஜன் அதிகமாக கிடைத்து, நாள் முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.

சருமத்திற்கு நல்லது

குளிர்காலத்தில் சருமம் மற்றும் முடி வறட்சியடைந்துவிடும். அத்தகைய நிலையில் சுடுநீரில் குளித்தால், அது மயிர்கால்களை தளரச் செய்து, சருமத்துளைகளை திறந்து, இன்னும் ஆபத்தை தான் விளைவிக்கும். ஆனால் குளிர்ந்த நீரில் குளித்தால், சருமத்துளைகளை அடைத்து, மயிர்கால்களையும் இறுக்கமடையச் செய்யும்.

நோயெதிர்ப்பு சக்தி மற்றும் இரத்த ஓட்டம் குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், விரைவில் நோய்கள் தொற்றிக் கொள்ளும். ஆகவே குளிர்ந்த நீரில் குளித்தால், அது உடலுறுப்புக்களுக்கு இரத்த ஓட்டத்தை சீராக்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் செயல்படச் செய்யும்.

தசைகளில் காயங்கள்
குளிர்காலத்தில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை தசைகளில் காயங்கள் ஏற்படுவது. காலநிலை குளிர்ச்சியுடன் இருப்பதால் தசைகளில் காயங்கள் ஏற்படும்.

அப்போது ஏதேனும் உடற்பயிற்சி செய்தால், அது கடுமையான வலியை ஏற்படுத்தும். ஆனால் குளிர்ந்த நீரில் குளித்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

மன அழுத்த நிவாரணி
ஆய்வு ஒன்று குளிர்ந்த நீரில் குளித்தால், யூரிக் ஆசிட்டின் அளவு குறையும் என்று சொல்கிறது. மேலும் குளிர்ந்த நீரில் குளிப்பது உடலில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளின் அளவை சீராக பராமரிக்கும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
தண்ணீர் பருகுவது ஏன்?

உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன. இதில் முக்கியமான விஷயம்… சூரிய ஔ படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கிறார்கள், இயற்கை வைத்தியர்கள்.

தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது.

உடலில் இருந்து ஜீவசத்துக்களைக் கரைத்து திரவ ருபமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது. மேலும் நமது உடலிலுள்ள ரசாயன பொருள்க ளுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது.

நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவ தில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக் கிறது. நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை முலமாகவும், சளி முலமாகவும் வெளி யேற்றுகிறது.

நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமா காமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது.


முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைபடுகிறது. மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது.

தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவு பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.

`மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஔ பட்ட தண்ணீர்தான்’ என்று கூறிள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றபடுபவர்.

இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யபடுவது தற்போது பிரபலமாகி வருகிறது.

`சூரிய ஔ பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன.

இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணபடுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன. சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தபடுத்துகின்றன’ என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர்.

சீனாவில் முலிகை பொடிகளைக் கலந்து முலிகை குளியல் முறையினால் பல நோய்களை குணபடுத்துகிறார்கள். அதேபோல் பவுத்த மதம், யூத மதம், இஸ்லாமிய மதங்களிலும் குளிப்பதும் ஒரு சமயச் சடங்காகவே செய்யபடுகிறது.

உடலைச் சுத்தபடுத்துவது குளிபதன் முலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தபடுத்துவது தண்ணீர் குடிப்பதன் முலம் நடைபெறுகிறது.

குழந்தை பிறந்தது முதல் குளிபாட்டுதல், பந்யா வாசனம் செய்தல், பெண் குழந்தைகள் ருதுவானால் ருதுமங்கள் ஸ்நானம் செய்தல் போன்ற சடங்குகளிலும், திருமண காலத்தில் மணமக்களை நீராட்டும் சடங்குகளிலும் தண்ணீரால் உடலை தூய்மைபடுத்துவது வலிறுத்தபடுகிறது.

குளிப்பது என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. மேலும் வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் கை, கால்களை கழுவும் வழக்கமும் நம்மிடையே உள்ளது.

ரோமாபுரியில் குளிப்பதை மிகவும் முக்கியமான ஒரு சடங்காகவே வைத்திருந்தார்கள். அவர்கள் அதிகமாக சூரிய ஔ பட்ட தண்ணீரில்தான் குளித்ததாக வரலாறு கூறுகிறது

இயற்கையானது மனித சமுதாயம் நோயின்றி வாழ்வதற்காகவே தண்ணீரைம், சூரிய வெளிச்சத்தைம், காற்றையும் படைத்திருக்கிறது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
கொழுப்பை குறைக்கும் வெந்நீர்

தினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிதமான நீரை விட வெந்நீரை தினமும் பருகும் போது அது உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகிறது.

உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டை பிரச்சனைகள் தீரும்.

டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும். காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா? ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

தினமும் வெந்நீர் குடிப்பதால் பலவித மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.

உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான். மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது.

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு.

இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம்.
தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம். நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை.

ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால் அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும்.

அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

நம்மில்ல் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது.

இது எவ்வளவு தவறானது ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்.
உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்துபவர்கள்தான்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது.

ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.
அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.

அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள். மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால் அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!’`


‘காலையில் எழுந்ததும் தண்ணி குடிக்கிறேன், சரியா?’, ‘தண்ணி நிறைய குடிச்சா ரொம்ப நல்லதா?’, ‘சாப்பிடும்போது தண்ணி குடிக்கக் கூடாதா?’, ‘வெதுவெதுப்பான தண்ணீரா, வெந்நீரா… எது நல்லது..?’

இப்படி தண்ணீர் குடிப்பது பற்றி ஏகப்பட்ட குழப்பங்கள் பலருக்கும். இவர்களுக்கெல்லாம் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர், ரேச்சல் ரெபேக்கா தரும் சூப்பர் டிப்ஸ்…

பொதுவாக, நம் உடலுக்குத் தண்ணீர் தேவையெனில், தாகம் எடுத்து நம்மிடம் கேட்கும். அப்போது குடித்தால் போதுமானது. லிட்டர் லிட்டராக குடிக்கத் தேவையில்லை.உடல் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், செரிமானப் பிரச்னை நிச்சயம் வரும். காரணம், வயிற்றில் செரிமானம் நடப்பது அக்னியால். அதிகமான தண்ணீர் அந்த அக்னியை அணைக்கும்போது, அது தடைப்படும்.
தாகம் எடுத்தும் தண்ணீர் அருந்தாமல் தவிர்க்கிறவர்களுக்கு, நீர்ச்சத்துக் குறைந்து, சரும வறட்சி, சுருக்கம், முடி உதிர்வு, கருவளையம், காலில் வெடிப்பு போன்றவை ஏற்படும்.

சாப்பிடும் முன், பின், சாப்பிடும்போது என்று எப்போது தாகம் எடுக்கிறதோ அப்போது தண்ணீர் குடிக்கலாம்.


காலையில் எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் குடித்த பின்னரே காலைக் கடமைகளை முடிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு, அவர்களின் உடலில் கழிவை வெளியேற்றும் வாயு உற்பத்தி நின்றுவிட்டது என்று அர்த்தம். தானாக நடக்க வேண்டிய விஷயத்தை தண்ணீர் குடித்துதான் தூண்ட வேண்டும் என்றால், உடலில் பிரச்னை என்றே அர்த்தம்.
பொதுவாக, வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, ஜீரணக் கோளாறுக
ளைத் தவிர்க்கும். குறிப்பாக, காலை எழுந்ததும்! அதற்காக, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. உணவைத் தவிர்த்து, ஒரு பழம் சாப்பிடலாம்.

தண்ணீரைக் குழந்தைகளுக்கு சில்வர் பாத்திரத்தில் வைத்தும், உடல் உழைப்பாளிகளுக்கு இரும்புப் பாத்திரத்தில் வைத்தும் கொடுக்கலாம். வெயில் காலத்தில் கண்டிப்பாக மண்பானைதான் பயன்படுத்த வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், காப்பர் பாத்திரத்தில் வைத்த நீரை குடிக்க வேண்டாம்.
நிலத்தடி நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நிலையில் குடிப்பது சிறந்தது. தண்ணீரை லேசாக சூடுபண்ணுவதும், வெந்நீரில் பச்சைத் தண்ணீர் கலந்து வெதுவெதுப்பாகக் குடிப்பதும் தவறு. கிருமிகள் அழியாது

 

Attachments

Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.