நெஞ்சு எரிச்சல் - Heart Burning

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
நெஞ்சு எரிச்சல் என்பது மாரடைப்பு அல்ல...அது நெஞ்சுக்கும் கீழே இருக்கும் உருவாகும் பிரச்சினை...

இந்த நெஞ்சு எரிச்சல் என்பது சில மணித்துளிகள் அல்லது சில மணி நேரமே இருக்கும்...அதாவது எப்போதாவது அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டாலோ அல்லது சாப்பிட்ட மறு நொடியே படுத்தாலோ இந்த நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு விடும்....அப்படியே குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்....

நெஞ்சு எரிச்சல் எப்படி ஏற்படுகின்றது??

நாம் சாப்பிடும் உணவு என்பது நமது வாயின் வழியாக ஒரு பைப் பின் மூலமாக வயிற்றுக்கு செல்லும்....

அந்த பைப் ஒரு கதவு போல ஒவ்வொரு உருண்டையும் உள்ளே செல்லும் போது திறந்து திறந்து மூடும்....சில சமயங்களில் மூடாமல் இருக்கும் போது வயிற்றினில் இருந்து ஒரு அமிலம் உருவாகி அந்த நீண்ட குழாயினுள் சென்று விடும்...அந்த குழாயின் பெயர் ஆங்கிலத்தில் ஈசோபெகஸ் என்று அழைப்பார்கள்...

அந்த அமிலம்தான் நெஞ்சு எரிச்சலை உருவாக்கி விடும்....அதுதான் அந்தக் காலத்தில் சாப்பிடும் போது பேசக் கூடாது என்று சொல்லி வைத்தார்கள்...

ஏனெனில் கொஞ்சம் இடைவெளி இருந்தாலும் அந்த அமிலமானது ஈசோபேகஸ் என்னும் குழாய்க்குள் சென்று விடும் மேலும் நெஞ்சு எரிச்சல் வந்து விடும் என்றே சொல்லி வைத்தார்கள்...

என்ன காரணத்தினால் நெஞ்சு எரிச்சல் உருவாகின்றது?

மிக முக்கிய காரணம் இரவினில் அல்லது பகலினில் சாப்பிட்டதும் படுத்து விடுவது...

இரண்டாவது அதிக கொழுப்புடைய உணவினை உட்கொள்வது...

மூன்றாவது சிகரட் குடிப்பது

நான்காவது காபி போன்ற அதிக கேபைன் உட்கொள்வது...

ஐந்தாவது கார்போனட் பானங்களை குடிப்பது

ஆறாவது இரவினில் தக்காளி, சிட்ரிக் வகை சாறுகளை குடிப்பது

ஏழாவது வெங்காயம் மற்றும் இரவினில் பிஸ்ஸா மற்றும் வெண்ணை சம்பந்தப் பட்ட உணவுகளை உட்கொள்வது

எட்டாவது அதிக எடை கொண்ட உடலும் இதற்க்கு காரணமாக அமைகின்றது....


நெஞ்சு எரிச்சலை எவ்வாறு தடுக்கலாம்?

முதலில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு உட்கொள்ளல் வேண்டும்..

சிகரட் குடிப்பவராக இருந்தால் உடனடியா நிறுத்தியாக வேண்டும்...

அதிக பருமனாக இருந்தால் உடலை உடனடியாக குறைத்தல் வேண்டும்..

இரவு நேரத்தில் அதிக அளவு சாப்பிடக் கூடாது...

மிக இறுக்கமான உடைகள், மிக இறுக்கமான பெல்ட் டுகளை தவிர்த்தல் நல்லது....

இப்படி செய்தால் நெஞ்சு எரிச்சலை எளிதாக தடுக்கலாம், அல்லது குறைக்கலாம்....


நெஞ்சு எரிச்சல் வேறு, நெஞ்சு அடைப்பு வேறு புரிந்து கொள்ளுங்கள்....
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
நல்ல பதிவு செல்வி...

அழகான விளக்கம்...

கண்டிப்பாக இதை பின்பற்றினால் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு தான்....
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3
நல்ல பதிவு செல்வி...

அழகான விளக்கம்...

கண்டிப்பாக இதை பின்பற்றினால் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு தான்....
Thank u sis.....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.