நெய்யின் மகிமை

S.J.AMMU

Friends's of Penmai
Joined
Jul 30, 2018
Messages
266
Likes
512
#1
"நெய்யில்லா உண்டி பாழ் 'என்பது சித்தர்கள் கூற்று இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது, நாம் தான் இதன் மகத்துவத்தை மறந்து விட்டோம்.. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் செல் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும்.ஏன் என்றால் நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஜீரண சக்தியைத் தூண்ட,நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலம் மிக்கதாக மாற்றுகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை பயன்படுத்தலாம்.. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர்போன்ற நோய்களை தடுக்கிறது. எதுவும் உடனடியாக நடக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..தொடர்ந்து நெய் எடுத்து கொண்டால் மட்டுமே கேன்சர்போன்ற நோய்களை தடுக்கும்.
நெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது. அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர். இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் ...
Saturated fat – 65%
Mono – unsaturated fat – 32%
Linoleic – unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க, நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து ,நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும். ஞாபக சக்தியை தூண்டும்.. சரும பளபளப்பைக் கொடுக்கும்.. கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும். அல்சர் உள்ளவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை அரித்து புண்ணாக்கி விடுகின்றன.

இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். அப்போது உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.