நெய் அதிகம் சாப்பிடுறவங்களா நீங்க? - About Ghee

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,018
Location
Toronto
#1


225_0.jpg
நெய் அதிகம் சாப்பிடுறவங்களா நீங்க? இதை படிச்சு பாருங்க...


பண்டிகைக் காலங்களில் வீட்டில் அதிகமான அளவில் இனிப்புகள் செய்வது வழக்கம். அவ்வாறு செய்யும் இனிப்புகள் அனைத்திலுமே, நிச்சயம் நெய் இருக்கும். அத்தகைய நெய் உடலுக்கு ஆரோக்கியமற்றது என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் அது அளவுக்கு அதிகமானால் தானே தவிர, குறைவான அளவில் எடுத்தால் அல்ல. ஏனெனில் சுத்தமான நெய்யில் ஃபேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் 89% குறைவாக உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சரி இப்போது, அந்த சுத்தமான நெய்யின் நன்மைகளைப் பார்ப்போமா!!

சுத்தமான நெய் என்றால் என்ன?

வீட்டிலேயே வெண்ணெயை உருக்கி நெய்யாக மாற்றுவது தான், சுத்தமான நெய். அந்த சுத்தமான நெய்யை சாப்பிடுவதற்கான நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன், அதனை யாரெல்லாம் எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கான அடிப்படைகளை தெரிந்து கொள்ளுங்கள்....

* இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம்.

* அதுவே உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், முற்றிலும் நெய்யை தவிர்க்க வேண்டும்.

* மேலும் ஒரு நாளைக்கு ஒருவர் 10-15 கிராம் நெய் தான், உடலில் சேர்க்க வேண்டும்.

நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?

* தொடர்ச்சியாக நெய்யை உடலில் சேர்த்து வந்தால், உடல் மற்றும் மனம் உறுதியடையும், மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதை சாப்பிட்டால், உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதிலும் பார்வை, தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும்.

* கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.

* சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை.

* சில மக்கள் நெய் சாப்பிட்டால், மனம் சமநிலையோடு இருப்பதோடு, மூளையின் செயல்பாடும் மேம்படும் என்று நம்புகின்றனர்.

* நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

* நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். சொல்லப்போனால், நெய்யில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது.

* சமையலில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட நெய் மிகவும் சிறந்தது. ஏனெனில் அந்த எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் கருகிவிடும். ஆனால் நெய்யானது அவ்வாறு இல்லை, அது எவ்வளவு வெப்பத்திலும் வாசனையுடன் இருக்குமே தவிர, கருகாமல் இருக்கும்.

* உடலுக்கு ஒரு சில கொழுப்புகளானது மிகவும் அவசியமானது. ஏனெனில் அந்த கொழுப்புகள் தான் செரிமான மண்டலத்தில் இருந்து வெளிவரும் ஆசிட், குடல் வாலை பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் இது நரம்பு, சருமம் மற்றும் மூளையை வலுவாக்குகிறது.

ஆகவே மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து, சுத்தமான நெய்யை வீட்டிலேயே தயாரித்து, ஆரோக்கியமான வாழ்க்கையை தொடங்குங்கள். மேலும் பண்டிகைக்கு நெய்யை பயன்படுத்தும் போது சுத்தமான நெய்யை மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். குறிப்பாக அளவோடு சாப்பிடுங்கள், வளமோடு வாழுங்கள்.


 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
naan kooda Deepabala pola Ghee niraya use pannuven Mahi.. unga heading parthutu idhu edho again advise pola irukku ghee adhigam ubayoga paduththinaal geduthal endru ezhudhi iruppaargal endru paarthtahl Mahi kooda namakku aatharavaaga ezhudi engalai kaapatrivittargal. Thanks Mahi for your information on Ghee and its benefits.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.