நொடிப்பொழுதும் மறவேன் - Nodippozhudhum maraven by Thenuraj

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#11
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


சாய் - லக்ஷ்மி காதல் பக்கங்களை
புரட்டிப் பார்த்ததோடு இல்லாமல்.. அதை ஆகாஷுக்கும் படித்துக் காண்பித்துக் கொண்டிருக்கும் நேத்ரா.. அடுத்து என்ன சொல்லப் போகிறாள்.? தெரிந்துக் கொள்ள udக்கு போவோம்.
நொடிப்பொழுதும் மறவேன் - 12உங்கள் கருத்தினை பகிர்ந்துக்கொள்ள...நொடிப்பொழுதும் மறவேன் - கமெண்ட்ஸ்
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#12
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


சாய் - லக்ஷ்மியோட கல்யாண வாழ்க்கையை கொஞ்சம் புரட்டிப் பார்ப்போமா..!! எனக்கு நேரமில்லாத காரணத்தால்.. இங்கேயே பதிவிடுகிறேன்..நொடிப்பொழுதும் மறவேன் - 13திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். கணவனும், மனைவியும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனமொத்து வாழவேண்டும் என்ற அர்த்தத்தில் அப்படி சொல்லிவிட்டு சென்றனர் நம் முன்னோர்கள்!


ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. அன்பு, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை, ஊடல், கூடல் எல்லாம் இணைந்த பந்தம். கணவன்-மனைவி உறவு என்பதே டிவைன் ஃபிரெண்ட்ஷிப் என்பதை தவிர வேறில்லை. இது சரியாக அமையப் பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் ஊக்கம் தந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்!


கல்யாணத்தை பற்றி இப்படி பலவிதமாக தன் தந்தை சொல்லிய வற்றையெல்லாம் நினைத்து பார்த்த சாய், தான் கட்டிய தாலியை ஏற்ற சில நிமிடங்களிலேயே தன் மனைவியின் வாயால் வந்த கேள்வியால் மனம் வாடினான்.


அவன் முகவாட்டத்தைக் கண்டவள், தன் பேச்சு அவனை காயப்படுத்தி விட்டதை உணர்ந்து “சாரி மாமா.. நான்.. ஏதோ..” என்று திக்கித்திணற.. அவனோ ஒன்றுமே பேசாமல் அவளையே பார்த்தான்.


அவனின் தீர்க்கமான பார்வையை தாங்க முடியாமல் ஒருவித குற்றவுணர்வு தாக்க தலைகுனிந்து நின்றாள்.


சிலநொடிகள் நீண்ட இந்த நிலையை அப்படியே நீடிக்க விடாமல் ஆதி குறுக்கே வந்தான்.


இருவரும் மௌனமாக நிற்பதைக் கண்டவன் “என்னடா மாப்ளே.. லஞ்சுக்கு எங்கே போகலாம்?” என்று கேட்க..அப்போதும் இருவரும் மௌனத்தை கலைத்தார்கள் இல்லை. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்க..


அவர்களை உற்றுப்பார்த்த ஆதி ‘இதென்னடா இது.. இதை பார்த்தா, ரொமான்ஸ் பார்வை மாதிரி இல்லையே! அச்சச்சோ முதல்நாளே ஊடலா?! என்னடா முருகா.. உன் திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா? உங்க வூட்டு ஆளுங்களுக்கு, அடுத்தவங்க வாழ்க்கையில விளையாடி பார்க்குறதே வேடிக்கையா போச்சு’ என்று கடவுளை திட்டியவன்


நிலைமையை சகஜமாக்கும் பொருட்டு.. நண்பனின் தோளைப் பிடித்து உலுக்கி “என்ன லுக்கு? நீங்க ரெண்டு பேரும் பார்வையாலேயே பசியாத்திப்பீங்க.. நாங்க!! எங்களையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணு ராசா… காலையில இருந்த டென்ஷன்ல அப்போவும் சாப்பிட விடலை.. இப்போயும் வயித்தை பத்தியே நினைக்காம இருந்தா எப்புடி?” என்று கெஞ்சலாக கேட்டான்.


மனைவியின் கேள்வியால் மனதிற்குள் பரவிய ஏமாற்றத்தையும், கோபத்தையும் நொடியில் மறைத்து மறந்தவன், ஆதியை பார்த்து”ஏண்டா எப்போ பாரு சாப்பாடு தானா? அதைத்தவிர வேற எதுவுமே தோணாதா?” கேலியாக கேட்க..


நண்பனின் மாற்றத்தை உணர்ந்து “என்ன நண்பா இப்படி சொல்லிப்புட்டே? எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாரிக்குறோம்.. எல்லாம் இந்த எண்சாண் உடம்புக்கும், அரைஜாண் வயித்துக்கும் தானே? ‘தேடிச்சோறு நிதம் தின்று..’ன்னு பாரதிதாசனே சொல்லிட்டு போயிருக்கார்” என்று பசி மயக்கத்தில் உளற..


அவன் பேச்சும், செயலும் சிரிப்பை வரவழைக்க.. தன் கவலையையும், சோகத்தையும் மறந்தவளாய் “ஹய்யோ அண்ணா.. அது பாரதியார் சொன்னது” என்று லக்ஷ்மி சொல்லதான் நினைத்தது நடந்துவிட்டது, இருவரின் மனமும் உற்சாக நிலைக்கு வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில்“யார் சொன்னா என்ன சிஸ்டர்? எனக்கு இப்போ சோறு வேணும். உன் புருஷன் போடுவானா மாட்டானா? கேட்டுச் சொல்லு”


ஆதியின் செய்கையால் மனம்விட்டு சிரித்தவள் “மாமா.. அண்ணா பாவம்.. வாங்க, முதல்ல எங்காவது போய் சாப்பிடலாம். அப்புறமா நம்ம பிராப்ளமை பார்த்துக்கலாம்” என்று கெஞ்ச..


அவளை முறைத்த ஆதி ‘ம்க்கூம் அவனே மறந்தாலும் நீ எடுத்துக் கொடும்மா..’ என்று உள்ளுக்குள் திட்டினான்.


புதுமனைவியின் கெஞ்சல் சாய்யின் கோபத்தை மறக்கடிக்க, ஆதியை பார்த்து “எங்கேடா போகலாம்? நீயே சொல்லு..” என்று சிரித்தான்.


“ம்ம்ம்.. எங்கே போகலாம்?” என்று யோசித்தவன்.. ஓரிரு நிமிடம் கழித்து “அஞ்சப்பர்.. இல்லேன்னா தலப்பாக்கட்டு போகலாமா?” என்றவன் திடீரென நினைவுக்கு வந்ததை போல..


“ஏம்மா லக்ஷ்மி.. நீ நான்-வெஜ் சாப்பிடுவே தானே?” என்று சந்தேகமாக கேட்க..


அவளோ கணவனையும், ஆதியையும் மாறிமாறி பார்க்க..


“எம்மா கொஞ்சம் நிறுத்தும்மா.. எதைக் கேட்டாலும், இப்படியே 90 டிகிரி டைரக்ஷன்ல மாத்தி மாத்தி பார்க்குறே! இரு.. இனிமே நான் டைரக்ஷனை மாத்துறேன்.. அப்போ என்னா பண்ணுவே? அப்போ என்னா பண்ணுவே?” என்று கிண்டலடிக்க“டே.. உனக்கு இப்போ சோறு வேணுமா, இல்லே டைரக்க்ஷன் பார்த்து நிற்கிறது முக்கியமா?” சாய் கடுப்படிக்க..


“த்தோடா… இங்க பாருடா.. பொண்டாட்டியை சொன்னா, அய்யாவுக்கு கோபம் வருது” ஆதியும் கேலியாக பேசி.. ஒருவழியாக அவர்களின் விளையாட்டுச் சண்டையை முடித்து, நண்பர்களின் ஆசைக்கிணங்க அஞ்சப்பர் சென்று உணவையும் முடித்து, அவரவர் இல்லம் நோக்கி சென்றனர்.


ஆதியையும் தங்களுடன் வருமாறு இவர்கள் அழைக்க, அவர்களின் தனிமையில் குறுக்கிட விரும்பாமல், மற்றொரு நாள் வருவதாக சொல்லி விடைப்பெற..


அவனை தடுத்த லக்ஷ்மி”அண்ணா ப்ளீஸ்.. எங்க கூட வாங்க. நைட் சாப்பாடு முடிச்சுட்டு, நீங்க உங்க வீட்டுக்கு போங்க.. ப்ளீஸ்..”


“இல்லேம்மா…” என்று தயக்கமாக ஆரம்பித்தவனை பார்த்த லக்ஷ்மி “இல்லேண்ணா.. இப்போதைக்கு எங்களுக்கு சொந்தம்னு யாருமில்லே. நீங்களும் போயிட்டா, லோன்லியா ஃபீல் பண்ணுவோம். அதுவும் முதல் நாளே, புதுவீட்டுல நுழையுறப்போவே கூட யாருமே இல்லேன்னா..” என்று சொல்லிவிட்டு கண்கலங்க..


அதைப்பார்த்த சாய் “அவதான் இவ்ளோ சொல்லுறா இல்லே.. வந்து தொலையேண்டா”என்று செல்லமாக மிரட்ட..


“ஹய்யோ.. தங்கச்சி என்னான்னா அழுதே மிரட்டுது! மச்சான் கோபமா பேசியே மிரட்டுறான்! ஆதி.. உன் நிலைமை இப்படியா ஆகணும்?” என்று ஒருவிரலை தன் முகத்தை நோக்கி நீட்டி, தன்னையே கேள்வி கேட்பது போல நடித்தவன்..


“இல்லே சாய்.. நீங்க ரெண்டு பேரும் புதுசா கல்யாணம் ஆனவங்க. நான் எதுக்கு நடுவுல? அதான் போறேன்னு சொன்னேன். சரி விடு.. இனிமே நீயே கழுத்தைப் பிடிச்சு வெளியில தள்ளுற வரைக்கும், உன் வீட்டுல தான் டேரா.. போதுமா?”
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#13
அதன்பிறகு மூவரும் அவர்களுக்கென பார்த்து வைத்திருந்த இல்லத்திற்கு செல்ல.. அவர்களை கீழேயே நிறுத்தியவன் மாடிக்கு சென்று, அங்கிருந்த வீட்டின் உரிமையாளரிடம் என்ன சொன்னானோ.. சிறிது நேரத்தில் அவரும் ஆதியின் கூடவே இறங்கி வந்தார்.


வந்தவரின் கையில் ஆரத்தி தட்டு. அவருக்கு சாய் ஏற்கனவே அறிமுகமானதால் “என்னப்பா.. இதுதான் உன் மனைவியா? நல்லா லட்சணமா மகாலக்ஷ்மியாட்டம் தான் இருக்கா” என்று சொல்லி, ஆரத்தி சுற்றி அவர்களை வீட்டிற்குள் அழைத்தார்.


அதற்குள் “அவங்க பேரும் லக்ஷ்மி தான் அம்மா” என்று சொல்ல..


“அப்படியா.. நல்ல பொருத்தமா தான் பேர் வச்சுருக்காங்க. நீ கவலைப்படாதே தாயி, ஆதி தம்பி எல்லாம் சொன்னுச்சு. ஒரு புள்ளை பிறந்தா, எல்லாம் சரியாகிடும். இப்போ வேணாம் வேணாம்னு சொன்னவங்க எல்லாம் வந்து சேர்ந்துப்பாங்க பாரு.


அதுவரைக்கும் எதுக்கும் கவலைப்படாம சந்தோஷமா இரு. எது வேணும்னாலும் தயங்காம என்கிட்ட கேளு. என் பேர் மங்களம். ஏதாச்சும் வேணும்னா, நீ கஷ்டப்பட்டு மேல கூட ஏறி வர வேணாம் கண்ணு.. இங்கேயிருந்தே மங்களம்மான்னு ஒரு குரல் கொடு, நான் ஓடியாறேன்.. சரியா?”


லக்ஷ்மியிடம் சொல்லிவிட்டு சாய்யிடம் திரும்பியவர் “பார்த்து சூதானமா இருந்துக்கோ தம்பி. பாவம் சின்னப்புள்ளை.. பெத்தவங்களை விட்டுட்டு வந்துருக்கு, நீதான் சந்தோஷமா வச்சுக்கணும். உங்க ரெண்டு பேருக்கும் அம்மா நான் இருக்கேன். கவலைப்படாதீங்க தம்பி.. எல்லாம் சரியாகிடும்”

என்றவர் “கொஞ்சம் இருங்க.. வரேன்” என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்றவர் சில நிமிடங்களில் கையில் காபியுடன் வந்தார்.


அதைப்பார்த்து பதறியவளாக “ஹய்யோ.. உங்களுக்கு எதுக்கு சிரமம், ஆன்ட்டி? இன்னும் கொஞ்ச நேரத்துல நானே போட்டுருப்பேன்” என்று லக்ஷ்மி சொல்ல


அவளைப் பார்த்து பரிவுடன் சிரித்தவர், அவள் தலையை ஆதுரமாக தடவிக் கொடுத்தவாறே “இங்க பாரு தாயி.. நான் கிராமத்து மனுஷி. ஏதோ, எங்க வீட்டுக்காரரை கட்டிக்கிட்டு இங்க குப்பை கொட்ட வந்தேன். அந்தா இந்தான்னு ஆச்சு முப்பது வருஷத்துக்கும் மேல. சிறுகசிறுக காசு சேர்த்து வச்சு இந்த வீட்டையும் கட்டிப்புட்டேன்.


தங்கமான புருஷன். ஆண் ஒண்ணு, பொண்ணு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளையும் பெத்தேன். ஹூம்.. என் மவனுக்கு சீரும் சினத்தியுமா கல்யாணம் பண்ணி வச்சா, அவன், உன் ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு சொல்லிப்புட்டு மாமியார் வீட்டோட சேர்ந்துக்கிட்டான். அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்போ காலியாகும்னு .. இப்போ நானும் என் புருஷனும் எப்போ சாவோம், இந்த வீட்டை எடுத்துக்கலாம்னு இருக்கான்.


அவன்தான் அப்படி போயிட்டானேன்னு, என் பொண்ணுக்கு அவ ஆசைப்பட்ட மாதிரியே லவ்வு மேரேஜ் செய்ஞ்சு வச்சா, இப்போ அவளும் புருஷன் வீட்டோட சேர்ந்துக்கிட்டு எங்களை கண்டுக்குறதே இல்லை. நானும் என் புருஷனும் கொட்டு கொட்டுன்னு ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருக்கோம்.


நல்லவேளை இப்போ நீங்க வந்தீங்க. இந்த ஆன்ட்டி,அங்கிள்.. அப்படின்னு அசிங்கமா கூப்பிடாம, அழகா அம்மா அப்பான்னே கூப்பிடு தாயி” என்று சொல்லி மூக்கை சிந்தி புடவையிலேயே துடைத்தார்.


அவரின் பாசமான அணுகுமுறை அவளுக்கும் பிடித்துப்போக “சரிம்மா.. இனிமே அம்மான்னே கூப்பிடுறேன்.. போதுமா” என்று கேட்க


“அது போதும்டி ராசாத்தி.. நீ நூறு வருஷம் பூவும் பொட்டுமா, பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும் கண்ணு” என்று அவள் கன்னத்தை தடவி நெட்டி முறிக்க


அப்போது தான் அவரிடம் இன்னுமே ஆசிர்வாதம் வாங்காதது உறைக்க.. “ஒரு நிமிஷம்மா..” என்று அவரிடம் சொல்லிவிட்டு கிடுகிடுவென உள்ளே சென்று, ஏற்கனவே தான் சொல்லி, சாய் தயார் செய்து வைத்திருந்த பூஜையறையிலிருந்து, மஞ்சள் குங்குமத்தை எடுத்து வந்தவள்.. கணவனையும் அருகில் வருமாறு கண்ணாலேயே ஜாடை காட்ட..


அவள் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டவனாய் அவளருகில் வந்தவனின் கையைப் பிடித்து இழுத்தவள், கையிலிருந்த மங்கல தட்டை மங்களத்தின் கையில் கொடுத்து, கணவனோடு சேர்ந்து அவர் காலில் விழுந்தாள்.


அதில் பூரித்துப் போனவராய் கண்கள் கலங்க.. இருவரையும் மனதார ஆசிர்வதித்தவர், இருவரையும் இரு பக்கமும் சேர்த்து அணைத்துக் கொண்டார்.


இவையனைத்தையும் கண்களில் நெகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதியின் அருகில் வந்த லக்ஷ்மி அவன் காலிலும் விழ, துள்ளிக் குதித்து விலகினான்.


“அய்யோ என்னம்மா இது… என் காலுல.. எழுந்திரிம்மா” என்று சொல்ல


“நீங்க இல்லேன்னா எனக்கு என்னோட சாய் கிடைச்சிருக்க மாட்டார். எங்க கலயாணம் நடந்து இருக்காது. வாய் நிறைய தங்கச்சி தங்கச்சின்னு கூப்பிடுறீங்க.. அப்போ உங்க ஆசிர்வாதமும் இருந்தா தானே, நான் நல்லா இருப்பேன்!” என்று மடக்க


“சரிம்மா சரிம்மா என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவுமே உண்டு” என்று சத்தமாக சொன்னவன்..


‘ஆசிர்வாதம் பண்ணுற அளவுக்கு எனக்கு வயசாகிடுச்சா?! இதுங்க மேரேஜ் பண்ணுனவுடனே என்னை கிழவனாக்கிடுச்சுங்களே!’ என்று முணுமுணுக்க


“ஹாஹா.. ஆசிர்வாதம் பண்ணுறதுக்கு வயசு முக்கியமில்லே ஆதி தம்பி.. நல்ல மனசு தான் முக்கியம்” என்று மங்களமும் எடுத்துக்கொடுக்க


எதையோ நினைத்து பயந்துக்கொண்டே இருந்த லக்ஷ்மிக்கு மனதில் ஒரு நிம்மதி பரவியது.


மனதின் நிம்மதி உற்சாகமான மனநிலையை தர, ஏற்கனவே மெல்லிய இழையாய் மனதிலிருந்த கலக்கம் அறுபட்டுப் போக, கண்களில் பரவசம் மின்ன, அதே உணர்வோடு கணவனை காதல் பார்வை பார்த்தாள்.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#14
சிறிதுநேரம் பேசிவிட்டு மங்களம் கிளம்ப, அதன்பின் இரவு உணவை ரெடி பண்ண லக்ஷ்மி தயாராக, அவளை தடுத்த சாய் “நாளையில இருந்து சமையலை ஆரம்பிச்சுக்கலாம் லக்ஷ்மி. இப்போ ஹோட்டல்ல இருந்து வாங்கிட்டு வரேன்” என்று சொல்லியவன்..


“வாடா ஆதி” என்று சொல்லி அவனையும் இழுத்துக்கொண்டு போக முயற்சிக்க..


அவனோ பிடிவாதமாக கிளம்ப மறுத்து அங்கேயே உட்கார, வேறுவழியின்றி தனியே கிளம்பினான் சாய்.

அவன் சென்றதும் லக்ஷ்மியை பார்த்தவன் “உன்கிட்ட பேசணும்னு தான் நான் அவன் கூட போகலைம்மா” என


“எனக்கும் புரிஞ்சுது அண்ணா” என்று சொல்லியவள் அவன் பேச்சை கேட்டுக் கொள்வேன் என்பது போல அமைதியாக நிற்க


“லக்ஷ்மி.. சாய் வீட்டை பத்தி உனக்கு எவ்ளோ தெரியும்னு எனக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்சதை வச்சு சொல்லுறேன், அவன் குடும்பம் ரொம்ப பெருசு. அம்மா கூட பிறந்தவங்க அஞ்சு பேரு. அப்பா கூட பிறந்தவங்க நாலு பேரு. எல்லாருமே இன்னிக்கு வரைக்கும் ஒற்றுமையா இருக்காங்க.


சாய்க்கு அவன் ஊரையும், உறவையும் அவ்ளோ பிடிக்கும். விட்டுத்தரவே மாட்டான். ஆனா இப்போ எல்லாத்தையும் விட்டுட்டு, உன் பின்னாடி வந்துருக்கான்னா.. உன்மேல அவ்ளோ காதல். உன் ஒருத்திக்காக அத்தனை பேரையும் விட்டுட்டு வந்துருக்கான். சோ, அவனே கோபப்பட்டாலும் நீ கொஞ்சம் தணிஞ்சு போய்டும்மா”


என்றவன் இதற்குமேல் பேச ஒன்றுமில்லை என்பது போல அமைதியாக இருக்க..


அவன் பேசியவற்றை சரியாக உள்வாங்கி கொண்டவள் “சரிண்ணா… நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னா, யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்து போறதுல தப்பில்லையே!” என்று சொல்லி சிரித்தாள்.


அதற்குள் கையில் உணவு பார்சல்களோடு வந்த சாய், இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து “என்ன.. அண்ணனும் தங்கச்சியும் ரகசியம் பேசிக்கிறீங்க? என்னன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா?” என்று சிரிப்போடு கேட்டான்.


அவன் சிரிப்பைக் கண்ட லக்ஷ்மிக்கோ ‘இவனுக்கு சிரிப்பு இயல்பாக வருகிறதா.. அல்லது சிரிக்கும்போது தான் அழகாக தெரிவதை நினைத்து சிரிக்கிறானோ?’ என்ற எண்ணம் வந்தது.


துளியும் இமைக்காத விழிகளால் தன்னைப் பார்ப்பதைக் கண்ட சாய் லேசாக புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க, அவன் செய்கையில் அவளின் நெஞ்சம் படபடத்தது.


கண்களாலேயே ‘ஒன்றுமில்லை' என்று பதில் சொன்னவளைக்கண்டு, பார்வையாலேயே இருவரும் நடத்திக்கொள்ளும் ஒளிஅலைகளின் பரிமாற்றத்தை உணர்ந்த ஆதி.. இனிமேலும் சிவபூஜை கரடியாய் இருக்க கூடாது என நினைத்து விரைந்து சாப்பிட்டு முடித்து, இருவருக்கும் மீண்டுமொரு முறை வாழ்த்தை சொல்லிக் கிளம்பினான்.


ஆதி கிளம்பி நெடுநேரம் ஆகியும் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் இருவருமே நேரத்தைக் கடத்த.. லக்ஷ்மியோ இல்லாத பாத்திரங்களை அடுக்கி வைத்து சமையலறையை சுத்தம் செய்வது போல் அங்கேயே தடவிக் கொண்டிருக்க..


இங்கு இவனோ மொபைலில் கேம்ஸ் விளையாடுவதாக பேர் பண்ணிக்கொண்டு அதிலுள்ள லைஃப்பை எல்லாம் கவனமில்லாமல் இழந்துக் கொண்டேயிருக்க..


எத்தனை நேரம் தான் இப்படியே கழிப்பது?


திருமணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய இருவருமே தயங்கி தயங்கி நிற்க, இருவருக்குமே மோகமெனும் தீ பற்றியெரிய, அதன் தகிப்பை தாங்க முடியாமல் தங்களை அறியாமலேயே நெருங்கி வந்தனர்.


“பாப்பு….” என்று கிசுகிசுப்பான குரலில் அவன் அழைக்க


“சொல்லுங்க மாமா…” என்று அதைவிட மெதுவான குரலில் இவள் கேட்க


“பயமா இருக்கா லக்ஷ்மி?” என்று அவன் கேட்க


“பயமா.. இல்லையே..” என்று இவள் உரைக்க..


ஆதி மட்டும் இருந்திருந்தால் ‘இங்க என்னடா மணிரத்னம் ஷூட்டிங்கா நடக்குது?’ன்னு கேட்டிருப்பான்.


இப்படி ஓர்வரி கேள்வி பதிலிலேயே அடுத்த அரைமணி நேரத்தை கடத்தியவர்கள் மீண்டும் மௌனமாக.. சிலநொடிகள் கழித்து ஓரவிழிப் பார்வையில் லக்ஷ்மி அவனைப் பார்க்க..


அதை சரியாக கேட்ச் பிடித்தவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, அதில் வெட்கப்பட்டு தலை குனிந்தாள்.


“லக்ஷ்மி.. இங்கே பக்கத்துல வாயேன்..” என்று அவன் அழைக்க..


முதலில் மறுத்தவள்.. பின்பு நாணத்தோடு அவனருகில் வர..


அவளையே பரவசமாக பார்த்தவன் “நீ பக்கத்துல வந்தாலே, நான் பாற்கடல்ல விழுந்துடுற மாதிரியிருக்கு லக்ஷ்மி” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

மறவாத நொடிகள் தொடரும்..!!​
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#16
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


எனக்கு வேறு ஒரு வேலை வந்துவிட்டதால்.. கதையை சீக்கிரம் முடிக்கணும்... ஸோ அடுத்த இரண்டு ud சேர்த்து கொடுக்குறேன்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க..நொடிப்பொழுதும் மறவேன் - 14
----------------------------------------------


தாம்பத்யம் என்பது உயிரும் உடலும் கலந்து வாழப்போகும் வாழ்க்கையின் அடிநாதம். ஈருடல் ஓருயிர் ஆவதில் தான் இருக்கிறது அதன் புனிதம்! கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒரு ஆத்மார்த்தமான அன்பு உருவாக வேண்டுமெனில் இந்த தாம்பத்யத்தை இனிய சங்கீதமாக மாற்ற வேண்டுமே தவிர போர்க்களமாக மாற்றக்கூடாது. காதல் மிகுந்தும், காமம் மிதமாகவும் இருக்கும் தாம்பத்தியம் என்றுமே சிறக்கும்!


அப்படிப்பட்ட தாம்பத்ய வாழ்க்கையில் முதன்முதலாக அடியெடுத்து வைக்க வேண்டிய நேரத்தில்.. இருவருக்குமே ஏதோவொரு தயக்கம் அணை போட.. முதலில் அந்த தயக்கமெனும் தடுப்பணையை உடைக்க திணறி, அல்லது எப்படி தகர்த்தெறிவது என்று அறியாமல் விழி பிதுங்கியவர்கள், சிறிது நேரத்தில் தெளிந்து தங்கள் காதலெனும் பலமான ஆயுதத்தால் உடைத்தெறிந்தனர்.


என்னதான் தயக்கத்தை தள்ளி தூர எறிந்தாலும், அவர்களுக்குள் பேச வேண்டிய கதைகள் பலவிருக்க, அத்தனையையும் அன்றே பேசி முடித்துவிடுவது என்ற புதிய தீர்மானத்தை எடுத்தனர்.


அதன்படி முதலில் பேச்சை ஆரம்பித்த லக்ஷ்மி ”மாமா, அன்னிக்கு உங்க சித்தி வீட்டுல என்னை எப்படியெல்லாம் பேசினாங்க தெரியுமா?” என உதட்டைப் பிதுக்கிக்கொண்டே கேட்க..


அவளின் உதட்டைப் பிடித்துக் கொஞ்சி மகிழ துடித்த தன் உதட்டிற்கும், கைக்கும் கைவிலங்கை மாட்டி.. “ரொம்ப பேசிட்டாங்களா பாப்பு.. சாரிடா.. என்னால தானே?” என்று கலங்க..


அவன் மனம் வாடுவதை பொறுக்க முடியாமல் “ப்ச் ரொம்ப இல்லை.. ஆனா.. ரொம்ப தான் பேசினாங்க. கொஞ்ச நேரத்துல என்னன்னென்னவோ பேசிட்டாங்க. ஏன் மாமா அவங்க அப்படி பேசினாங்க? எனக்கு அவங்க பார்வையே பிடிக்கலை, பயமா இருந்துச்சு”


“அதான் பார்த்தோமே! போனவுடனே பயத்துல கைகால் நடுங்க நின்னியே!” என்று கேலி செய்தவன்..


“அவங்க அப்படித்தான் லக்ஷ்மி. ஆனா ரொம்ப பாசமா இருப்பாங்க. நீ வேணா பாரு, இன்னும் கொஞ்ச நாளுல அவங்களே உன்னைத் தேடி வருவாங்க” என்று நம்பிக்கையோடு சொன்னவனை பார்த்தவள்..


“ப்ச்.. எனக்கு அந்த நம்பிக்கையில்லை. ஏன்னா அவங்க வேற ஒரு ஆசையில இருந்துருக்காங்க. நான் அதை கெடுத்துட்டேன். அப்படியிருக்கும்போது என்மேல எப்படி பாசம் வரும்?”


“இதென்ன புதுக்கதையா இருக்கு? அவங்களுக்கு என்ன ஆசை? என்கிட்டேயே சொன்னது இல்லையே!” என்று புரியாமல் கேட்டான்.


‘தனக்கே தெரியாதே..’ என்ற கணவனின் பதிலில் திகைத்தாலும், அவனுக்கு தெரியும் என்று தான் நினைத்தது தன் தவறு தானே என்று மனம் தெளிந்தவள்.. “ஆமா மாமா.. அவங்க என்ன சொன்னாங்கன்னா…”


என்றவளின் நினைவுகளும் பின்னோக்கி போக.. சாய்யும், இவளும் காஞ்சிபுரம் சென்ற தினத்திற்கு சென்றனர் இருவரும்.


இருவரும் காஞ்சிபுரம் சென்றது, அவன் சித்தியை பார்த்து பேசியது, பாதியில் இவனை வெளியில் அனுப்பியது, அதன்பின் லக்ஷ்மியை மிரட்டியது என அனைத்தையும் நினைத்துப் பார்த்தவர்கள்… அதன்பின் நடந்த நிகழ்வினை ஓட்டிப்பார்க்க தயாராகினர்.
தன் வருங்கால கணவனாக தன் மனதினுள் புதைத்து வைத்திருந்தவனின் சித்தி பேசிய பேச்சினால் மனம் கலங்கி, கண்களில் நீர் பெருக இருந்தவள், முடிவில் அவர் சொல்லியவற்றால் மனமொடிந்து போய், அவரிடம் எதுவுமே பேசாமல் கிடுகிடுவென வெளியேறினாள்.


அவள் வருத்தத்தையோ கண்ணீரையோ துளியும் பொருட்படுத்தாமல் கல்லாகி நின்றவர், சாய்யை மட்டும் உள்ளே அழைக்க..


அவனோ உள்ளிருந்து கண்களில் நீருடன் வெளியே வரும் லக்ஷ்மியையும் அவரையும் மாறிமாறி பார்த்து அதிர்ந்து நிற்க, லக்ஷ்மியோ ஒருநொடியும் அங்கே நிற்க பிடிக்காதவளை போல தெருவில் இறங்கி நடக்க, நிலைமையை தன் கையிலெடுத்த ஆதி, விரைந்து சென்று லக்ஷ்மியை பிடிக்க.. அவளோ அவனை உதறிவிட்டு தன்போக்கில் நடக்க ஆரம்பித்தாள்.


அனைத்தும் ஒரு நிமிடத்தில் நடந்து முடிய, அடுத்த நொடியே சுதாரித்த சாய், சித்தியின் அழைப்பை நிராகரித்துவிட்டு லக்ஷ்மியின் பின்னே ஓட, ஆதியும், வெங்கட்டும் காரை எடுத்துக்கொண்டு பின்னே சென்றனர்.


வேகமாக நடந்துக் கொண்டிருந்தவளை பிடித்து நிறுத்திய சாய் கண்களில் ஏக்கத்தோடு “என்ன லக்ஷ்மி.. இப்படி விட்டுட்டு போறே?” என்று கேட்க..


அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடிக்க.. நடுவீதி என்றும் பாராமல் அவன் நெஞ்சிலேயே சாய்ந்துக்கொண்டு கதறி அழுதாள்.


அவளின் அழுகையை தடுக்க முடியாதவனாய் “ஸ்ஸ் லக்ஷ்மி என்ன இது? இப்படி.. தெருவுல! இங்க பாரு.. எல்லாரும் நம்மையே பார்க்குறாங்க. அழாதே பாப்பு.. சொன்னா கேளு.. இப்போ என்ன ஆச்சு.. நான்தான் உன் கூடவே இருக்கேனே!” தேற்றியவாறே அவள் கண்களையும், முகத்தையும் அழுந்த துடைத்து விட்டான்.


அவனின் செய்கையிலும், பேச்சிலும் அழுகையை நிறுத்தி அவன் முகம் நோக்கியவள் “நான் உங்களுக்கு பொருத்தமானவ இல்லை மாமா. நீங்க உங்க வீட்டுல சொல்லுற பொண்ணையே மேரேஜ் பண்ணிக்கோங்க.. நான் வேணாம்” என்று மீண்டும் விசும்ப..


அதற்குள் அவர்களை நெருங்கிய ஆதி “ரெண்டு பேரும் கார்ல ஏறுங்க. எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம். இப்படி நடுரோட்டுல நின்னுக்கிட்டு! என்னடா சாய்.. நீயுமா? ஏறுடா கார்ல” என்று செல்லமாக மிரட்ட..


எதுவும் சொல்லாமல் காரில் ஏறியவர்கள் அதன்பின் அமைதியாக வர, லக்ஷ்மியின் அழுகையும், சாய்யுடைய சித்தியின் நடவடிக்கைகளும் உண்மையை உணர்த்தியிருக்க.. ஆதியும் மௌனமாக இருந்தான்.


காஞ்சி நகரை தாண்டிய கார் சென்னையை நோக்கி விரைந்து செல்ல, சாலையின் இருமருங்கிலும் விரைவாக கடந்து சென்ற மரங்களை வேடிக்கை பார்த்தவாறு கண்களில் நீரோடும், மனதில் கவலையோடும் அமர்ந்திருந்தாள் லக்ஷ்மி.


அவளின் நிலையை உணர்ந்தும் ஏதும் பேசவோ செய்யவோ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் சாய். ஆனாலும் அவளுக்கும் தைரியமூட்டும் வகையில் அவளின் கையை எடுத்து தன் கைப்பிடிக்குள் வைத்தவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


தன் கையை இழுத்துக்கொள்ள முயன்றவளை கண்களாலேயே மிரட்டி சமாதானப்படுத்தினான்.


மனங்களும் கைகளும் இணைந்ததை போல.. இரு குடும்பங்களும் இணைந்து நடந்த வேண்டிய திருமணம் எனும் பந்தம் தங்கள் வாழ்வில் மலருமா? என்ற மிகப்பெரிய கேள்விக்குறியுடன், கண்களில் கவலையையும், மனதினுள் பயத்தையும் தேக்கி, அந்த இணைந்திருந்த கைகளுக்குள் தங்கள் உயிரையே தேக்கி வைப்பதை போல இறுக்கிப்பிடித்துக் கொண்டிருந்தனர்.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#17
இவர்களின் எண்ணங்கள் காரின் வேகத்தை விட விரைந்து சென்றுக் கொண்டேயிருக்க.. திடீரென நின்ற காரின் ஓசையில் திடுக்கிட்டு விழிக்க, சாய்யை பார்த்த ஆதி


“அங்க ஒரு டீக்கடை இருக்குடா… செம தலைவலியா இருக்கு. நாங்க போய் டீ சாப்பிட்டு, அப்படியே உங்களுக்கும் வாங்கிக்கிட்டு வரோம்” என்றவன் லக்ஷ்மியை பார்த்து “ஏம்மா.. உனக்கு டீயா காபியா?” என்று கேட்க..


“எனக்கு எதுவும் வேண்டாம் ண்ணா” என்று சொன்னவளை கனிவோடு பார்த்தவன்..


“இப்போ என்ன ஆகிடுச்சுன்னு இப்படி மூக்கால பேசுறே? அண்ணன் நான் இருக்கேன் கவலைப்படாதே லக்ஷ்மி. உங்க ரெண்டு பேருக்கும், எந்த பிராப்ளமும் இல்லாம மேரேஜ் ஆகிடுச்சுன்னா இந்த வெங்கட்டுக்கு மொட்டையடிச்சு அலகு குத்துறதா வேண்டியிருக்கேன்” என்று அசால்ட்டாக சொல்ல..


அதில் பதறி போன வெங்கட்”டேய் சாய்.. என்னடா நடக்குது? நானே ரெண்டு நாள் முன்னாடி தான் ஊர்ல இருந்து வந்தேன். காலையில ஒண்ணுமே சொல்லாம, தூங்கிக்கிட்டு இருந்தவனை பிடிச்சு, காருக்குள்ளே இழுத்து போட்டுட்டு வந்தீங்க. இப்போ என்னடான்னா இவர் இப்படி சொல்லுறார்! என்ன சாய் இதெல்லாம்? எனக்கு ஒண்ணுமே புரியலை”


“அட வாங்க பாஸ்...உங்களுக்கு நான் விளக்கமா சொல்லுறேன்” என்ற ஆதி வெங்கட்டின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு செல்ல


அதைப் பார்த்து சிரித்த சாய் “ஆதி கிரேட் இல்லே! சென்னை வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு அவனை தெரியும். ஆனா எவ்ளோ பாசமா இருக்கான்; என்னை புரிஞ்சு நடந்துக்குறான். இப்போ கூட பாரு, நீயும் நானும் பேசிக்கணும்னு தான் இங்க காரை நிறுத்தியிருக்கான்” என்று நண்பனின் பெருமையை பேசியவனையே கூர்ந்து பார்த்தவள்


“உங்களுக்கு பயமாவே இல்லையா? நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சுடுவாங்களோ? நாம சேரவே முடியாதோன்னு நானே பயத்துல இருக்கேன்; நீங்க கொஞ்சம் கூட அந்த கவலையே இல்லாம.. ப்ச்..” என்று அலுத்துக் கொண்டவளை தன்னருகில் இழுத்துக்கொண்டான்.


“என்னை விடுங்க..” என்று திமிறினாலும் அவனின் கைப்பிடிக்குள் அடங்கி, அவன் தோள்வளைவில் சாய்ந்துக்கொண்டு ஒரு கையால் அவன் இடையையும், மறுகையால் அவன் கழுத்தையும் கட்டிக்கொண்டாள்.


“எதுக்கு பயம் லக்ஷ்மி? நீதான் என்னோட மனைவின்னு.. உன்னைப் பார்த்த முதல்நாளே நான் முடிவு பண்ணிட்டேன். கடவுள் கிருபையால நீயும் எனக்கு கிடைச்சுட்டே. அதை மனுஷங்களால பிரிக்க முடியுமா? யார் என்ன சொன்னாலும் உன்னை என்கிட்டேயிருந்து பிரிக்க முடியாது பாப்பு”


உறுதியான குரலில் தீர்க்கமாக சொல்லியவனையே காதலோடு பார்த்தவள் “ஆனா உங்க சித்தி..” என்று இழுக்க..


“அவங்க என்னடா சொன்னாங்க?” என்று நீண்டநேரமாக கேட்க நினைத்ததை வினவ..


“அவங்க.. அவங்க.. நிறைய கேட்டாங்க. கொஞ்சமா பேசினாங்க. ஆனா கோபமா பேசினாங்க. என்னை அவங்களுக்கு பிடிக்கலையாம்.”


என்றவளை பாதியில் நிறுத்தியவன்”ஏனாம்?” கேட்ட ஒற்றை வார்த்தையில் சினம் தெறிக்க..“அவங்க என்னென்னவோ சொல்லுறாங்க. யூஷுவலா எல்லா பேரண்ட்சும் பார்க்குற மாதிரி.. குடும்பம், அந்தஸ்து, ஜாதி.. எக்ஸ்ட்ரா.. எக்ஸ்ட்ரா. எல்லாம்..” என்றவள், தயக்கத்தோடு..


“உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ஒத்து வராதுன்னு சொன்னாங்க..ஏன்னா..” என்று தயக்கத்துடன் அவன் முகத்தையே பார்த்தவாறு இழுக்க..


அவளையே ஒருநொடி கூர்ந்து பார்த்தவன் சட்டென்று ஒருவித வெறியோடு அவளை தன் அருகிலிழுத்து அவள் கண்களுக்குள் எதையோ தேடியவன்.. தான் தேடியது கிடைத்த நிறைவில், அவள் அதரங்களை தன் அதரங்களுக்குள் அடக்கினான்.


முதலில் அவள் கண்கள் கொடுத்த நிறைவிற்கு கொடுக்கும் பரிசாக ஆரம்பித்தவனின் வேகம் அதிகரிக்க, மலரில் தேன் குடிக்கும் வண்டாக மாறி, அவள் இதழ்மலரில் அத்தனை நாளாக ஊறிய தேனை முழுவதுமாக அப்போதே குடித்து முடிக்கும் நோக்கில் இருந்தவனை போல அவளை விலக விடாமல், அவளை சுற்றி படர்ந்திருந்த தன் கைப்பிடியையும், கூடவே இதழ்பிடியையும் இறுக்கினான்.


திடீரென நிகழ்ந்த முத்த யுத்தத்தில் அதிர்ந்து திகைத்துப் போனவளோ, அவனின் வேகத்தில் முதலில் தடுமாறி. பின்பு அவனுக்கு இடையூறு செய்யாமல், தேனெனும் அமுதத்தை அள்ளி வழங்கினாள்.


தேவர்கள் பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தை விட சுவையானதாக இருந்ததோ என்னவோ! இருவருமே அமுதம் கடையும் பணியை முடித்து வைக்க விரும்பாமல் தொடந்துக் கொண்டேயிருந்தனர்.


விடுவார்களா அசுரர்கள்? இவர்களை கடந்து சென்ற லாரி மிக சத்தமாக ஒலியை எழுப்பிவிட்டுப் போக.. அதில் இருவருக்கும் வெற்றி தோல்வியில்லாமல் டிராவில் முத்தப் போரினை முடித்து, ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு இருந்தனர்.
அவள் சற்றுநேரம் எதுவும் பேசாமல் வெட்கத்தில் அமர்ந்திருக்க, அவனை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் கூச்சம் தடுத்தது.


அவனுக்கோ.. இத்தனை நாளாக தான் காத்து வந்திருந்த கண்ணியத்தை இன்று தானே சிதைத்து விட்டோமே என்ற கழிவிரக்கம் வந்தது.


அவளின் வெட்கமும் இவனின் கழிவிரக்கமும் அவர்களின் காதலின் முன்னே மாயமாக மறைந்துப்போக.. முதன்முதலாக தீண்டிய இதழ் அமுதத்தை மீண்டும் சுவைக்க விரும்பினான்.


ஆனால் அதற்கு இடமும் காலமும் கைக்கொடுக்காமல் போக.. தன்னையே கட்டுப்படுத்திக்கொண்டு அவள் கைகளை மென்மையாக வருடியபடி இருந்தான்.


அவனின் வருடல் அவளுக்குள் ஒரு நிம்மதியை தர.. இவனைத்தவிர தனக்கு நெருக்கமான ஜீவன் வேறு யாருமில்லை என்ற உணர்வையும் தந்தது.


இத்தனை நேரமாக பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளின் உடல்.. இப்போதோ வேறுவிதமான உணர்ச்சி அலைகளால் நடுங்க, தன்னோடு ஒட்டிக் கொண்டிருந்த நடுங்கும் மென்மையான உடலின் ஸ்பரிசத்தை உணர்ந்தவனின் நாடி நரம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது.


இருவரும் உணர்ச்சி போராட்டத்தில் சிக்கித்தவித்து தடுமாற, அவர்களை வெகுநேரம் சோதிக்காமல், கையில் காஃபியோடு வந்து சேர்ந்தான் ஆதி.


இருவரும் தங்களுக்குள் பேசி ஒரு நல்ல முடிவை எட்டியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் நிலையே உணர்த்த, மேற்கொண்டு எதுவும் கேட்காமல் காரை கிளப்பினான்.


காதலர்கள் இருவருக்கும் ஏகாந்தமான பரவச நிலை; ஆதிக்கோ இவர்களின் திருமணத்தை எங்கே எப்போது எவ்வாறு நடத்துவது என்ற அடுத்தக்கட்ட திட்டங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்க.. காபி குடிக்கும்போது சாய்யின் காதலை பற்றி ஆதியிடமிருந்து தெரிந்துக்கொண்ட திகைப்பில் வெங்கட்.. இப்படி ஒவ்வொருவரும் ஒரு மனநிலையில் இருக்க..


காரில் நிலவிய அமைதி பிடிக்காமல் எஃப்எம்மை ஆன் செய்தான் ஆதி.


‘நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது 98.3fm ரேடியோ மிர்ச்சி.. இது செம ஹாட் மச்சி’ என்ற இனிமையான குரலோடு தொடங்கப்பட்ட நிகழ்ச்சி..


‘இப்போது இளையராஜாவின் இன்னிசை மழை நிகழ்ச்சி ஆரம்பமாகுது. நேயர்கள் எல்லாரும் அவங்கவங்களுக்கு பிடிச்ச ராஜா ஸார் பாட்டையும், மியூசிக்கையும் பத்தி பேசலாம்.. ரெடியா?


ஓகே இப்போ நானே ஸ்டார்ட் பண்ணுறேன். எனக்கு ராஜா ஸாரோட எல்லா பாட்டுமே ரொம்ப பிடிக்கும். எதை சொல்ல, எதை விடன்னே தெரியலை. சில பாடல்களை கேட்டா அப்படியே மனசு உருகி கண்ணுல தன்னாலே தண்ணீர் வரும். அப்படிப்பட்ட ஒரு சாங் தான் ‘வாழ்வே மாயம்' படத்துல வரும் ‘கருவோடு வந்தது தெருவோடு போனது…’ என்ற வரிகளை தாங்கி நிற்கும் ‘வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்' என்ற பாடல்.


இந்த நிகழ்ச்சியை சோகமா தொடங்க வேண்டாமேன்னு நினைக்கிறேன்.. சரிதானா நேயர்களே? இதுமாதிரி நிறைய பாட்டுக்களை சொல்லிக்கிட்டே போகலாம். இசையால அந்த பாடல் வரிகள் மிளிருதா இல்லே அந்த வரிகளாலே இசைக்கு பெருமையா.. அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு வேணாம்ங்க.


சோ இப்போ நாம ராஜா ஸாரோட பாட்டுக்களை பத்தி பேசுறதோட இல்லாம அதை ஒலிபரப்பவும் போறோம்.. ஓகே வா! இதோ உங்களுக்காக எனக்கு மட்டுமில்லேங்க.. காதலர்கள் எல்லாருக்குமே ரொம்ப பிடிச்ச பாட்டு, அலைகள் ஓய்வதில்லை படத்துல இருந்து…’


என்று ஆர்ஜே சொல்லி முடிக்க…


விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
--
--
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்திப்பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுத விழிகளோடு..
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்


என்ற பாடல் ஒலிக்க… தன் கண்மலரை உயர்த்தி சாய்யை பார்த்தாள் லக்ஷ்மி. அந்த பாடல் வரிகளின் பொருள் உணர்த்தும் செய்தி தான் தன்னுடையதும் என்று அவள் பார்வையே அவனுக்கு புரியவைக்க.. லேசாக இமைமூடி திறந்தான்.


அதில்

கோடி வருஷம் முடியலாம்
காதல் வைத்திருப்பேன் என் மனதிலே
ஆசை கனவு ஆயிரம்
ஒளித்து வைத்திருப்பேன் மனதிலே


என்ற ஆசைகளும் காதலும் கனவுகளும் தெரிய.. மனதில் பரவிய நிம்மதியோடு காதலனின் தோளில் சாய்ந்தாள்.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#18
இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்துமுடிந்த நிகழ்வினை, இந்த அவசர கல்யாணத்திற்கு காரணமான தினத்தை நினைத்துப் பார்த்த இருவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.


அன்றைய முதல் முத்தம் நினைவுக்கு வர, அதே பரசவ நிலைக்கு தாவியவர்கள், கண்களாலேயே காதலை பரிமாறிக் கொள்ள.. அந்த காதல் கொடுத்த ஏக்கமும் தாபமும் குரலில் ஒலிக்க..


“பாப்பு.. ‘காதலர்களை இந்த உலகமெல்லாம் காதலிக்கும்'ன்னு ஷேக்ஸ்பியர் சொன்னாராமே.. அது உண்மையா?”


“ப்ச்.. அதென்னவோ எனக்கு தெரியலை. ஆனா அது உண்மையில்லேன்னு மட்டும் தெரியும். அவங்கவங்க வீட்டுப் பிள்ளைங்க காதலிக்காத வரைக்கும், காதலை எல்லாருக்கும் பிடிக்கும். சினிமாவுல பார்க்க பிடிக்கும்; கதையில படிக்க பிடிக்கும்; இவ்ளோ ஏன்.. டிவி சீரியல்ல வர கள்ளக்காதல் ஜோடிகளை கூட பிடிக்கும்.


ஆனா உண்மையா லவ் பண்ணினா யாருக்குமே பிடிக்காது மாமா. இப்போ நம்ம கதையையே எடுத்துக்கோங்க. ஓடிப் போயிட்டான்ற ஒரு பட்டப் பேரை தான் இந்த சமூகம் எனக்கு கொடுக்கும்.


பெத்தவங்களை சம்மதிக்க வச்சு மேரேஜ் பண்ணிக்க வேண்டியது தானேன்னு இலவசமா அட்வைஸ் வேற கொடுப்பாங்க. செய்யலாம் தான்.. ஆனா அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும்!


காதலே பிடிக்காது; நீ சொல்லுறவனை நாங்க ஒத்துக்க மாட்டோம்; நாங்க சொல்லுறவனை தான் நீ பண்ணிக்கணும்னு ஈகோ பிடிச்சு அலையுறவங்ககிட்ட என்ன சொல்லி சம்மதம் கேட்க முடியும்?


யாரோ என்னவோ சொல்லிட்டு போறாங்கன்னு விட்டுடலாம். நம்ம வாழ்க்கையை நாம பார்ப்போம்னு இருந்தாலும், கூடவே பழகிக்கிட்டு, நேரம் பார்த்து வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி, சிலபேர் நம்மையே குத்திக் காமிச்சு பேசுவாங்க, பாருங்க.. இதையெல்லாம் இனிமே நாம பழகிக்கணும்.. இல்லையா மாமா?”


என்று சொல்லிவிட்டு கண் கலங்கியவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் அவளின் தலையை கோதியபடி “இங்க பாரு பாப்பு.. அப்படி யாராவது உன்கிட்ட பேசினா, ‘நானாவது ஒருத்தனையே நினைச்சேன், அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா நீங்கல்லாம் தினம் ரோட்டுல போற வரவனை கண்ணாலேயே கற்பழிச்சுக்கிட்டு.. பெரிய உத்தமிங்க… பெத்தவங்களுக்கு அடங்கி நடக்குற மாதிரி நாடகமாடி இன்னொருத்தனை பண்ணிக்கிறீங்க. அதுக்கு நான் செய்தது எவ்ளோவோ பரவாயில்லை'ன்னு மூஞ்சியில அடிச்சா மாதிரி சொல்லு.. சரியா?”


அவள் தலையாட்டுவதிலேயே ‘கண்டிப்பாக அவள் அப்படி யாரையும் எடுத்தெறிஞ்சு பேச மாட்டாள்' என்பது தெரிய..


சலிப்பாக “இப்போ நாம அடுத்தவங்களை பத்தி பேசவா இவ்ளோ நேரம் முழிச்சிக்கிட்டு இருக்கோம்?” என்றவன் மோகத்துடன் “லக்ஷ்மி..” என்று அழைக்க..


அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் ஏக்கம் புரிந்தாலும் ஏதோவொன்று தடுக்க “மத்தவங்களை விடுங்க… நம்மை பெத்தவங்களோட ஆசிர்வாதம் நமக்கு வேணாமா?” என்று கவலையோடு கேட்க..


அவளின் கவலையையும், பயத்தையும் புரிந்துக் கொண்டவனாக“வேணும் லக்ஷ்மி.. கண்டிப்பா வேணும். நமக்கும் கிடைக்கும். இப்போ வேணா நம்ம மேல இருக்குற கோபத்துல கண்டுக்காம இருப்பாங்க. ஆனா கட்டாயம் சீக்கிரமா நம்மை ஏத்துப்பாங்க பாப்பு. எனக்கு நம்பிக்கை இருக்கு”


அவன் முழு நம்பிக்கையோடு தைரியமான குரலில் சொல்ல, அவளுக்கு அந்த நம்பிக்கை இல்லையென்றாலும் கூட அவன் மனநிம்மதியை கெடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில், அவனைப் பார்த்து மோகப் புன்னகையை சிந்தினாள்.


அவளின் புன்னகையில் மயங்கியவன் அவளை வாரி அணைத்துக்கொண்டு, முகம் முழுவதும் முத்த ஊர்வலம் போக.. இட நெருக்கடியால் ஓரளவுக்கு மேல் முன்னேற முடியாமல் சிறிது கீழிறங்கி வந்தவனை தடுத்தவள் ‘இங்கேயேவா?’ என்பது போல பார்க்க..


அப்போது தான் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவன்.. அவர்கள் ஹாலில் இருப்பது புரிந்ததும், அவளை அப்படியே தூக்கிக்கொண்டு படுக்கையறைக்குள் சென்று கதவை அடைத்தான்.


அவளோ வெட்கத்தில் அவன் நெஞ்சையே பஞ்சணையாக்கி அதில் புதைந்துக் கொள்வது போல முகத்தை வைத்துக்கொள்ள, அவனோ அவள் முகத்தைப் பார்க்க போராட, முடியாமல் அவளை படுக்கையில் கிடத்திவிட்டு தானும் அருகிலேயே படுத்தான்.


தன்னருகில் அன்றலர்ந்த மலர் போல முகம் முழுவதும் வெட்கத்திலும், பூரிப்பிலும் மின்ன.. புதுமலராய் கிடந்த மனைவியை தாபம் பொங்கும் கண்களோடு பார்க்க, அவன் பார்வையின் வீரியம் தாங்காமல், அவள் கன்னங்கள் செம்மையேறி சிவந்தன.


காதலும் கல்யாணமும் ஒரு இலக்கியம் தானே! முறையாக படித்தால் பேரின்பம்; அதில் கிடைக்கும் நிறைவோ பேரானந்தம்; அதைப் படிக்கவும் கசக்குமா என்ன?!


அந்த இலக்கியத்தை தன் மனைவியின் துணையோடு அவன் படிக்க விரும்ப.. அவளோ, தான் அவனுக்காகவே படைக்கப்பட்ட காவியம் போலவும், அந்த காவியத்தின் முழுப் பொருளையும் அறிய, அதை ஒருவரி விடாமல் படித்துக்கொள் என்பதை போலவும்.. வாரிவாரி வழங்கி, தன்னையே அவனிடம் ஒப்படைத்தாள்.


இன்று விட்டுவிட்டால்.. எங்கே மீண்டும் அந்த காவியத்தை படிக்கவே முடியாதோ என்பது போல… விடிய விடிய படித்து முடித்த திருப்தியோடு அவன் உறங்க.. அவன் கண்களிலும் முகத்திலும் தெரிந்த வசீகரத்தில் மயங்கி இவளும் கண்ணயர்ந்தாள்.

மறவாத நொடிகள் தொடரும்….!!​
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#19
நொடிப்பொழுதும் மறவேன் - 15
----------------------------------------------திகாலைப்பொழுது. இரவின் நிசப்தத்தில் காவியம் படித்த களைப்பில் இருவரும் நல்ல உறக்கத்திலிருக்க, வெளிப்புறத்திலிருந்து வந்த சப்தத்திலும், ஜன்னலின் வழியே ஊடுருவி அறை முழுவதும் பரவிய சூரிய ஒளியிலும் கண்விழித்த லக்ஷ்மிக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்பதே புரியவில்லை.


கண்களோடு சேர்த்து மூளையையும் கசக்கி விட்டவாறு தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓட்டியவளுக்கு, ஏதோவொரு புது இடத்தில் இருக்கிறோம் என்பது உறைக்க.. அதேநேரத்தில் முன்தின நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மனதில் எழும்பியது.


அனைத்தையும் யோசித்தவாறே கழுத்தினை தடவியவளின் கைகளில் தட்டுப்பட்டது புத்தம்புது மஞ்சள் கயிறு. அதை எடுத்துப் பார்த்தவளின் முகமோ பெருமிதத்தில் மின்னியது. மனதினில் நினைத்தவனையே கணவனாக அடைந்துவிட்டோம் என்ற பெருமிதமோ!


தாலியை கைகளால் பற்றியவாறு அதற்கு உரியவனை காதலுடன் நோக்க, அவனோ இவளையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தான். அவன் முகத்திலும் நிறைவும் பூரிப்பும் போட்டி போட்டது.


இவள் அவனைப் பார்த்ததும் ‘என்ன?’ என்பது போல புருவம் உயர்த்தி கேட்க..


சட்டென்று வெட்கத்தோடு படுக்கையை விட்டு எழுந்துக்கொள்ள முயன்றவளை இழுத்து தன்மேல் போட்டுக் கொண்டவன் “எங்கே ஓடுறே?” என்று சரசமாட.. “ஹய்யோ விடுங்க.. இதென்ன காலையிலேயே!” என்று நெளிந்தாள்.


“என்னை என்னடி பண்ணச் சொல்லுறே? ஆபீசுக்கு ஒரு வாரம் லீவ் சொல்லியாச்சு. பக்கத்துலேயே புதுப் பொண்டாட்டி” என்று சொன்னவனின் கைகளும், இதழ்களும் கட்டுக்கடங்காமல் பயணிக்க…


அவன் பயணத்தை பாதியிலேயே நிறுத்தியவள் “போதும்.. சும்மா கொஞ்சிக்கிட்டு.. பெரிய காதல் மன்னன்னு நினைப்பு!” என்று பழிப்புக் காட்டினாள்.


சுழித்த அவள் உதடுகளை விரல்களால் சுண்டியவன் “சும்மா இப்படி பண்ணாதே பாப்பு. அப்புறம் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை” என்று மோகத்துடன் மிரட்ட..


“ஹய்யோடா.. ம்ம்ம் அப்புறம்..” என்று மீண்டும் அவள் உதட்டை சுழிக்க


அவன் சொன்ன பின்விளைவை நடத்திக் காமிக்க துடித்த தன் இதழ்களை அடக்கியவன்”பிரஷ் பண்ணிட்டு வந்து வச்சுக்குறேண்டி” என்று சொல்லிவிட்டு அவளை ஒருமுறை இறுக்கியணைத்து விட்டு சென்றான்.


அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் சிரிப்பு பரவ.. ‘மனுஷனுக்கு கமல்னு நினைப்பு!’ என்று சொல்லிக் கொண்டாள்.


அவன் வருவதற்குள் படுக்கையை ஒழுங்குப்படுத்திவிட்டு வெளியில் வந்தவள், ஹாலிலுள்ள ஜன்னல்களை திறந்துவிட.. வெளிச்சத்தோடு காற்றும் உள்ளே வேகமாக பரவியது.


அந்த காலைநேர பரிசுத்தமான காற்றை ஆழ பெருமூச்செடுத்து சுவாசித்தவள் அதன் இனிமையிலேயே கண்மூடி நிற்க..


“என்னம்மா புதுப்பொண்ணு.. இப்பவே இந்த சுத்தமான காத்தை நல்லா இழுத்துக்கோ. இன்னும் கொஞ்சநேரம் போனா, ஒரே வண்டிங்களா போகும். அப்புறம் ஒரே தூசும், புகையுமா தான் இருக்கும்”


என்று சொல்லி சிரித்தவரை பார்த்து இவளும் சினேக புன்னகை சிந்தினாலும்.. ‘யார் இவர்?’ என்ற கேள்வி கண்களில் தொக்கி நிற்க…


அதை உணர்ந்தவராக.. “நான்தான் மா மங்களத்தோட புருஷன். என் பேர் தர்மலிங்கம். என்னைப்பத்தி அவ எதுவும் சொல்லலையா? ஆனா உங்களை பத்தி விடியவிடிய பேசிக்கிட்டு இருந்தா. என்னம்மா, வீடு பிடிச்சிருக்கா?” என்ற அவர் சரளமாக பேச


அவரின் சரளமான பேச்சும் சிநேகமான பாசமான அணுகுமுறையும் இவளுக்கும் பிடித்துப்போக “ரொம்ப பிடிச்சிருக்கு அங்கிள்” என்று மகிழ்ச்சியோடு சொல்ல


அவளை முறைத்தவர் “பார்த்தியா? என் பொண்டாட்டியை மட்டும் அம்மான்னு கூப்பிடுறே; என்னை அங்கிள்னு சொல்லுறே; முறையே மாறுதேம்மா! இத்தனை வருஷத்துக்கு அப்புறம் எங்களை பிரிச்சுடாதே தாயி. இதுக்கு நீ என்னை ‘ஏய் தர்மா'ன்னு கூட கூப்பிட்டுக்கோ” என்று அவர் செல்லமாக மிரட்ட..


அதில் மேலும் சிரித்தவள் தன் தலையையே தட்டிக்கொண்டு”ஷ்ஷ் மறந்தே போயிடுச்சுப்பா.. ஸாரி..” என்று சொல்ல..


அதற்குள் “சாரியும் வேணாம் பூரியும் வேணாம். அவரு கிடக்குறாரு.. நீ கதவை திறம்மா. சூடா காபியும், இட்லி, இடியாப்பமும் எடுத்துட்டு வந்துருக்கேன். சின்னப் புள்ளைங்க.. எம்புட்டு நேரமா பசியோட இருக்குறது? வா வா கதவை திற”


சத்தமாக பேசியவாறு வேகமாக படியிறங்கி வந்துக் கொண்டிருந்த மங்களத்தை பார்த்தவள் “அய்யோ உங்களுக்கு எதுக்கு சிரமம்? நானே செய்துருப்பேன்மா”


“செய்யலாம் செய்யலாம். இன்னிக்கே எதுக்கு கிடந்து அல்லாடணும்? வா முதல்ல சூடா காபியை குடி. எங்கே தம்பியைக் காணோம்?”


“பாத்ரூம்ல இருக்காரும்மா. நானும் இன்னும் பிரஷ் பண்ணலை; பண்ணிட்டு குடிக்கிறேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சாய் வந்துவிட, அவனுக்கு காபியை தந்தவர் இவளை விரட்ட.. அவளும் முகம் கழுவி பல்துலக்கி வந்து காபியை குடித்தாள்.


தன்னிச்சையாக அம்மாவின் நினைவில் கண்கலங்க “இங்க பாரு ராசாத்தி.. பெத்தவங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. கோபம் இல்லாமையா இருக்கும்? போகப்போக சரியாகிடும்டா கண்ணு. அதையே நினைச்சு கலங்க கூடாது,நாங்க இருக்கோம்ல..” என்றவர்..


கணவனின் தோளில் இடித்து “ஏங்க சித்த சொல்லுங்களேன். புள்ள கண் கலங்குது, பார்த்துக்கிட்டு நிக்குறீங்க! இவரு ஒரு ஆக்கம் கெட்ட மனுஷன்” என்று கணவரையும் திட்ட


“அட.. ஏம்மா எனக்கும் சேர்த்து திட்டு வாங்கி தரே? அழுவாதேம்மா.. எல்லாம் சரியாகும். அதுவரைக்கும் எங்களையே உன்னோட பெத்தவங்களா நினைச்சுக்கோ. இதை வெறும் வாய் வார்த்தையா சொல்லலை. நீங்க பெத்தவங்க பாசத்துக்கு ஏங்குறீங்க; நாங்க பிள்ளைப் பாசத்துக்கு ஏங்குறோம்; இனிமே ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையா இருந்துக்கலாம்.. என்ன நான் சொல்லுறது?”


அதுவரை மூவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சாய்யின் தோளில் கைப்போட்டுக்கொண்டே “என்னா மாப்பிள்ளை இது? புது பொண்டாட்டி அழுவுறா.. உட்கார்ந்து வேடிக்கை பார்க்குறீங்களே?” என்று கிண்டலடிக்க..


அவர்களின் சரளமான பேச்சிலும் அன்பான அணுகுமுறையிலும் தன்னைத் தொலைத்திருந்தவன் ”உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்தோம். ஆனா இப்போ நீங்க இருக்குறதால ரொம்ப தைரியமா ஃபீல் பண்ணுறோம்.. தேங்க்ஸ் அங்கிள்”


அவனை ஆதரவாக அணைத்துக் கொண்டவர் “எதுக்குப்பா தேங்க்ஸ்லாம்.. ஊர் விட்டு ஊர் பிழைக்க வந்துருக்கோம். ஒருத்தருக்கொருத்தர் அன்பா ஆதரவா இருந்துட்டு போக வேண்டியது தானே!”


என்றவர் அவரை பற்றிய விவரங்களை சொல்ல.. இவனும் இவன் குடும்பத்தை பற்றியும் தன் வேலையை பற்றியும் சொல்ல.. அவர்களுக்குள் அழகான ஒரு உறவு மலர்ந்தது.


அதன்பின் வந்த நாட்களில் எடுத்திருந்த விடுமுறையை இன்பமாய் கழிக்க, வெறும் காதல் விளையாட்டுக்களில் மூழ்கி தங்கள் எதிர்காலத்தை தொலைக்க விரும்பாமல், அதை மிகவும் பயனுள்ளதாக கழிக்க எண்ணிய இருவரும் வருங்காலத்திற்கான திட்டங்களை வகுத்தனர்.


அதன்படி இருவரின் சம்பளம், மாத செலவுகள், சேமிப்பு என அனைத்தையும் கணக்கிட்டு அவ்வாறே செயல்பட நினைத்தனர். ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்றில்லாமல்.. வரவிற்குள் செலவுகளை கட்டுப்படுத்தி எதிர்கால வளமான வாழ்க்கைக்கு பலமான அடித்தளத்தை நாட்டினர்.


‘என்னடா இது.. ஆரம்பத்திலேயே பணக்கணக்கை பேசுகிறோமே..’ என்று சுணங்கிய மனதை அடக்கியவர்கள், இப்போதே திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்தால் தான் வருங்கால வாழ்க்கை சிறக்கும் என்பதோடு.. இன்று தங்களை ஒதுக்கிய உறவுகளின் முன் நன்றாக வாழ்ந்து காமிக்க வேண்டும் என்ற ஆசை வெறியாக மாற, அதற்காகவும் திட்டமிட்ட வாழ்க்கையே வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தனர்.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#20
அதன்பின் வந்த நாட்களில் வாழ்க்கை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக ஓட… நாட்கள் ஓடும் வேகத்திற்கேற்ப இவர்களின் காதலும் நாளுக்கு நாள் அதிகரிக்க, ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிந்தனர்.


இவர்களை பார்ப்பவர்களின் கண்களுக்கு இவர்கள் புதிதாக அறிமுகமாகி திருமணம் செய்துக் கொண்டவர்கள் என்ற எண்ணமே எழாத வண்ணம், ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் போல, எக்கணமும் ஒருவரையொருவர் பிரியாமல், விட்டுக் கொடுக்காமல் இணைந்தே இருந்தனர்.


வாழ்க்கைக் கணக்கை பகுத்தறிந்து செயல்பட்ட அவர்களின் காதல் களியாட்டங்களும் அளவில்லாமல் தொடர்ந்தன.


அவ்வப்போது வந்துப் போகும் ஆதியின் கேலி, கிண்டல்கள், கலாட்டாவோடு இனிமையாக கழிந்தன நாட்கள். தங்களுக்கென்று இருக்கும் ஒரே நட்பான ஆதியை, தங்களின் நெருங்கிய உறவாகவே கொண்டாடி மகிழந்தனர்.


கூடவே சாய்யின் ஊர் நண்பன் வெங்கட்டும் சேர்ந்துக்கொள்ள.. கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் போனது. ஆதி மற்றும் வெங்கட்டினால், பெற்றோரை பிரிந்திருக்கும் கவலையை மறந்திருக்க கற்றுக் கொண்டனர்.


அதுமட்டுமில்லை.. எப்படியும் வெங்கட் மூலமாக தன்னைப் பற்றியும் லக்ஷ்மியைப் பற்றியும், தாங்கள் வாழும் இனிமையான வாழ்க்கையைப் பற்றியும் தன் பெற்றோர் அறிந்துக் கொள்வார்கள் என்ற நப்பாசையும் சாய்க்கு இருந்தது. அதற்காகவே அடிக்கடி நண்பனை வீட்டிற்கு அழைக்கும் பழக்கத்தை உண்டாக்கினான் சாய்.


இது ஏதுமறியாத லக்ஷ்மியும் நட்பை மதிக்கும் பொருட்டு அவர்களை வரவேற்றாள். அவளுக்கு தேவை சிலபல உறவுகள். தங்கள் கல்யாணத்தினால் அப்படியேதும் உறவுகள் இல்லாததால், நெருங்கிவந்த நட்புகளையே உறவாக்கி மகிழ்ந்தாள்.


இருவருக்குமே வார இறுதியான சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், அன்றைய பொழுதுகள் முழுவதையும் காதல் விளையாட்டை விளையாடி மகிழ்ந்தனர்.


அதுபோன்றதொரு ஒரு தினத்தில்.. லக்ஷ்மி எழுந்து காலை, மதிய உணவுகளை தயாரித்து முடிக்கும் வரையிலும் கூட சாய் எழுந்துக் கொள்ளாமல் இருக்க.. நொடிக்கொரு முறை படுக்கையறையை எட்டிப் பார்த்தவாறு மற்ற வேலைகளையும் முடித்தாள்.


நீண்ட நேரமாகியும் அவன் எழுந்துக் கொள்ளாமல் இருக்க, அவனை எழுப்புவதா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவளை கலைத்தது அவன் குரல்.


“பாப்புபுபுபு…” என்று கத்தியவனின் அழைப்புக்கு, என்னவோ ஏதோ என்று ஓட, அங்கே அவனோ எப்போதும் போல கண்ணை மூடிய நிலையில் ஒய்யாரமாக படுக்கையில் ரங்கநாதரை போல பள்ளிக் கொண்டிருக்க..


அரக்கப்பரக்க அவள் உள்ளே நுழையும் சத்ததிலேயே அவன் உதடுகளில் மெல்லிய புன்னகை மிளிரும், முகத்தில் காதல் பொங்கும்..


அந்த நிலையில் அவனைப் பார்க்கவே ரம்யமாக இருக்க.. அந்த வசீகரத்தில் தன்னைத் தொலைத்து நிற்கும் அவள் கன்னங்களில் செம்மை ஏறும்.


அவனையே பார்த்தவாறு அருகில் சென்று அவன் மூக்கை நிமிண்ட, அவனோ பொய் புன்னகையோடு அவளை அருகிலிழுக்க..


“ஸ்ஸ்ஸ்.. நீங்க தான் பிரஷ் பண்ணாம என்னைத் தொட மாட்டீங்களே.. இப்போ என்ன கொஞ்சல்?” என்று சந்தேகமாக கேட்க


அவனோ குறும்பு புன்னகையோடு “ஹாஹா அதெல்லாம் அய்யா அப்பவே பண்ணிட்டேன். பிரஷ் பண்ணிட்டு தான் உன்னையே கூப்பிட்டேன்”


“அதானே.. இதிலெல்லாம் உஷாரு தான்!” என்றவள் அவன் மீசையை பிடித்து இழுக்க


“ஸ்ஸ்ஸ் ஆ வலிக்குதுடி. விடுடி இம்சை பிடிச்சவளே! ஏண்டி எப்பப் பார்த்தாலும் மீசையையே பிடிச்சு இழுக்குறே?” என்று வலியில் முனகியவாறு மீசையை நீவிவிட்டப்படியே கேட்க..


“ஆங்.. எனக்கு பிடிக்குது, இழுக்குறேன். என் புருஷன்…” என்றவளை முடிக்க விடாமல்


“நிறுத்து.. என்ன சொல்ல போறே? என் புருஷன் மீசை, நான் இழுப்பேன். என் புருஷன்.. நான் கட்டிப் பிடிப்பேன். அப்படி இப்படி.. அதானே? போதும்டி”


“என்ன.. கேட்டு கேட்டு அலுத்துப் போச்சா? ஹேய் தடியா.. என்ன அதுக்குள்ளே ‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்' கணக்கு முடிஞ்சுதா? பிச்சிடுவேன். என்னை விட்டுட்டு போகணும்னு நினைச்சே மவனே.. கொன்னுடுவேன்” என்று மிரட்டியவள் அழ ஆரம்பிக்க..


“ஹே லூசு.. உன்னை விட்டுட்டு நான் எங்கேடி போவேன்? செத்து தான் போகணும்” என்றவனின் வாயை தன் கைகளால் மூடியவள்“அப்போவும் உன்னைத் தனியா விட மாட்டேன் மாமா; கூடவே நானும் வருவேன்”


தன் வாயை மூடியிருந்த அவள் கைகளில் முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டவன், அவள் தன்மீது வைத்திருக்கும் வெறித்தனமான அன்பை அனுபவித்தாலும், ஒருநேரம் பயமாகவும் இருந்தது.


எதற்கெடுத்தாலும் தன்னையே சார்ந்திருக்கும் அவளின் குழந்தைத்தனத்திற்கு தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்ற கவலையும் வந்தது.


அந்த கனமான சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு “ஏன் பாப்பு சாகுறதை பத்தி பேசணும்? இப்போத்தானே வாழவே ஆரம்பிச்சு இருக்கோம்.. அதுக்குள்ளே ஏன் சாகணும்? இன்னும் எவ்வளவோ இருக்கு.. எல்லாத்தையும் அனுபவிக்க வேண்டாமா?”


கணவனின் ஏக்கமான குரலில் தெளிந்தவள்… “இன்னும் என்ன இருக்கு?” என்று புரியாதவளை போல கேட்க..


“கள்ளி.. உனக்கு ஒண்ணுமே புரியாது பாரு; நான் இதை நம்பணும்! சரியான ராட்சஸிடி நீ. உன்னை மாதிரியே அழகா ஒரு பொண்ணை பெத்துக் கொடு. அவளை வளர்க்கணும், படிக்க வைக்கணும், மேரேஜ் பண்ணிக் கொடுக்கணும், பேரன் பேத்தி எடுக்கணும்.. இப்படி இன்னும் நிறைய நிறைய….”


கண்களில் கனவுகளுடன் அவன் சொல்லிக்கொண்டே போக.. அந்த கனவுகளை தனதாக்கி அதற்கு விதவிதமாக வர்ணம் கொடுக்க ஆரம்பித்தாள்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.