பக்தர்கள் கையில்கழுத்தில் கட்டும் கயிற&#

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,792
Likes
22,715
Location
Germany
#1
பருத்தி நூல் மற்றும் பட்டு நூலுக்கு மந்திர சக்தியைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் இயற்கையாகவே உண்டு.

ஆகவேதான், திருமணம் உபநயனம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளில் தீய சக்தியிடமிருந்து ரகைஷயாக (பாதுகாப்பாக) ஓர் மஞ்சள் கயிற்றை கையில் கட்டி விடுகிறார்கள்.

அது நிகழ்ச்சி முடியும் வரை அவரை தீய சக்தியிடமிருந்து பாதுகாக்கிறது.

அவ்வாறே, ஆண்கள் உடலில் அணிந்து கொள்ளும் பூணல் நூலும் காயத்ரீ மஹாமந்திரத்தின் சக்தியைத் தேக்கி வைக்கிறது.

பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளும் திருமாங்கல்யமும் (நூலும்) பெண்ணின் கற்பு என்னும் சக்தியைத் தேக்கி வைக்கிறது.

இவ்வாறே பலரும், பல திசைகளிலிருந்தும், தங்களுக்கு ஏற்படும் தீய சக்தியிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல நேரங்களிலும் ரகைஷயாக - பாதுகாப்பாக - கையிலும் கழுத்திலும் நூல்களை, கயிறுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இதில் தவறில்லை,

ஆனால் அந்தக்கயிறு பருத்தியாலான நூல் அல்லது பட்டு நூலாகத்தான் இருக்க வேண்டும். மேலும் அது மஞ்சள் சிவப்பு போன்ற மங்களமான வர்ணத்தில் இருத்தல் நலம், அப்போதுதான் முழு பலன் கிட்டும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,792
Likes
22,715
Location
Germany
#2
Re: பக்தர்கள் கையில்கழுத்தில் கட்டும் கயி&#299

ஆனால், காசிக்கயிறின் விபரம் வேறு.

காசி கேஷத்ரத்தில் இருந்துகொண்டு காசிக்கு யாத்திரையாக வருபவர்களுக்கு இறுதி காலத்தில் ஏற்படும் யம வாதனையை (யம பயத்தை)ப் போக்குகிறார் கால பைரவர் என்னும் தெய்வம்.

இந்த விபரம் காசீகாண்டம் என்னும் புராணத்தில் காணப்படுகிறது.

ஆகவேதான், காசி யாத்திரை செல்பவர்கள் யாத்திரை முடிந்து ஊருக்குப் புறப்படும் முன்பாக காலபைரவர் ஆலயம் சென்று தரிசிப்பார்கள். அப்போது அங்கு காலபைரவரின் பிரசாதமாக பக்தர்களுக்கு கறுப்புக்கயிறு (காசி) முடிச்சு போட்டு தரப்படுகிறது. அந்தக்கயிற்றை பக்தர்கள் தங்கள் கையில் ரகைஷயாகக் கட்டிக் கொள்கிறார்கள்.

தனது ஊரில் வஸிப்பவர்களுக்கு அதை காசியிலிருந்து வாங்கிவந்து தருகிறார்கள். ரகைஷ (பாதுகாப்பு) தேவைப்படுபவர்கள் அந்த காசிக்கயிற்றை கைகளில் கட்டிக் கொள்ளலாம், தவறில்லை.

ஆனால், 45 நாட்களுக்குப் பின்னர் அந்தக் கயிற்றின் சக்தி விபரீதமாக மாறிவிடுகிறது என்பதால், அந்த காசிக்கயிற்றை 45 நாட்களுக்குப் பின்னர் (அவிழ்த்து) ஜலத்தில் போட்டுவிட வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.