பங்குனி உத்திர மகிமை!

selvipandiyan

Registered User
Blogger
#1
[SIZE=+2]தி [/SIZE]ருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையில் திருவாரூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் வரும் கிராமம் பொன்னிறை. இங்குள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில், அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத் துக்கு பங்குனி உத்திரத்தன்று, நெல்லிக் கனிப் பொடி மற்றும் அரிசி மாவால் அபி ஷேகம் செய்கிறார்கள். இதனால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
நாகை மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயிலின் மூலவர் சுயம்பு மூர்த்தி. இறைவி: அருள்மிகு கறுத்தார் குழலி. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார், பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு நிதி வேண்டி திருப்புகலூர் வந்தார். இரவில் அவர், ஆலய வளாகத்தில் செங்கற்கள் சில வற்றை தலைக்கு வைத்துத் தூங்கினார். மறு நாள் காலை அவர் எழுந்து பார்த்தபோது அந்த கற்கள் பொன்னாக மாறியிருந்தது. அதனால் இன்றும் புது வீடு கட்டுவோர், செங்கல்லை இங்கு கொண்டு வந்து பூஜித்து, மனை முகூர்த்தம் செய்கின்றனர். இதனால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.[TABLE="class: big_block_color_bodytext, width: 100%"]
[TR]
[TD]
[SIZE=+2]தி [/SIZE]ருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையில் திருவாரூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் வரும் கிராமம் பொன்னிறை. இங்குள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில், அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத் துக்கு பங்குனி உத்திரத்தன்று, நெல்லிக் கனிப் பொடி மற்றும் அரிசி மாவால் அபி ஷேகம் செய்கிறார்கள். இதனால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
நாகை மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயிலின் மூலவர் சுயம்பு மூர்த்தி. இறைவி: அருள்மிகு கறுத்தார் குழலி. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார், பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு நிதி வேண்டி திருப்புகலூர் வந்தார். இரவில் அவர், ஆலய வளாகத்தில் செங்கற்கள் சில வற்றை தலைக்கு வைத்துத் தூங்கினார். மறு நாள் காலை அவர் எழுந்து பார்த்தபோது அந்த கற்கள் பொன்னாக மாறியிருந்தது. அதனால் இன்றும் புது வீடு கட்டுவோர், செங்கல்லை இங்கு கொண்டு வந்து பூஜித்து, மனை முகூர்த்தம் செய்கின்றனர். இதனால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

சில பகுதிகளில் பங்குனி உத்திரம், ஐயனாரின் அவதார தினமாகக் கருதப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்- புதுக்குடி கிராமம், காடய்யனார் கோயி லில், ஐயனார் சிலை குப்புறக் கவிழ்ந்த கோலத்தில் உள்ளது. அந்த நிலையிலேயே பக்தர்கள் அபிஷேகம், ஆராதனை செய்து ஐயனாரை வழிபடுகின்றனர்.

நெல்லை மாவட்டம், கருங்குளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில், பங்குனி உத்திர விழாவன்று ஆண்கள் தங்கள் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு, 63 கிலோ பச்சரிசியை உரலில் இடித்து, அந்த மாவால் ஒரே கொழுக்கட்டை தயாரித்து, ஐயப்பனுக்குப் படைக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம்- வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திரத்தன்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகில் தெப்பம் உருவாக்குகின்றனர். அதில் வள்ளி- தெய் வானை சமேதராக ஸ்ரீசிவசுப்பிரமணியர், சுமார் ஐந்து கி.மீ. தூரம் வரை கடலில் பவனி வருகிறார். மற்றொரு படகில், மங்கள இசை முழங்க இசைக் கலைஞர்களுடன் பக்தர்களும் செல்கிறார்கள்.

_ கோவீ. இராஜேந்திரன், மதுரை-4​
பங்குனி உத்திரம்:
[TABLE="width: 100%, align: center"]
[TR]
[TD="class: big_block_color_bodytext"]
முருகப் பெருமான், சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசித்த நாள் பங்குனி உத்திரம். அன்று அடியார்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுகிறார்கள்.

பங்குனி உத்திர நாளில்தான் மீனாட்சி- சுந்தரேஸ்வரர்; முருகன்- தெய்வானை; ராமன்- சீதா; லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்- மாண்டவி; சத்ருக்கனன்- சுருதகீர்த்தி ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

தனது தவத்தைக் கலைத்ததால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் ஈசன். இதனால் வருந்திய ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பித்துத் தருமாறு ஈசனிடம் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய ஈசன், அவள் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்ப் பித்தார். இது நிகழ்ந்ததும் பங்குனி உத்திரத் திருநாளில்தான்.

ஸ்ரீவள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரமே.


பங்குனி மாதம் திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாணத்தை தரிசித்தால் மணமாகா தவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என் பது ஐதீகம்.

பங்குனி உத்திர விரதத்தைக் கடைப் பிடித்த ஸ்ரீமகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் மார்பில் நிரந்தர இடம் பெற்றாள். பிரம்மன்- சரஸ்வதி, தேவேந்திரன்- இந்திராணி ஆகியோருக்கும் பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டதால், திருமணம் கைகூடிய தாகப் புராணங்கள் சொல்கின்றன.


பங்குனி உத்திர நாள் அன்று பிறந்ததால், அர்ஜுனன் ‘பல்குநன்’ என்ற பெயர் பெற்றான்[/TD]
[/TR]
[/TABLE]
[/TD]
[/TR]
[/TABLE]

 

selvipandiyan

Registered User
Blogger
#3
[h=1]மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்![/h]ன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாள் இது. மேலும் மதுரையில் மீனாட்சிதேவி- சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள். ராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.[FONT=Latha, sans-serif]ஸ்ரீ
வில்லிபுத்தூரில் ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாளும் பங்குனி உத்திரமே.[/FONT]

பங்குனி உத்திர விரத மகிமையால், அழகு மிக்க 27 கன்னியரை சந்திரன் மனைவியாகக் கொண்டதாகச் சொல்வர். இந்த நாளில் விரதம் மேற்கொண்ட மகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள்.

தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்த தினம், பங்குனி உத்திரம் என்பர். சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில். அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

வடநாட்டில், ஹோலிப் பண்டிகை கொண்டாடுவது, வசந்தகாலம் துவங்குவது என்று பங்குனி உத்திரத்துக்கு பல பெருமைகள் உண்டு.

காஞ்சியில், பௌர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத்தன்று, காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமணம் நடக்கும். அப்போது அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வர். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோயில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

மேல்கோட்டை என்ற திரு நாராயணபுரத்தில்- பங்குனி மாதத்தில் வைரமுடி சேவை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தலம் ‘தென்னக பத்ரிகாஸ்ரமம்’ எனப்படும். வடபத்ரிகாஸ்ரமம் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து, நாராயண பெருமாளை தரிசித்தால், பத்ரி போய் வந்த புண்ணியம் உண்டு என்பது ஐதீகம்.

திருவையாறு அருகே உள்ள நவக்கிரக (சந்திரன்) சேத்திரம், திங்களூர். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும், மறு நாள் மாலை 6.00 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது பக்தர்களது நம்பிக்கை.

திருவையாறு அருகிலுள்ள புண்ணிய திருத்தலம் திருமழபாடியில், பங்குனி மாதத்தில் நடைபெறும் நந்திதேவரின் திருமண வைபவம் வெகு பிரசித்தி. திருமண தோஷம் உள்ளவர்கள், திருமழப்பாடி சென்று இந்த வைபவத்தை தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்’ என்று பழமொழியே உண்டு.
 
#10
பங்குனி உத்திரம் - சிறப்பு பார்வை
பங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் உத்திர பல்குனி நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து இருக்கும் நாளில் வருகிறது. தெய்வங்களின் திருமண நாளாக பங்குனி உத்திரம் அமைத்துள்ளது..


இந்த வருடம், 2017 - ல், ஏப்ரல் 9, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.

தெய்வத் திருமணங்கள் நிகழ்ந்த நாள்சிவன் பார்வதி, முருகன் தெய்வானை (கந்த புராணம்), ராமர் சீதா (வால்மீகி ராமாயணம்), ஆண்டாள் ரெங்கமன்னார், நாராயணன் கோமளவல்லி நாச்சியார் ஆகியோரின் திருமணம் நடந்த நாளாகும். ஐயப்பனின் பிறந்த நாளாகும். எனவே ஐயப்ப ஜெயந்தி எனவும் அழைக்கப்படும்.

அன்னை மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தேவர்களும் அசுரர்களும் அமிருதம் கடையும் போது எழுந்தருளியதாக சொல்லப்பட்ட நாளும் இதே. அன்னை பார்வதி சிவனை காஞ்சிபுரத்தில் மணந்த நாள். ஆகையால் பங்குனி உத்திரத் திருநாளுக்கு கௌரி கல்யாணம் எனவும் பெயர் உண்டு.

இந்த நாளில் புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியில் உள்ள ஏழுபுனித தீர்த்தங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்லுகிறது.

பங்குனி உத்திரம் - முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சியான நாள்
பங்குனி உத்திரத்தை ஒரு பெரும் விழாவாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். தத்தம் கோரிக்கைகளை நிறைவேற்ற விரதமிருந்து பாத யாத்திரை மேற்கொண்டு பழனியிலும் மற்ற முருகன் ஸ்தலங்களிலும் பக்தர்கள் குவிகிறார்கள். பக்தர்கள் பால்குடம், காவடி எடுப்பது போன்றவற்றின் மூலம் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

பழனியின் தண்டாயுதபாணியும் வடபழனி முருகனும் விசேஷக் கோலம் கொண்டு அருட் காட்சி அளிக்கும் அற்புத நாளாகும் இது.


பங்குனி உத்திர நாளின் சிறப்பு


மேற் கூறிய செய்திகளே பங்குனி உத்திர நன்நாளின் சிறப்பை எடுத்து கூறும் விதமாக உள்ளன. தேவ தேவியரின் திருமண வைபவம் மனதை கவருபவை மட்டும் அல்ல. திருமணம் நடந்த நாளுக்கு சிறப்பு சேர்ப்பவை. ஏனெனில் அவை தெய்வத் திருமணங்கள். அன்றைய நாளில் தெய்வங்களை தொழுதால் நம் திருமண வாழ்க்கை இனிக்கும் என்பது நிச்சயமே. திருமணமாகதவர்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகம் என்ன?

திருமணம் ஆகியும் பல தடைக்கற்களை சந்திப்போருக்கும்,பொறாமை போன்ற கெட்ட சக்திகளால் பாதிக்கப்படுவோர்க்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்பது நிச்சயம். செவ்வாய் தோஷம், கணவரின் நெடு நாள் நோய் ஆகியவற்றிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இதனால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பது நலம்

கோவில்களில் திருமண வைபவம்

சிவாலயங்களிலும், முருக ஸ்தலங்களிலும்,தெய்வங்களின் திருமணம் நடைபெறும் நாள் பங்குனி உத்திரம். மயிலை கபாலீஸ்வரர், வடபழனிஆண்டவர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ,பழனி தண்டாயுதபாணி ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.

ஸ்ரீரங்கத்தில் அன்னை மகாலக்ஷ்மியின் சந்நிதியில் ரங்கநாதரும் அவருடன் சேர்ந்து எழுந்தருளியுள்ள திருக்கோலம் காணக் கிடைக்காதது. அப்போது ராமானுஜர் இயற்றிய துதிக்களை பாடுவது வழக்கம்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நூறு தூண் கொண்ட மண்டபத்தில் எழுந்தருளி உள்ள பெருமான் முன் ஸ்தல புராணத்தை படித்து ஏழு நாட்களுக்கு கொண்டாடுவது வழக்கம். இறுதியில் உத்சவம் சேரகுல (மலையாள) நாச்சியார் விஷ்ணுவை திருமணம் முடிக்கும் காட்சியோடு முடியும்.

பழனியின் ரத ஊர்வலமும் மதுரை கள்ளழகர் கோயில் விழாவும் பிரசித்தி பெற்றவை. மதுரையில் பங்குனி உத்திரத்தை கோடை வசந்த உத்சவமாக கொண்டாடுகிறார்கள். அதே போல் கோயம்பத்தூரின் அருகே இருக்கும் பேரூரில் பங்குனி உத்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அறுபத்துமூவர் சேவை


சென்னையில் மயிலையில் எழுந்தருளி உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் சேவை மிகவும் விசேஷமானது.பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாள் வீதி உலாவில் அறுபத்து மூன்று நாயன்மார் கபாலீஸ்வரரை எதிர்கொள்ள சிவன் பவனி வரும் காட்சி கண் கொள்ளாதது. கோடையின் தாகம் தணிக்க மக்கள் தண்ணீர் பந்தல் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி பக்தர்களுக்கு சேவை செய்கிறார்கள். மற்றும் முண்டக்கண்ணி அம்மன்,கோலவிழி அம்மன், வைரமுடி சுவாமி, திருவள்ளுவர் வாசுகி ஆகியோரின் மூர்த்திகளும் இந்த உத்சவத்தில் இடம் பெறும்.

இந்த எல்லா கோயில்களிலுமே கல்யாணமண்டபத்திற்கு மூர்த்திகளை நீராட்டி எடுத்து சென்று திருமணம் செய்விக்கிறார்கள். இதனை காணும் பக்தர்களுக்கு நற்பலன்கள் கிட்டுகின்றன.

மற்ற மாநிலங்களில் பங்குனி உத்திரம் கங்கா மேளா, வசந்த உத்சவம், வசந்த பஞ்சமி, மஞ்சள் குளி, டோல் பௌர்ணமி என அழைக்கப்படுகிறது

பங்குனி உத்திர விரத முறை


பங்குனி உத்திரம் அன்று காலை குளித்து,கோயில் சென்று இறைவனை தொழுது நாள் முழுக்க விரதமிருந்து சாயந்திரமாக கோயில் சென்று வந்து விரதம்முறிப்பார்கள். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் பால் பழம் உண்டு இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வில் வளமும், செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும் என்பதில் ஐயமில்லை. 48 ஆண்டுகள் தொடர்ந்து விரதமிருந்தால் பிறவி பிணி நீங்கும் என்பது கருத்து.

பங்குனி உத்திரம் அன்று தெய்வத் தம்பதிகளைத் தொழுது வாழ்வின் இன்னல்களை களைவோம்.
 
Last edited: