படிக்குற வயசுல - டீன் ஏஜ் டைரி By Satheesh.K

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
551
Likes
2,283
Location
Chennai
#11
9

காலாண்டு தேர்வில் ஜோதி முதல் ராங்க்கும் வசந்தியும் பரமுவும் இரண்டாவது ராங்க்கும் எடுத்தனர். ஈசு முட்டி மோதி ஒன்பதாவது ராங்க் எடுத்தான். அவனளவில் முதல் பத்து ராங்க்கிற்குள் வருவதென்பதே பெரிய சாதனை. First Rank வந்தும் ஜோதி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

கேட்டால் "என் நண்பர்கள் நீங்கள் இருவரும் இரண்டாவதா வந்துட்டீங்களே அதான் வருத்தம்" என்றாள்.

வகுப்பு தலைவியாக ஜோதியும் துணை தலைவனாக பரமுவும் தேர்வானார்கள். லோகுவும் போட்டியிட ஆசைப்பட்டான். ஆனால் யாரும் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவன் தன் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான், அவனுக்கான வாய்ப்பாக விளையாட்டுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன.

பரமு நீச்சல் போட்டியிலும் ஓட்டப் பந்தயத்திலும் பெயர் கொடுத்தான். ஈசுவும் அவனோடு சேர்ந்து கொண்டான். பரமு பெயர் கொடுத்த சில நிமிடங்களில் லோகுவும் அவன் நண்பர்களும் பெயர் கொடுத்தனர். இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒன்றில் பரமுவை பழி வாங்குவது என முடிவானது.

முதல் போட்டி நீச்சல்.எனவே முதல் போட்டியிலேயே அவனை முடிப்பதற்காக அவர்கள் மும்முரமாக தயாரானார்கள். இதை அறியாமல் பரமுவும் ஈசுவும் உற்சாகமாக நீச்சல் பயிற்சியிலிருந்தனர். எல்லாரும் வேகமாக நீச்சல் அடிப்பதில் கவனமாக இருக்க, லோகுவும் அவன் நண்பர்களும் மட்டும் தண்ணீருக்கடியில் நீண்ட நேரம் மூச்சு பிடிப்பதிலும், உள் நீச்சலிலும் கவனம் செலுத்தினர். யாருக்குமே அந்த விநோத பயிற்சியின் அர்த்தம் பிடிபடவில்லை. ஒரு ஆசிரியர் கேட்டே விட்டார்,

"என்னங்கடா போட்டி தண்ணிக்கு மேல நடக்கபோகுது நீங்க என்னடானா தண்ணிக்குள்ளேயே இருக்கீங்க?"

"அதெல்லாம் ஒன்னுமில்ல சார், சும்மா தான், தண்ணிக்குள்ள தம் பிடிச்சு Practice பண்ணிக்கறோம் Staminaவ ஏத்தனும்ல அதான்" என சமாளித்தனர்.

இவர்கள் திட்டம் அறியாத அவரும் தலையை ஆட்டிவிட்டு போய்விட்டார். போட்டிக்கு முதல் நாள் பரமு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அவன் இடத்தில் அமர்ந்த போது கும்மென்று பவழமல்லி வாசம் அடித்தது. அது அவனுக்கு மிகவும் பிடித்த மணம். எப்போது நுகர்ந்தாலும் தலை கிறுகிறுத்து போய்விடுவான்.

அவன் கிராமத்து நாட்டாமை வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தினடியில் பல நாட்கள் மதிமயங்கி நின்றிருக்கிறான்.
அந்த வாசம் இங்கெப்படி என தேடிய போது, அவன் மேஜையில் புத்தகம் வைப்பதற்காக இருந்த இடத்தில் ஒரு பேப்பர் மீது பவழமல்லி மாலை வைக்கப்பட்டிருந்தது. அந்த பேப்பரை எடுத்து படித்தவன் நீண்ட யோசனையிலாழ்ந்து விட்டான்.

சற்று நேரம் கழித்து வந்த ஈசு, "என்னடா பலமான யோசனை? எந்த கோட்டையை பிடிக்க போற? கையில என்ன?" என்று கேட்டு அவன் கையிலிருந்த பேப்பரை வாங்கி படித்தான்.

படித்ததும் உடனே அதிர்ந்து, "டே வாடா, உடனே போய் வடிவேல் சார்கிட்ட சொல்லுவோம், கிளம்பு கிளம்பு" என பரபரத்தான்.

ஆனால் பரமு பதட்டப்படவில்லை, அந்த பேப்பரில் எழுதியிருந்த வாக்கியத்தை மறுபடியும் நினைவு படுத்தி பார்த்தான்.

"நாளை நடக்க உள்ள நீச்சல் போட்டியில் உன்னை தண்ணீருக்குள் இழுத்து தாக்க லோகுவும் அவன் நண்பர்களும் திட்டமிட்டுள்ளனர், கவனம்" இது தான் அதில் இருந்த வாசகம்.

“என்னடா நான் சொல்லிகிட்டே இருக்கேன், நீ கல்லு மாதிரி இருக்க?" என்றான் ஈசு.

"ஈசு அமைதியா இரு, பதட்டப்பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல, இத யார் கிட்ட காட்டினாலும் அவங்க நம்ப போறதில்லை. ஏன்னா இதுல பேர் இல்ல. நம்மகிட்டயும் எந்த சாட்சியும் இல்ல. இத சொன்னா நாம வீண் பழி போடுறோமுனு தான் நினைப்பாங்க, முள்ளை முள்ளால தான் எடுக்கனும், நாம வேற வழி தான் யோசிக்கனும்"

"வேற வழியா? இந்த கதையே வேணாம், நாம பேசாம போட்டிலேந்து விலகிடலாம்"

"அது கோழத்தனம், கண்டிப்பா அவனுகள ஜெயிக்கனும்"

"முட்டாள் மாதிரி பேசாத அவனுக ஒரு வாரமா தண்ணிக்குள்ள மூச்சு பிடிச்சு பிராக்டீஸ் பண்ணுறாங்க. அவ்வளவு வெறி. அவனுக மூணு பேரு நாம இரண்டு பேரு என்ன செய்ய முடியும்?"

"பொறுத்திருந்து பாரு, எல்லாம் நல்லபடியா முடியும்" என்று தைரியமூட்டினான் பரமு.

போட்டிக்கான நாளும் வந்தது. வசந்தி, ஜோதி, தாத்தா எல்லோரும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தனர். போட்டியாளர்கள் எல்லாம் நீச்சலுடையில் வந்து அவரவர் இடத்தில் நின்றனர்.

குளம் என்றால் டைல்ஸ் பதிக்கப்பட்ட நீச்சல் குளம் என்று நினைத்து விட வேண்டாம். அது மண் நிரம்பிய இயற்கை குளம். விளையாட்டு ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பர் கொடுத்து அதன் படி நிற்க வைத்திருந்தார்.

மொத்த போட்டியாளர்கள் 40 பேர். அவர்களை இருபது இருபது பேராய் இரண்டு பேட்சாய் பிரித்தார் ஆசிரியர். அவர் சற்று கூர்ந்து கவனித்திருந்தால் அவர் தயாரித்த பட்டியல் வேறு இப்போது இருக்கும் பட்டியல் வேறு என தெரிந்திருக்கும். ஆனால் பரமுவின் துரதிர்ஷ்டம் அவர் பார்க்கவில்லை.

லோகு அவன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான், "டேய் பிளான் ஞாபகமிருக்குல்ல, நாம மூனு பேரும் பரமுவும் இரண்டாவது பேட்ச். ஈசு முதல் பேட்ச். நாம பேர மாத்தி வச்சத சார் கண்டுபிடிக்கல, இதுவே நமக்கு மொத வெற்றி.

நம்பர் வரிசைப்படி 37 சீனு, 38 சுமேஷ், 39 பரமு, 40 நான். நம்ம மூனு பேருகிட்டயும் உடஞ்ச Quarter bottle இருக்கு. ஏற்கனவே குளத்தோட மூலையில நம்ம ஒரு மூட்டை நிறைய பாட்டில் போட்டிருக்கோம். சார் விசில் கொடுத்து எல்லாரும் குதிச்ச உடனே உள்ள முங்கு நீச்சல் போய்டுங்க.

கரெக்டா குளத்துக்கு நடுவுல அவன் வரும் போது, அவன் வயத்துல, நெஞ்சுல, கழுத்துலனு மூணு இடத்துலயும் மூணு பேரும் கீறிடுவோம். எல்லாரும் எது கீறிச்சுனு தேடி பார்த்தாலும் அந்த மூட்டை கிடைச்சு, எல்லாம் சரக்கு பாட்டிலுங்கிறதால பழி மாடசாமி தாத்தா மேல விழும். நமக்கு ஒரே கல்லுல இரண்டு மாங்கா" என்றான்.

"ஒரு வேளை அவன் வேகமா நீந்தி போய்ட்டா, அவனுக்கு பக்கத்துல வர நமக்கு அடி படலியேனு யாராவது சந்தேகப்பட்டா?" கேள்வி எழுப்பினார்கள் சீனுவும் சுமேஷும்.

"அவன் தாண்டி போய்ட்டா, அவன் திரும்பி வரவரைக்கும் wait பண்ணுவோம். இது 100m ரேஸ் போக 50m வர 50m, அதனால அவன் கண்டிப்பா வேகமா திரும்பி வருவான். ஆனா நாம் போகாம இங்கேயே இருந்து அவன குத்துவோம். ஏன்னா இங்க தான் பாட்டில் மூட்டை இருக்கு, இங்க குத்துனா தான் சந்தேகம் வராது.

குத்துன உடனே நம்ப உடம்புலயும் லைட்டா கீறிப்போம். அப்ப நம்ம மேல சந்தேகம் வராது. நம்ம உடம்புல பாட்டில் கீறினதுனால தான் நம்ம வலி தாங்காம நடுவுலயே நின்னுட்டோம்னு சொல்லிடுவோம். First Round முடிஞ்சு பாதி பேர் ஒதுங்கியிருப்பாங்க. அந்த பசங்க கூட வந்தவங்களும் அவங்களோட இருப்பாங்க. அதனால் கூட்டம் கம்மியா இருக்கும் நமக்கும் சுலபம்." என்று தன் பிரம்மிப்பான திட்டத்தை விவரித்தான்.

இன்னொரு புறம் ஈசுவும் பரமுவும் பேசிக்கொண்டிருந்தார்கள். "டே பரமு நாம இரண்டு பேரும் அடுத்தடுத்து தானே பேர் கொடுத்தோம், ஆனா இப்ப நான் வேற பேட்ச், நீ வேற பேட்ச், இது கண்டிப்பா அவனுக வேல தான், அங்க பாரு கூடி கூடி பேசுறானுக. இப்ப கூட ஒன்னுமில்ல, பேசாம ஒதுங்கிடலாம் சொன்னா கேளு"

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது நீ தைரியமா இரு" என்றான் பரமு

போட்டி தொடங்கியது. இரண்டு சுற்றிலும் முதல் பத்து ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் இறுதி சுற்று. முதல் சுற்று விறுவிறுப்பாக முடிந்தது. ஈசு 8வது இடம். இரண்டாவது சுற்று தொடங்கபோகிறது. பரமு கம்பீரமாக நின்றிருந்தான். தாத்தாவும், ஜோதியும், வசந்தியும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

அவர்களுக்கு விஷயம் தெரியாது. பரமு ஈசுவை யாரிடமும் கூறக்கூடாதென தடுத்துவிட்டான். பரமுவிற்கு இருபுறமும் லோகுவும் அவன் நண்பர்களும் அனைகட்டி நின்றனர். கரையில் இருந்தாலும் ஈசு தண்ணீரில் இருப்பது போல தத்தளித்தான். லோகுவும் அவன் நண்பர்களும், முடிந்த வரை போகும் போதே பரமுவை குத்திவிட முடிவு செய்தனர்.

ஏனென்றால் அவன் வரும் வரை காத்திருந்தால் சந்தேகம் வரும் வாய்ப்பு அதிகமல்லவா. விசில் ஊதப்பட்டதும் எல்லாரும் படபடவென்று குதித்தார்கள். இவர்கள் மூவரும் விரைவாக நீந்தி குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பரமுவை தேடினால் அவனை காணவில்லை. திகைத்து போய் ஒருவேளை அவன் இன்னும் வந்து சேரவில்லையோ என திரும்பி பார்த்தால் அவன் பின்னாலும் இல்லை. கரையிலிருந்த ஈசு திறந்த வாய் மூடாமல் இருந்தான்.

விசில் அடித்ததும் பரமு நின்ற இடத்திலிருந்து ஒரே டைவ். நின்ற இடத்திலிருந்து இவ்வளவு பெரிய ஜம்ப்பை ஈசு பார்த்ததில்லை. பரமு நீரை தொட்ட தூரமும், வேகமும் அவன் மிக சுலபமாக மற்ற எல்லாரையும் தாண்ட உதவின. மற்றவர்கள் அரைவாசி தூரமிருக்கும் போது, அவன் அக்கரையை தொட்டு திரும்பி கொண்டிருந்தான். இங்கே நடு குளத்தில் அவர்கள் மூன்று பேரும் காத்திருந்தனர். கையில் சின்னதாய் பாட்டில் வைத்து தயாராய் இருந்தனர். பரமு நெருங்கி வந்து கொண்டிருந்தான்.

“நான் 1, 2, 3 னு சொன்ன உடனே நீச்சல் அடிக்குறா மாதிரி பாய்ஞ்சிடுங்கடா. என் இடது கையில பாட்டில், சுமேஷ் வலது கையில பாட்டில், அவன் எங்க இரண்டு பேருக்கும் நடுவில வருவான். நாங்க கீறின உடனே அவன் தடுமாறுவான். அப்ப சீனு நீ மூணாவதா கீறிடு. எப்படியும் அவனுக்கு ஒரு கீறலாவது விழனும்" என்று லோகு கூற மற்ற இருவரும் தலையாட்டினார்கள். பரமு நெருங்கி வந்தவுடன் மூவருமே பாய்ந்தனர்.

ஒன்றல்ல மூன்று கீறலுமே விழுந்தது. ரத்தம் கசிந்தது. பரமு தண்ணீருக்குள் மூழ்கினான்.

Please share your thoughts @ https://www.penmai.com/community/threads/படிக்குற-வயசுல-டீன்-ஏஜ்-டைரி-comments.135745/page-2
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
551
Likes
2,283
Location
Chennai
#12
10

ஈசு பதறினான். ஜோதி, வசந்தி, மாடசாமி மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஈசு பதறுவதை பார்த்தால் ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. பரமு தலை வெளியே தெரியவில்லை. முழுதாய் 1 நிமிடம் கழிந்தது. பரமு வெளியே வந்தான். எல்லைக் கோட்டை நெருங்கிவிட்டான். அவன் தான் முதலிடம். ஈசு ஓடி வந்து அவன் மேலெல்லாம் தடவி பார்த்தான், எந்த காயமும் இல்லை.

லோகுவும் அவன் நண்பர்களும் பரமு மேல் பாய்ந்தவுடன் அவன் சடாரென்று நீரின் ஆழத்திற்கு சென்றுவிட்டான். அவர்கள் ஊர் ஆழ்கிணற்றில் பல தடவை தரையை தொட்டு மணலை எடுத்து வந்திருக்கிறான். அது அந்த ஊர் ஒலிம்பிக். எல்லா சிறுவர்களும் வட்டக்கிணற்றை சுற்றி நிற்பார்கள். போட்டி தொடங்கியதும் எல்லா பயல்களும் குதிப்பார்கள். முதலில் வருபவர்களுக்கு மாங்காய், கொடுக்காப்புள்ளி என்று பரிசுகளும் உண்டு. சில சமயம் பெரியவர்கள் 1 ரூபாய் இல்லை 5 ரூபாய் நாணயங்களை வீசி எறிந்து எடுத்து வர சொல்வார்கள்.

எப்போதும் அந்த விளையாட்டில் பரமு தான் முதல். அந்த தாவல் பயிற்சி தான், இன்று விசில் ஊதியவுடன் பாதி குளம் போக வைத்தது. அந்த அடி ஆழம் போகும் பயிற்சி தான் இவர்கள் பாய்ந்ததும் தப்பிக்க உதவியது. இப்போது லோகுவும் அவன் நண்பர்களும் என்ன ஆனார்கள் என பார்ப்போம்.
உண்மையில் அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கீறிக்கொண்டனர். பரமு தண்ணீரில் மூழ்கியதும் சேற்றை கிளறிவிட்டான். அதனால் ஏற்பட்ட கலங்கலில் அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை, மாறி மாறி கீறிக்கொண்டனர். இரண்டாவது சுற்றிலும் பரமுவிற்கு தான் முதலிடம். ஈசு ஐந்தாவதாக வந்தான். வசந்தி, ஜோதி, மாடசாமி சந்தோஷத்தில் மிதந்தனர். லோகுவும் நண்பர்களும் வலியும் வேதனையுமாய் முணங்கி ஆத்திரத்தில் கொதித்தனர்.

மறுநாள் ஓட்டப்போட்டி. முதல் நாள் இரவு உணவை முடித்து பரமு தன் அறைக்கு வந்த போது, அதே பவழமல்லியும் கடிதமும். கடிதத்தில் பார்வையை ஒட விட்ட போது, "நாளை நடக்க உள்ள ஓட்டப்பந்தயத்தில் உன்னை கீழே தள்ளி காயம் ஏற்படுத்த லோகுவும் அவன் நண்பர்களும் திட்டமிட்டுள்ளனர். கவனம்." இந்த முறையும் ஈசு தடுத்தான் எச்சரித்தான்.

வழக்கம் போல் பரமு," தண்ணியிலேயே ஒன்னும் செய்ய முடியல, தரையில என்ன பண்ணிடப்போறாங்க" என்று ஆறுதல் சொன்னான்.

மறுநாள் காலை உடலில் கீறல் இருந்தாலும் மனதில் உறுதியோடு நின்றனர் லோகுவும், சுமேஷும், சீனுவும். போன முறை போல் இதிலும் 40 பேர், இரண்டு பேட்ச், பித்தலாட்ட Name List, அதே 37, 38, 39, 40 வரிசை, மொத்தம் 100m இரண்டு 50m சுற்று. ஆனால் இந்த முறை அவர்கள் திட்டத்தில் தெளிவாக இருந்தனர். மீண்டும் மீண்டும் கூடி பேசினார்கள். சிறு குறையை கூட சரி செய்தனர். திட்டம் இறுதியானது.

அந்த திடல் வட்ட வடிவமானது. நடுவில் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பார்கள். வீரர்கள் அவர்களை சுற்றி ஓடி வர வேண்டும். ஓடும் பாதையின் நடுவில் ஒரு இடத்தில் மரங்கள் அடர்ந்திருக்கும். அது Blindspot. யார் பார்வையும் படாது. முதல் நாள் பெய்த மழையில் லேசாக சேறாக வேறு இருந்தது. அந்த இடத்தில் அவனை கீழே தள்ளிவிடவும், அங்கேயே அவனை தாக்கவும் முடிவு செய்திருந்தனர்.

அதற்காக முள் மரங்களை வெட்டி வைத்திருந்தனர். இந்த முறையும் மாடசாமி மேல் பழி போட்டிடலாம், மரங்களை வெட்டாமல் விட்டதற்கும், வழியை சரி செய்யாமல் வைத்ததிற்கும். குறைந்தபட்சம் பரமுவை கீழே தள்ளிவிட்டு கால் தடுக்கியது போல் அவன் முதுகில் குதித்து அவன் முதுகெலும்பையும் கால் முட்டியையும் உடைத்திடலாம் என திட்டமிட்டனர். ஆனால் தொடக்கமே அவர்களுக்கு சறுக்கல்.

அங்கே யாரும் பார்க்க முடியாது என்பதால், ஒரு ஆசிரியரை அம்பயராக போட்டுவிட்டனர். அவர் சரியாக அந்த திருப்பத்தில் நின்று கொண்டார். இப்படி ஆச்சே என சுமேஷும், சீனுவும் பதற உடனே வேறு திட்டத்தை தயாரித்தான் லோகு. அந்த திருப்பத்திற்கு கொஞ்சம் முன்னால் சீனு தவறி விழுவது போல் நடிக்க வேண்டும், உடனே ஆசிரியர் அங்கு ஓடி வந்துவிடுவார் சீனுவை கவனிக்க.

லோகுவும் சுமேஷும் பரமுவை தாக்க வேண்டும். எப்படியும் யாரும் பார்க்க முடியாது. ஆசிரியர் திரும்பி வருவதற்குள் அவனை அடித்து மரத்திற்குள் இழுத்து சென்றுவிடுவேண்டும். முதல் சுற்று முடிந்தது. ஈசு 7ஆவது இடம். இரண்டாவது சுற்று. எல்லாரும் ஓடுவதற்கான பொஷிசனில் தயாராக இருந்தனர். "Get Set, Ready, Go" என ஆசிரியர் கூறி விசில் அடித்ததும், புயல் வேகத்தில் ஓடினான் பரமு.

கிராமத்தில் எத்தனை திசை தவறிய ஆடுகளையும் மாடுகளையும் பிடித்திருக்கிறான். நான்கு கால்களோடு போட்டி போட்டவனுக்கு இரண்டு கால்கள் எம்மாத்திரம். மற்றவர்கள் பாதி தூரம் வந்திருந்த போது இவன் 50 மீட்டர் முடித்துவிட்டு, இரண்டாவது சுற்றை தொடங்கி விட்டான்.

லோகுவின் திட்டப்படி சீனு கீழே விழுந்தான். எலும்பு முறிந்ததை போல கத்தினான். ஆசிரியர் அவனை நோக்கி நகர்ந்தார். லோகுவும் சுமேஷும் கட்டைகளை கையிலெடுத்தனர். பரமு அந்த மரக்கூட்ட திருப்பத்தில் நுழைந்தான். ஈசு பார்த்து கொண்டே இருந்தான். பத்து விநாடியில் அந்த மரக்கூட்டத்தை கடந்து மறுபக்கம் வர வேண்டியவன் வரவேயில்லை.

"ஐயோ” என அவன் அலறுவது மட்டும் கேட்டது.

Please post your thoughts https://www.penmai.com/community/threads/படிக்குற-வயசுல-டீன்-ஏஜ்-டைரி-comments.135745/page-2
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
551
Likes
2,283
Location
Chennai
#13
11

பரமுவின் அலறல் கேட்டதும் ஆசிரியர் சீனுவை விட்டுவிட்டு ஓடி சென்று பார்க்க அங்கு பரமு கையில் கட்டையோடும், லோகுவும் சுமேஷும் வெளிறிய முகத்தோடும் நின்றிருந்தனர். சற்று தள்ளி ஒரு பெரிய நல்ல பாம்பு செத்து கிடந்தது.

விஷயம் இது தான், பரமுவை அடிக்க லோகுவும் சுமேஷும் தயாரான போது ஒரு பாம்பு அவர்களின் பின்னால் படமெடுத்து நின்றது. அதை பார்த்து தான் பரமு ஐயோ என கத்தினான். கத்தியதோடு நில்லாமல் அவர்களை நோக்கி ஓடினான்.

அவர்களோ இவன் என்னடா நம்மை பார்த்து பயந்து ஓடாமல் நம்மை நோக்கி ஓடி வருகிறான் என குழம்பி நிற்க, பாம்பு அவர்களை விட்டு இவனை நோக்கி திரும்பியது. பரமு ஓடியபடியே இடது கரத்தில் கட்டையை எடுத்து அதை வலது கரத்திற்கு மாற்றி, பாம்பின் தலையில் நச்சென அடித்தான். பாம்பு பரலோக பதவியை அடைந்தது.

ஓட்டப்பந்தயம் நிறுத்தப்பட்டு முதலிலிருந்து தொடங்கியது. இந்த முறை எந்த தடங்கலுமின்றி பரமு முதலாவதாக வந்தான். பாம்பிடமிருந்து தங்களை காப்பாற்றிய பரமுவிடம் எந்த நன்றியும் ஏற்படவில்லை. மாறாக அவன் விளையாட்டு போட்டியில் ஜெயித்ததால் பொறாமை தான் அதிகமானது. நாட்கள் ஓடின. நவராத்திரி வந்தது. சேர்ந்தாற் போல பத்து நாட்கள் விடுமுறையும் வந்தன.

சிலர் சொந்த ஊருக்கு செல்ல, சிலர் அங்கேயே தங்கினார்கள். ஈசுவும் ஊருக்கு சென்று விட்டான். பரமுவிற்கு எங்கும் போக வழியில்லை. எனவே அங்கேயே தங்கினான். இடைபட்ட நாட்களில் அவனும் அந்த கடிதத்தை யார் எழுதியது என கண்டு பிடிக்க முயன்றான். ம்ஹூம் முடியவில்லை.

அன்பாலயாவின் தோட்டத்தில் பவழமல்லியை தேடினான், அந்த மலரின் வாசம் கூட அவர்கள் தோட்டத்திலில்லை. அவனும் ஈசுவும் யாரிடமும் அந்த விஷயத்தை சொல்லவுமில்லை சொன்னால் லோகுவிற்கு மேலும் கெட்ட பெயர் என விட்டுவிட்டனர்.

சரஸ்வதி பூஜை பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாடசாமி அதில் கலந்து கொள்ளவில்லை. அவர் சாமி கும்பிடுவதில்லை என வடிவேல் சொன்னார். ஜோதியும் இல்லை அவள் விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டாள். வசந்தி கலந்து கொண்டு விட்டு அவள் வீட்டு கொலுவிற்கு பரமுவை அழைத்து விட்டு சென்றாள். அவனும் வடிவேலிடம் அனுமதி வாங்கி கொண்டு வசந்தியின் வீட்டிற்கு இல்லை இல்லை பங்களாவிற்கு சென்றான்.

வீடு முழுவதும் ஜே ஜே என கூட்டம். எல்லாரும் ஆடம்பரமாக உடை உடுத்தியிருந்தனர். இவனும் ஒன்றும் சாதாரணமாக இல்லை, மாடசாமி இவனுக்கென வாங்கியிருந்த புது சட்டையை தான் அணிந்திருந்தான். கூட்டத்தில் இவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இவனும் வசந்தியை தேடி பார்த்தான் அவளை காணவில்லை. யாரோ காப்பி கொடுத்தார்கள். அதை கையில் வாங்கி கொண்டே வசந்தியை தேடி அவன் நடந்த போது, அதுவரை சத்தம் போட்டு கொண்டிருந்த கூட்டம் திடீரென அமைதியானது.

என்னாச்சு என பார்த்தால், கொலுவிற்கு அருகில் அமர்ந்து, கையில் வீணையோடு வசந்தி பாடத் தொடங்கியிருந்தாள். கண்ணனை தேடி ராதை பாடும் பாடலது. ஆனால் பரமு காதில் ஒரு வார்த்தை கூட விழவில்லை. ஒரு வேளை தூரமாயிருப்பதாலோ? இல்லை, இல்லை அவன் பக்கத்தில் உள்ள வயதான பாட்டி தலையை ஆட்டி ஆட்டி கேட்கிறார்களே. பின் என்ன ஆச்சு?

பரமுவின் கண்கள் இமைக்கவில்லை, காபியை குடிக்க உயர்த்திய கை அசைவற்று நிற்கிறது, திறந்த வாய் மூட மறந்தது. காரணம் வசந்தி.

இத்தனை நாட்களும் அவளை பள்ளி சீருடையில் பார்த்து பார்த்து ஒரு நல்ல Friend என்ற அளவை தாண்டி அவள் ஒரு பெண் என்பது பதியவில்லை. இன்று வசந்தி வசந்தமாய் தெரிந்தாள்.

எலுமிச்சையும் பாலும் கலந்த நிறம். தலைக்கு குளித்து Loose Hairல் ஒரு சின்ன கிளிப் போட்டிருந்தாள். கற்றை முடி காதிலும், ஒற்றை முடி நெற்றியிலும் முத்தமிட்டது. நெற்றியில் சின்ன பொட்டு. அளவான நாசி. பூனை மீசை இல்லாத மேல் உதடு. பூனை கூட ஆசை கொள்ளும் கீழ் உதடு. கடலளவு உள்ள கண்கள். காதில் தொட்டு ஆடும் ஜிமிக்கி. பருக்களும் வடுக்களும் இல்லாத கன்னம். சுருக்கம் இல்லாத கழுத்தில் ஒற்றை சங்கிலி.

பாடலுக்கு இடையில் அவள் எச்சில் முழுங்குவது கூட தெரியும் வெண்கழுத்து. பச்சை தாவணியும் மஞ்சள் பாவாடையும் அணிந்திருந்தாள். வீணையில் அவள் கைகள் விளையாட விளையாட இவன் வினையாகி கொண்டிருந்தான். உச்ச ஸ்தாயில் பாடுவதற்காக அவள் மூச்சை இழுத்து பிடித்த விட்ட போது வீணையில் மோதிய இரண்டு மத்தளங்களால் அவன் மூச்சை விட்டுவிட்டான்.

தாவணிக்கும் பாவடைக்கும் இடைவெளி விடாது Pin குத்தியிருந்த போதும் இடைவிடாது இச்சையூட்டிய அவள் இடையும், வீணை தாங்கி கொண்டிருந்த தொடைகளும், வைரக் கால்களில் தங்க கொலுசுகளும், நீண்ட நேரம் கால் மடித்து அமர்ந்ததால் சிவந்த கால்களில் மருதாணி சிவப்பும் இவன் இரத்தத்தை மேலும் சிவக்க செய்தது.

இப்படி தலை முதல் கால் வரை அவளை உரித்து தின்றான். கையில் வைத்திருந்த காபி ஆடை கட்டியது, எதிரிலிருந்த ஒரு தேவதை ஆடை கட்டி இருந்ததால். அவன் அவனாக இல்லை, வசந்தி அவனை முழுவதுமாக வசீகரித்து விட்டாள்.

அநாதை ஏழை எல்லாவற்றையும் மறந்து காதல் அவன் கழுத்தை கட்டிக் கொண்டது. சுற்று வட்டாரம் எல்லாம் மறந்து அவள் மட்டுமே தெரிந்தாள். யாருமில்லாத தீவில் அவள் அவனுக்கு மட்டும் பாடுவதாய் தோன்றியது.

அவள் அவனுக்கு என்று தோன்றிய அந்த விநாடி அவள் பாடுவதை நிறுத்தினாள்.

Please share your thoughts @
https://www.penmai.com/community/threads/படிக்குற-வயசுல-டீன்-ஏஜ்-டைரி-comments.135745/page-2
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
551
Likes
2,283
Location
Chennai
#14
12

ஏன் பாடுவதை நிறுத்தினாள் என எல்லோரும் பார்க்க, அவளோ அவனை பார்த்து கொண்டிருந்தாள். இருவர் கண்களும் சந்தித்த அடுத்த நொடி சட்டென்று வேறு பாடலுக்கு மாறினாள். அது தேடி கொண்டிருந்த கண்ணன் ராதைக்கு தரிசனம் தருவதாய் அமைந்த பாடல்.

அடுத்த ஐந்து நிமிடம் அந்த பாடலால் மற்றவரும், பாடகியால் பரமுவும் பரவசத்தில் மிதந்தனர். பாடல் முடிந்து எல்லாருக்கும் சுண்டலும் பானகமும் தரப்பட்டது. பரமுவை மட்டும் இருந்து சாப்பிட்டு விட்டு போகும்படி கூறிவிட்டாள் வசந்தி. அவள் அப்பா, அம்மாவிற்கும் அறிமுகம் செய்து வைத்தாள். உணவு தயாராகி கொண்டிருந்த போது வீட்டையெல்லாம் சுற்றிக் காட்டினாள். பின் தோட்டத்தை சுற்றிக் காட்டினாள். அங்கு பெரிய மருதாணி மரம் நின்றது. அவனுக்காக இரண்டொரு இலைகள் பறித்தாள், பரமுவின் மனதிற்குள்

"மற்றவர்களுக்கு பூசினால்
சிவக்கும் மருதாணி
மங்கையே உனக்கு
பறித்தாலே சிவக்கிறதே!!!”

என்று கவிதை படித்தான். அவள் படிக்கும் இடம், அமரும் இடம், ஊஞ்சல் ஆடும் இடம் என தேடி தேடி அவள் தடம் தேடினான். அந்த மயக்கத்திலும் தயக்கம், அவன் சுயநிலை சரேலென்று எட்டி பார்த்தது.

"டேய், நீ யாரும் இல்லாதவன், வாழ்நாள் முழுக்க மாடு மேய்க்க வேண்டிய உன்னை யாரோ ஒரு புண்ணியவான், படிக்க அனுப்பியிருக்கான். அத விட்டுட்டு 18 வயசுலயே உனக்கு என்னடா காதல்? நாளைக்கே நீ சம்பாதிச்சாலும், பணக்காரனா ஆனாலும் நீ அநாதை தான், நீ எந்த சாதினு தெரியாம யாராவது உனக்கு பொண்ணு குடுப்பாங்களா? மூடிட்டு படிக்குற வேலையை மட்டும் பாரு" என்று அவனை அவன் அறிவு செவிட்டில் அறைய, வந்த காதல் சட்டென்று வற்றியது. இதெல்லாம் வேண்டாம் என அவனுக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

"என்னாச்சு பரமு? ஏன் மூஞ்சியெல்லாம் வேர்த்திருக்கு?" என்றாள் வசந்தி.

“இல்லை கொஞ்சம் tired அதான் நான் போய் Face Wash பண்ணுறேன்" என்றான்.

"சரி கிணறு பின்னாடி இருக்கு, அங்க போய் wash பண்ணிக்க" என்றாள்.

கிணற்றில் நீரெடுத்து சில்லென்று முகத்தில் அடித்து நிமிர்ந்த போது, பளிச்சென்று கண்ணில் பட்டது பவழமல்லி மரம்.

பல நாள் குழப்பம் தீர்ந்தது. இவ தான் நம்மள காப்பாத்திருக்கா, பின்ன ஏன் சொல்லல? கள்ளி நம்மளும் அது தெரியாமயே Maintain பண்ணுவோம். அவளா எப்ப சொல்லுறானு பார்ப்போம் என தீர்மானித்து கொண்டான்.

இங்கே வசந்தி என்ன ஆனாள் என பார்ப்போம். சில நாட்களாய் அவளையும் அறியாமல் பரமு அவளை பூரணமாக ஆக்கிரமித்து கொண்டான். எந்த தருணத்தில், எந்த நொடியில் என்று அவளுக்கு நிச்சயமாக தெரியவில்லை.
இது காதலா இல்லை வெறும் வயசுக் கோளாறா என வகைப்படுத்தவும் முடியவில்லை. இவள் வதைபடுவதும் குறையவில்லை.

இந்த நவராத்திரிக்கு அவனை கூப்பிடுவதென முடிவு செய்தாள். அப்பா அம்மாவிடமும் அறிமுகப்படுத்தினாள். மற்ற நாளை விட இன்று அவள் அருமையாக பாடியதாக எல்லாரும் சொன்னார்கள். உண்மைதான், இன்று கானத்தில் காதல் கலந்து வந்தது. இந்த ராதை அந்த கண்ணனை நினைத்து தான் பாடினாள். அவன் மனதில் என்ன எண்ணம் என தெரியாமல், நாம் அவசரப்பட்டு உளறி நல்ல நட்பை கெடுத்து கொள்ள வேண்டாம். அவனாக சொல்லட்டும் பார்க்கலாம் என முடிவு செய்தாள்.

இரவு உணவு சாப்பிட்டு பரமு கிளம்பிவிட்டான். என்றுமில்லாத அதிசயமாய் தன் மகள் வீட்டு வேலையாய் உணவு பரிமாறுவதை பார்த்து ஆச்சரியப்பட்ட அவள் தாய், பரமு சாப்பிட்ட தட்டை அவளே கழுவுவதாய் சொன்னதும் அசந்து போனாள். நல்ல வேளை வசந்தியின் பின் சென்று பார்க்கவில்லை, பார்த்திருந்தால் மயங்கியிருப்பாள், பரமுவின் தட்டில் மிச்சம் உள்ள உணவை வசந்தி சாப்பிட்டாள்.

நவராத்திரி முடிந்து பள்ளி திறந்துவிட்டது. நாட்கள் ஓடின. அரையாண்டு தேர்வு நெருங்கியது. இடைபட்ட காலத்தில் இந்த இருவரின் நாடகமும் இனிதே தொடர்ந்தது. முடித்து வைக்க ஆளின்றி அவர்கள் முனைப்போடு முன்னேறினார்கள். பல பேர் சூழ இருந்த போதும் சரி, அவர்கள் இருவரும் மட்டும் தனித்திருந்த போதும் சரி, அவர்கள் நேரடியாக பேசிக் கொள்வது குறைந்தது.

உதடுகள் விரதம் இருக்க, விழிகள் Overtime செய்தது. Quizல் சரியான பதில் சொன்னால் கை குலுக்கும் பழக்கம் உருவானது. வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது ஒருவருக்கொருவர் சீட்டு எழுதி கொடுத்தனர்.

வாரத்தின் ஐந்து நாட்கள் பேசி, இல்லை இல்லை பார்த்து தீர்த்தது போதாதென சனி ஞாயிறு Group Study தேடினர். பாவம் ஜோதியும் ஈசுவும் இந்த நாடகம் தெரியாமல் பேக்கு போல் இவர்களோடு படித்து வந்தனர். மாடசாமி தாத்தாவின் தோட்டத்தில் உள்ள எல்லா அழகான பூக்களுக்கும் வசந்தி என பெயர் சூட்டு விழா பரமுவின் தலைமையில் நடந்தது.

சாப்பாடு என்பது Dining Table உடன் முடியும் விஷயம் என இருந்த வசந்தி, திடீரென சமைக்க கற்று தர சொல்லி நச்சரித்ததால், வசந்தியின் அம்மா தன் மகளுக்கு யாரோ பில்லி சூன்யம் செய்து விட்டார்களோ என மந்திரிக்க ஆள் தேடினார்கள். மொக்கையாக பரமு சொல்லும் எல்லா "Joke"க்கும் வசந்தி விழுந்து விழுந்து சிரித்தாள்.

பரமு அடிக்கடி "வசந்த கால நதியினிலே" மற்றும் "ஓ வசந்த ராஜா" பாடல்களையும், வசந்தி "பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டதாம்" என்ற பாடலையும் பாடிக்கொண்டு திரிந்தார்கள். அடிக்கடி பரமு தூக்கத்தில் பிரண்டு தன் காதை கடிப்பாதாக ஈசு complaint செய்தான்.

தீபாவளிக்கு வாங்கிய லெட்சுமி வெடியை வெடிக்காமல் அந்த லெட்சுமி உருவத்திற்கும் வசந்தி உருவத்திற்கும் உள்ள உருவ ஒற்றுமையை ஆராய்ந்தான் பரமு. சிறார் படையின் ரோந்து பணியில் சம்பந்தமே இல்லாமல் வசந்தி வீட்டிற்கு காவல் போக வேண்டுமேன தோன்றியது பரமுவிற்கு. முதன் முறையாக Mobile இல்லாதது இழப்பாக தெரிந்தது. அட்டு கவிதையாக எழுதி ஈசுவை வெறுப்பேற்றினான்.

வசந்தி அவள் அப்பாவின் மீது ஏற்பட்ட திடீர் பாசத்தால், பன்னீர் செல்வம் என்ற அவர் பெயரின் முதல் எழுத்தான "P" என்ற எழுத்து உள்ள மோதிரமும், Dollar Chainம் வாங்கி போட்டுக் கொண்டாள்.

ஆனால் இருவரும் இது வரை வாய் திறக்கவில்லை. பொதுவாக காதல் கொண்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள், நண்பர்களிடம் உளறி விடுவார்கள். ஆனால் இவர்கள் விஷயத்தில் அதற்கும் வழியில்லை. ஜோதியும் ஈசுவும் பொதுவான நண்பர்கள். அவர்களிடம் கூறினால் மொத்த நட்பும் கெட்டுவிடும் என்பதால் அதற்கும் வழியின்றி போனது.

மனதில் உள்ள மகரந்தத்தை மழைக்கும், மலருக்கும், காற்றுக்கும், கனவிற்கும் கொடுத்து விட்டு, இருவருமே திரை இட்டு கொண்டு காத்திருந்தனர். மற்றவர் திரையை விலக்குவார்கள் என.

இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்தது, விடுமுறையில் வழக்கம் போல் ஜோதியும் ஈசுவும் ஊருக்கு சென்றனர். கிறிஸ்துமஸில் இருந்து புத்தாண்டு வரை விடுமுறை. 26 ஆம் தேதி நமக்கு எப்போதுமே பிரச்சனை தான். December 26 சுனாமி, January 26 பூகம்பம் என எல்லா இயற்கை பேரிடர்களும் அன்று தான் நடந்தது.

அந்த ஆண்டு கொடூரமான மழை. 25ம் தேதி இரவு தொடங்கி, 26ம் தேதி முழுவதும் பெய்தது. மின்சாரம் அப்பா வீட்டிற்கு கோபித்து கொண்டு போன சம்சாரமானது. மாடசாமியின் பல வருட உழைப்பு வீணானது. காற்றும் மழையும் அவர் தோட்டத்தை சீரழித்தது. பள்ளி மெஸ்ஸில் சமையலும் இல்லாமல், பிரட்டையும் பிஸ்கட்டையும் சாப்பிட்டு அறையிலேயே முடங்கினான் பரமு.

27ஆம் தேதி காலையில் பத்து மணிக்கு மேல் தான் மழை நின்றது. ஆனாலும் வானம் வெளுக்கவில்லை. எந்த நேரமும் கொட்டுவேன் என கர்ப்பமான மேகம் பயமுறுத்தியது. தோட்டத்தை பார்த்த பரமு அழுதே விட்டான், அவன் வசந்தி வீட்டிலிருந்து வாங்கி வந்து வசந்தி என பெயர் வைத்த பவழமல்லி செடி தண்ணீரில் மூழ்கி விட்டது.

அந்த செடியை சுற்றி சிதறி கிடந்த பவழமல்லி பூக்களை வைத்து தான், அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடிந்தது. மனம் பொறுக்காமல் வசந்தியை பார்க்க கிளம்பினான்.

பாதி தூரம் சென்ற போது, அவள் எதிரில் வருவது தெரிந்தது. அவள் பெயர் இட்ட செடி மூழ்கியதிலிருந்து பயந்திருந்த அவன், அவள் பத்திரமாக எதிரில் வருவதை பார்த்து நிம்மதியடைந்தான். தெருவில் முட்டி வரை தண்ணீர் நின்றது. பாவாடையை தூக்கி பிடித்து கவனமாக வந்த அவள், தரையிலிருந்து பார்வையை உயர்த்தி அவனை பார்த்தவுடன், ஆர்வமாய் ஓடி வந்தாள். வழியில் திறந்து இருந்த பாதாள சாக்கடையில் பரமு பார்த்து கொண்டிருக்கும் போதே விழுந்தாள்.

பரமு "வசந்தி" என அலறியபடி அவளை நோக்கி ஓடினான். நீச்சல் தெரிந்தாலே தப்புவது கடினம். அவளுக்கு நீச்சலும் தெரியாது. மழையில் அவன் கால்கள் வழுக்கியதை சமாளித்து அவன் வேகமாக நெருங்கி வர, அவள் முழுவதுமாய் உள்ளே மறைந்தாள். அவள் அணிந்திருந்த தாவணி மட்டும் மேலே மிதந்தது.

பரமுவிற்கு அவன் காப்பாற்ற முடியாமல் போன பவழமல்லி செடியும் அதை சுற்றி மிதந்த பூக்களும் ஞாபகம் வந்தது.

Please share your thoughts @
https://www.penmai.com/community/threads/படிக்குற-வயசுல-டீன்-ஏஜ்-டைரி-comments.135745/page-2
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
551
Likes
2,283
Location
Chennai
#15
13

மழை வெள்ளத்தில் உடைந்த ஒரு மரத்தின் கிளை அந்த சாக்கடை துவாரத்தில் சிக்கியிருக்க, அதில் வசந்தி மாட்டியிருந்தாள். பரமு வேகமாக அவளை தூக்கி அருகிலிருந்த மேட்டுப் பகுதியில் வைத்தான். நல்லவேளை மூச்சு வந்தது. சிறார் படை முதலுதவி பயிற்சி இப்போது தக்க சமயத்தில் கை கொடுத்தது.

அவளை குப்புறப்போட்டு முதுகை அழுத்தி, அவள் குடித்திருந்த தண்ணீரை வாய் வழியாக வெளியே எடுத்தான். அவள் மெல்ல மெல்ல நினைவு திரும்ப இவன் மூச்சு விட்டான். அவள் கண்ணை திறந்து சுற்றும் முற்றும் பார்த்து இவனை கட்டிக்கொண்டாள்.

அப்பாடா ஒரு வழியாக நாடகம் முடிந்தது. திரை விலகியது. செயற்கையாக இவர்கள் வைத்திருந்த தடையை இயற்கை நீக்கியது. இறப்பை தொட்டுவிட்டு திரும்பிய மகிழ்ச்சியில் அவளும், தன் உயிரினும் மேலானவளை காப்பாற்றிய மகிழ்ச்சியும் இருவருக்கும் இருந்தாலும், இத்தனை நாட்களாய் காதலை கூறாமல் தடுத்திருந்த தளை அறுந்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இப்போதும் அவர்கள் உதடுகள் பேசவில்லை. மாறாக முத்தமிட தொடங்கினார்கள். நெற்றி, கன்னம், கண்கள், காது என தொடங்கி இதழ்களில் இணையும் போது மழை தொடங்கியது. உடனடியாக அவர்கள் மறைவிடம் தேடி ஓடினார்கள். தண்ணீரில் மிதந்த தாவணியை கையிலெடுத்து கொண்டாள் வசந்தி. அதுவரை மேலாடை இல்லாமல் இருந்தது கூட அவளுக்கு உறைக்கவில்லை.

அருகிலேயே ஒரு கொட்டகை இருந்தது. உள்ளே நுழைந்து கதவையும் தாளிட்டனர். ஒரு புறம் மாடுகளும் குதிரைகளும் கட்டப்பட்டு இருக்க, மறுபுறம் வைக்கோல் அடுக்கப்பட்டு சுத்தமாக இருந்தது. பழைய கட்டடமாக இருந்தாலும் பெரியதாக இருந்தது. மழையில் முழுவதும் நனைந்ததால் சாக்கடை அழுக்கு நீங்கிவிட்டாலும், இப்போது குளிர் எடுத்தது இருவருக்கும்.

பரமுவிற்காவது கிராமத்து வெட்டவெளியில் தூங்கி பழக்கமிருந்ததால் குளிர், வெயில் எல்லாம் ஓரளவிற்கு பழக்கம். வசந்தி தான் பாவம் நடுங்கத் தொடங்கினாள். சாக்கடையில் மூழ்காமல் உயிர் தப்பிவிட்டு, இப்போது குளிர் ஜுரம் அல்லது ஜன்னியில் இறந்திடுவாள் போல தோன்றியது.
வேறு வழியில்லை ஈர உடையை கழட்டி விடு என்றான் பரமு. வசந்தியும் தயங்கியபடி, நீ அந்த பக்கம் திரும்பு, உன் டிரஸும் ஈரமாதான் இருக்கு நீயும் கழட்டு என்றாள்.

மறைவிடம் இல்லாததால் இருவரும் எதிர் எதிர் புறம் திரும்பி ஈரத் துணியை விலக்க தொடங்கினர். எங்கோ கூரையிலிருந்து மெல்லிய வெளிச்சம் கசிந்தது. எவ்வளவு தூரம் தான் முதுகும் முதுகும் பார்க்க நிற்பது. இருவருக்குமே உள்ளுக்குள் தாங்கள் பிறந்த மேனியாய் இருப்பதன் கூச்சமும், மற்றவரும் அப்படியே இருப்பதன் வயசுக்கவர்ச்சியும் போட்டியிட தொடங்கின. அப்போது காது செவிடாகும்படி ஒரு இடி அவர்கள் கொட்டகைக்கு அருகே இடித்தது. வசந்தி பயந்து அலறி பரமுவை முதுகுப்புறமாக கட்டிக்கொண்டாள். கொஞ்ச நஞ்சமிருந்த கட்டுப்பாடும் வெடித்து சிதறியது.

அவள் பஞ்சு மேனி இவன் மேல் அழுத்த இவனும் திரும்பி அவளை கட்டியனைத்தான். மழையும் குளிரும் காரணமாக சொல்லப்பட்டாலும், அங்கு காதலும் காமமும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இருவரும் தன் நிலை மறந்து இணைந்தனர். நேற்று வரை காதலை சொல்லவே தயங்கிய இரண்டு ஜீவன்கள் போன நிமிடம் முத்தம் கொடுத்து இந்த நிமிடம் மொத்தமும் கொடுத்துவிட்டன. அங்கே நிகழ்ந்தது ஒரு அற்புதம்.

சுற்றி இருந்த மாடுகள் மிரண்டன. வெளியே மழை வேகமெடுத்தது. இன்னும் பல இடிகள் இடித்தன. ஆனால் இவர்கள் இவ்வுலகில் இல்லை. முழுதாய் ஒரு மணி நேரம் ஓடியது. ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்தபடி ஓய்ந்திருந்தனர். அவன் மெதுவாக அவள் கூந்தலை வருடியபடியும், அவள் அவன் மார்பின் மீது கோலம் போட்டபடியும் இருந்தனர். இவ்வளவு நேரமும் அவர்கள் பேசிக் கொள்ளவேயில்லை. இப்போது தான் அதற்கு நேரம் கிடைத்தது. அவள் தன் எதிர்கால லட்சியத்தையும், ஆசைகளையும் கூற அவன் தன் விருப்பங்களையும் வாழ்க்கையையும் பற்றி கூறினான். அவர்கள் பேரனின் படிப்பு வரை பேசி தீர்த்தனர்.

ஆசைகளை பற்றி பேசும் போது அவர்கள் சேருவதற்கு உண்டான தடைகளை பற்றியும் பேச, பணம், அந்தஸ்து, ஜாதி இவை எல்லாவற்றையும் தாண்டி ஜெயிக்க வேண்டும் என்ற வெறி உண்டானது. இப்போது அவசரப்பட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி எழுந்தது. பரமுவிற்கு வயது 18 என்றாலும், வசந்திக்கு 15 தானே. இனிமேல் படித்து, பெரிய வேலைக்கு சென்று, அவளின் பெற்றோரை சம்மதிக்க வைத்த பின் தான் ஒருவரை ஒருவர் தொடுவது என முடிவெடுத்தனர்.

அதை வாயால் உறுதி மொழி கூறி, ஒருவர் கையில் மற்றவர் சத்தியம் செய்ய, இருவர் கைகளும் உரசி படக் கென்று தீ பற்றிக் கொள்ள, சத்தியத்திற்கு முன் கடைசியாய் ஒரு தடவை என பாய்ந்து கட்டிக் கொண்டனர். அங்கு இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.

Please share your thoughts @
https://www.penmai.com/community/threads/படிக்குற-வயசுல-டீன்-ஏஜ்-டைரி-comments.135745/page-3
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
551
Likes
2,283
Location
Chennai
#16
14

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்தது. தேர்வு முடிவுகளும் வந்துவிட்டன. இந்த முறை பரமுவும் ஜோதியும் 1st rank. வசந்தி 2nd rank. லேசாக அவளுக்கு குற்ற உணர்ச்சி எட்டி பார்த்தது. ஒரு வேளை வரம்பு மீறியதால் தான் rank குறைந்து விட்டதோ? பரமு அவளை தாண்டியதால் கோபமும், லேசாக பொறாமையும் கூட வந்தது.

பாடங்கள் முழு வேகத்தில் நடத்தப்பட்டன. அடுத்த வருடம் +2 என்பதால், அவர்களின் +1 பாடங்கள் அரையாண்டுத் தேர்விலேயே Full Portionம் Cover செய்யப்பட்டன. எனவே Januaryல் இருந்து +2 பாடங்கள் நடத்தப்பட்டன.
இவர்களுக்கு பொங்கல் விடுமுறையும் மறுக்கப்பட்டது. அடுத்த ஒரு வருடம் படிப்பு மட்டும் தான் என வடிவேல் சொல்லி விட்டார். இந்த முறை எப்படியும் State Rank என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

90%ற்க்கு மேல் வாங்கும் மாணவர்களுக்கு 100% வாங்க Special Classம், Fail ஆகும் மாணவர்களுக்கு Pass ஆவதற்கு Special Classம் நடத்தப்பட்டது. எல்லாருக்கும் மிக கடுமையாக தயாரானார்கள். மாணவர்களுக்கென்று இல்லை ஆசிரியர்களுக்கே விடுப்பு மறுக்கப்பட்டது. பரமு மாடசாமி தாத்தாவை பார்த்தே பல நாட்களாகி விட்டது, இதில் எங்கிருந்து மூன்றாம் உலகப் போருக்கு வாய்ப்பு?

இருவரும் தனித்து இருக்க சந்தர்ப்பமே இல்லை. மாலை வரை பள்ளி, பின் Special Class என இயந்திரகதியானார்கள். வசந்தியும் above 90% என்பதால் அவளுக்கும் Special Class உண்டு. ஈசு ஆசிரியரிடம் கெஞ்சி கேட்டு ஒட்டிக் கொண்டான். அவன் எப்போதுமே 60-70% தான் இருந்தாலும் படிக்க வருகிறேன் என்று கேட்கும் மாணவனை எந்த ஆசிரியர் வேண்டாம் என சொல்வார்.

நேரமின்மையும் தனிமையின்மையும் போர் புரிய வழி செய்ய விடவில்லை என்றாலும், சிறு சிறு சண்டைகள் நடந்தன. ஒரே புத்தகத்தை பிரித்து வைத்து படிக்கும் போது, புத்தக மறைவில் விரல்கள் பேசிக் கொண்டன. Special Classல் எப்போதும் Last Benchல் அமர்ந்து மூச்சுக்களையும் யாரும் பார்க்காத போது முத்தங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

ஒரு நாள் உடல் நிலை சரியில்லாததால் ஜோதி சீக்கிரமே வீட்டுக்கு சென்று விட, வசந்தியின் வீடு வரை அவளுக்கு துணைக்கு செல்லும் சாக்கில் அவளோடு சேர்ந்து கொண்டான் பரமு. அவளை இடையோடு அவன் அணைத்து கொண்டு நடக்க, அவளும் அவன் மார்போடு சாய்ந்து கொண்டு நடந்தாள். இந்த பாதை முடியாமல் இப்படியே போக கூடாதா என இருவருக்கும் தோன்றியது. சிறிது நேரத்தில் வசந்தி விசும்பும் சத்தம் கேட்டது. பதறி அவள் முகத்தை நிமிர்த்தினான் பரமு. கண்களில் இருந்து நிலவொளியில் வெண்முத்துகளாய் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

"என்னாச்சு பா, ஏன் அழுற? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?" என்றான் பரமு.

"நீ இல்ல நாந்தான் தப்பு பண்ணிட்டேனு நினைக்குறேன், ரொம்ப அவசரப்படுறேன், காதல சொல்லறதுக்கு முன்னாடியே என்ன உன்கிட்ட முழுசா கொடுத்துட்டேன். நாம வேணா தனித்தனியா வேற வேற இடத்துல இருக்கலாம். ஆனா நான் எப்பவோ உன் கூட வாழ ஆரம்பிச்சுட்டேன்.

உனக்கு Hostelல குளிக்க வெந்நீர் கிடையாதுனு தெரிஞ்சதுலேந்து எங்க வீட்டுல நான் Heater use பண்ணுறது கிடையாது, பச்ச தண்ணில குளிக்க கத்துகிட்டேன். Daily அவ்வளவு சில்லுனு தண்ணி என் மேல விழும் போது பரமுனு உன் பேர தான் சொல்லுவேன். அவ்வளவு தூரம் நான் உன் மேல உயிரா இருக்கேன். போன வாரம் கால் தடுக்கி கீழே விழுந்தப்பகூட அப்பானோ அம்மானோ கத்தல, பரமுனு உன் பேர சொல்லி தான் கத்துனேன். நான் பாக்குறது, யோசிக்கிறது, சுவாசிக்கிறது எல்லாமே நீ தான் பரமு.

இனிமே நானே நினைச்சாலும் உன்ன மறக்க முடியாது. எனக்கு மூளை குழம்பினாலும் இல்ல பைத்தியம் புடிச்சு என்ன எனக்கே தெரியாம போனாலும், உன்ன நான் கண்டுபிடிச்சுடுவேன். அப்படி உன் மேல நான் காதலா இருக்கேன், நான் நல்ல சாப்பாடு சாப்பிடும்போதெல்லாம் நீ Hostelல என்ன சாப்பிடுறியோனு நெஞ்சு துடிக்கும், உள்ள எதுவுமே இறங்காது.

இப்படி நான் உருகுறேனே தவிர நீ என்னை எந்த அளவுக்கு ஏத்துகிட்டு இருக்கேனு எனக்கு தெரியாது. நான் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினதும் கிடையாது, ஆனா இப்ப பயமா இருக்கு. வயசுக் கோளாறால நீ என்ன தொட்டுட்டு, கொஞ்ச நாள் கழிச்சு என்ன கைவிட்டுட்டீனா என்ன பண்ணுறது? என் வாழ்க்கைல உன்ன தாண்டி நான் எதுவுமே யோசிக்கிறது இல்ல,

நான் பிறந்து வளர்ந்த வீட்டோட அடையாளமே மாறி போச்சு. இது வரைக்கும் நான் விளையாண்ட இடம், நான் சாய்ஞ்ச மரம் அப்படினு இருந்ததெல்லாம் அன்னிக்கு நீ வந்துட்டு போனப்புறம் நீ தொட்ட பொருள், நீ குடிச்ச டம்பளர், நீ முகம் கழுவின சோப் அப்படினு பேரு வைச்சுட்டேன். அதனால நாளைக்கு பின்னாடி ஏதாவது பிரச்சனைனா என்னால தாங்.."

அவள் வாக்கியத்தை முடிக்குமுன் பரமு அவளை தரதரவென ரோட்டோரம் இருந்த அம்மன் கோவிலுக்கு இழுத்து சென்றான். நெற்றியில் குங்குமம் வைத்தான். அம்மன் கழுத்திலிருந்த தாலி கயிற்றை எடுத்து அவள் கையில் கட்டினான்.

“மத்தவங்களுக்கு இது காப்பு, நமக்கு இது தாலி. ஊர பொறுத்தவரைக்கும் நாம Friends ஆனா எனக்கு எல்லா பிறவிலயும் நீ தான் பொண்டாட்டி. நம்மள யாரலயும் பிரிக்க முடியாது. இன்னும் 2 வருஷம் பொறுத்துக்க, அப்புறம் 18 வயசு முடிஞ்சுரும். அப்ப Register Marriage பண்ணிக்கலாம். அது வரைக்கும் இது ரகசியமா இருக்கட்டும், யாருக்கும் தெரிய வேண்டாம்.”

அதுவரை பிரமித்திருந்த வசந்தி அவன் கால்களில் விழுந்தாள். அவளை தூக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

“ரொம்ப லேட்டாயிடுச்சு, நீ வீட்டுக்கு போ, யாராவது கேட்டா இத காப்புனு சொல்லு. இந்த சாமிக்கும் நமக்கும் தெரிஞ்ச உண்மைய கொஞ்ச நாள் கழிச்சு எல்லாருக்கும் சொல்லிக்கலாம்" என்று வழி அனுப்பி வைத்தான்.

ஆனால் அவர்களுக்கு தெரியாமல் நடந்த அனைத்தையும் ஒரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டிருந்தது.

Please share your thoughts @
https://www.penmai.com/community/threads/படிக்குற-வயசுல-டீன்-ஏஜ்-டைரி-comments.135745/page-3
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.