படிக மருத்துவம்

vijigermany

Well-Known Member
#1
சொர்க்கத்திலிருந்து அனுப்பப்பட்ட இறுகிய தண்ணீர்'' என்றும் "திரவ வடிவ ஒளி'' என்றும் படிகங்கள் குறிப்பிடப்பட்டன. கிரிஸ்டல் என்பது கிரேக்க மொழி வார்த்தை. இதன் பொருள் `பனிக்கட்டி' என்பதாகும். பல நூற்றாண்டுகளாகவே படிகங்களுக்கு நோய்களை குணமாக்கும் சக்தி உண்டு என்ற நம்பிக்கை பரவலாக இருந்து வந்திருக்கிறது. நோய் தீர்க்கும் சக்தி ஒருபுறம் இருக்க அவற்றின் அழகுக்காகவும் படிகங்கள் பயன்படுத்தப்பட்டன.

சிலரது வீடுகளில் தொலைக்காட்சி செட் அருகில் படிகங்களைப் பார்க்கலாம். வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை இவை போக்குகின்றன எனும் நம்பிக்கை நிலவுகிறது. சிலர் இந்த நோக்கத்துக்காக படிகங்களைத் தங்கள் தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்குகிறார்கள்.

படிகம் என்பது ஒருவகை மினரல். மிருதுவான மேல்புறமும், குறிப்பிட்ட சீரான வடிவமும் கொண்டதுஉடலின் சக்தி நிலைகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ முறையாகும். மனித உடலைச் சுற்றியுள்ள சக்தியில் பலவீனம் ஏற்பட்டால் படிகத்திலிருந்து எழும் ஆக்கப்பூர்வமான சக்தி அலைகள், இவற்றை சரிப்படுத்திவிடும் என்பது இந்த மருத்துவர்களின் நம்பிக்கை.

படிக மருத்துவம் என்பது ஒருவகையான அதிர்வுகளை ஏற்படுத்தி குணப்படுத்தும் வைத்தியமுறையாகும். இந்த அதிர்வுகளை உண்டாக்கி நோய்களை குணப்படுத்த படிகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுபோன்ற அதிர்வுகளை உண்டாக்க படிகங்களைச் சுமந்து செல்லலாம். உடலில் அணியலாம். அல்லது அருகில் உள்ள ஓர் இடத்தில் வைத்துக்கொள்ளலாம். சிலசமயம் படிகங்களை சிலமணி நேரங்கள் தண்ணீரில் வைத்திருந்து பிறகு பயன்படுத்துவதும் உண்டு. உடலில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்குவதற்கு படிகங்கள் பெரிதும் பயன்படும் என்கிறார்கள் இந்த மருத்துவமுறையை ஆதரிப்பவர்கள்.

சிலர் எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் வாழ்க்கையை குழப்பிக்கொள்வார்கள். அவர்களுக்கு படிக மருத்துவம் பலனளிக்கும். பூமியின் சக்தியை, நோயாளியின் சக்தியோடு ஒத்திசைவதன்மூலம் படிகங்கள் இந்த சாதனையைச் செய்கின்றன. குறிப்பிட்ட கற்களை அணிந்தால் தோஷம் நீங்கும் என்றெல்லாம் கூறப்படுவது ஒருபுறம் இருக்க, படிக வைத்தியத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

குவார்ட்ஸ் (quartz) படிகக் கற்கள்தான்படிக வைத்தியத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. குவார்ட்ஸ் என்பது மிகவும் கடினமான ஒரு கனிமக் கல்லாகும். வேறு சில வண்ண கற்களும் (Coloured Gem stones) இதற்கு பயன்படுத்தப்படுவது உண்டு. பெரும்பாலும் இந்த கற்கள் மட்டுமே படிக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.


நோயாளியின் தலையிலிருந்து பாதம்வரை முக்கிய இடங்களில் (அதாவது உடலில் `சக்கரங்கள்' உள்ள ஏழு இடங்களில்) படிகக் கற்கள் வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சக்கரத்துக்கும் ஒவ்வொரு வண்ணம் உண்டு. அந்த வண்ணத்திற்குப் பொருந்தும்படியான கற்கள்தான் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கற்களின் வடிவம் எப்படியும் இருக்கலாம்.

பின்னர் மருத்துவர் தன் கைகளை தலையிலிருந்து கால்வரை நகர்த்துவார். இதன்மூலம் பிரபஞ்ச சக்தியை தன் உடலில் பெற்று தன் கையின் மூலம் படிகக்கற்களில் செலுத்த, அந்தக் கற்களில் உண்டாகும் அதிர்வுகள் சக்கரங்களைச் சரி செய்து நோய்களை குணமாக்குகின்றன. சிலசமயம் பூமியிலிருந்து வானத்தை நோக்கி இந்த அதிர்வுகள் பரவினால் உடலுக்கு நல்லது என்று மருத்துவர் கருதினால் நோயாளியின் உடலில் வைக்கப்பட்டிருக்கும் கற்களின் முனைகள் அவரது தலைப்புறமாக வைக்கப்பட்டிருக்கும். வானில் உள்ள சக்தி நோயாளியின் உடலில் பாய வேண்டும் என்று மருத்துவர் கருதினால் படிகக் கற்களின் முனைப்பகுதி கால்களை நோக்கி இருக்கும்.

இந்த வைத்தியமுறையின்போது நோயாளி வசதியாக படுத்துக் கொள்ளலாம். தலையணைகள்கூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த அறை அமைதியானதாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

பிறகு காலில் இருந்து தலை வரை ஒவ்வொரு சக்கரத்தில் உள்ள படிகக் கல்லையும் மருத்துவர் சக்தியூட்டுவார்.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட கல்லை அவர் சக்தியூட்டும்போது நோயாளி அதனால் தனக்கு இடையூறோ, சங்கடமோ ஏற்படுவதாக உணர்ந்தால், அந்தக்கல் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

மருத்துவ முறையின் இறுதியில் உடலைச் சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளை தன் உள்ளங்கைகளின் மூலம் குப்பை அகற்றுவது போன்ற அபிநயத்துடன் மருத்துவர் அகற்றுவார்.

பின்னர் சிறிது நேரம் அந்த படிகக் கற்களோடு நோயாளி இருக்க வைக்கப்படுவார்.

சிலசமயம் படிக வைத்தியத்தின்போது நோயாளி உணர்ச்சிவசப்பட்டு அழுதோ, கத்தியோ தன் மன பாரத்தை இறக்கி வைக்கக்கூடும். இதில் அதிர்ச்சி அடையத் தேவையில்லை. சொல்லப்போனால் இதுவேகூட அந்த மருத்துவமுறையின் வெற்றி எனலாம்.
.
 
#2
ஹாய் விஜி,
படிக மருத்துவம், படிக்க வியப்பாய் இருந்தது. மருத்துவத்தில் நம்பிக்கை தான் முக்கியம் என்ற கருத்தை முன் வைத்தே இது போன்ற பல விதமான மருத்துவங்கள் நம் நாட்டில் பரவி உள்ளன. படிக மருத்துவம் reiki treatment போலவே இருந்தது.
 

Important Announcements!