பட்டத்தை வைத்து ஒரு பாரம்பரியப் புரிதல்

VALLUVAN-BABU

Friends's of Penmai
Joined
Nov 9, 2013
Messages
129
Likes
575
Location
UNIVERSE
#1
பட்டத்தை வைத்து ஒரு பாரம்பரியப் புரிதல்

பட்டம் ஒன்று பறந்தது
பரந்த வானில் பறந்தது
கட்டி வைத்த நூலிலே
கைப்பிடிக்குள் இருந்தது

கைப்பிடிக்குள் இருந்ததால்
காற்றைக்கூட எதிர்த்து
காற்றைக் கூட எதிர்த்ததால்
கர்வம் கொஞ்சம் வந்தது


ஆட்டுவித்தால் ஆடவா
நான் பரந்தவானில் பறக்கிறேன்
மாட்டிவைத்த நூலிலே
வாழும் வாழ்வை வெறுக்கிறேன்


என்று பட்டம் நினைத்தது
இணைப்பு நூலை அறுத்தது


கண்ட கண்ட வழியெல்லாம்
காற்று வாக்கில் அலைந்தது
முள்ளின் மீது வீழ்ந்தது
மூன்று துண்டாய் கிழிந்தது
கல்லில் சென்று புரண்டது
கவலை அங்கே வந்தது


கட்டுப்பட்டு வாழ்வதில்
மனக்கசப்பு வந்து சேர்ந்ததால்
அம்மா அப்பா தாத்தா பாட்டி
ஆசியோடு நாமெல்லாம்
கட்டுப்பட்டு வாழுவோம்
கவலையின்றி ஆடுவோம்
இங்கே இரண்டு தரப்பினருக்கு கருத்து உள்ளது.
பட்டம் - குழந்தைகளைக் குறிக்கிறது
நூல் - நமது இந்தியக் கலாச்சாரங்களும், பாரம்பரியமும்
நூலைப் பிடித்திருப்பவர்கள் - தாய்-தந்தையர் மற்றும் பெரியவர்கள்

பட்டம் - புதிய திருமணமான தம்பதியர்கள்
நூல் - நமது இந்திய கலாச்சாரங்களும், பாரம்பரியமும்
நூலைப் பிடித்திருப்பவர்கள் - திருமணமான தம்பதியரின்
மாமனார்/மாமியார்கள்

நமது கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் உட்பட்டு, பெரியவர்களின் சொற்கேட்டு குழந்தைகள் இருந்தால் தான் அவர்கள் நல்லவர்களாகவும், அவர்கள் மூலம் ஒரு நல்ல சமுதாயமும் அமையும்.
சிறு வயதிலேயே அவர்கள் இந்த கோட்பாட்டுக்குள் வரவில்லையென்றால், பெரியவர்களானதும் சுதந்திரமாகவே இருக்க விரும்புவார்கள். எனவே, சிறுவயதிலேயே (2 அல்லது மூன்று வயதிலேயே) நாம் நம் குழந்தைகளுக்கு இப்பாட்டையும் இதன் அர்த்தத்தையும் புரிய வைக்க வேண்டும். இதற்க்கு பட்டத்தைப் பற்றியும் தெரிய வேண்டும், பட்டம் வீட்டுக் காண்பித்தும் நாம் குழந்தைகளுக்கு ஒரு புரிதலை உருவாக்கவேண்டும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
Re: பட்டத்தை வைத்து ஒரு பாரம்பரியப் புரிதல&#30

very nicely explained sir.... (I used to read your arguments in neeya naana forum..... ) romba, romba thelivaaga, aazhamana karuththugalai azhagaga padhividuveergal.... nani nandru....
 

Ammu abi

Commander's of Penmai
Joined
Oct 10, 2015
Messages
1,347
Likes
2,573
Location
Salem
#5
Re: பட்டத்தை வைத்து ஒரு பாரம்பரியப் புரிதல&#30

Superb sharing sir :)
 

dhanya krishna priyai

Friends's of Penmai
Joined
Oct 19, 2016
Messages
258
Likes
675
Location
Thiruvannamalai
#6
Re: பட்டத்தை வைத்து ஒரு பாரம்பரியப் புரிதல&#30

உண்மை...அருமையான எழுத்துக்கள்:)
 

VALLUVAN-BABU

Friends's of Penmai
Joined
Nov 9, 2013
Messages
129
Likes
575
Location
UNIVERSE
#7
Re: பட்டத்தை வைத்து ஒரு பாரம்பரியப் புரிதல&amp

very nicely explained sir.... (I used to read your arguments in neeya naana forum..... ) romba, romba thelivaaga, aazhamana karuththugalai azhagaga padhividuveergal.... nani nandru....

Many thanks for your appreciation...
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.