பணம் - தொட்டால் நோய் வருமா?

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,359
Location
Puducherry
#1
அனைவரும் விரும்பும் பணத்தில் இத்தனை ஆபத்துகள் உள்ளதா!அன்றாடம் நம் கைகளிலும், சட்டைப் பாக்கெட்டிலும் புழங்கும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் 'நோய் பரப்பும் காரணிகள்" என்று உங்களுக்குத் தெரியுமா?

✋ இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம். ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்? அத்தகைய நாணயங்கள் மூலம் பரவும் நோய்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

✋ மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் ஆனது 'காய்ச்சல், சளியில் தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், ர்1n1இ வுடீஇ இதர பால்வினை நோய்கள்" ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் ஆகும்.

✋ இயற்கையாகவே துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்கள் மூலம் நோய்க்கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.

✋ இறைச்சி கடையில் பரிமாற்றம் செய்யப்படும் பணம் இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டீரியாக்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்தப்படுகின்றன.

✋ திடீரென்று ஏற்படும் காய்ச்சல், வாந்தி, அலர்ஜி, சோர்வு, வயிற்றுக்கோளாறு போன்ற நோய்களுக்கு ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் ஒரு காரணமாக இருக்கலாம்.

நாம் தவிர்க்க வேண்டியவை :

எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.

பணத்தை கையில் தொட்டால், சுத்தமாக கை கழுவிய பிறகே உணவுப்பொருட்களை தொட வேண்டும்.

பணத்தை குழந்தைகளிடம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

திருமணம் உள்ளிட்ட வீட்டு விஷேசங்களில், பணத்தை கையாளும் போதும், பத்திரப்படுத்தும் போதும் கவனம் அவசியம்.

சளி, தும்மல், இருமல் போன்ற எளிதில் பரவும் நோய் கொண்டவர்கள், பணத்தை கையாளும் போது மிக கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில், இந்நோய்கள் ரூபாய் நோட்டின் மூலம் எளிதில் பரவும்.

பணம் மூலம் பரவும் பாக்டீரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம்!

இனியாவது விழிப்புணர்வு பெற்று நம்மை நாம் பாதுகாப்போம்!

வரும் சந்ததியினருக்கு நோய் பரவாமல் தடுப்போம்!
 

Chill Queen

Friends's of Penmai
Joined
Nov 13, 2011
Messages
209
Likes
569
Location
Canada
#3
P.M. Mr. Modi - "இதுக்குதான் நான் சொல்றேன் டெபிட்/ கிரெடிட் கார்டு போதும், கையில (கறுப்பு) பணம் நோ "
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,810
Likes
141,551
Location
Madras @ சென்னை
#4
​Tfs friend.

:thumbsup​
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,359
Location
Puducherry
#5

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.