பணியிடமும் வீடும் இரண்டு கண்கள்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பணியிடமும் வீடும் இரண்டு கண்கள்!
வேலையையும் வீட்டையும் சம முக்கியத்துவத்துடன் கையாள வேண்டும். இரண்டையும் ஒன்றை ஒன்று பாதிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. அன்றைய வேலையை அன்றைகே முடித்துவிட்டால் தேவையில்லாத டென்ஷன், பதற்றம் ஏற்படாது. வேலையைத் தள்ளிப்போடும்போது, ஏதாவது ஒரு சூழ்நிலை நம்மை சரிவர இயங்க விடாமல் தடை செய்துவிடும்.


 

subamithra

Citizen's of Penmai
Joined
Nov 5, 2014
Messages
700
Likes
3,368
Location
VIRUDHUNAGAR
#5
பிரெண்ட்ஸ் நானும் இங்கே இதை பத்தி பேசனும்னு நினைக்குறேன் .

முதல்ல காலேஜ்ல ஒரு ppt ரெடி பண்ணி ஆகனும்னு டாபிக் தேடுனப்பதான் " work life balance " ன்னு ஒரு டாபிக் இருக்குறதே தெரியும் . என்ன எதுன்னு இதை பத்தி தேடுனப்பதான் இது உலகத்துல எல்லா மக்களும் சந்திக்குற ஒரு பிரச்சனைன்னு தெரிய வந்தது .

நான் இன்னும் வேலைக்கு போகல , ஸோ எனக்கு அனுபவம் கிடையாது , இருந்தாலும் கல்லூரிக்கும் வாழ்க்கைக்கும் நடுவிலையே நிறைய டென்ஷன் இருக்குறப்ப வேலைக்கும் வாழ்க்கைக்கும் இதை விட அதிகமா இருக்கும்னு தெரிஞ்சுகிட்டேன் .

இன்றைய கால கட்டத்துல பெண்களும் வேலைக்கு போறாங்க . அவங்க வீட்டையும் பார்த்துக்கனும் அதே நேரம் வேலையும் பார்க்கனும் . அதே மாதிரி தான் ஆண்களும் வேலைக்கு போனாலும் அவங்களும் குடும்பத்தை பார்த்துக்கனும் .


வேலைக்கும் வாழ்க்கைக்கும் நடுவுல ஒரு பாலன்ஸ் இல்லேனா ரெண்டுல நம்மளால எதையுமே காப்பாத்தாம போக சான்ஸ் இருக்கு .

வேலைகள் வாழ்க்கைக்கு தேவைதான் . ஆனா வாழ்க்கை முழுக்க கூட இருக்கப் போறது வேலைகள் இல்ல குடும்பம் தான் .

குடும்பத்துக்காக வேலை பார்த்துட்டு கடைசில அந்த குடும்பத்தையே கவனிக்காம விட்ட வேலை பார்க்குறது அர்த்தமே இல்ல . எவ்வளவு சம்பாதிச்சாலும் பிரயோஜனமில்லை .
 
Last edited:

subamithra

Citizen's of Penmai
Joined
Nov 5, 2014
Messages
700
Likes
3,368
Location
VIRUDHUNAGAR
#6


இதை எப்பிடி பாலன்ஸ் பண்ணுறதுன்னு தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப அவசியம் .சிலருக்கு இப்பிடி இருக்கலாம்


சிலருக்கு இப்பிடி இருக்கலாம்
ஆனா
இப்பிடி இருந்தாதான் நல்லது .


 

Attachments

subamithra

Citizen's of Penmai
Joined
Nov 5, 2014
Messages
700
Likes
3,368
Location
VIRUDHUNAGAR
#7

இன்னைக்கு இத்தனை கை ஒரு மனுஷனுக்கு இருந்தாலும் பத்தாது . ஒவ்வொரு கையும் ஒவ்வொரு வேலை செய்யும் .

ஆனா உண்மைல இத்தனை கை இல்லையே ....

ரெண்டு கை தான் .

அதை வச்சுதான் அவங்க வேலையும் பார்க்கனும் , குழந்தையும் கவனிக்கனும் , அவங்களோட தேவைகளை அவங்க தான் செய்யனும் ..... ஒரே சமயத்துல , நினைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு . ஆனா இது உண்மையும் கூட .

இதுல நம்ம எதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறோம் ?
" WORK " OR " FAMILY "​
 

Attachments

subamithra

Citizen's of Penmai
Joined
Nov 5, 2014
Messages
700
Likes
3,368
Location
VIRUDHUNAGAR
#8
வேலை செய்யுற இடத்துலையும் உங்களுக்கு பொறுப்புகள் இருக்கும் . குடும்பத்துலயும் உங்களுக்கு பொறுப்புகள் இருக்கும் . ரெண்டையுமே நீங்க சரியா செய்ய என்னனென்ன பண்ணனுமோ அதை பண்ணுங்க . ஏதாவது ஒரு பொறுப்புகளை நம்ம சரியா செய்ய முடியாம போகுறப்ப பிரச்சனைகள் இன்னும் அதிகமாகுது .


இது அடுத்த டாபிக் " ஸ்ட்ரெஸ் "

எல்லா இடத்துலையும் ஸ்ட்ரெஸ் இருக்கத்தான் செய்யும் .

ஒரு சில நேரம் மத்தவங்களை பார்க்கும் போதோ , அல்லது நம்ம வேலைய விட அந்த வேலை ரொம்ப ஈஸி ன்னு தோணும் . உண்மை என்னனு அந்த வேலைக்கு போய் பார்த்தாதான் தெரியும் .


" ஸ்ட்ரெஸ் " இதை நம்ம வாழ்க்கைக்குள்ள வர விட்டோம்ன்னா அவ்வளவுதான் , நம்மளால செய்ய முடியுற வேலைய கூட செய்ய முடியாம போயிரும் .
கடைசில சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோவம் வரும் . ஏன் கோவப் படுறோம்னே தெரியாது எதை பார்த்தாலும் , யாரை பார்த்தாலும் எரிச்சலா வரும் . கோவத்தை எது மேலடா காட்டலாம் ன்னு தோணும் . சில சமயம் அந்த கோவம் தப்பே செய்யாதவங்க மேலே கூட திரும்பும் . அதாவது வீட்டுல கோவம் இருந்தா வேலை செய்யுற இடத்துலையும் , வேலைல இருக்குற டென்ஷனை வீட்டுலயும் காட்ட வேண்டி வரும் . அமைதியா யோசிச்சு பார்த்தா தீர்வு கிடைக்கும் ஆனா அப்ப இருக்குற சூழ்நிலை நம்மள யோசிக்க விடாம பண்ணலாம் .


இதனால பாதிக்கப்படுறது உங்களோட உடல்நலம் . உங்களுக்காவது உடல் நலம் தான் ஆனா உங்க மேல உண்மையான அன்பு வச்சுருக்குறவங்களோட மனசு எவ்வளவு கஷ்டப் படும்னு கொஞ்சம் யோசிச்சு பார்த்தா நம்ம கோவப் படமாட்டோம் .
 

Attachments

Last edited:

subamithra

Citizen's of Penmai
Joined
Nov 5, 2014
Messages
700
Likes
3,368
Location
VIRUDHUNAGAR
#9
நல்லா வேலை பார்க்க வேண்டியதுதான் இல்லேன்னு சொல்லல . அதே நேரத்துல உங்க தூக்கத்தை கெடுத்து பண்ண வேண்டாமே . உடம்புக்கும் நல்லது இல்ல . அப்புறம் தூங்க வேண்டிய நேரத்துல தூங்கலேனா வேலை செய்யுற நேரம் தூக்கம் வரும் .
உடல்நலம் , மனநலம் ரெண்டுமே நல்லா இருந்தாதான் வேலை நல்லா பார்த்து குடும்ப நலத்தையும் பார்த்துக்க முடியும் .
 

Attachments

subamithra

Citizen's of Penmai
Joined
Nov 5, 2014
Messages
700
Likes
3,368
Location
VIRUDHUNAGAR
#10
குழந்தைகளுக்காக வேலைக்கு போய் சம்பாதிக்குறீங்க . ஆனா குழந்தைகளோட அன்பை சம்பாதிக்க தெரியல .....உங்களுக்கு அவங்க எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி அவங்களுக்கும் நீங்க முக்கியம் . அவங்க உங்க கூட இருக்க விரும்புறப்ப நீங்க இல்லாம போனா , ஒரு கால கட்டத்துல அவங்களே உங்கள விட்டு விலக சான்ஸ் இருக்கு .இப்பிடியே பேசிட்டே போனா அடுத்த டாபிக்கா இன்னும் நிறைய உருவாகும் . உங்களோட ஸ்ட்ரெஸ் உங்களோடவே முடியட்டும் , அதையும் நீங்க வர விடாதீங்க , அப்பறம் நீங்க உங்க குடும்பத்துகிட்ட இருந்து விலகி அமைதியா எப்பவுமே டென்ஷனா இருப்பீங்க . இத்தனை வருஷத்துல எத்தனையோ அனுபவம் அதெல்லாம் கடந்து வந்துருபீங்க , உங்களுக்கே ஸ்ட்ரெஸ் ஒரு சவாலா இருக்கும் போது குழந்தைங்க இப்பதான் கொஞ்ச கொஞ்சமா கத்துக்க போறாங்க உங்களோட ஸ்ட்ரெஸ் ன்னு நீங்க விலகி அது அவங்களுக்கு ஒரு ஸ்ட்ரெஸ் ஆ மாறாம பார்த்துகோங்க .
 

Attachments

Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.