பதற்றக் கோளாறுகள் (Anxiety Disorders)

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பதற்றக் கோளாறுகள் (Anxiety Disorders)
குழந்தைகள் பரீட்சையின் போதோ, வீடு/பள்ளி இடமாற்றத்தின் போதோ, பழக்கமில்லாத சூழ்நிலையின் போதோ பதற்றப்படுவது இயல்பான ஒன்றே. இச்சூழ்நிலையில், சில எதிர்மறையான கேள்விகள்/கவலைகள் (எ.டு: என்ன நடக்குமோ?,

ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ?) எழுவது சகஜம்தான். அது ஒருவரை தயார்நிலையில் வைக்கவும், சவால்களை சமாளிக்க உந்துதலாகவும் அமையும். அதுவே, எல்லா விஷயத்துக்கும் காரணமே இல்லாமல் தொடா்ந்து பதற்றப்பட்டாலோ, ஒரு விஷயத்துக்கு அளவுக்குஅதிகமாக கவலைப்பட்டாலோ, அது பதற்றப்படுபவரின்நிம்மதியையும் சந்தோஷத்தையும் குலைத்து விடும்.

பதற்றம் என்பது ஒருவித தெளிவற்ற, அச்சம் கலந்த, விரும்பத்தகாத ஒரு மனநிலை. கவலைதான் இதனின்முக்கிய அம்சம். ஏதோ கெடுதல் ஏற்படப் போகிறது என்ற பயமும், ஆபத்திலேயே இருப்பது போன்ற நிம்மதியற்ற உணர்வும் கலந்திருக்கும். பதற்றக் கோளாறுகளின் அறிகுறிகள் திடீரென்றும் ஏற்படலாம்... கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி, நீடிக்கவும் செய்யலாம். ஏன் இப்படி வித்தியாசமாக உணர்கிறோம், கவலைப்படுகிறோம் எனக் குழந்தைகளுக்கு காரணம் கூட தெரியாது.

பதற்றம் ஒரு மனநல கோளாறாக ஆவது எப்போது? காரணமே இல்லாமலும் மேலும் அளவுக்கு அதிகமாகவும், அடிக்கடியும், குழந்தையின் அன்றாட வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியை பதற்றமானது பாதிக்கும் போது, அது ஒரு மனநலக் கோளாறு ஆகிறது. இது மனநலப் பிரச்னைதானா என்பதை புரிந்து கொள்ள, குழந்தையின் வயதையும்மனதில் கொள்ள வேண்டும்.

சிறுகுழந்தையாக இருக்கும்போது, தனிமைப்படுத்தும் போது பதற்றம் அடைவது இயல்புதான். அதுவே குழந்தைப் பருவத்தைத் தாண்டியப் பின்னரும், தனியே விட்டு சென்றால், அளவுக்கு அதிகமாக பதற்றமடைவது, மனநலப் பிரச்னையின் அறிகுறியே. பதற்றம் ஏற்படுத்தும் எல்லா சூழ்நிலையையும் குழந்தை தவிர்க்க நேரிட்டால், அதை உளவியல் ஆலோசகரின் கவனத்துக்கு உடனே கொண்டுவர வேண்டும்.

விளைவுகள் பதற்றக் கோளாறினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படும் அவஸ்தை மிக அதிகம். இது குழந்தையின் படிப்பு, சமூக வாழ்க்கை போன்றவற்றை பாதிப்பதோடு, குழந்தையின் நிம்மதி, சந்தோஷம், தூக்கம், உணவுப் பழக்கம், ஆரோக்கியம் போன்றவற்றையும்பெரிதும் பாதிக்கிறது. இவர்களின்ஆளுமையும் பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கையற்றவர்களாக உருவாவதற்குக் காரணமாகிறது. குழந்தைகள் பொதுவாக இது குறித்து வெளியே பேசுவதற்கே தயக்கம் காட்டுவார்கள். தம்மை பலவீனமானவர்கள் / பயந்தாங்கொள்ளி என பிறர் கருதிவிடுவார்கள், பெற்றோர் தங்கள் உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றெல்லாம் கருதி, தனிமையாக உணர்வார்கள்.

அதிக பதற்றம் குழந்தையின் செயல்பாடுகளைப் பாதிப்பதால், பரீட்சையிலும் அவர்களின் செயல்திறன் குறையும். பெற்றோருக்கும் இது மனஉளைச்சலை ஏற்படுத்தி விடும். வளர வளர, வேறு பல மனநலப் பிரச்னைகளையும் இது ஏற்படுத்தி விடக் கூடும். பதற்றக் கோளாறும் பிற மனநலப் பிரச்னைகளும் பொதுவாக, பதற்ற வகைக் கோளாறுடன், மனச்சோர்வு (Depression), ஏ.டி.எச்.டி (ADHD) போன்ற கோளாறுகளும் சேர்ந்து காணப்படலாம். ஒரு குழந்தைக்கு ஒன்றுக்கும்மேற்பட்ட பதற்ற வகை கோளாறுகள் இருக்கும் வாய்ப்பும் உள்ளது. இது மிகவும் பரவலாக காணப்படும் ஒரு மனநலக் கோளாறே.

குழந்தைகளைப் பாதிக்கும் முக்கிய பதற்ற வகைகோளாறுகள் இதில் ஒவ்வொரு கோளாறும் ஒரு குறிப்பிட்ட வயதில்ஆரம்பிக்கும். பொதுவாக 7 வயதுக்கு மேல்தான் பதற்றக் கோளாறுகள் ஒருவரைப் பாதிக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லாவித பதற்றக் கோளாறுகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இவை எல்லாமே, குழந்தையின் தினசரி வாழ்க்கை மற்றும் சந்தோஷத்தை பாதிக்கும், காரணமில்லா பயம் / கவலையே.

1. பிரிவு குறித்த பதற்றக் கோளாறு (Separation Anxiety Disorder) குழந்தை வீட்டை விட்டோ, நெருக்கமாக உள்ள நபரிடமிருந்து பிரியும் போதோ, வெகுவாக பதற்றப்படுவதுதான் பிரிவு குறித்த பதற்றக் கோளாறின் முக்கிய அம்சம். பொதுவாக, 5-7 மற்றும் 11-14 வயதுள்ள குழந்தைகளிடத்தில் இது அதிகம் காணப்படுகிறது. மூன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள்குழந்தைகளிடத்தில் அதிகமாகவோமற்றும் தொடர்ந்தோ/அடிக்கடியோ காணப்பட்டால், அது பிரிவு குறித்த
பதற்றக் கோளாறாக இருக்கலாம்.

அறிகுறிகள்

1.பிரிவு ஏற்படும் போதோ, பிரியப் போகிறோம் என்பதை அறியும் போதோ மிகுந்த கவலைக்குள்ளாவது.

2.நெருக்கமானவரை பிரிந்து விடுவோமோ, அவர்களுக்குஏதாவது நேர்ந்து விடுமோ என கவலைப்படுவது.

3.தொலைந்து விடுவோமோ / யாரேனும் கடத்தி விடுவதால் பிரிவு ஏற்பட்டு விடுமோ எனக் கவலை கொள்வது.

4.பிரிவுக்குப் பயந்து பள்ளிக்கு செல்லத் தயங்குவது / மறுப்பது.

5.வீட்டிலோ / வேறு எங்காவதோ, நெருக்கமானவர் இன்றி தனியே இருக்கப் பயப்படுவது.

6.நெருக்கமானவர் இன்றி தூங்கத் தயங்குவது / மறுப்பது அல்லது வேறு எங்கும் தங்க மறுப்பது.

7.பிரிவு குறித்த கெட்ட கனவு.

8.பிரிவு ஏற்படக் கூடும் என அறியும்போது தோன்றும் உடல் ரீதியான அறிகுறிகள் (தலைவலி, வயிற்று வலி).

இந்த அறிகுறிகள் 4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து காணப்பட்டுகுழந்தையின் படிப்பு மற்றும் தினசரி செயல்பாட்டைப் பாதித்தால், அது பிரிவு குறித்த பதற்றக் கோளாறாக இருக்கலாம்.

2. பொதுக் கவலைக் கோளாறு (Generalized Anxiety Disorder) இந்தக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எல்லாவற்றைப் பற்றியும் அதிகமாக வருத்தப்படுவார்கள். அவர்கள் வருத்தப்படும் விஷயம் பள்ளியைப் பற்றி இருக்கலாம். குடும்ப நபர்களின் ஆரோக்கியம் குறித்து இருக்கலாம். பொதுவாக எதிர்காலத்தைக் குறித்தும் இருக்கலாம். ‘ஏதேனும் கெட்டது நடந்து விடுமோ’ என்ற பயத்தினுடனே எப்போதும் இருப்பார்கள். இதனால் உடல்ரீதியான அறிகுறிகளான தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, தூக்கமின்மை, சோர்வும் காணப்படும். குழந்தைக்கு 8 வயதான பின்னரே இந்தக் கோளாறு தாக்குகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் திறன் / சுயமரியாதையை சோதிக்கும் தருணங்களில் அதிகம்பதற்றப்படுவார்கள். பள்ளி சம்பந்தப்பட்ட விஷயங்களான, பரீட்சை, நண்பர்களிடம் பழகுதல், வகுப்பில் எல்லோர் முன் பேச வேண்டிய சூழல் போன்றவை இவர்களுக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும். இதனாலேயே, பள்ளியில் மனஉளைச்சல் (Stress) அதிகமாகும் போது, சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதையே தவிர்த்து விடவும் கூடும் (School Refusal). குழந்தைகளால், அவர்களின் கவலையைக் கட்டுப்படுத்தவே முடியாமல் இருக்கும்.

இதனால், இந்தப் பயம் அவர்களுக்கு ஒரு பெரும் சுமையாகவே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டகுழந்தைகள், பதற்றத்தைக் குறைக்க, பொதுவாக சக குழந்தைகளை நாடி, அவர்களை சார்ந்து வாழக் கூடும். மேலும், எந்த வேலை செய்தாலும் அதை மிகச் சரியாக செய்ய வேண்டும் என நினைப்பார்கள். எப்போதும் மற்றவரின் ஒப்புதல் இவர்களுக்கு மிகவும் தேவைப்படும். இப்படி, பயமும், கவலையும், அதைச் சார்ந்த உடல் ரீதியான அறிகுறிகளும் 6 மாதங்களேனும் தொடர்ந்து காணப்பட்டால் அது பொதுக் கவலை கோளாறாக இருக்கலாம்.

3. சமூக அச்சம்(Social Anxiety Disorder) குழந்தைகளைக் காட்டிலும்,பொதுவாக டீன் ஏஜ் வயதினரை சமூக அச்சக் கோளாறு அதிகமாக பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவரின் பயம் முழுக்க முழுக்க, சமூக சூழ்நிலைகளைக் குறித்தே இருக்கும். பிறர் என்ன சொல்லி விடுவார்களோ, தன்னை அசிங்கப்படுத்தி விடுவார்களோ என்ற பயத்திலேயே ஆழ்ந்திருப்பார்கள்.

பெரும்பாலும் இவர்களுக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்கள். பள்ளி செல்வது, வகுப்பில் பிறரிடம் பேச வேண்டிய சூழல், புது நபர்கள் வீட்டுக்கு வருதல், ஏதேனும் குடும்ப விழாக்கள் போன்ற சூழ்நிலைகளில் இவர்களுக்கு பதற்றம் அதிகமாகி வியர்த்துக் கொட்டுதல், வெட்கப்படுதல் / தசை இறுக்கமாவது போன்ற அறிகுறிகள் தோன்றும்.

பொதுவாக இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் நிலையை வெளியே காட்டிக் கொள்ளாமல் அறிகுறியைக் கட்டுப்படுத்தப் பார்ப்பார்கள். அவர்கள் பயப்படும் சூழ்நிலையை தவிர்த்துவிடுவார்கள். தன்னை யாரேனும் தவறாக விமர்சித்தாலோ / கிண்டல் செய்தாலோ, தன்னை தற்காத்துக் கொள்ளும்வண்ணம் எதிர்த்து பேசத் தெரியாமல்தர்மசங்கடப்படுவார்கள். அதையே நினைத்து நினைத்து வேதனையும் அடைவார்கள்.

பொதுவாக இவர்கள் ஓர் இடத்துக்குச் சென்றால், அங்கு உள்ளவர்கள் எல்லோரும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது போல தன்னம்பிக்கை இல்லாமல் உணர்வார்கள். குடும்ப நபர் களிடம் இவர்கள் சாதாரணமாக, ஆரோக்கியமாக பழகுவார்கள். டீன் ஏஜில் சமூக அச்சக் கோளாறு உள்ளவர்கள், பெரியவர்கள் ஆனதும் பொது கவலைக் கோளாறுமற்றும் மனச்சோர்வுக்கு (Depression) ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

தினசரி பலரை சந்திக்க வேண்டியிருக்கும் தேவையால், இவர்களின் தினசரி வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பொதுவாக இந்தக் கோளாறு உள்ளவர்கள், பெரும்பாலும், 15-20 வருடங்கள் கஷ்டப்பட்ட பிறகே சிகிச்சைப் பெற வருவது வழக்கம். குழந்தை மற்றும் டீன் ஏஜருக்கு ஏற்படும் பிற வகை பதற்றக் கோளாறுகள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

டீன் ஏஜில் சமூக அச்சக் கோளாறுஉள்ளவா–்கள்,பெரியவர்கள் ஆனதும் பொது கவலைக் கோளாறு மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

பதற்றக் கோளாறின் பொதுவான அறிகுறிகள்

பதற்ற உணர்வு மனதை அலைக் கழிப்பது மட்டுமில்லாமல், உடல் ரீதியாகவும் உணரப்படுகிறது.

1.பதற்றம், நடுக்கம்
2.டென்ஷன் / அமைதியற்றநிலை
3.சோர்வாக உணா்தல்
4.தலைச்சுற்று / மயக்க உணா்வு
5.அடிக்கடி சிறுநீா் கழித்தல்
6.இதயப் படபடப்பு
7.மூச்சுத்திணறல்
8.வியா்த்துக் கொட்டுதல்
9.எரிச்சல்
10.கவலை மற்றும் பயம்
11.தூக்கமின்மை
12.கவனம் செலுத்துவதில்/ஒருமுகப்படுத்துதலில் சிக்கல்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் பதற்றக் கோளாறுகளில் பல வகைகள் உள்ளன. பிரிவு குறித்த பதற்றக் கோளாறு, பொதுக் கவலைக் கோளாறு, சமூக அச்சம் , இன்னும் இரு வகைகள்

4. தெரிவு மொழியற்ற நிலை (Selective Mutism)

பொதுவாக நன்றாக பேச தெரிந்த குழந்தைகள், பரிச்சயமற்ற சூழ்நிலைகளில் யாரிடமும் பேசாமலிருக்கக்கூடும். இது ஒரு மாதத்துக்கு மேலும் நீடித்து பள்ளிப்
படிப்பையும் பாதித்தால், அது தெரிவு மொழியற்ற நிலையாக இருக்கலாம். இவர்கள் பேசுவது குறித்த கவலை மற்றும் பயத்தினால், பதற்றம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளில், பேசுவதைத் தவிர்த்து விடுவார்கள். சில குழந்தைகள் பெற்றோர் தவிர பிறரிடத்தில் அறவே பேச மாட்டார்கள்.

பேச வேண்டிய கட்டாயமிருக்கும் சந்தர்ப்பத்தில், தலையை கீழே குனிந்து, வெட்கப்பட்டு, அந்த இடத்திலிருந்து செல்ல எத்தனிப்பார்கள். வேறு வழியின்றி பேச வேண்டுமெனில், சைகையினால் மட்டுமே பேசுவார்கள் / மெல்ல கிசுகிசுப்பார்கள்.பள்ளி செல்ல ஆரம்பிக்கும் பருவத்தில் குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் ஆரம்பிக்கலாம். பொதுவாக வகுப்பறையில் ஆசிரியர்களால் இந்த மனநலப் பிரச்னை கண்டுபிடிக்கப்படுகிறது. சில நேரங்களில், இது தானாகவே சரியாகிவிடக் கூடும். பல வேளைகளில், வளர்ந்த பின்னரும் அறிகுறிகள் நீடித்து, அது சமூக பதற்றக் கோளாறாக உருவெடுக்கும் வாய்ப்பும் அதிகமாகிறது.

5. பீதிக் கோளாறு (Panic Disorder)

பதற்றக் கோளாறுகளில் தீவிரமான ஒரு வகைதான் பீதிக் கோளாறு. குழந்தைகளைக் காட்டிலும் டீன் ஏஜ் வயதினரையே (15-19), இது பெரும்பாலும் தாக்குகிறது. இதன் அறிகுறிகள் கிட்டத்தட்ட நெஞ்சுவலியைப் போலவே உணரப்படும். பேனிக் தாக்கத்தை (Panic Attack) தவிர்த்து, பிற நேரங்களில் பெரும்பாலும் இவர்கள் பதற்றமாக இருக்க மாட்டார்கள். இந்த தாக்குதல் சில நொடியிலிருந்து பல மணிநேரம் கூட நீடிக்கக்கூடும்.

வாழ்க்கையில் ஏதேனும் மன உளைச்சல் தரும் சம்பவம் நேர்ந்தால், அது பேனிக் தாக்குதலை ஏற்படுத்தக்கூடும். பல நேரங்களில் காரணத்துடனும் சில நேரங்களில் எவ்வித காரணங்கள் இன்றியும் இது ஒருவரைத் தாக்கலாம். இதன் அறிகுறிகள் பொதுக் கவலைக் கோளாறைப் போலவே இருப்பினும், அதைக் காட்டிலும் மிகத் தீவிரமாகவும், திடீரெனவும், எதிர்பாராத வேளைகளிலும் பாதிக்கப்பட்டவரைத் தாக்கும்.

அறிகுறிகள்?

1.மூச்சு விடுவதில் சிரமம்
2.அதிக இதய துடிப்பு
3.நடுக்கம் / மயக்க நிலை
4.தன் கட்டுப்பாட்டில் இல்லாதது போன்ற ஓர் உணர்வு
5.இறந்து போய் விடுவோம் பைத்தியம் பிடித்துவிட்டது என்கிற உணர்வு.

இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் / டீன் ஏஜ் குழந்தைகள் பேனிக் தாக்குதல் வந்துவிடுமோ என்ற பயத்திலேயே சில நேரங்களில் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து விடுவார்கள். சிலர் வீட்டை விட்டு வெளியே சென்றால் ஏதேனும் தங்களுக்கு ஆகி விடுமென வெளியே செல்வதையும் தவிர்த்து விடுவார்கள் (Agoraphobia). குறைந்தது ஒரு மாத காலமாக, அடிக்கடி எதிர்பாராத பேனிக் தாக்கம் ஏற்படுவதோடு, ‘திரும்பவும் பேனிக் தாக்குதல் வந்துவிடுமோ, அப்படி வந்தால் என்ன ஆகுமோ’ என்ற பயம் தொடர்ந்தால், அது பீதிக் கோளாறாக இருக்கலாம்.

பல நேரங்களில் பேனிக் தாக்குதலை, நெஞ்சு வலியென தவறாக புரிந்து கொள்வதும் உண்டு. பல மருத்துவர்களிடம் சென்று பல டெஸ்ட்டுகள் எடுத்து உடலுக்கு எதுவுமில்லை எனத் தெரிந்து கொண்ட பின்னரே, இது ஒரு மனநலப் பிரச்னை என்பதை உணர்கிறார்கள். எதையோ பார்த்து குழந்தை பயந்து விட்டது என எண்ணி மந்திரிப்பவர்களும் / கோயில் கோயிலாகச் செல்பவர்களும் உண்டு.

காரணி?

பல விஷயங்கள் பதற்றக் கோளாறு ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றன.

1. மரபணு
2. மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்
3. மனஉளைச்சல் ஏற்படுத்தும் வாழ்க்கை சூழல்...

பிரியமானவர்களின் மறைவு
பெற்றோரின் விவாகரத்து
புது இடம் பெயருதல்
 சிறுவயதில் உடல் ரீதியாகவோ / உணர்வு ரீதியாகவோ / பாலியல் ரீதியாகவோ துன்புறுத்தப்படுதல் (Child Abuse)
ஆபத்தான சூழ்நிலையில் வளர்தல்

4.கற்றுக்கொண்ட செயல்பாடுகள் (எ-டு: பயந்த சுபாவமுள்ள பெற்றோர்).
குடும்பத்தில் யாரேனும் பதற்றப்படுகிறவராக இருப்பின், குழந்தை அவரைப் போலவே பயப்பட கற்றுக் கொள்கிறது. பெற்றோரின் வளர்ப்பு முறையும் ஒரு காரணமாக அமைகிறது. ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்ப்பது, தங்கள் எதிர்பார்ப்பைக் குழந்தை மீது திணித்து, கண்டிப்புடன் வளர்ப்பது, ‘இந்த உலகமே ஆபத்தானது... உஷாராக இருக்க வேண்டும்’ என பயமுறுத்தி வளர்ப்பது போன்றவற்றாலும் குழந்தைகளுக்குப் பதற்றக் கோளாறு ஏற்படலாம்.

சிகிச்சை?

குழந்தைக்கு மேலே பார்த்த அறிகுறிகளை வைத்து ஏதேனும் பதற்ற வகைக் கோளாறு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால் உடனடியாக தேர்ச்சி பெற்ற உளவியல் நிபுணரிடத்தில் (Clinical Psychologist) அழைத்துச் சென்று காட்டுவது அவசியம். நல்ல வேளையாக, இவ்விதப் பிரச்னைகளுக்கு உளவியலில் தீர்வுகள் உண்டு. பொதுவாக, 5-10 ஆண்டுகள் இந்தப் பிரச்னையால் அவதியுற்ற பின்பே சிகிச்சை பெற வருகிறார்கள். இது வெளிப்படையாக பிறருக்குத் தெரியாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

உளவியல் நிபுணர் சில ஆய்வுகளுக்குப் பின்னர் எந்த வகை பதற்றக் கோளாறு என்பதை அறிந்து குழந்தைக்கு ஏற்ற சிகிச்சையை வடிவமைத்து, உதவி செய்வார். அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை (Cognitive Behavior Therapy), அமைதிப்படுத்தும் சிகிச்சை (Relaxation Therapy) போன்ற சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன. பிரச்னையை சமாளிக்கும் திறன்களைக் கற்றுக் கொடுத்து, உதவியும் ஆலோசனையும் வழங்கப்படுகின்றன. இதனால், பதற்றம் ஏற்படுத்தும் சூழ்நிலையில் வேறு விதமாக யோசிக்கவும் செயல்படவும் இவர்கள் கற்றுக் கொண்டு, பதற்றத்தைச் சமாளிக்க தெரிந்து கொள்வார்கள்.

பெற்றோரின் கவனத்துக்கு...பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பதற்றக் கோளாறு இருப்பது தெரிய வந்தால், அவர்களின் நிலைமைையப் புரிந்து கொண்டு, உதவியாக இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகளிடம் வெளிப்படையாக அவர்களின் அறிகுறிகள் குறித்துப் பேசி, எப்படி அது அவர்களின் தினசரி வாழ்வைப் பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

தங்கள் குழந்தை சிகிச்சை மேற்கொண்டு, சமாளிக்க கற்றுக் கொள்ளும் வரை, பெற்றோர் பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது மிகவும் நல்லது. குழந்தையை ஊக்கு வித்து, தன்னம்பிக்கை அளிக்க வேண்டும். இதன் மூலம், விரைவிலேயே, குழந்தை தன்னுடைய பதற்றத்தைச் சமாளித்து, எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடனும் அமைதியாகவும் எதிர்நோக்க கற்றுக் கொள்ளும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மனசுழற்சி மனநோய் (Obsessive-Compulsive Disorder) குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.இவர்கள் பேசுவது குறித்த கவலை மற்றும் பயத்தினால், பதற்றம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளில், பேசுவதைத் தவிர்த்து விடுவார்கள். பெற்றோர் தவிர யாரிடமும் அறவே பேச மாட்டார்கள்.

கலாவின் கவலைகள்

கலா... வயது 9. சிறகடித்துப் பறக்க வேண்டிய வயது. அவளோ எப்போதும் எதையேனும் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தாள். சரியான நேரத்துக்குப் போகாமல் பள்ளிப் பேருந்தைத் தவற விட்டு விடுவோமோ என தினமும் பயந்தாள். இத்தனைக்கும் கடந்த ஒரு வருடத்தில் அவள் பேருந்தைத் தவற விட்டதே இல்லை. மதிய வேளையில் தனக்குப் பிடித்த உணவு கிடைக்காமல் போய்விடுமோ என வருந்தினாள். ஆசிரியர் திடீரென தனக்கு தெரியாத கேள்வியைக் கேட்டு, வகுப்பில் அவமானமாகிவிடுமோ என பயந்தாள். இரவில், வீட்டுப்பாடம் சரியாக செய்ய வேண்டுமே என கவலைப்பட்டாள். இப்படி எடுத்த எல்லா விஷயத்துக்குமே கலா வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தாள். தனக்கு எப்போதும் கெட்டதுதான் நடக்கும் எனவும் நம்பினாள்.

கலாவின் பெற்றோர், வளரும் பருவத்தில் இதெல்லாம் சகஜம் என கண்டுகொள்ளவில்லை. கலாவின் ஆசிரியர்தான் பெற்றோரிடம், ‘பதற்றத்தினால்தான் கலா நன்கு படித்தும் மதிப்பெண் வாங்க முடியவில்லை... நண்பர்களிடம் முன்பு போல சரியாக பழகுவதில்லை... ஏதோ ஒரு சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கிறாள்’ எனத் தெரிவித்தார். அடிக்கடி வயிற்றுவலி, தலைவலி, சோர்வு போன்ற பிரச்னைகளால் விடுப்பு எடுப்பது குறித்தும் கூறினார்.

கலாவின் பள்ளிப் படிப்பை முன்னேற்ற நினைத்த அவளது அம்மா உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் சென்றார். அங்கு கலாவுக்கு பொதுக் கவலைக் கோளாறு (Generalized Anxiety Disorder) இருப்பது அறியப்பட்டு, ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டு, கவலை நீக்கப்பட்டது.


டாக்டர் சித்ரா அரவிந்த்
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,175
Likes
83,730
Location
Bangalore
#4
தற்கால பெற்றோர்களுக்கு மிகவும் தேவையான பதிவுகள் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.