பத்து பொருத்தம் அவசியம்-10 Points for a successful married life

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று . அது தான் வாழையடி வாழையாக உங்கள் குலம் செழிக்க நல்ல வாரிசுகளை கொடுக்கும் வைபவம். பொதுவாக இருமனங்களின் சங்கமம தான் திருமணம். அந்த இரு மனங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். அதற்கு பத்து பொருத்தம் அவசியம். அவைகள் என்னென்னவென்று இப்போது பார்ப்போம்.

1. மனப்பொருத்தம்:

மனப்பொருத்தம் என்றால் எனக்கு மஞ்சன் நிறம் பிடிக்கும். அவளுக்கும் மஞ்சள் நிறம் பிடிக்கும். எனக்கு தோசை பிடிக்கும். அதேபோல் அவளுக்கும் தோசை என்றால் மிகவும் இஷ்டம். எனக்கு சினிமா பிடிக்கும். அவளுக்கும் சினிமா பிடிக்கும் என்பது அல்ல. அப்படி இருப்பவர்கள் மனப்பொருத்தம் உடையவர்கள் அல்ல. அவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அப்படியிருந்தால் பிரயோஜனம் இல்லை. இன்னும் சொல்லப்ப்போனால் அதுவும் ஒருவகையில் போலித்தனத்தின் வெளிப்பாடுகள் தான். மனப்பொருத்தம் என்பது ஒருவளுக்கு பிடித்தது அந்த ஒருவன் ஏற்றுக்கொள்ள் வேண்டும். அதேபோல் ஒருவனுக்கு பிடித்தது அந்த ஒருத்தியும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இருவரும் இப்படி இருக்கும் வாழ்கையில் புரிதல் ஓங்கும். நம்பிக்கை வளரும். இல்லறம் சிறக்கும். முக்கியமாக இருவருக்கும் பொறுமையும் பொறுப்பும் நிறைந்து இருக்க வேண்டும்.

2. உறவு மற்றும் சமூகத்தை அனுசரித்தல்:

இருமனங்களின் அனுசரிப்பு குடும்பத்தில் வெளிப்படும். அந்த குடுமப் அனுசரிப்பு நட்பு, உறவு மற்றும் சமூகத்திலும் பிரதிபலித்து குடும்பத்திற்கு நல்ல பெயரையும் புகழையும் வாங்கித்தரும்.

3. அமுத சுரபி போல் அன்பு:

கொடுக்க கொடுக்க குறையாதது அன்பு என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்று இல்லாமல் மோகமும் ஆசையும் கலந்து ஆயுள் முழுவதிலும் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும். இந்த அன்பு தான் இனிய வாழ்க்கைக்கு அடித்தளம் என்பதை தெரிந்து கொண்டு எப்போதும் விட்டுக்கொடுத்து அன்புடன் வாழ்க்கை நடத்தும்போது குடும்பமே மகிழ்வு பெறும்.

4. நீண்ட ஆயுள் :

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். அதாவது ஆரோக்கியமான மனமும் உடலும் நீண்ட ஆயுளைத் தரும். அதற்கு மனமும், உடலும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். வெளிப்படையாக உணர்வுகளை பகிர்ந்தது கொள்ளும்போது மனஅழுத்தம் குறைகிறது. மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

5. என்றும் பதினாறு:

இருவருக்குமிடையே உள்ள நெருக்கம், கவர்ச்சி என்றும் பதினாறு போல் இளமையாக இருக்க வேண்டும். வயது ஏறினாலும் இலையான துடிப்பும், எண்ணமும், மனமுடன் இருக்கவேண்டும்.

6. அள்ள அள்ள குறையாத செல்வம்:

பணம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று தான். நிறைந்த மனமுடன் இருந்தாலே பணம் சேர்ந்து விடும். எப்போதும் ஒளி வீசும் பிரகாசமான வாழ்க்கை எப்படியிருக்க வேண்டுமென்றால் நாளுக்கு நாள் வான் நிலவு வளர்ந்து பௌர்ணமி நிலவாய் முழுநிலவாய் வாழ்கையில் வளர்ச்சி இருக்க வேண்டும். அதற்கு திட்டமிட்ட வாழ்க்கை தான் மிகவும் அவசியம். திட்டமிட்ட வாழக்கை ஒரு குறிக்கோளை உருவாக்குகிறது. அதை அடைவதற்கு இருவரும் ஒன்று சேர்ந்து உழைக்கும்போது வாழ்க்கையும் வளருகிறது.

7. திருப்தியான வாழ்க்கை:

ஒரேநேரத்தில் அனைத்தையும் வாங்குவதோ அல்லது அனுபவிப்பதோ யாராலும் முடியாத ஒன்றாகும். கிடைக்காததை எதிர்பார்த்து இருக்கின்ற வாழ்கையை அனுபவிக்கத் தவறினால் காலம் முழுவதும் அதிருப்தி ஏற்பட்டு வாழ்வு நரகமாகவே மாறிவிடும். இருக்கின்ற அல்லது கிடைத்த ஒரு வாழ்கையை இனிமையாக திருப்பதியாக வாழும் மனப்பக்குவம் சிறந்த பொருத்தத்திற்கு ஒரு அடையாளமாகும்.

8. நல்ல வாரிசு:

பேர் சொல்லும் பிள்ளை வேண்டுமென்றால் இருவரும் ஒத்த மனதில் தான் இருக்கின்றது. மனமும் உடலும் ஒன்றாகும்போது அழகான வாரிசு உருவாகின்றது. இவற்றுக்கு நல்ல குணமும் மற்றும் பழக்கவழக்கமும் இருந்தால் முத்தான வாரிசு உண்டாகும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

9. அமைதியும், மகிழ்ச்சியும்:

அமைதி எங்கு இருக்கின்றதோ அங்கு மகிழ்ச்சி குடியிருக்கும். வாழ்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள், புயலும் தென்றலும், உயர்வும் தாழ்வும், கஷ்டமும் நஷ்டமும், சந்தோசமும் துக்கமும் மாறி மாறி வரும். எது வந்த போதும் அதை சமாளித்து வாழ்கையில் என்றும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு இருவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தனி மரம் தோப்பாகாது. ஒரு கையால் ஓசை வராது. இரு சக்கரம் எந்த ஒரு பாரத்தையும் இலேசாக தூக்கிச் செல்லும். நம்மால் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கை இருவரிடம் இருக்கும்போது வாழ்கையில் என்றும் மகிழ்ச்சி தான்.

10. வாரிசுகளின் வளர்ச்சி:

வெறும் வாரிசுகளை கொடுப்பது மட்டும் போதாது. அந்த வாரிசுகளுக்கு அடித்தளமாக இருந்து அவர்களின் வளச்சிக்கு உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் காலம் தாழ்த்தாமல் செய்து கொடுக்கவேண்டும். முக்கியமாக தொழில் மற்றும் கல்வியை கொடுப்பதோடு உங்கள் அனுபவங்களையும் பகிந்துகொள்ளவேண்டும். அப்போது தான் பேறு பெற்றதன் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். அது இருவரின் கையில் இருக்கின்றது.

மேற்கண்ட பத்து பொருத்தம் இருக்கும் போது உங்கள் திருமண வாழ்வு மிகவும் மகிழ்ச்சி தரும். இத்தகைய பொருத்தங்கள் தானாக வருவதில்லை. நாமாக உண்டாக்கிக்கொள்ள வேண்டும். உங்கள் திருமண வாழ்க்கை பலரின் வாழ்த்துகளுடன் இனிமையாக இருக்கட்டும்.

வாழ்த்துக்கள்.
 

Attachments

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#3
சரியா சொன்னீங்க பத்து பொருத்தத்தை
உண்டாக்கி கொள்ள வேண்டும்
இல்லேன்னா மிஞ்சுவது
வாழ்க்கையில்
வருத்தம்
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4
அப்படிப்போடு ;) நீ சொன்னா சரி தான் J:cool:
He,he,he....:cool:

parunga sis.....post podhuvaadhan potten......ok....;);)
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
சரியா சொன்னீங்க பத்து பொருத்தத்தை
உண்டாக்கி கொள்ள வேண்டும்
இல்லேன்னா மிஞ்சுவது
வாழ்க்கையில்
வருத்தம்
exactly bro....Hi 5
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.