பப்பாளியின் கொடை!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#1
4086078_f496.jpg

பப்பாளி, அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. பத்தாம் நூற்றாண்டில்தான் பப்பாளி இந்தியாவில் பயிரிடப்பட்டது. ஏக்கருக்கு சராசரியாக 10 ஆயிரம் கிலோ பழம் தரக்கூடியது இது.
பப்பாளிக் காயின் மீது கத்தியைக் கொண்டு கீறினால் பால் போன்ற திரவம் வடியும். அதற்கு `லேக்டஸ்’ என்று பெயர். அதை கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் சேகரித்து உலைக்களக் காற்று மூலம் காயவைத்து, தேவையான வேதியியல் பொருட்களைச் சேர்த்தால் `பெப்பைன்’ என்ற உயர்ந்த ஊக்கியைத் தயாரிக்கலாம். அது சன்னமான மணல் போன்று உலர்ந்த தூள் வடிவத்தில் இருக்கும். காற்றுப் பட்டால் பிசுபிசுக்கும் தன்மை உடையது.


கரோட்டினையும், நிகோடிக் அமிலத்தையும் கொண்டிருப்பதால் பெப்பைன் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. மீன்களில் இருந்து எண்ணை எடுக்கவும், அழகு சாதனப் பொருட்கள், பற்பசை, சூயிங்கம் போன்றவை தயாரிக்கவும், ரேயான்- பட்டு போன்றவற்றில் இருந்து பசை நீக்கவும், கம்பளித் தோலைப் பதப்படுத்தவும் பயன்படுகிறது.


பப்பாளியில் உள்ள புரத ஊக்கிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கும் மருந்துகள் செரிமானம் இன்மையைத் தடுக்கவும், சுவாச உறுப்புகளில் இறந்த திசுக்களைக் கரைக்கவும், தோல் நோய்களைத் தீர்க்கவும் உதவுகின்றன.


மேலும், தொண்டைப்புண்ணைக் குணமாக்கவும், சிறுநீரக நோய்களைத் தீர்க்கவும் அமில எதிர்ப்பு மருந்தாக பெப்பைன் பயன்படுகிறது. குறிப்பாக, `எண்டோஸ்பெர்ம்’ என்ற வினை மாற்றத்தால் பெண்களிடம் ஏற்படும் ஒருவித மலட்டுத் தன்மையையும், ஜீரண உறுப்புகளில் ஏற்படும் கட்டிகளையும் அறவே அகற்றுகிறது.


பப்பாளித் துண்டுகளுடன் சேர்த்து வேக வைக்கப்படும் இறைச்சி, விரைவாக வெந்து, எளிதாகச் செரிக்கும் உணவாகிறது.


இந்தியாவில் பப்பாளி பெருமளவு விளைவிக்கப்படாததால் நம் நாட்டுத் தேவைக்கான பெப்பைன் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

பப்பாளிப் பழத்திலிருந்து பழக்கூழ், குளிர்ந்த பழக் கலவை போன்ற பலவற்றையும் தயாரிக்கலாம். பப்பாளிப் பழத்தைத் தினமும் 250 கிராம் அளவுக்கு உண்டுவந்தால் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாகக் குறையும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.