பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்...!!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,006
Location
Atlanta, U.S
#1


*முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைக்காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


* வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. வெயில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட, வயிற்று வலி பறந்து விடும். ரோஜா இதழ்களுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் சூடு குறையும். வாய் மணக்கும்.

* இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊற வைத்து, அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும். கடைந்தெடுத்த மோரில் அரை மூடி எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து, சிறிது வெங்காயச் சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சோர்வடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது. மாவிலை வயிற்றுப் போக்கையும், மாம்பூ வெள்ளை வெட்டை நோயையும் நீக்கும்.* மாம்பழம், மாம்பழச்சாறு உடலுக்கு ஊட்டச்சத்தையும் வன்மையையும் தரக் கூடியது. பட்டுப்புடவையைத் துவைத்த பிறகு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீரில் கடைசியாக ஒருமுறை அலசி எடுக்கவும். புடவை புதிது போல பளபளப்பாகும். புடவையில் ஒரு நறுமணமும் வரும். வைட்டமின் ஏ க்குத் தனியாக ஒரு மரியாதை உண்டு. வைட்டமின் ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக் கீரை, அகத்தி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும்.

வெப்பத்தால் வரும் வயிற்று வலிக்கு ஒரு டம்ளர் மோரில் சிறிது உப்பு, சமையல் சோடா அரை கரண்டி கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

* உணவில் முள்ளங்கி அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீர் நோய்கள், கல்லீரல்
நோய்கள் வராது. வேர்க்கடலையை வெல்லத்துடன் சாப்பிட வேண்டும். உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்கை இன்னொரு பொருளைச் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். மண் பாத்திரத்தில் காய்ச்சிய நீரை உணவுக்குப் பின் சாப்பிட்டால் புளியேப்பம், காய்ச்சல் நீங்கும். காலை எழுந்தவுடன் முதலில் கண்ணாடியைப் பார்ப்பது நல்லது. தன் பிம்பத்தையே பார்ப்பது மகிழ்ச்சியானது.

* மாரடைப்பைத் தடுக்க, கொழுப்புச் சத்துமிக்க பொருட்களை சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். பாமாயில், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். மது, புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். உணவில் உப்பின் அளவு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

* காதில் சேரும் அழுக்கை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காதுகளில் உள்ள சிறு மயிர்க்கால்களால் அழுக்கு வெளியேற்றப்படும். காது அழுக்கை எடுக்கிறேன் என்று சும்மா கதைக் குடையக்கூடாது. சாப்பிட்டதும் குண்டூசி அல்லது குச்சிகளைக் கொண்டு பற்களைக் குத்தக் கூடாது. அப்படிக் குத்தும்போது பல்லின் எனாமல்பாதிக்கப்படுவதோடு, ஈறுகளில் காயம் ஏற்படும். மேலும் பற்களைத் தொடர்ந்து குடைவதால் பற்களின் இடையே உள்ள இடைவெளி அதிகமாகி நாளடைவில் பல் பழுதுபட வாய்ப்பு ஏற்படும். மூக்கின் வழியாக வெளிப்பொருட்கள் நுழைந்தால் அவற்றை வெளியேற்றக்கூடிய அனிச்சை செயல் தான் தும்மல். மற்றபடி ராசியான தும்மல், ராசி இல்லாத தும்மல் என்று எதுவுமில்லை.

* கடலை மாவு, செம்பருத்தி, வெள்ளரிக்காய், ஆரஞ்சுத்தோல் ஆகியவை முக அழகிற்கு ஆரோக்கியமானவை. செயற்கைப் பொருட்களை விட இயற்கையாகக் கிடைப்பவை சிறந்தது. தீராத இருமல் இருந்தால், மிளகைப் பொடி செய்து வெல்லத்துடன் கலந்து, சிறிது நேரம் தொண்டையில் வைத்திருந்து அந்தச் சாறை விழுங்கினால் சட்டென்று இருமல் நிற்கும்.

* வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும்.

* மலச்சிக்கல் தீர இரவில் மாம்பழம் சாப்பிடலாம்.

* நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இருவேளை குழந்தைகளுகக்கு கொடுத்து வர கண் சூடு தணியும்.

* நெல்லிக்காயை பற்களினால் நன்கு மென்று தின்று வர பற்கள் உறுதி பெறும்.

* அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும்.

* செவ்வாழைப் பழத்தை இரவு சாப்பிட்டு வந்தால் பல்வலி, ஈறு வீக்கம், பல்லில் ரத்த கசிவு, பல் சொத்தை வராது.

* முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க உடல்வலி நீங்கும்.

* இலந்தைபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.

* வசம்பு தூளை, தேங்காய் எண்ணெயில் சிவக்க கொதிக்க வைத்து, வடிகட்டி சிரங்கு மீது தடவி வர சொறி, சிரங்கு குணமாகும்.

* சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும்.

* மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெயில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

* 40 வயதை தாண்டிவிட்டால் அதிக உணவை தவிர்த்து சத்துள்ள உணவு குறைந்த அளவும், அதிக பழச்சாறும் பருகினால் நோய் வராது.

* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

* நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும்.

* குங்குமப்பூவை, தாய்ப்பாலில் குழைத்து கண்மீது பற்றுஇட கண் நோய் குணமாகும்.

* மருதாணி அரைத்து இடுவதற்கு முன்பாக கைகளை எலுமிச்சை பழச்சாற்றால் கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாக பிடிக்கும்.

* மாதுளம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும்.

* நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் சரியாகும்.

* ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர சுகப்பிரசவம் ஆகும்.

* கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்ந்து சாப்பிட்டால் குழந்தை, சுகப்பிரசவம் ஆகும்.

* துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து ஊரவிட்டு, குளித்து வந்தால் முகம் அழகு பெறும்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர, இருமல் குறையும்.

* மனத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.

* கோவைப்பழம் சாப்பிட பல் வலிக்கு நிவாரணம் பெறலாம்
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,006
Location
Atlanta, U.S
#2
பாட்டி வைத்தியம் :


* கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.

* மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

* மணலிக்*கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.

* நீர் பிரம்மி இலையை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* மருதம் இலையை அரைத்து ஒ*ரு கிராம் அளவு எடுத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர நாட்பட்ட வயிற்று வலி குணமாகும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.

* அதிமதுரத்தை நீர் விட்டு காய்ச்சிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் குளிக்க வேண்டும். அவ்வாறு தேய்த்து குளித்தால் தலைமுடி கருமையாக மாறும்.

* எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கால் வெடிப்புகளில் பூசினால் கால் வெடிப்பு மறைந்து கால் பளபளப்பாக மாறும்

* தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதை தடுக்கலாம்.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#3
super thenu...
 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#4
useful info sis tfs:)
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,006
Location
Atlanta, U.S
#5
தேங்க்ஸ் ஸ்ரீமதி க்கா & இஷிதா ... :cheer:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.