பரிதாப பாதங்கள் பஞ்சு போல மாற...

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,720
Location
Germany
#1
[TABLE="width: 100"]
[TR]
[TD]பரிதாப பாதங்கள் பஞ்சு போல மாற...
[/TD]
[/TR]
[/TABLE]

[TABLE="width: 100"]
[TR]
[TD]ருமை படர்ந்த கணுக்கால், பாளம் பாளமாக வெடித்த பாதம், பழுப்பேறிய நகங்கள், ஆங்காங்கே... செருப்பு, ஷூ அணிந்த அடையாள முத்திரைகள் என்று சிலரது பாதங்கள் பார்வைக்கு பரிதாபமாக இருக்கும். பலர், தங்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் துளியளவுகூட பாதங்களுக்குத் தருவதில்லை என்பதன் எதிர்விளைவுதான் இது

உடலைத் தாங்கி நிற்கும் நம் பாதங்களையும் பாதுகாக்க சில டிப்ஸ்...

[TABLE="width: 200, align: left"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
வெதுவெதுப்பான நீர் நிறைந்த 'டப்'பில் ஷாம்பூ அல்லது உப்பு மற்றும் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறை விடுங்கள். அந்தத் தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை அமிழ்த்தி வைத்து, 'ப்யூமிக்' கல்லால் தேயுங்கள். பிறகு, குளிர்ந்த நீரால் நன்றாகக் கழுவி, மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள். பாதங்களில் இருக்கும் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.

பாதம், உள்ளங்கால் வறண்டு இருந்தால், நான்கு சொட்டு கிளிசரினில், நான்கு சொட்டு எலுமிச்சைச் சாறை கலந்து, தூங்கச் செல்லும்போது நகம், விரல்கள், பாதம் முழுவதும் தடவுங்கள். காய்ந்தவுடன் சுத்தமான சாக்ஸ் அணிந்து உறங்குங்கள். எட்டு மணி நேரம் பாதத்துக்கு இதமான சூழலும், ஓய்வும் கிடைப்பதுடன், வறட்சி, பித்த வெடிப்புகள் நீங்கி, மெத்தென பாதம் மென்மையாக மாறும்.

பாலில் தோய்த்து எடுத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால், நகம் உடையாமலும் மினுமினுப்பாகவும் இருக்கும்.

சிறிது கற்றாழை ஜெல்லுடன் கடலை மாவைக் கலந்து மிக்ஸியில் அரைத்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உள்ளங்கால், பாதம், கணுக்கால் முழுவதும் தேய்த்துக் கழுவுங்கள். காயத்தால் ஏற்பட்ட தழும்புகள், கருமை மறைந்து சருமம் இயல்பான நிறத்துக்கு மாறும்.

மாதம் இருமுறை வெள்ளை எள்ளை அரைத்து... பாதம், நகங்களில் பத்து போல் போட்டுக் கழுவுங்கள். இது நகத்தின் இடுக்குகளில் படிந்துள்ள மண், அழுக்குகளை அகற்றி, நல்ல பளபளப்பை கொடுப்பதுடன் வெடிப்பு வராமலும் பாதுகாக்கும்.

நான்கு துளி விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, நன்றாக சூடு பறக்க தேய்த்து, இரண்டு பாதங்களிலும் தேய்த்து விடுங்கள். பாதம் பளபளவென மின்னும்.

குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணெயைக் கலந்து, நன்றாகத் தேய்த்து வந்தால், முரட்டுப் பாதமும் பஞ்சு போல் மெத்தென்றாகி விடும்.
காலணிகள் வாங்கும்போது டிசைனை மட்டுமே பார்க்காமல் தரமானதாகவும், சௌகரியமானதாகவும் வாங்கி அணிந்து கொள்வது முக்கியம்.
[/TD]
[/TR]
[/TABLE]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.