பருமன்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பருமன்


ஃபேக்ட் +

* உலகில் பட்டினியினால் துன்பப்படுகிறவர்களை விட, பருமனால் அவதிப் படுகிறவர்களே இப்போது அதிகம்!

* அமெரிக்காவில் மூன்றில் ஒருவர் பருமனாக இருக்கிறார்.

* காலை அல்லது இரவில் அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுகிறவர்களுக்கு பருமன் பிரச்னை ஏற்படும் சந்தர்ப்பங்கள் இரு மடங்கு அதிகம்.

* உலகிலேயே கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் நிறைந்த நாடு மெக்சிகோ.

* சிக்கனில் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, இப்போது 260 சதவிகிதம் அதிக கொழுப்பு உள்ளது.

* தாயின் டயட் மட்டுமல்ல... கருத்தரிப்புக்கு முன் தந்தை எடுத்துக்கொள்ளும் உணவுகளும் சேர்ந்தே குழந்தையின் உடல்நலத்தைத் தீர்மானிக்கின்றன.

* முறையான உறக்கமின்மை கூட ஒரே வாரத்தில் 900 கிராம் வரை எடை அதிகரிக்க காரணமாகி விடும்.

* சராசரி அமெரிக்கர் ஒவ்வொரு ஆண்டும் 11.3 கிலோ கேண்டி (மிட்டாய்) சாப்பிடுகிறார்.

* ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்களில் வழங்கப்படும் பெரிய பர்கர், கோக், பிரெஞ்சு ஃப்ரை ஆகியவற்றில் ஒரு முறை கிடைக்கும் கலோரியை கரைக்க, 7 மணி நேரம் நடக்க வேண்டியிருக்கும்.

* பருமனான டிரைவர்கள் கார் விபத்தில் இறக்க 78 சதவிகித அபாயம் உள்ளது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.