பரோட்டா ஆபத்து

Joined
May 5, 2011
Messages
35
Likes
54
Location
Bangalore
#1
அனைத்து ஓட்டல்களிலும் பரோட்டா இல்லாமல் இரவு உணவு இருக்காது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. தமிழகத்தில் கிராமங்கள் முதற்கொண்டு பரோட்டா கிடைக்கிறது. ராத்திரி சாப்பாட்டுக்கு குழந்தைகளிடம் என்னவேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். அவர்களது முதல் சாய்ஸ் பரோட்டா தான்.

ஆனால் பரோட்டா நல்ல உணவில்லை என்கிறார்கள் டாக்டர்கள். நன்றாக மாவாக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்ரைடு எனும் ரசாயனத்தால் வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா. பென்ராயில் பெராக்ஸைட் தலையில் அடிக்கும் டை யில் உள்ள ஒரு ரசாயனம்.

இதுவே மாவில் உள்ள புரோட்டினுடன் சேரும் போது அது சர்க்கரை நோயை உருவாக்க காரணம் ஆகிறது. இது மட்டுமல்லாமல் அலோக்ஸன் என்ற ரசாயனம், மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. இது போக செயற்கை வண்ணம் மினரல் ஆயில் டேஸ்ட்மேக்கர்ஸ், பிரீசர்வேட்டிவ்ஸ், இனிப்பு, சாக்ரீன், அஜினோமோட்டோ போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அலோக்ஸன் என்ற ரசாயனம், சோதனைக்கூடத்தில் எலிக்கு நீரிழிவு நோய் வர பயன்படுத்தப்படுகிறது. இது சேர்க்கப்ட்டுள்ளதால் மனிதனுக்கும் இந்த நோய் வருகிறது. மைதாவில் செய்யப்படும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல. மைதாவில் நார்ச்சத்து கிடையாது. அதனால் இரவில் அதனை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. குழந்தைகளுக்கு அளவே கொடுக்கக்கூடாது.

மைதாவில் பரோட்டா மட்டுமல்ல, பேக்கரியில் உள்ள கேக் போன்ற பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. அதனால் பேக்கரி உணவையும் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். மேலை நாடுகள் பலவற்றில் மைதாவால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் மைதாவால் சிறுநீரகக்கல், இருதய கோளாறு, நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு. நமது அண்டைய மாநிலமான கேரளாவில் பரோட்டா வின் தீமை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் இது குறித்து எந்த விழிப்புணர்வும் ஏற்படவில்லை என்து வருத்தமே.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
அன்புத்தோழி ஜீவி அவர்களுக்கு மிக்க நன்றி. பரோட்டா பற்றி தாங்கள் கூறிய தகவல் மிகவும் முக்கியமானது. முட்டை பரோட்டா, கொத்து கரி பரோட்டா, சிலோன் பரோட்டா என்று பல பெயர்களிலும் கிடைக்கும் இந்த பரோட்டாவின் பினனனியில் உள்ள மாபெரும் ஆபத்தை விளக்கி கூறி அனைவரின் கண்களையும் திறந்து விட்டீர்கள்.
 

vinomanian

Commander's of Penmai
Joined
Sep 14, 2012
Messages
1,214
Likes
3,782
Location
chennai
#3
nandri thozhi,

thanks for your valuable information...... maitha patri therivithatharku nandri........
 

Thahseen

Commander's of Penmai
Joined
Jan 22, 2013
Messages
1,067
Likes
2,886
Location
UAE
#4
Hai jeevi,

Maida patti konjam theriyum. But bakery items maida vil irundu thaan varudu yendru marathe poyitein.
Thanks yaar....
---- Junaidha ---
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.