பல் துலக்கும் போது நாக்கை சுத்தம் செய்ய &#2997

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பல் துலக்கும் போது நாக்கை சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
அது எல்லா வயதினருக்கும் அவசியமா?


ஐயம் தீர்க்கிறார் பல் மருத்துவர் ஆனந்தி. ``குழந்தைகள் முதல் வயதானவர்கள் என அனைத்து தரப்பு வயதினரும் காலை, மாலை என இரண்டு வேளையும் பிரஷ் பண்ணிய பிறகு, நாக்கை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.

நம்முடைய நாக்கு உள்பக்கம் மேடு பள்ளமாக அமைந்து உள்ளது. எனவே, அந்தப் பகுதியில் அழுக்கு நிறைய தங்கி பாக்டீரியாக்கள் ஏராளமாக உற்பத்தியாகும். இதனால் எந்த நேரமும் வாயில் இருந்து துர்நாற்றம் வெளிப்பட்டு கொண்டிருக்கும்.

நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் அதன் உள்பக்கங்களில் தங்கும் அழுக்குகள் நாம் சாப்பிடும்போது, வயிற்றின் உள்ளே சென்று செரிமான பிரச்னைகள் ஏற்படும். அதனால் வயிற்றுப் போக்கு, நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம். பிளாஸ்டிக் மற்றும் சில்வரால் தயாரிக்கப்பட்ட பிரத்யேகமான டங்க் கிளீனர் எல்லா கடைகளிலும் கிடைக்கின்றன.

சிலர் இந்த டங்க் கிளீனர்கள் பயன்படுத்துவதால் நாக்கு கிழிந்து விடும், அதனால் ரத்தம் வெளியேறும், நாக்கு கிழிந்த இடத்தில் புண் உண்டாகும், இதனால் சரியாக சாப்பிட முடியாது என தேவையில்லாமல் பயப்படுகின்றனர்.

ஆனால், இவற்றை கவனமாகப் பயன்படுத்தினால் நாக்கில் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. குழந்தைகளுக்கும் சிறுவயது முதல் நாக்கை சுத்தம் செய்கிற வழக்கத்தைப் பழக்க வேண்டும். அவர்களுக்கென்று பிரஷ்ஷின் பின்புறம் மென்மையான டங்க் கிளீனர்கள் பொருத்தப்பட்டு கிடைக்கின்றன.

இன்றும் சிலர் கை விரல்கள், வேப்பங்குச்சி போன்றவற்றை பயன்படுத்தி நாக்கின் உள்பகுதியை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வேப்பங்குச்சியின் ஓரங்கள் ஒரே அளவில் சரிசமமாக இருக்காது. இதனால், ஈறு மற்றும் நாக்கில் இந்த குச்சியின் ஓரங்கள் குத்தி புண்கள் ஏற்படலாம். கை விரல்களால் நாக்கை முழுவதும் சுத்தம் செய்ய முடியாது என்பதால் வாய் துர்நாற்றம் அதிகமாகும்.’’
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,231
Likes
12,713
Location
chennai
#2
Re: பல் துலக்கும் போது நாக்கை சுத்தம் செய்ய &a

thanks for the sharing sis
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Re: பல் துலக்கும் போது நாக்கை சுத்தம் செய்ய &a

Good sharing ji
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.