பளிச் முகத்துக்கு பப்பாளி

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,124
Likes
20,708
Location
Germany
#1
டீன்-ஏஜில் முகம் முழுக்கப் பருக்கள் ஏற்படும். அவை புண்ணாகி, காய்ந்து போவதால் முகம் சொரசொரப்பாகி, அழகை கெடுக்கும்.

இதற்கு பப்பாளியில் நிரந்தரத் தீர்வு உண்டு. மேல்பகுதி கரும்பச்சையாகவும் உள் பகுதி சிவப்பாகவும் உள்ள பப்பாளிப் பழத்தைத் தோலுடன் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி வர, முகத்தில் உள்ள பருக்கள் மறையும். சொரசொரப்பும் மாறி, சருமம் மிருதுவாகும்.

வயதாவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குகிறது பப்பாளி. கனிந்த பப்பாளிப் பழத்தைத் தோலுடன் அரைத்து, முகத்தில் பூசி வந்தால், சுருக்கமும் தொய்வும் ஓடிப் போகும். முகம் எப்போதும் இளமைத் தோற்றத்துடன் வசீகரிக்கும்.

சிலருக்கு சருமம் வறண்டு கரடுமுரடாக இருக்கும். இதற்கும் வைத்தியம் இருக்கிறது பப்பாளியில்..

தோலுடன் அரைத்த முற்றிய பப்பாளி பழத்தின் விழுது - 2 டீஸ்பூன், 'வைட்டமின் ஈ' ஆயில் - ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இவை கலக்கும் அளவுக்கு வெள்ளரி விதை பவுடரை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த கிரீமை முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்துக் கழுவுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து இந்த சிகிச்சையைச் செய்து வர, சருமம் மிருதுவாகி.. முகம் பால் போலாகி விடும்.

வெயிலில் அலைவதால் முகம் கருமை படிந்து டல்லாகத் தெரியும். ஒரு தாமரை இலையுடன் ஒரு பப்பாளி இலையை சேர்த்து அரைத்து, உடலில் வெயில் படும் இடங்களில் தேய்த்துக் கழுவுங்கள். இழந்த நிறத்தை மீட்டு, பொலிவைக் கூட்டும் இந்த இலை பேஸ்ட்!

கூந்தலின் வறட்சியைப் போக்கி, சீக்காளி கூந்தலுக்கு போஷாக்கு தருகிறது பப்பாளி.
முற்றிய பப்பாளி இலைகளை தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். இலையை எடுத்து கைகளால் கசக்கினால் நுரை போல வரும். அதை அப்படியே அதே கொதி நீரில் கரைத்து வடிகட்டுங்கள். இந்த நீரில் கூந்தலை அலசுங்கள். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர, பட்டுப் போல் மென்மையாகும் கூந்தல்

ஒரு பப்பாளியை தோலுடன் துருவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு வினிகரை விட்டு, இறுக மூடி விடுங்கள். 5 வாரம் கழித்துக் கிடைக்கிற பப்பாளி வினிகர் அற்புதமான அழகு மருந்து!

பப்பாளி வினிகரை பஞ்சால் தொட்டு, முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். அழுக்கெல்லாம் ஓடிப்போய் சருமம் சூப்பர் சுத்தமாகி விடும். வாரம் இருமுறை இந்த சிகிச்சையைச் செய்யலாம்

ref vikatan, beauty and nature
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.