பழகிய பொருள்.. அழகிய முகம்! வாட்டம் போக்கு&#29

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பழகிய பொருள்.. அழகிய முகம்! வாட்டம் போக்கும் வெட்டி வேர்!

வாட்டம் போக்கும் வெட்டி வேர்!

பெயர் என்னவோ ‘வெட்டி’ வேர்தான். ஆனால், ஒரு சதவீதம்கூட வெட்டி ஆகாமல், முழுக்க முழுக்க அழகு பலன்களை அள்ளித் தருகிற வேர் இது.

வந்த முகப் பருக்களை விரட்டியடிப்பதிலும், பரு வராமலே தடுப்பதிலும் ஒரு எக்ஸ்பர்ட் வெட்டிவேர்!

முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது...

சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் \ ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கியகடுக்காய் - 1... இந்த இரண்டையும் முந்தின தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!

பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும். அதற்கான நிவாரணம் இதோ...

ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள்.

இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத் தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி,பிழிந்துமுகத்தை ஒற்றி எடுங்கள்.

வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப் பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் ‘பேக்’ இது...

வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை... இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.

வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய்பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும்பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண் களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.

இந்த இரு பிரச்னைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.

பச்சைப் பயறு - 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - 50 கிராம்... இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

வெட்டிவேர் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம்... இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு, உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: பழகிய பொருள்.. அழகிய முகம்! வாட்டம் போக்கு

ஜலதோஷம் பிடிக்காத மருதாணி 'பேக்'...?

‘‘எனக்கு 35 வயதாகிறது. தலையில் கால்வாசி நரைத்துவிட்டது. டை போட விருப்பமில்லை. வீட்டிலேயே மருதாணி போட்டுக் கொள்கிறேன். இதனால், அடிக்கடி உடல் குளிர்ச்சியாகி ஜலதோஷம் பிடித்து விடுகிறது. ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கவும், சில மாதங்களுக்கு சேர்த்து மருதாணி ‘பேக்'கை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளவும் சொல்லித் தாருங்களேன்.’’

‘‘மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணி யுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.

இந்த மருதாணி பேஸ்ட்டை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம்.

மருதாணி பவுடர் - கால் கிலோ, கடுக்காய் பவுடர் - 25 கிராம், துளசி பவுடர் - 25 கிராம், நெல்லிக்காய் - 50 கிராம், டீத்தூள் டிகாஷன் - 50 கிராம், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, யூகலிப்டஸ் ஆயில் - 4 துளி, ஆலீவ் ஆயில் - 4 டீஸ்பூன்... இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கிரைண்டரில் அரைத்து பேஸ்ட்டாக்குங்கள்.

இதை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். மூன்று அல்லது நான்கு மாதம் வரை கெடாது. இந்த 'பேக்'கை வாரம் ஒரு முறை தலைக்குப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.

மருதாணி இலை - 250 கிராம், கொட்டை நீக்கிய கடுக்காய் - 25 கிராம், சுத்தம் செய்யப்பட்ட துளசி இலை - 25 கிராம், கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் - 25 கிராம்... இவற்றை நன்றாக நசுக்கி கிரைண்டரில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் யூகலிப்டஸ் ஆயில் - 10 துளி, ஆலீவ் ஆயில் - 4 டீஸ்பூன், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, டீத்தூள் டீகாஷன் - 100 கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

இந்த 'பேக்' இரண்டு மாதம் வரை கெடாது.’’
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#3
Re: பழகிய பொருள்.. அழகிய முகம்! வாட்டம் போக்கு

useful tips. .. .. . . .
 
Joined
Jun 24, 2012
Messages
89
Likes
76
Location
trichy
#4
Re: பழகிய பொருள்.. அழகிய முகம்! வாட்டம் போக்கு

thanks for the tips
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#5
Re: பழகிய பொருள்.. அழகிய முகம்! வாட்டம் போக்கு

உபயோகமான தகவல் !!! :pray:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.