பழங்களின் பயன்கள்

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#1
*கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும். செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும்.

*பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும். ரஸ்தாளி வாழை கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது.

*பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும். நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும்.

*பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது.

*மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

*ஆப்பிள் மலச்சிக்கலைப் போக்கும்.

*திராட்சை இரத்த அழுத்தத்திற்கு நல்லது. ஈரல் சம்பந்தமான நோய் குணமாகும்.

*எலுமிச்சைப் பழம் உடல் சோர்வையும், மலச்சிக்கலையும் போக்கும்.

*செர்ரி பழம் கருப்பை வியாதிகளுக்கு நல்லது.

*மாதுளம் பழச்சாற்றில் பால் சேர்த்து சாப்பிட இரும்புச் சத்து கிடைக்கும். குடல் புழுக்கள் அழியும்.

*அன்னாசிப் பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

*
நாவல் பழம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.

*சாத்துக்குடி இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

*கமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும், பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.

*கொய்யாப்பழம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. கல்லீரல் பலப்படும்.

*கோவைப்பழம் சாப்பிட்டால் பல்வலி குணமாகும்.

*அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine May 2015. You Can download & Read the magazines HERE.


 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.