பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,792
Likes
22,715
Location
Germany
#1
1525967037452.png


தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ள நீலு, நூற்றுக்கு நூறு, கௌரவம், வேலும் மயிலும் துணை, அவ்வை சண்முகி, சூரிய வம்சம், காதலா காதலா, தீனா, பம்மல் கே.சம்பந்தம், அந்நியன், ரெண்டு உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர், நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.

கடைசியாக இவர் சிம்பு நடிப்பில் வெளியான `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,792
Likes
22,715
Location
Germany
#2
நகைச்சுவை நடிகர் நீலு

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்கள், 150க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்த ராமய்யா நீலகண்டன் என்ற நடிகர் நீலு (81) இன்று (மே-10) மதியம் 2:30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை மறுநாள்(12ம் தேதி) பெசன்ட்நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,792
Likes
22,715
Location
Germany
#3
1525967536355.png


மறைந்த நீலு 1969 - ம் ஆண்டு ஆயிரம் பொய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி 2017 - வரை நூற்றுக்கு நூறு, கௌரவம், முகம்மது பின் துக்ளக், அவ்வை ஷண்முகி , சூர்யவம்சம், தீனா, அந்நியன், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படம் வெளியானது.

குணசித்திர வேடங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற மூத்த நடிகர் நீலகண்டனின் மறைவு அவரது குடும்பத்தாரையும் , திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,792
Likes
22,715
Location
Germany
#5
நீலு. மறைந்த சோ ராமசாமியின் தம்பி அம்பியுடன் இணைந்து விவேகா பைன் ஆர்ட்ஸ் என்ற நாடக கம்பெனியை ஆரம்பித்து நாடகம் போட்டு வந்தார்.

முகம்மது பின் துக்ளக், என்று தணியும் இந்த சுதந்திர தாகம் உள்ளிட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.

கிரேஸி மோகன் நாடகங்களிலும் நடித்து வந்தார்.

1525968106252.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,792
Likes
22,715
Location
Germany
#6
இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு அர்ஜூன், பரத் என்ற இரண்டு மகன்கள்.

வெளிநாட்டிலிருந்து மகன் வரவேண்டும் என்பதால் இறுதிச்சடங்கு நாளை மறுநாள் காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Legendary Actor Neelu expired. Funeral on Saturday G5,Madhuram flat. ollcot kuppam road 5th avenue, Beasent nagar. +91 97910 25330,+91 97910 41192- RIP !

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,792
Likes
22,715
Location
Germany
#7
நடிகர் நீலுவின் மரணத்திற்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

வேலை, நாடகம், சினிமா என எப்போதுமே பிஸியாக இருந்தவர் நீலு.

இவரது காமெடி நடிப்புக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அவருடன் நடித்த பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,792
Likes
22,715
Location
Germany
#8
Partial filmography
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.