பாட்டி வைத்தியம் - Granny's Tips Daily!

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#12
 1. யானைக்கால் நோய் குணமாக வல்லாரைக் கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.
 2. வல்லாரை இலைகளை சாப்பிட்டு வர நினைவாற்றல் பெருகும்.
 3. உடல்வலிமை பெற அத்திப்பழம் சிறந்தது.
 4. தினமும் ஐந்து ஆவாரம்பூ மென்று சாப்பிட்டு வர சக்கரை நோய் கட்டுப்படும்.
 5. சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
 6. மருதாணி மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்ட அற்று போகும்.
 7. தினசரி ஒரு பேரிக்காய் உண்டு வர இதயபடபடப்பு நீங்கும்.
 8. தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.
 9. அரைக்கீரை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
 10. தினமும் ஒரு கப் தயிர் உண்டு வர இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீங்கும்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#13
 1. முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர உடல்வலி நீங்கும்.
 2. மரிக்கொழுந்து பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் கட்டு போட தலைவலி நீங்கும்.
 3. பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் வளர்ச்சி நன்கிருக்கும்.
 4. பப்பாளி பாலை வாய், நாக்கு புண்ணிற்கு தடவ குணமாகும்.
 5. புளியம் பூவை அரைத்து கண்ணைச்சுற்றி பற்றிட கண்வலி, கண்சிவப்பு மாறும்.
 6. காலை எழுந்தவுடன் சுத்தமான நீர் அருந்தி வர வயிற்று உபாதைகள், தலைவலி, சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
 7. பனங்கற்கண்டு பசும்பால் சாப்பிட்டு வர நீர்சுருக்கு நீங்கும்.
 8. தினமும் பிராணாயாமம் செய்து வர சுவாசக் கோளாறுகள் சரியாகும்.
 9. மாதுளம் பழம் பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.
 10. உணவுடன் போதுமான மோர் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#14
 1. ஆரவாரம் பூ பாசிப்பயறு கலந்து உடம்பில் பூசி குளித்துவர உடல் நமைச்சல் அகலும்.
 2. நன்னாரி வேரை இடித்து சாறு எடுத்து பாலில் கலந்து குடித்து வர, இரத்தக்கோளாறுகள் நீங்கும்.
 3. தும்பை இலை சாறு பூச, பூரான் கடி விஷம் முறியும்.
 4. வயிற்றுப் பொறுமல் குணமாக வெற்றிலை, ஓமம் இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருக குணமாகும்.
 5. சுரைக்காய் வாரம் இருமுறை சாப்பிட்டு வர தொப்பை குறையும்.
 6. அஜீரணம் சரியாக ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.
 7. நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வர முகம் பளபளக்கும்.
 8. முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவ முகச்சுருக்கம் மறையும்.
 9. படிகரத்தை பொரித்து நீர்விட்டு கெட்டியாகக் குழைத்து நகச்சொத்தையின் மீது கட்ட குணமாகும்.
 10. தாமரை இதழ்களை காய்ச்சி வடிகட்டி சக்கரை அல்லது தேன் கலந்து உண்டு வர கண் குளிர்ச்சியடையும். உடல் சூடு தணியும்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#15
 1. முருங்கைப் பிஞ்சுகளை நசுக்கி சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர ஜலதோஷம் நீங்கும்.
 2. மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத் தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாலில் காய்ச்சி சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும்.
 3. வெந்தயக் கீரை சமைத்து உண்டு வர இருமல் விடுபடும்.
 4. வாழைத் தண்டு போரியல் வைத்து சாப்பிட குடல் சிக்கியிருக்கும் முடி நஞ்சு ஆகியவை வெளியேறும்.
 5. வாழைப்பூவை வாரம் ஒரு நாள் கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.
 6. நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்து வர கண் சூடு தணியும்.
 7. செவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வந்தால் பல்வலி, வீக்கம், பல் சொத்தை வராது.
 8. அகத்தி கீரை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி நீங்கும்.
 9. இலந்தைபழம் இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்கும். பசியை தூண்டும்.
 10. விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#16
 1. காரட் எலுமிச்சை சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வர முடி நன்றாக வளரும்.
 2. மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் குணமாக சோற்று கற்றாலையில் உள்ள வெள்ளை பகுதியை சீவி கூழாக்கி மோரில் கலந்து சாப்பிட குணமாகும்.
 3. வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக காய்ச்சி அதை தீ புண் வடுமீது தடவி வர வடு மறையும்.
 4. தினசரி கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை அகலும்.
 5. அகத்தி இலை அவித்த தண்ணீர் பருகினால் வாய்ப்புண் ஆறும்.
 6. புளியங்கொட்டை தோல் எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து அரை கரண்டி பசும்பாலில் குடித்து வர நீர்க்கடுப்பு குறையும்.
 7. சீதாப்பழ விதைகளை காய வைத்து பொடியாக்கி சீயக்காயில் கலந்து தேய்த்து குளித்து வர பேன் ஈர் ஒழியும். முடி மிருதுவாகும்.
 8. இரத்தம் விருத்தியாக நாவல்பழம் தினமும் சாப்பிடலாம்.
 9. மிளகு திப்பிலி சுக்கு பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
 10. முலாம்பழம் சாப்பிட்டு வர சிறுநீர் கோளாறு நீங்கும்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#17
 1. புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்க மாதவிடாய் ஒழுங்காகும்.
 2. நூல்கோல் கிழங்கு அடிக்கடி சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
 3. சிராய்ப்பு காயங்களுக்கு இலவம் பிசினை பொடி செய்து தடவி வர குணமாகும்.
 4. ஆரஞ்சுப்பழம் தினமும் சாப்பிட்டு வர ஈரல் சம்பந்தமான வலி நீங்கும்.
 5. அவரை இலை சாறு முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வந்தால் முகம் பளபளக்கும். தழும்புகள், கரும்புள்ளி, பருக்கள் நீங்கும்.
 6. களிப்பாக்கை வெற்றிலையுடன் சேர்த்து வாயில் அதக்கி கொண்டால் நீர் கடுப்பு சரியாகும்.
 7. பூசணிக்காய் சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர மூன்று மாதத்தில் உடல் பருமனாகும்.
 8. ஆரஞ்சுப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பளபளப்பு பெறும்.
 9. சீரக நீரை குடிநீராக எப்போதும் பயன்படுத்த அக உறுப்புகள் அனைத்தும் சீராகும்.
 10. வைட்டமின் இ குறைவினால் வரும் நோய்களை முழு தானியம், பச்சைக் காய்கறி, பழங்கள் மூலம் நீக்கலாம்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#18
 1. வில்வம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்க கண்வலி, கண் சிவப்பு அரிப்பு நீங்கும்.
 2. வெங்காயப் பூவை அடிக்கடி உணவில் சேர்க்க, வயிற்று பூச்சி நீங்கும்.
 3. மாதுளம்பூ பொடியுடன் பனங்கற்கன்டு சேர்த்து காலை மாலை ஒரு தே.கரண்டி சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
 4. இரவில் கண்விழித்து வேலை செய்பவர்கள் காலையில் இளநீர் தொடர்ந்து சாப்பிட்டு வர 8 நாட்களில் வயிற்று வலி தீரும்.
 5. காய்ச்சல் இருந்தால் உண்ணா நோன்பும் சளித் தொந்தரவு இருந்தால் நன்கு சாப்பிடுவதாலும் நோய்கள் சீக்கரம் விடுபடும்.
 6. எலுமிச்சை சதாம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
 7. தக்காளி பழம் உண்டு வர இரத்தம் சுத்தமாகி உடல் வலுப்பெறும். வாதநோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
 8. புதிய இரத்தம் உருவாக்குவதில் பீட்ரூட் வலிமையானது.
 9. சளிக்க்காயச்சலுக்கு ஓமவல்லி இலைக்காம்புகளை குடிநீராக்கி கொடுக்க குணமாகும்.
 10. மஞ்சள் வேப்பிலை சேர்த்து அரைத்து சோற்றுப்புண்ணுக்கு கட்டி வர குணமாகும்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#19
 1. சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து கொள்ள கண்கள் ஒளி பெருகும்.
 2. தக்காளி ஜூஸ் சாப்பிடும்போது விதைகளை தவிர்த்தல் நல்லது. சிறுநீரகக் கோளாறு வராது.
 3. எண்ணெய் குளியல் போது குளிர் நீர் சேர்க்காமல் ஒரே சூடான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும்.
 4. விரல்கள் அனைத்தையும் தினமும் ஐந்து நிமிடம் நீட்டி மடக்கும் பயிற்சியை செய்ய விரல்களில் உள்ள வலி நீங்கும்.
 5. தொண்டை கரகரப்பு, இருமல், மூலம், நரம்பு தளர்ச்சி தீர அதிமதுரப் பொடியை தேனில் கலந்து சாப்பிட சரியாகும்.
 6. உதிரச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலி தீர கிராம்பு பொடியை பனைவெல்லத்துடன் சாப்பிட மாதவிடாய் வலி குறையும்.
 7. சந்தனத்தை முகத்தில் அடிக்கடி பூசி வந்தால் சிறு சிறு கட்டிகள் வராது.
 8. சுகமான தூக்கம் வர கசகசா கற்கண்டு சாப்பிட்டு வர நன்றாக தூக்கம் வரும்.
 9. கொத்தமல்லி விதையை கொதிநீரில் ஊறவைத்து காலையில் குடித்து வர தலைச்சுற்றல் கிறுகிறுப்பு குணமாகும்.
 10. நன்னாரி வேரை கொதிக்க வைத்து வடிகட்டி பால் சக்கரை சேர்த்து குடித்து வர இரத்த அழுத்தம் சரியாகும்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#20
 1. கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால், தலைசுற்றல் நிற்கும்.
 2. முருங்கைக் கீரை சாப்பிட கண்நோய் தீரும்.
 3. மஞ்சள், அருகம்புல், சுண்ணாம்பு கலந்து பூசிவர நகசுற்று குணமாகும்.
 4. கோவைப்பழம் சாப்பிட பல்வலி தீரும்.
 5. இலுப்பை பூ கஷாயத்தை புண்களின் மீது தடவி வர கால் அரிப்பு குணமாகும்.
 6. வெட்டுக்காயம் ஆற வசும்புதூளை காயத்தின் மீது தூவ குணமாகும்.
 7. மாதவிடாய் வலி தீர அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட குறையும்.
 8. இளம்பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
 9. அரளிப்பூ தலையில் வைத்துக் கொண்டால் பேன் ஒழியும்.
 10. பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியை கொடுக்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.