பாதம், உள்ளங்கை போன்ற இடங்களில் வெடிப்பு

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#1
பாதம், உள்ளங்கை போன்ற இடங்களில் வெடிப்பு

நம் உடலில் எங்கெல்லாம் அழுத்தம் அதிகமாகிறதோ... அங்கெல்லாம் அழையா விருந்தாளியாக வெடிப்பும் வந்துவிடும். பாதம், உள்ளங்கை போன்ற இடங்களில் எண்ணெய்ப் பசை குறைவதால் தோல் சுருங்கிக்கொண்டே வந்து, ஒருகட்டத்தில் உதிர்ந்துவிடும்.

சில சமயங்களில் இந்தத் தோல் உரியாமல் தடித்துப்போவதால், நடக்கும்போது குதிகால் தரையில் வேகமாக இடித்து வெடிப்பு ஏற்படும். நுனிப்பாதத்தில் அதிக அழுத்தம் இறங்கும்போதும், கால் விரல்களைச் சுற்றிலும் வெடிப்பு உண்டாகும். இதேமுறையில்தான் உள்ளங்கை மற்றும் விரல்களிலும் வெடிப்பு ஏற்படுகிறது. உள்ளங்கையை ஊன்றி எழுந்திருப்பதாலும், அதிக பாரத்தைத் தூக்குவதாலும் வெடிப்பு உண்டாகி தொந்தரவை ஏற்படுத்தும்.

இதனைத் தவிர்க்க, குளித்தவுடன் ஈரம் காய்வதற்குள் கை, கால்களில் தாராளமாக எண்ணெய் தடவிக்கொள்ளலாம்.
நார்ச்சத்து உள்ள பொருட்களையும் தண்ணீரையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

அதிக அளவு எண்ணெய்ப் பசை உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.
தினமும் நல்ல தண்ணீரில் கொஞ்சம் உப்புப் போட்டு, டாக்டர் கொடுக்கும் மருந்தினைக் கலக்கி, அதில் 15 நிமிடம் உள்ளங்கை மற்றும் விரல்களை அலசி வெடிப்பினுள் உள்ள அழுக்கினை அகற்றினாலே விரைவில் குணம் கிடைக்கும்.''
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
Re: பாதம், உள்ளங்கை போன்ற இடங்களில் வெடிப்ப&#3

thanks for sharing useful 1...!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.