பானிபூரியால் பயங்கரம்!Dangers of eating roadside Panipuris

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பானிபூரியால் பயங்கரம்!

காலையில் இருக்கும் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் மாலை வேளையில் மாயமாகி ஒருவித சோர்வுக்கு உள்ளாவோம். அப்போது உடலில் குளுக்கோஸ் ஏற்றிக்கொள்வதற்காக சிற்றுண்டி உண்பது நம்மில் பலரது வாடிக்கை. வீடுகளிலேயே இனிப்பு, காரம் செய்து சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறிப்போக, தெருவுக்குத் தெரு பானிபூரி, சில்லி சிக்கன் கடைகள் முளைத்து விற்பனையில் அசுர வளர்ச்சி கண்டிருக்கின்றன. வடமாநிலத்து உணவான பானிபூரியை நம் மக்கள் ஆரத் தழுவிக் கொண்டனர். சிறிய பூரிக்குள் மசாலா வைத்து, புதினா, மிளகு கலந்த ரசத்தில் மூழ்க வைத்துக் கொடுப்பதை
நாம் லபக்கென ருசிக்கிறோம். அந்த ருசிக்குப் பின்னே...

பானிபூரி சுடுவதற்கான மாவை காலில் மிதிக்கிற புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. அது மட்டுமல்ல... சாலையோர தள்ளுவண்டிக்கடைகளில் பானிபூரி விற்கப்படுகிறது. சில கடைகள் சாக்கடைக்கு அருகிலேயே இருக்கின்றன. சுற்றுச்சூழலே சுகாதாரமற்று இருக்கிறது. பூரியை பெருவிரலால் உடைத்து அதனுள் மசாலாவைத் திணித்து புதினா நீரில் முக்கி எடுக்கின்றனர். கை பெருவிரல் நகத்தில் படிந்திருக்கும் அழுக்கு பானிபூரியிலும் ஒட்டிக்கொள்ளும். இப்படியாக சுகாதாரக் குறைபாடுள்ள பானி பூரியை சாப்பிடும் நமக்கு என்ன ஆகும்? நிபுணர்களிடம் விளக்கம் கேட்டோம். இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் நந்திவர்மன் கூறும் 3 தகவல்கள்

1 கையால் உடைத்து, தண்ணீரில் முக்கிக் கொடுக்கிறவரது கை எந்த அளவு சுத்தமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். Hookworms, Pinworms போன்ற புழுக்கள் கைகளில் இருந்துதான் பரவுகின்றன. அதைச் சாப்பிடும்போது வயிற்றில் இப்புழுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். வைரஸ் மூலம் பரவும் ‘ஹெபடைடிஸ் ஏ’ ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.

2 பூரி தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் எண்ணெய் எப்படிப்பட்டது என்பதும் அவசியம். எண்ணெயை ஒருமுறைதான் கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும். நடைமுறையிலோ எண்ணெயை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தும்போது அந்த கெட்ட எண்ணெய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

3 புதினா ரசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் அது பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தெருவோரக் கடைகளில் விற்கப்படுகிற, சுகாதாரத்துக்கு உத்தரவாதமில்லாத இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணன் கூறும் 3 தகவல்கள்

1 நொறுவை உண வுகளிலேயே அதிகம் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பது பானி பூரியில்தான். சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பானிபூரிகளை சாப்பிடாமல், சுகாதாரமான முறையில் தயாரிப்பதை சாப்பிடலாம். குறிப்பாக இவற்றை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவசியம் தவிர்க்க வேண்டும்.

2 மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்வதை 5 வேளையாக பிரித்து எடுத்துக் கொள்வது நல்லது. பொதுவாகவே எல்லோருக்கும் மாலை வேளையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடுவதால்தான், ஏதாவது சாப்பிடத் தோன்றுகிறது. மாலை வேளையில் கொஞ்சம் சாப்பிடுவதை அவசியம் பின்பற்ற வேண்டும். அப்போது தான் இரவு வேளையில் தேவையான அளவு மட்டுமே உணவை எடுத்துக் கொள்வோம்.

3 குழந்தைகள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் புரதச்சத்துள்ள உணவுப்பொருட்களான தயிர்வடை, பச்சைப் பயறு அடை, உளுந்தங்களி, கொண்டைக்கடலை, முளைகட்டிய பயறுகளை சாப்பிடலாம். எடை குறைக்க நினைப்பவர்கள் ஃப்ரூட் சாலட், முளைகட்டிய பயறு வகைகளை பச்சையாக சாப்பிடலாம். பானிபூரி சாப்பிடுவதால் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனும்போது ருசிக்காக ஏன் நோயை விலை கொடுத்து வாங்க வேண்டும்? நாம்தான் மாற்றிக்கொள்ள வேண்டும்!

"குழந்தைகள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் புரதச்சத்துள்ள உணவுப் பொருட்களான தயிர்வடை, பச்சைப் பயறு அடை, உளுந்தங்களி, கொண்டைக்கடலை, முளைகட்டிய பயறுகளை சாப்பிடலாம்."

"பானி பூரி செய்பவர் கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். வைரஸ் மூலம் பரவும் ‘ஹெபடைடிஸ் ஏ’ ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது."
 
SADAIYAN

Friends's of Penmai
Joined
Feb 7, 2014
Messages
174
Likes
268
Location
RAMNAD
#5
அத்தனையும் சரி. என் அனுபவத்தில் (அவ்வளவா இல்லாவிடினும்) அளவான அனுபவத்திலும், அந்த கன்றாவியை உண்ட ஒரு மணி நேரத்தில் எனக்கு தொண்டை கரகரப்பு ஏற்பட்டு இரண்டு நாள் நான் அவதிப்பட்டேன். அதற்க்கு காரணம் நிச்சயம் சுகாதார கேடு மட்டுமே. அதை விற்கும் அந்த பையன், தான் செய்வது சரிதானா என்றே தெரியாத அந்த வயதில் தங்களுடைய வயிற்று பிழைபிர்காக மட்டுமே செய்கிறார்கள். இம்மாதிரி தொழிலில் உள்ளவர்களை அரசு சுகாதார அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான அறிவுரையை வழங்கி ஊக்குவித்தால் அவர்கள் வாழ்வும் செழிக்கும். நமது குழந்தைகளின் உடல் நலமும் காக்க படும். ஏன் அந்த சுகாதார அதிகாரியின் குழந்தைகளின் நலமும் காக்க படுமே
பானிபூரியால் பயங்கரம்!

காலையில் இருக்கும் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் மாலை வேளையில் மாயமாகி ஒருவித சோர்வுக்கு உள்ளாவோம். அப்போது உடலில் குளுக்கோஸ் ஏற்றிக்கொள்வதற்காக சிற்றுண்டி உண்பது நம்மில் பலரது வாடிக்கை. வீடுகளிலேயே இனிப்பு, காரம் செய்து சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறிப்போக, தெருவுக்குத் தெரு பானிபூரி, சில்லி சிக்கன் கடைகள் முளைத்து விற்பனையில் அசுர வளர்ச்சி கண்டிருக்கின்றன. வடமாநிலத்து உணவான பானிபூரியை நம் மக்கள் ஆரத் தழுவிக் கொண்டனர். சிறிய பூரிக்குள் மசாலா வைத்து, புதினா, மிளகு கலந்த ரசத்தில் மூழ்க வைத்துக் கொடுப்பதை
நாம் லபக்கென ருசிக்கிறோம். அந்த ருசிக்குப் பின்னே...

பானிபூரி சுடுவதற்கான மாவை காலில் மிதிக்கிற புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. அது மட்டுமல்ல... சாலையோர தள்ளுவண்டிக்கடைகளில் பானிபூரி விற்கப்படுகிறது. சில கடைகள் சாக்கடைக்கு அருகிலேயே இருக்கின்றன. சுற்றுச்சூழலே சுகாதாரமற்று இருக்கிறது. பூரியை பெருவிரலால் உடைத்து அதனுள் மசாலாவைத் திணித்து புதினா நீரில் முக்கி எடுக்கின்றனர். கை பெருவிரல் நகத்தில் படிந்திருக்கும் அழுக்கு பானிபூரியிலும் ஒட்டிக்கொள்ளும். இப்படியாக சுகாதாரக் குறைபாடுள்ள பானி பூரியை சாப்பிடும் நமக்கு என்ன ஆகும்? நிபுணர்களிடம் விளக்கம் கேட்டோம். இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் நந்திவர்மன் கூறும் 3 தகவல்கள்

1 கையால் உடைத்து, தண்ணீரில் முக்கிக் கொடுக்கிறவரது கை எந்த அளவு சுத்தமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். Hookworms, Pinworms போன்ற புழுக்கள் கைகளில் இருந்துதான் பரவுகின்றன. அதைச் சாப்பிடும்போது வயிற்றில் இப்புழுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். வைரஸ் மூலம் பரவும் ‘ஹெபடைடிஸ் ஏ’ ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.

2 பூரி தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் எண்ணெய் எப்படிப்பட்டது என்பதும் அவசியம். எண்ணெயை ஒருமுறைதான் கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும். நடைமுறையிலோ எண்ணெயை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தும்போது அந்த கெட்ட எண்ணெய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

3 புதினா ரசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் அது பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தெருவோரக் கடைகளில் விற்கப்படுகிற, சுகாதாரத்துக்கு உத்தரவாதமில்லாத இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணன் கூறும் 3 தகவல்கள்

1 நொறுவை உண வுகளிலேயே அதிகம் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பது பானி பூரியில்தான். சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பானிபூரிகளை சாப்பிடாமல், சுகாதாரமான முறையில் தயாரிப்பதை சாப்பிடலாம். குறிப்பாக இவற்றை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவசியம் தவிர்க்க வேண்டும்.

2 மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்வதை 5 வேளையாக பிரித்து எடுத்துக் கொள்வது நல்லது. பொதுவாகவே எல்லோருக்கும் மாலை வேளையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடுவதால்தான், ஏதாவது சாப்பிடத் தோன்றுகிறது. மாலை வேளையில் கொஞ்சம் சாப்பிடுவதை அவசியம் பின்பற்ற வேண்டும். அப்போது தான் இரவு வேளையில் தேவையான அளவு மட்டுமே உணவை எடுத்துக் கொள்வோம்.

3 குழந்தைகள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் புரதச்சத்துள்ள உணவுப்பொருட்களான தயிர்வடை, பச்சைப் பயறு அடை, உளுந்தங்களி, கொண்டைக்கடலை, முளைகட்டிய பயறுகளை சாப்பிடலாம். எடை குறைக்க நினைப்பவர்கள் ஃப்ரூட் சாலட், முளைகட்டிய பயறு வகைகளை பச்சையாக சாப்பிடலாம். பானிபூரி சாப்பிடுவதால் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனும்போது ருசிக்காக ஏன் நோயை விலை கொடுத்து வாங்க வேண்டும்? நாம்தான் மாற்றிக்கொள்ள வேண்டும்!

"குழந்தைகள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் புரதச்சத்துள்ள உணவுப் பொருட்களான தயிர்வடை, பச்சைப் பயறு அடை, உளுந்தங்களி, கொண்டைக்கடலை, முளைகட்டிய பயறுகளை சாப்பிடலாம்."

"பானி பூரி செய்பவர் கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். வைரஸ் மூலம் பரவும் ‘ஹெபடைடிஸ் ஏ’ ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது."
[/QUOTE]
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.