பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போ

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்


நமது சித்தர்கள், எத்தனை எத்தனை வகையான அரிய கண்டுபிடிப்புக் களை கண்டுபிடித்து, அதை மனித வாழ்வு க்காகவே பயன்படும் வகை யில் வழங்கியிருக்கிறார்கள்.

அத்தகைய அரிய கண்டுபிடிப்புக்களில் இதுவும் ஒன்று, ஆம், தற்காலத்தில், வகையான வகையான உயர் ரக மெத் தை கள் வந்துவிட்து, ஒரு குளிரூட்டப்பட்ட அறையில், ஏதேனும் ஒரு உயர்ரக மெத்தையை வாங்கிப்போட்டு அதில் தூக்கமும் வராமல் விழித்திருக்கவும் முடியாமல் இன்றைய மக்கள் அவதிப்படுகிறார்கள்.

ஆனால், அன்றே சித்தர்கள், நாம் படுக்கும் படுக்கைகளை பற்றிசொல்லி சென்றுள்ளனர். அப்படி இந்த படுக்கை களை பற்றி என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இதோ அந்த அற்புத தகவல்.
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை என்னும் விளக்கியுள்ளது.


இலவம் பஞ்சு படுக்கை
உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்க ளும் நிவாரணம் பெறும்.


இரத்தினக் கம்பளம்
நஞ்சுகளின் உண்டாகும் நோய்களை நீக்கி, பூரண சுகம் தரும்


ஈச்சம் பாய்
எப்பேற்ப்பட்ட வாத நோய்களானாலும் இதில் படுத்துறங் கினால் விரைவில் குணமாகுமாம். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

கம்பளிப் படுக்கை
கடுங்குளிரிலிருந்து நம்மை காத்து நமக்கு இதம ளிக்கும். மேலும் குளிர் காய்ச்ச*லால் அவதிப்ப டும் நோயாளிகள் இந்த படுக்கையில் படுத்தும், போர்த்திக்கொள்ண்டால் சீக்கிரமே குளிர்காய்ச் சல் நீங்கி பூரண சுகம் பெறும்.


கோரைப் பாய்
உடல் சூடு தணியும் , மந்தம் மங்கிப்போகும், காய்ச்சல் குணமாகும், உடலுக்குக் குளிர்ச்சி கொடுத்து நல்ல உறக்கத்தையும் ஏற்படுத்தும்.


தாழம்பாய்
வாந்தி ஏற்படும் உணர்வை நீக்கும், தலை சுற்றலை நீக்கும், நம் உட லில் தேவையற்ற பித்தத்தை நீக்கும்.


மூங்கில் பாய்
உடல் சூடும் அதிகரிப்பதோடு, பித்தமும் அதிகரிக்கும்.


பிரம்பு பாய்
சீதபேதியிலிருந்து முழவதுமாக குணமாக்கி ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். காலநிலைக்கேற்ப வரும் காய்ச்சலிலிருந்து குணமடையவைக்கும்


பேரீச்சம்பாய்
இரத்தசோகை சோகை நோயை குணப்படுத்தும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும். வாத குன்ம நோய்க்களை குணப்படுத்தும்.


மலர்ப்படுக்கை
ஆண்களுக்கு ஏற்ற படுக்கை இது! இதில் படுக்கும் ஆண்களுக்கு ஆண் மை அதிகரித்து, காம விளையாட்டில் காமனை வெல்வார்கள் என்ற சிற்றின்ப ரகசியத்தையும் சொல்லியுள் ளார்கள். (இப்போதும், திருமணமான தமபதி களை, முதலிரவன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டப் படுக்கையில் படுக்க சொல்கிறார்கள்!) மேலும் நன்றாகப் பசி எடுகக வைத்து, பலமாக உணவினை உண்ண தூண்டும்.


நன்றி - “மருத்துவத் திறவு கோல்" (சித்த மருத்துவ நூல்)
 
Last edited:

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,598
Location
Bangalore
#2
Re: பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் ப&#3

payil ivalavu vagai iruka.thank for the information.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,541
Location
Hosur
#3
Re: பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் ப&#3

Very useful information Lakshmi, thanks much.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.