பாரசிட்டமால் - Paracetamol

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[TABLE]
[TR]
[TD="colspan: 2"]
பாரசிட்டமால்

நவீன மருந்துகளில் பாரசிட்டமால் ஒரு சர்வரோக நிவாரணி. மிக நன்றாக காய்ச்சலை, உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மைஉள்ளது. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை உலகெங்கிலும் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறைந்தபட்சவலி நிவாரணி... அதனால்தான் தொலைக்காட்சி யில் கூவிக்கூவி விற்கப்படும் அனைத்து வலி மருந்துகளிலும் பாரசிட்டமால் உண்டு!

வலி நிவாரணி, காய்ச்சலை குறைக்கும் தன்மை மற்றும் உடலின் மீது ஏற்படும் தாக்கம், நோய்க் கிருமிகள் மற்றும் காயங்களால் உடலில் ஏற்படும் உள், வெளி தாக்கங்களை குறைக்கும் தன்மை ஆகிய முக்கியமான மூன்று குணாதிசயங்களைக் கொண்டது இந்த மருந்து.

Willow bark
(Salix Alba) என்ற மரப்பட்டையில் இருந்து எடுக்கப்பட்ட Sodium Salicylate என்ற காய்ச்சலை குறைக்கும் வலி மருந்துகள் 1875ல் கண்டுபிடிக்கப்பட்டன. பிறகு 1947ல் ஞிணீஸ்வீபீ Lester and Lean Greenberg ஆகிய இருவரும் தயாரித்த சுத்திகரிக்கப்பட்ட பாரசிட்டமால் மருந்தை நவீன மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டது. மருத்துவர்கள் எழுதும் எல்லா வலி நிவாரணிகளிலும் வலி மருந்துகளுடன் பாரசிட்ட மாலும் சேர்ந்தே இருக்கும். கடைகளில் காய்ச்சல், உடல் வலி, குளிர் நடுக்கம் என்று நீங்கள் கேட்டு வாங்கும் போது தனியாக ஒரு பாரசிட்டமால் (500-600), வலி மருந்துடன் பாரசிட்டமால் 500...

ஒரு மலேரியா மாத்திரை, ஒரு கிருமி மருந்து, ஒரு அலர்ஜி மாத்திரை என கை நிறைய தருவதை வாங்கி உட்கொள்ளும் போது ஆயிரம் முதல் 1,150 மி.லி. கிராம் வரை பாரசிட்டமால் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இது என்ன செய்யும் என்பதைப் பிறகு பார்க்கலாம்.மருத்துவர் இல்லாத நேரங்களில் வெறும் பாரசிட்டமால் மட்டும் அவரவர் எடைக்கு ஏற்ப (குடும்ப மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கும் அளவில்) காய்ச்சலுக்கு, உடல் வலிக்கு தாராளமாக பயமின்றி எடுத்துக்கொள்ளலாம்.

சரியான அளவில் மீண்டும் 4-6 மணி நேர இடைவெளியில் எடுத்துக் கொள்ள லாம். பல் வலிக்காகவோ, அடிபட்ட வலிக்காகவோ, திடீர் உபாதைகளுக்கோ, முதல் உதவி டப்பாவில் வைத்திருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அடுத்தவேளை மருத்துவர் இருக்கும் நேரம் அவரை சென்று பார்த்து பரிந்துரையின் பேரில்தான் மருந்துகள்உட்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் என்பது கிருமியின் தாக்கத்தால் மட்டுமே வரக்கூடியது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி முடிந்த மட்டும் போராடி தோற்றபின்மட்டுமே காய்ச்சலாக வரக்கூடியது.அந்தக் கிருமி என்ன என்பதை மருத்துவர் உறுதி செய்து அவரது பரிந்துரையின் பேரில் மருந்து உட்கொள்ள வேண்டும். இந்த மருந்தை எடைக்கேற்ப 1015 mg / kg நான்கில் இருந்து 6 மணி நேரத்துக்கு ஒருமுறை அல்லது 60 mg / kg நான்கு முறைகளாக பிரித்து ஒரு நாள் முழுவதும் தரலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது வரும் வரை அல்லது 10 Kg எடை வரும் வரை பாரசிட்டமாலை சொட்டு மருந்தாகவும் தரலாம்.

கைக்குழந்தைகள் எனில் 4 முதல் 6 மணி நேரத்துக்குள்ளாக குழந்தை மருத்துவரையோ, குடும்ப பொதுநல மருத்துவரிடமோ ஜுரம் குறைந்தாலும் காண்பிக்க வேண்டும். ஒரு வயதுக்கு மேலாக அல்லது 10 Kg எடைக்கு மேலாக இருக்கும் குழந்தைகளுக்கு 20 Kg எடை இருக்கும் வரை பாரசிட்டமால் மருந்தாக 60 mlsuspension இருக்கும் அளவு ஒரு முறை கொடுக்கலாம். ஜுரம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்கலாம்.

உடல் எடை 20 Kg லிருந்து 30 Kg இருக்கும் வரை 250 Mg, 30லி ல் இருந்து 40 Kg வரை 325 Mg, 40 Kgக்கு மேல் 500 Mg, 60 Kgக்கு மேல் 650 Mg என்ற அளவில் பாரசிட்டமாலை மட்டும் வீட்டிலேயே தேவையான அளவு வாங்கி வைத்து காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல் வலி, பல்வலி, மூட்டுவலி போன்ற முதலுதவி மருந்தாக எடுத்துக் கொண்டு, 12 முதல்
24 மணி நேரத்துக்குள் குடும்ப பொது நல மருத்துவரை பார்க்க வேண்டும்.

பாரசிட்டமால் 1000 Mg மருந்தாக வலிநிவாரணியாக உபயோகிக்க 12 மணி நேரத்துக்கு வேலை செய்யும் மருந்துகளாக இப்போது கிடைக்கின்றன. அவற்றை மருத்துவரின் பரிந்துரையில் உட்கொள்ளலாம்.இது தவிர ஊசியாக போடப்படும் பாரசிட்டமாலை விட ஆசன வாயில் வைக்கப்படும் பாரசிட்டமால் (Suppository) பாதுகாப்பானது.

குளிர்சாதனப் பெட்டியில் 1 முதல் 8 டிகிரியில் வைத்திருக்க வேண்டும். 80 Mg (6 மாத குழந்தை - 6 முதல் 8 Kg), 125 Mg (8 முதல் 12 Kg ), 170 Mg (12 முதல் 16 Kg), 250 mg (17 முதல் 22 Kg) என்ற அளவில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

ஒரே நாளில் 102 டிகிரிக்கு மேல் இருந்தால் மட்டுமே, வாய் வழி மருந்து வேலை செய்யாத பட்சத்தில் (பாரசிட்டமால் ஊசியாக செலுத்துவதற்குப் பதிலாக) குழந்தைகளுக்கு இந்த மருந்தை ஆசனவாயில் வைப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.

ஆசனவாயில் ரத்தக்குழாய்கள் அதிகமாக இருப்பதாலும் மூடிய பகுதியாக இருப்பதாலும் சூடாக இருப்பதால், மெழுகு போன்ற இந்த மருந்து ஆசனவாய் சூட்டிலேயே இளகி, உருகிய மருந்தை ரத்தக்குழாய்களின் மூலம் வேகமாக உறிஞ்சுவதால் ஜுரம் குறையும் தன்மை அதிகமாகக் காணப்படுகிறது. ஒரு வேளை இந்த மருந்தை பயன்படுத்தி ஜுரம் குறைந்தாலும், குழந்தையை மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனைப் பெறுவது நல்லது. பிறந்து 2 மாதம் வரை குழந்தைகளுக்கு இதை பயன்படுத்தக் கூடாது.

மிகவும் தெரிந்த மருந்தாக இருக்கும் பாரசிட்டமாலை யாருக்கு எல்லாம் கொடுக்கக் கூடாது என்று பார்ப்போம். யாருக்கு பாரசிட்டமால் அலர்ஜி இருக்கிறதோ அவர்கள் தவிர்க்க வேண்டும். ஈரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு இருப்பவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே கொடுக்க வேண்டும்.

பாரசிட்டமால் மக்களுக்கு நன்றாக அறியப்பட்ட ஒரு மருந்தாக இருந்தாலும், அதை உட்கொள்பவர்களுக்கு குமட்டல், வாந்தி, மேல் வயிற்றுவலி, சருமத்தில் தட்டையாக அல்லது வேர்க்குரு போன்ற மாற்றங்களுடன் அரிப்பு ஏற்படலாம்.

இந்த மருந்தை மேலே சொன்ன அளவுக்கு அதிகமாக ஒரே நாளிலோ, ஓரிரு நாட்களிலோ எடுத்துக் கொண்டால் ஈரல் கெட்டுப்போய், சிறுநீரகம் வேலை செய்ய மறுக்கவும் செய்யலாம். இந்தப் பக்க விளைவு குடிகாரர்களுக்கும், மிக அதிகமாக தொடர்ந்து குடிப்பவர்களுக்கும் ஏற்படலாம். நீண்ட நாட்கள் எடுத்ததெற்கெல்லாம் தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படலாம். அப்படி பாதிப்புக்கான அறிகுறி தென்படும் பொழுது உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

கவனம் கொஞ்சம்

1.குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ ஜுரம் என்றபின், அவரவருக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் பாரசிட்டமால் உட்கொண்ட பின்னும் ஜுரம் இல்லை என்றாலும் மருத்துவமனை செல்வது நல்லது.
2.குழந்தைகளுக்கு 102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் என்றால் வலிப்பு நோய் வரும் அபாயம் இருப்பதால் மருந்து கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவரிடம் எலெக்ட்ரானிக் தெர்மாமீட்டரில் எவ்வளவு அதிகபட்ச ஜுரம் இருந்தது என்பதை சொன்னால் போதுமானது. நிரூபிப்பதற்காக மருந்தை கொடுக்காமல் அழைத்துச் சென்று வலிப்பு வர வைக்க வேண்டாம்.
பாரசிட்டமாலை குறைந்தபட்சம் ஒரு டம்ளர் தண்ணீரோடு எடுக்க வேண்டும்.
3.வெறும் வயிற்றில் எடுப்பதை விட 2 பிஸ்கெட், பிரெட் துண்டுகள் அல்லது பழம், டீ, பால் என எடுத்துக் கொள்வது நல்லது.
4.எப்போதுமே நோயாளிகளுக்கு தண்ணீர் அவசியம். ஜுரத்தை தணிக்கவே நிறைய தண்ணீர் அவசியம். காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அவரவர் எடைக்கு ஏற்ப 2 லிட்டர் வரை நீராகாரம் அவசியம். அது டீ, பால், தண்ணீர், ஜூஸ்(புளிப்புப் பழங்கள் தவிர்க்கவும்), கஞ்சி, சோறு வடித்த தண்ணீர் மற்றும் குளிர்ச்சி இல்லாத பழ பானங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக நிறைய குடிக்கலாம். பொதுவாக, தூங்கும் முன் நிறைய தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்திருக்க வேண்டி இருக்கும்.
5.காய்ச்சலின் போது 4-8 மணி நேரத்துக்கு ஒரு முறை காய்ச்சல் குறையாமல் இருந்தால் மருத்துவரை பார்க்கவும்.
5 நாளில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தப் பரிசோதனை அவசியம். அதிலிருந்து 7வது நாளில் ரத்தப் பரிசோதனை மீண்டும் அவசியம். ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்வது அவசியம்.

பாரசிட்டமாலை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஈரல் கெட்டுப்போய், சிறுநீரகம் வேலை செய்ய மறுக்கவும் செய்யலாம்.

டாக்டர் மு.அருணாச்சலம்

[/TD]
[/TR]
[/TABLE]
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.