பாரத ஸ்டேட் வங்கி..!

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,357
Location
Puducherry
#1
உங்ககிட்ட SBI Account இருக்கா? அப்ப இது உங்களுக்கு தான் !

பாரத ஸ்டேட் வங்கி (ளுடீஐ) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிச் சேவையில் முதன்மையாகத் திகழ்கிறது பாரத ஸ்டேட் வங்கி. இதில் தற்போது வங்கிக் கணக்கு தொடர்பான சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

சேமிப்பு கணக்கு :

நாடு முழுவதும் விரிவடைந்த ஒரு வங்கியாகத் திகழ்ந்த பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கு இருப்புத் தொகையை சமீபத்தில் ரூ.5000 ஆக உயர்த்தியது.

அதன்படி, நகர்புறக் கிளைகளில் கணக்கு வைத்திருந்தால் ரூ.5000, துணை நகரங்களில் ரூ.3000 மற்றும் ரூ.2000, கிராமப் புறங்களில் ரூ.1000 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் இந்த வங்கிச் சேவையின் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். அதுமட்டுமல்லாமல் இந்த வங்கியின் இதர சேவைகளுக்கும் சர்வீஸ் தொகையும் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை குறைத்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிய அறிவிப்பு :

குறைந்தபட்ச இருப்புத் தொகை (நகர்புறம் மற்றும் துணை நகரம்) : ரூ.3000.

அபராதத்தொகை :

குறைந்தபட்ச வைப்புத் தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதத் தொகை மாற்றி அறிவிக்கப்பட்டது.

நகர்புறம் மற்றும் துணைநகரம் : ரூ.50 + ஜிஎஸ்டி.

கிராமப்புறம் : ரூ.40 + ஜிஎஸ்டி.

விலக்கு பெற்ற கணக்குகள் :

பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் திறக்கப்பட்ட தனிநபர் வங்கிக் கணக்கு, ஓய்வூதியர்கள் வங்கிக்கணக்கு, 18 வயதுக்குட்பட்டோர் வங்கிக்கணக்கு ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.
சௌபாக்யா திட்டம்..!
நம் இந்திய திருநாட்டின் அடிப்படை ஆதாரமாக விளங்குபவை கிராமங்கள். ஏனெனில் கிராமங்களின் கட்டமைப்பில் தான் இந்தியா என்ற நம்முடைய மிகப்பெரிய நாடு உருவாக்கப்பட்டிருக்கிறது. உலக அரங்கில் நமது நாடு தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால், இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களின் வளர்ச்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

இன்று இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைத்து கிராமங்களின் ஒன்றிணைந்த வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சார்ந்து வாழ்வதால், இந்தியாவின் உண்மையான வளர்ச்சி கிராமப்புற வளங்களை மையமாக கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட கிராமங்களுக்கும், கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் நமது மத்திய அரசு பல புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

சௌபாக்கியா திட்டம் :

அனைவரும் வீடு கட்டவேண்டும் என்பதற்காகவே மத்திய அரசின் பிரதான்மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை தொடர்ந்து, இந்திய கிராமங்களை வாழ்விடமாக கொண்டிருக்கும் ஏழைகளின் வீடுகளுக்கு மின்சாரம், சமையல் எரிவாயு, மருத்துவ வசதிகள் கொடுக்கும் வகையில் சௌபாக்யா யோஜனா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.

எரிவாயு, மின்சாரவசதி, மருத்துவ வசதிகளை பெற்ற தனித்தனி திட்டமாக இருந்த நிலையில் அவற்றை சௌபாக்கியா திட்டம் மூலம் ஒரே திட்டமாக அறிவித்துள்ளார்.

மின் விநியோகம் தொடர்பான திட்டம் வரும் 2018ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு கிடைப்பதுதான் இலக்காகும்.

இந்த திட்டத்தின் மூலம் ரூ.500 செலுத்தி மின்இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். இந்த ரூ.500 10 மாத தவணையில் செலுத்தும் வசதியும் உண்டு.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.