பாராதைராய்டு - Parathyroid

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பாராதைராய்டு
உஷா ஶ்ரீராம்
நாளமில்லா சுரப்பி நிபுணர்ஜா
னகிக்கு வயது 35. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, ஆபீஸ் செல்வது என, எப்போதும் பரபரப்பாக இயங்குபவர். திடீரென ஒருநாள், சுள்ளென வலி பின்னிஎடுத்திருக்கிறது. மருத்துவரிடம் சென்றால், அவரோ நாளமில்லா சுரப்பி நிபுணரைப் பார்க்கப் பரிந்துரைத்து இருக்கிறார். எலும்பு மூட்டு மருத்துவரைப் பார்க்கச் சொல்லாமல், நாளமில்லா சுரப்பி நிபுணரைப் பரிந்துரைக்கிறாரே என்ற யோசனையில், மருத்துவமனைக்குச் சென்றார் ஜானகி. அவரைப் பரிசோதித்த நாளமில்லா சுரப்பி மருத்துவர், ஜானகிக்கு பாராதைராய்டு ஹார்மோன் பிரச்னையாக இருக்கக்கூடும் என்றார்.


தைராய்டு பிரச்னைக்கும் எலும்புக்கும் என்ன சம்பந்தம்? பாராதைராய்டு என்றால் தைராய்டு கட்டியா? பல சந்தேகங்கள் ஜானகியின் மனதுக்குள் தோன்றின. தைராய்டு ஹார்மோன் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், ‘பாராதைராய்டு ஹார்மோன்’ பற்றி தெரிந்திருக்க வாய்ப்புக் குறைவு. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பிக்குப் பின்புறம், நான்கு பாராதைராய்டு சுரப்பிகள் இருக்கின்றன. இந்த சுரப்பிகளுக்கும் தைராய்டு சுரப்பிக்கும், எந்தவித சம்பந்தமும் இல்லை. பாரா தைராய்டு நான்கு முக்கியமான வேலைகளைச் செய்கிறது. பாரா தைராய்டு சுரப்பியில் இருந்து, பாராதைராய்டு (பி.டி.ஹெச் (PTH)) ஹார்மோன் சுரக்கிறது.

இது, நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கால்சியம் சத்து உடலில் சேர உதவுகிறது.

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின்-டி யை, உடலில் செயல்திறன் உள்ள வைட்டமின்-டி ஆக மாற்றத் துணைபுரிகிறது.

ரத்தத்தில் கால்சியம் அளவு குறையும்போது, எலும்பில் இருந்து கால்சியத்தை எடுத்து, ரத்தத்துக்குக் கொடுத்து பேலன்ஸ் செய்கிறது.

உடலில் கால்சியம்-பாஸ்பரஸ் விகிதத்தைச் சரிசெய்கிறது.


கால்சியம் சத்து உடலுக்கு ஏன் அவசியம்?

எலும்புகள் சீராக வளரவும், உறுதியாக இருக்கவும் கால்சியம், வைட்டமின் - டி சத்துக்கள் அவசியம். ரத்தத்தில் கால்சியம் அளவு 8.5 மி.கி - 10 மி.கி இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால், உடல் உறுப்புகளில் ஒருவிதமான எரிச்சல் ஏற்படும். நரம்புகள் இழுப்பதுபோல இருக்கும். கை கால் திடீரென உணர்வற்றுப்போகும். வாயைச் சுற்றித் திடீரென உணர்வு இருக்காது. வயிற்றுப்போக்கு ஏற்படும்.

உணவின் மூலம் எடுத்துக்கொள்ளும் கால்சியம் அளவு குறைந்தால், ரத்தத்தில் கால்சியம் அளவு குறைய ஆரம்பிக்கும். இதனால், பாராதைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்து, எலும்பில் இருக்கும் கால்சியத்தை எடுத்து, ரத்தத்தில் கலந்துவிடும். இப்போது, எலும்பில் கால்சியம் அளவு குறைய ஆரம்பிக்கும். இந்த நிலையில் எலும்புகள் மிகவும் மிருதுவாகி, எலும்புகளில் வலி ஏற்படும். ஆஸ்டியோமலேசியா (Osteomalacia) என்ற நோய் வரலாம். குழந்தைகளுக்கு, கால்சியம் சத்து குறையும்பட்சத்தில் ரிக்கெட்ஸ் (Rickets) எனும் நோய் வரும்.

ஹைப்போ பாராதைராய்டு:
பாராதைராய்டு சராசரி அளவைவிட குறைவாகச் சுரந்தால், உடலில் கால்சியம், பாஸ்பரஸ் விகிதத்தில் சமச்சீரற்ற நிலைமை உருவாகும். கால்சியம் சத்தை எலும்புகள் கிரகிக்காது, அதே சமயம், ரத்தத்திலும் கால்சியம் அளவு குறையும். பாராதைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரப்பது, ஹைப்போ பாராதைராய்டிசம் எனப்படும். மரபியல்ரீதியாகவும், கழுத்தில் ஏதேனும் அறுவைசிகிச்சை செய்திருந்தாலும்கூட இந்தப் பிரச்னை வரலாம். இவர்களுக்கு முதலில், கால்சியம் பரிசோதனை செய்யப்படும். ரத்தத்தில் 8.5 மி.கி அளவைவிட, கால்சியம் குறைவாக இருந்தால், பாராதைராய்டு சுரப்பியை பரிசோதனைசெய்ய அவசியம் இல்லை. ஹைப்போ பாராதைராய்டு பிரச்னைதான் என அறியலாம். கால்சியம் மாத்திரைகள், கால்சியம் நிறைந்த உணவுகள், தினமும், சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் - டி பெறுவதன் மூலமும் இந்த பிரச்னையில் இருந்து குணமாக முடியும்.

ஹைப்பர் பாராதைராய்டு:
தன் எதிர்ப்பு சக்தி (ஆட்டோ இம்யூன்) காரணமாக பாராதைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதே ஹைப்பர் பாராதைராய்டு பிரச்னைக்குக் காரணம். பாராதைராய்டு அதிகமாகச் சுரந்து, எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேற்றும். ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகவும் எலும்பில் கால்சியம் அளவு குறைவாகவும் இருக்கும். ஆஸ்டியோ போரோசிஸ் எனும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய் வரும். சிறுநீரகத்தில் கால்சியம், உப்பு தேங்கி, சிறுநீரகக் கற்கள் உருவாகும். வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து, பெப்டிக் அல்சர் வரும். செஸ்டமிபி ஸ்கேன்

(Sestamibi Scan) மூலமாக, பாராதைராய்டு சுரப்பியில் ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா? எதனால் பாராதைராய்டு அதிகம் சுரக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். நவீனத் தொழில்நுட்பம் மூலம், சிறு துளைகள் மூலம் இந்தக் கட்டிகளை அகற்றிவிடலாம். இந்த முறையில் அறுவைசிகிச்சை செய்ததும், வலி குறைவாக இருக்கும். ஒரு பாராதைராய்டு சுரப்பியை நீக்கிய பிறகு, அருகில் இருக்கும் மற்ற பாராதைராய்டு சுரப்பியையும் பயாப்சி செய்து, அதில் கட்டிகள் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்து, அந்த சுரப்பியை நீக்குவதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.

வைட்டமின்- டி

வைட்டமின் - டி அளவு குறையும் போது, பாராதைராய்டு ஹார்மோன் சமச்சீராகச் சுரக்காது. எலும்புக்குத் தேவையான கால்சியம் சரியாகப் போய்ச்சேராது. இதனால், எலும்புகள் பாதிக்கப்படும். எலும்புகள் சீராக வளரவும் உறுதியாக இருக்கவும், கால்சியம் அளவு உடலில் தேவையான அளவு இருக்கவும், பாராதைராய்டு ஹார்மோன் சீராகச் செயல்படவும் வைட்டமின்-டி அவசியம். எனவே, தினமும் சூரிய ஓளி உடலில் படுமாறு குறைந்தபட்சம் அரை மணி நேரம் வாக்கிங் செல்வது உடலுக்கு நல்லது
 
Last edited:
Thread starter Similar threads Forum Replies Date
chan Health 1

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.