'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#1
1539228474156.png

ஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இந்த அதிர்வு தற்போது கோலிவுட்டிலும் ஏற்பட்டுள்ளது.

மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் கடந்த திங்கள்கிழமை முதல் கோலிவுட்டை உலுக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்துக்கும் பத்திரிகையாளர் சந்தியா மேனன் வெளியிட்ட ட்வீட் முதன்மையானதாக அமைந்துவிட்டது. அதில், தன்னுடன் பணியாற்றிய 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று சந்தியா மேனன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து பிரபல பின்னணிப் பாடகி சின்மயி, வைரமுத்துவால் தனக்கும் பாலியல் ரீதியாக தொல்லைகள் ஏற்பட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தைரியமாகப் பதிவிடத் தொடங்கினார்.

முதலில், சுவிட்சர்லாந்தில் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து பதிவிட்டார். கடந்த 2005 அல்லது 2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் சுவிட்சர்லாந்தில் வைரமுத்து தங்கியிருந்த லூசிரின் விடுதியில் அவருடன் இணக்கமாகச் சென்று ஒத்துழைக்குமாறு அந்த விழா ஏற்பாட்டாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், அதற்கு மறுத்தபோது எனது திரை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மிரட்டப்பட்டேன். இருப்பினும் நானும் எனது தாயாரும் உடனடியாக இந்தியா திரும்பிவிட்டோம் என்று கூறியுள்ளார்.

கடந்த 3-4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடுமாறு என்னிடம் வைரமுத்து தெரிவித்தார். ஆனால், அதற்கு நான் மறுத்தபோது, அவதூறாகப் பேசியதாக ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியிடம் கூறுவதாக மிரட்டினார். எனது திரை வாழ்வில் தற்போது வரை வைரமுத்து மட்டும் தான் என்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார் என்று பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதனிடையே இத்தனை காலமாக இதை ஏன் வெளிப்படையாக் கூறவில்லை என்று பலர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அதற்கும் பதிலளித்து வருகிறார். குறிப்பாக அவரவர் வீட்டுப் பெண்களுக்கும் பணியிடங்களில் இதுபோன்று நடத்திருக்கலாம் எனவே அவர்களுக்கு ஆதரவாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2004-இல் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியின் போது வைரமுத்து தரப்பில் இருந்து எனது மகளுக்கு பாலியல் ரீதியான அழுத்தம் வந்தது. அப்போது வெளியில் சொல்லக்கூடிய சூழல் இல்லை. தற்போது சொல்வதால் இதுபோன்று மேலும் பல பெண்களுக்கு நடப்பதை தவிர்க்கலாம் என்று பாடகி சின்மயியின் தாயார் விமலா தெரிவித்தார்.

தற்போது பாடகி சின்மயிக்கு ஆதரவாக முன்னணி நட்சத்திரங்கள் சமந்தா, சித்தார்த், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதர பெரிய நட்சத்திரங்கள் இவ்விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் வைரமுத்து நடத்தி வரும் விடுதியில் தங்கியள்ள பெண்களிடமும் அவர் பாலியல் தொல்லைகள் அளித்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதில் பலர் தங்களின் விவரங்களை வெளியிட விரும்பவில்லை எனவும், ஆனால் வைரமுத்துவால் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டதாகவும் சின்மயி மற்றும் சந்தியா ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#2
அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்: வைரமுத்து

1539228892851.png

தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கவிஞர் வைரமுத்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து சில நிமிடத்திலேயே, பாடகி சின்மயி "பொய்யர்" என்ற விமர்சனத்துடன் வைரமுத்துவின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#3
பாலியல் தொல்லை; ஒரு பயம் வரணும்! - ஆன்ட்ரியா உறுதிநடிகை ஆண்ட்ரியா


பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு முதலில் ஒரு பயம் வரவேண்டும். எப்போது வேண்டுமானாலும் எந்தச் சூழ்நிலையில் வேண்டுமானாலும் மாட்டுவோம் என்று பயம் வரவேண்டும் என நடிகை ஆன்ட்ரியா தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகை ஆன்ட்ரியா தெரிவித்ததாவது:
பாலியல் தொல்லை செய்பவர்களைக் கண்டிக்கவேண்டும், தண்டிக்கவேண்டும். பத்து வருடங்களுக்கு முன்பு செய்திருந்தாலும் சரி, இப்போது செய்தாலும் சரி, தப்பு தப்புதான். ஆகவே பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

அதேபோல, பாலியல் தொல்லையைக் கொடுத்து பல வருடங்களாகிவிட்டதே... இனியென்ன என்று ஒருவர் இருக்கக்கூடாது. சொல்லுவார்களே... உண்மை எப்போதும் என்றைக்காவது ஒருநாள் வெளியே வந்தே தீரும் என்று! அதேபோல, பத்து வருடம் முன்பு செய்திருந்தாலும் என்றைக்காவது மாட்டிக்கொள்வோம் என்று பயப்படவேண்டும். பயந்துகொண்டே வாழவேண்டும்.

இந்த பயம் அடுத்தடுத்து தவறுகள் செய்யாமல் தடுக்கும். அடுத்தவர்களும் தவறு செய்ய அஞ்சுவார்கள்.
இவ்வாறு நடிகை ஆன்ட்ரியா தெரிவித்தார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#4
தாடையை உடைத்து பாலியல் தொல்லை - தயாரிப்பாளர் மீது விஜயகாந்த் பட நடிகை புகார்
1539303713774.png

நடிகை புளோரா தமிழில் விஜயகாந்துடன் கஜேந்திரா படத்தில் நடித்தவர். கார்த்திக்குடன் குஸ்தி, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் குசேலன் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். ஆஷா சைனி என்ற பெயரில் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தயாரிப்பாளர் கவுரங் தோஷி தாக்கியதால் காயம் அடைந்த புகைப்படத்தை நடிகை புளோரா அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,

‘‘நானும், தயாரிப்பாளர் கவுரங் தோஷியும் சில மாதங்கள் ஒன்றாக சுற்றினோம். கடந்த 2007-ஆம் ஆண்டு காதலர் தினத்தில் என்னை அவர் கடுமையாக தாக்கினார். ஒரு வருடம் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் என்னை அடித்து சித்ரவதை செய்தார்.இதனால் எனது தாடையின் எலும்பு முறிந்தது. பயந்தபடி அவரை விட்டு விலகினேன். கவுரங் தோஷி அப்போது சக்தி மிக்கவராக இருந்தார். எல்லோரும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டனர். நான் சினிமாவுக்கு புதிதாக வந்தவள் என்பதால் அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. அவரும் இதையே சொல்லி என்னை மிரட்டினார்.

என்னை சினிமாவில் இருந்து ஒழித்துவிடுவதாக எச்சரித்தார். அவர் சொன்னபடியே சில படங்களில் இருந்து என்னை நீக்கினார்கள். புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யவும் மறுத்தனர். இதனால் மனம் உடைந்து போனேன். எனது வாழ்க்கையே சிதைந்து போனது.’’

இவ்வாறு புளோரா கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் புளோரா வெளியிட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#5
கிரிக்கெட் வீரர்களையும் விட்டு வைக்காத மீடூ- அர்ஜுனா ரணதுங்கா, மலிங்கா மீது பாலியல் புகார்

1539304930301.png

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த ‘மீடூ’ இந்தியாவில் பாலிவுட்டை மையம் கொண்டது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது. இந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதினார். இதையடுத்து தற்போது இந்தியாவில் மீடூ வைரலாகி உள்ளது.

தமிழகத்தில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினார். அதற்கு அவரும் விளக்கம் அளித்து உள்ளார். இது தற்போது தமிழ்நாட்டில் விவாதமாக மாறி பரபரப்பை ஏற்படுத்து வருகிறது

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இலங்கை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.

1996-ம் ஆண்டு இலங்கை உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ரணதுங்கா. இவர் 296 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடி உள்ளார். இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் புதன்கிழமை பேஸ்புக்கில், இந்திய ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளம் அருகே ரணதுங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உள்ளார்.ஒட்டலின் நீச்சல் குளம் அருகே நடந்து சென்றபோது ரணதுங்கா என் இடுப்பை பிடித்து கொண்டு இழுத்து, என் மார்பின் பக்கமாக கைகளை கொண்டு வந்தார். மிகவும் அச்சம் அடைந்த நான், அவரது கால்களில் உதைத்தேன். இந்திய பெண்ணோடு தவறாக நடக்க முயற்சி செய்கிறார் என்று புகார் கூறி பாஸ்போர்ட்டை முடக்கி விடுவேன் என்று கூறினேன். அத்துடன் நேரத்தை வீணடிக்காமல் நான் வரவேற்பறையை நோக்கி வேகமாக ஓடி புகார் கூறினேன். இருந்தாலும் இது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்று அவர்கள் கைவிரித்துவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பெண் தானும் ஒரு கிரிக்கெட் வீரரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சின்மயி இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#6
வைரமுத்து மீது மேலும் புகார்கள்

<iframe width="560" height="315" src="
" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#7
வெட்கப்பட வேண்டியது வைரமுத்து; நானல்ல!: சின்மயி ஆவேசம்
<iframe width="560" height="315" src="
" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#8
சின்மயி வைரமுத்து விவகாரம் கமல் பதில்
<iframe width="560" height="315" src="
" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#9
ஆட்டோமொபைல் துறையிலும் மீடூ புகார்

அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரபலங்கள் #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் ட்விட்டர் மூலம் பிரசார இயக்கத்தை தொடங்கினர்.

அதேவேளையில், இந்திய திரையுலகிலும் இந்த #MeToo இயக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ட்விட்டரில் நடத்தி வரும் மீடூ புகார், ஆட்டோமொபைல் துறையையும் விட்டுவைக்கவிலை.


அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரபலங்கள் #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் ட்விட்டர் மூலம் பிரசார இயக்கத்தை தொடங்கினர்.

அதேவேளையில், இந்திய திரையுலகிலும் இந்த #MeToo இயக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ட்விட்டரில் நடத்தி வரும் மீடூ புகார், ஆட்டோமொபைல் துறையையும் விட்டுவைக்கவிலை.


On Suresh Rangarajan, head of corp comm, Tata Motors. I'm just so sad that young women still go through this every day.
சினிமா துறையை தொடர்ந்து, மீடூ புகார் கார்ப்பரேட் துறையிலும் பரவியுள்ளது. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் தலைமை தகவல் பரிமாற்ற அலுவலர் சுரேஷ் ரங்கராஜன் மீது ட்விட்டரில் புகார் எழுந்துள்ளது.

பெண் ஊழியர்களை அச்சுறுத்தியதாக ரங்கராஜன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளன. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை இதுவரை துவங்கவில்லை. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

டாடா மோட்டார்ஸ் குழுமத்தில், பணியாளர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து புகார்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.

மேலும் சட்டத்திற்கு உட்பட்டு உள்புற புகார் அமைப்பு மூலம் விசாரிக்கப்படுகிறது. விசாரணை நிறைவுற்றதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படும். என டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#10
மிடூ புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு - மேனகா காந்தி

அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரபலங்கள் #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் டுவிட்டர் மூலம் பிரசார இயக்கத்தை தொடங்கினர்.

அதேவேளையில், இந்திய திரையுலகிலும் இந்த #MeToo இயக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், முன்னர் பிரபல பத்திரிகையாளராக இருந்து, பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர்.


இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? எம்.ஜே.அக்பர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதே கோரிக்கையை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் டுவிட்டர் மூலம் நடத்திவரும் #MeToo பிரசாரம் தொடர்பாக பொது விசாரணை செய்ய 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மகளிர் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் கூறி வரும் குற்றச்சாட்டுகளை நான் நம்புகிறேன். அவர்களின் வலியும் வேதனையும் எனக்கு புரிகிறது. இந்த குழுவில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை வல்லுனர்களும் இடம்பெறுவார்கள். #MeToo பிரசார இயக்கம் தொடர்பான புகார்களை இந்த குழுவினர் விசாரிப்பார்கள் என மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.