பாலியல் வன்முறை என்றால் என்ன?

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#1
[TABLE]
[TR="bgcolor: transparent"]
[TD="bgcolor: transparent !important"]
[/TD]
[/TR]
[/TABLE]
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்றால், குடும்பத்தில் உள்ள ஒருவரோ, அல்லது வேறு யாரேனுமோ, தன் பாலுணர்வைத் திருப்திப்படுத்திக் கொள்ள குழந்தையைப் பயன்படுத்துதல். இளம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினரும் இதற்கு ஆளாகக்கூடும். பாலியல் வன்முறை என்பது உடல்ரீதியான, வாய்மொழியான அல்லது உணர்வுரீதியானதாக இருக்கலாம்; கீழ்க்கண்டவையும் இதில் அடங்கும்...
* பாலியல் நோக்குடன் தொடுதல் அல்லது தடவுதல்
* பெரியவர்களின் பாலுறவுச் செயல்கள் அல்லது பாலுறவுப் படங்களைக் காட்டுதல்
* படம் எடுப்பதற்கோ அல்லது நேரடியாகப் பார்க்கவோ குழந்தைகளை ஆடை களைய வைத்தல் அல்லது பாலியல் செயல் செய்து காட்டச் செய்தல்
* குளியலறை, படுக்கையறையில் குழந்தை இருக்கும் போது மறைந்திருந்து பார்த்தல்
* பாலியல் பலாத்காரம் செய்தல் அல்லது அதற்கு முயற்சி செய்தல்
குற்றம் புரிபவர் மிரட்டியோ, ஏமாற்றியோ, மிட்டாய் போன்றவற்றைக் கொடுத்தோ இவ்வாறு ஒரு குழந்தையைப் பயன்படுத்தக்கூடும். இவ்வாறு செய்பவர்கள் குழந்தைகளை அடித்து மிரட்ட வேண்டிய தேவை அரிதுதான். ஏனெனில், குழந்தைகள் எப்போதுமே பெரியவர்களின் அன்புக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்குகிறார்கள். பெரியவர்கள் செய்வது சரியாக இருக்கும் என்றே கருதுவார்கள். வன்முறையாளர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
பாலியல் வன்முறையின் அறிகுறிகள் யாவை?
குற்றம் புரிந்தவரிடம் பயப்படுவதால், தாம் அனுபவித்த வன்முறையை குழந்தைகள் பொதுவாகக் கூறமாட்டார்கள். யாரிடமாவது சொன்னால் அதற்கு அல்லது அதன் வீட்டில் உள்ளவருக்கு ஏதேனும் தீங்கு செய்து விடுவேன் என்று குற்றவாளி பயமுறுத்தலாம். குற்றம் புரிபவர் குழந்தைக்குத் தெரிந்தவராக இருந்தால், தமக்குள் இருக்கும் 'சிறு ரகசியத்தை' யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லக்கூடும்.
பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரியும். எனவே பெற்றோரும், கவனிப்பாளர்களும் இவற்றை விழிப்புடனிருந்து கவனிக்க வேண்டும்.
* உறக்கத்தில் பாதிப்புகள்
* பள்ளியில் பிரச்சினைகள்
* குடும்பம், நண்பர்கள் அல்லது வழக்கமான செயல்களிலிருந்து விலகியிருத்தல்.
மற்ற பிரச்சினைகள்:
மன அழுத்தம், பதற்றம், கவலை, ஒழுக்கத்தில் பிரச்சினை, போதை மருந்து அல்லது மதுப் பழக்கங்கள், கோபம், எரிச்சல், முரட்டுத்தனம், பாதிக்கப்பட்ட சிலர் வீட்டை விட்டு ஓடி விடுதல் ஆகியவை.
அடிக்கடி பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள், அந்த வயதிற்கும் மீறிய பாலியல் பற்றிய தகவல் அல்லது நடத்தையை வெளிக்காட்டுவார்கள். பெரியவர்களின் பாலியல் நடத்தைகளை செய்துகாட்டுவர். வாயில் விளக்கமுடியாத வலி, வீக்கம், எரிச்சல், இரத்தம் கசிதல்; சிறுநீர் உறுப்புகளில் தொற்று, மற்றும் பால்வினை நோய் தொற்றுகள் இருக்கும்.
பாதிக்கப்படும் குழந்தையின் உணர்ச்சி எவ்வாறு இருக்கும்?
பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைக்கு பலவித உணர்ச்சிகள் இருக்கும். குற்றம் செய்தவர் மீதான பயம்; மற்றவர்களிடமிருந்து தான் வேறுபட்டதான உணர்வு; தன்னை பாதுகாக்கவில்லை என்பதற்காக தன்னை சுற்றியுள்ளோர் மீது கோபம்; தனிமை, கவலை, குற்ற உணர்வு, குழப்பம், மற்றும் அவமான உணர்வு.
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
அக்கறையுள்ள பெற்றோரான நீங்கள் கீழ்க்கண்ட சிலவற்றைச் சொல்லிக் கொடுக்கலாம்:
* அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள், மிக அருமையானவர்கள் என்பதை சொல்ல வேண்டும்.
* சரியான மற்றும் தவறான தொடுதல் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குதல்.
* அவர்களுடைய உடல் அவர்களுக்கே சொந்தம், யாருக்கும் அதை பயன்படுத்தவோ, தீங்கு செய்யவோ உரிமை இல்லை என்பதைக் கூற வேண்டும்.
* அசௌகரியம் ஏதும் இருந்தால் எல்லாவற்றையும் பெற்றோருக்குத் தெரிவிக்கக் கூறுதல்.
* குழந்தை பெற்றோரின்மீது நம்பிக்கை வைத்து சம்பவத்தைப் பற்றி பேசும்போது, பெற்றோர் அவர்களுக்குத் தேவையான நல்ல ஆதரவை அளிக்கவேண்டும்.
செய்ய வேண்டியவை:
* அமைதியாக இருங்கள்.
* குழந்தையை நம்புங்கள்.
* 'உன்னால் தடுக்க முடியவில்லை என்பது எனக்குப் புரிகிறது', 'நீ என்னை நம்புவதைப் பற்றி எனக்குப் பெருமையாக இருக்கிறது' என்பது போலக்கூறி நம்பிக்கை ஊட்டுங்கள்.
* குழந்தையின் அந்தரங்கத்தை மதிக்க வேண்டும், வேற்று நபர்கள் முன் அதைப் பற்றிப் பேச வேண்டாம்.
* எந்த நிரந்தர பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய ஒரு மருத்துவரிடம் காட்டவும்.
செய்யக்கூடாதவை:
* பீதியடைவதோ அல்லது அளவுக்கதிக எதிர்வினை காட்டுவதோ கூடவே கூடாது. குழந்தைக்குக் கஷ்டமான இந்த நேரத்தில் உதவியும் ஆதரவும் தேவை.
* குழந்தையின் முன்னிலையில் குற்றம் புரிபவரை கண்டிக்க வேண்டாம்.
* பாலியல் வன்முறை ஒருபோதும் குழந்தையின் குற்றமாகாது, எனவே குழந்தை மேல் குற்றம் சுமத்த வேண்டாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.