பாஸ்வேர்டை பாதுகாக்க வழி முறைகள்

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#1
உங்களின் பாஸ்வேர்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி?

பண மதிப்பை நீக்க நடவடிக்கை எடுத்த பிறகு, மின்னணுப் பரிவர்த்தனையை நம்மில் பலரும் அதிகம் நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வேளையில், இணையத்தில் பாஸ்வேர்டுகளை பக்குவமாக கையாள்வது அவசியமாகிறது. பாஸ்வேர்டுகள்தான் நம் இணையப் பாதுகாப்புக்கான சாவி.

பாஸ்வேர்டுகளின் நீளம் :

✍ பாஸ்வேர்டுகள் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கணக்குகளுக்கானது என்றால் தயங்காமல் 14 முதல் 16 எழுத்துக்களில் பாஸ்வேர்டை அமைத்துக்கொள்ளலாம் என்று வல்லுநர்கள் சொல்கின்றனர்.

பாஸ்வேர்டுக்குப் பதில் பாஸ்பிரேஸ் :

✍ உங்கள் பாஸ்வேர்டு குழப்பமானதாக இருக்க வேண்டும். வெறும் எழுத்துக்களைக் கொண்டு மட்டுமே பாஸ்வேர்டு அமைக்காமல், இடையே எண்கள், நிறுத்தல் குறிகள் மற்றும் சிறப்புக் குறியீடுகளைப் பயன்படுத்துங்கள்.

✍ முதலில் சில எழுத்துக்கள் அதைத் தொடர்ந்து சில எண்கள், அதன் பிறகு சிறப்புக் குறியீடுகள், பின் மீண்டும் சில எண்கள் இறுதியில் சில எழுத்துக்கள்... இப்படி இருந்தால் உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பில் பல படிகளைக் கொண்டிருக்கிறது என பொருள்.

✍ இதற்கான எளிய வழி, வார்த்தைகளைக் கொண்டு பாஸ்வேர்டை யோசிக்காமல், ஒரு ஆங்கிலச் சொற்றொடரை எடுத்துக்கொண்டு அதில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் வரிசையாக எழுதிவிட்டுப் பின்னர் இடையிடையே எண்களையும், நிறுத்தல் குறிகளையும் சேர்க்கலாம் என்கின்றனர். இந்த முறை 'பாஸ்பிரேஸ்" எனக் குறிப்பிடப்படுகிறது.

✍ பாஸ்வேர்டு பார்ப்பதற்குப் படு சிக்கலாகத் தோன்றும். ஆனால் அதன் அடிப்படையாக அமைந்த சொற்றொடரைக் கொண்டு பாஸ்வேர்டை மறக்காமலும் இருக்கலாம்.

தேவை தனித்தனி பாஸ்வேர்டு :

✍ பாஸ்வேர்டு தொடர்பாகப் பலரும் செய்யும் இரண்டு தவறுகளுக்கு இது வழிவகுக்கலாம்.

✍ ஒன்று, அதுதான் சு+ப்பர் ளவசழபெ பாஸ்வேர்டு உருவாக்கியாச்சே என்ற நம்பிக்கையில், எல்லா இணையச் சேவைகளுக்கும் அதே பாஸ்வேர்டைப் பயன்படுத்தத் தோன்றும். இது நடைமுறையில் எளிதாக இருக்கலாம் என்றாலும் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்படும் நிலை ஏற்பட்டால், அந்த ஒரு கள்ளச்சாவியைக் கொண்டே விஷமிகள் ஒருவரது மற்ற இணைய சேவைகளுக்கு உள்ளேயும் எளிதாக நுழைந்துவிடுவார்கள்.

✍ வேண்டுமானால், ஒரு அடிப்படை பாஸ்வேர்டை உருவாக்கிவிட்டு, ஒவ்வொரு சேவைக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்து அவற்றைப் பயன்படுத்தலாம்.

பாஸ்வேர்டு மேனேஜர் :

✍ நிறைய பாஸ்வேர்டுகளை நினைவில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் பாஸ்வேர்டு மேனேஜர் சேவைகளை நாடலாம். இணையத்தில் நிறைய பாஸ்வேர்டு மேனேஜர் சேவைகள் உள்ளன. அவற்றைப் பரிசீலித்துப் பாருங்கள்.

✍ பாஸ்வேர்டு மேனேஜர் மென்பொருட்களைப் பயன்படுத்தினாலும் சரி, பாஸ்வேர்ட்களை நீங்கள்தான் கவனமாகப் பராமரிக்க வேண்டும்.

✍ அதாவது, தேவை எனில் பாஸ்வேர்ட்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு 3 மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாஸ்வேர்டுகளை மாற்றுவது நல்லது எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது. இப்படி அடிக்கடி மாற்றுவது நல்லதல்ல என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.

✍ என்றாலும், நிச்சயமாக ஆண்டுக் கணக்கில் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவது பாதுப்பானது இல்லை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் உங்கள் பாஸ்வேர்டை தூசி தட்டி அப்டேட் செய்துவிட வேண்டும். அதிலும் குறிப்பாக, இமெயில் சேவைகளிலிருந்து 'உங்கள் கணக்கில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கை நிகழ்ந்துள்ளது, பாஸ்வேர்டை மாற்றுங்கள்" என எச்சரிக்கை வந்தால் அலட்சியம் செய்யக் கூடாது.
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,176
Likes
142,231
Location
Madras @ சென்னை
#3
Tfs friend.

:thumbsup​
 

premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,408
Likes
7,032
Location
Doha,Qatar
#5
Yes Everybody tell to use mix of letters, symbols, numbers etc.
To remember everything that too for different uses is the biggest problem.
Thankyou Durga.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.