பித்த வெடிப்பு - Cracked Heels

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பிரச்சினை தரும் பித்த வெடிப்பு

பாதங்களின் ஓரங்கள் பிளவுபடுவதை பித்த வெடிப்பு என்று அழைக்கின்றோம். அவை வலியை கொடுப்பதோடு நிறுத்தாமல் சங்கடத்தையும் ஏற்படுத்தும். பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர்.

இருப்பினும் பாதங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இன்னும் பல காரணிகளும் இருக்கத் தான் செய்கிறது. இதனால் பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டு சிதைவுகளும் உண்டாகிறது.

ஊட்டச்சத்து குறைபாடுகளினால் கூட சில நேரங்களில் பித்த வெடிப்பு உண்டாகலாம். பாதங்களை நல்ல அக்கறையுடன் கவனித்து கொண்டு பித்த வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கவும்.

அப்படி செய்யாமல், வலி வரும் வரை காத்திருந்து அதன் பின் அதற்கு சிகிச்சை எடுக்கும் கஷ்டம் எதற்கு? ஒரு வேளை, பித்த வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் முயற்சியை நீங்கள் கடந்திருந்து ஏற்கனவே வலி உண்டாகியிருந்தால், அதற்கு பல வீட்டு சிகிச்சைகள் இருக்கிறது.

அவைகளை பின்பற்றினால் உங்கள் பித்த வெடிப்புகள் குணமாகும். உங்கள் பித்த வெடிப்புகள் குணமான பிறகு, அது மீண்டும் வராமல் தடுக்க அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். உங்கள் மொத்த எடையையும் தாங்கும் விதமாக உங்கள் பாதத்தின் தோல் கடுமையானதாக இருக்கும்.

மெருகேற்ற உதவும் கல்/ஸ்கரப்பர்
பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது நுரைக்கல்லை பயன்படுத்தி உங்கள் பாதத்தில் உள்ள செத்த அணுக்களை மெதுவாக தேய்த்து எடுக்கவும்.

பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவிக் கொள்ளுங்கள். அதனை பாதங்கள் உறிஞ்சிட வேண்டும் என்பதால் ஒரு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.
ஈரப்பதத்தை நீட்டிக்க செய்திட இரவு நேரங்களில், ஏன் பகல் முழுவதும் கூட பாதங்களுக்கு காலுறைகளை அணிவித்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு இதனை தினமும் ஒரு முறை செய்தால், அதனால் ஏற்பட போகும் மாற்றத்தை கண்டு வியப்பீர்கள்.

பாத மாஸ்க்
ஒரு பெரிய வாளி ஒன்றை எடுத்து அதில் வெப்பமான தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். உங்கள் பாதங்களை அதனுள் முக்கிக் கொள்ளுங்கள். உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரின் பயன்பாடும் பின் தேவைப்படும். 15-20 நிமிடங்கள் வரை உங்கள் பாதங்கள் இந்த நீரில் ஊறட்டும். பின் உரைக்கல் அல்லது பாத ஸ்கரப்பரை கொண்டு உங்கள் பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும்.

1 டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து உங்கள் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு, காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிடுங்கல்.

தேன் கலவை
உங்கள் பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க தேன் பெரிதும் உதவி செய்யும். மேலும் தேனில் சிறந்த ஆன்டி-பாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளது. 2-3 டீஸ்பூன் அரிசியை எடுத்து, அதனுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து அடர்த்தியான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் பாதங்கள் பித்த வெடிப்புடன் வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும்.

வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடம் வரை ஊற வைத்து, பின் அந்த பேஸ்ட்டை வைத்து மெதுவாக பாதத்தில் தேய்க்கவும். அப்படி செய்யும் போது பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும்.
தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்
பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்யை கூட பாதங்களில் மெதுவாக தடவலாம். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விடுங்கள். இதனை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், உங்கள் பித்த வெடிப்புகளுக்கு நல்ல பயனை அளிக்கும்.

குறிப்பு: மேற்கூறியவற்றை தினமும் நேரம் கிடைக்கும் போது செய்து வந்தால், நிச்சயம் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் அழகாக இருக்கும். 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
பித்த வெடிப்பு! - Cracked heels

தூக்கம் கெடுக்கும் பித்த வெடிப்பு!

சின்ன விஷயம் என்று நாம் அலட்சியப்படுத்தும் விஷயங்கள் சில நேரங்களில் நம் தூக்கத்தை கெடுத்துவிடும். அது மாதிரியான ஒன்றுதான் பித்த வெடிப்பு. கால்களில் வலி மட்டுமில்லாமல் ஏதாவது நூலோ துணியோ மாட்டினாலும் கஷ்டம் தான். பித்த வெடிப்பை குணமாக்கும் வழிமுறைகள் என்னென்ன? சொல்கிறார் சரும மருத்துவ நிபுணர் டாக்டர் ரத்தினவேல்.

தண்ணீரில் மற்றும் ஈரம் அதிகமாக உள்ள இடங்களில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு பின்னங்கால்களிலும், முன்னங்காலில் விரல்களுக்கு நடுவில் சின்னச்சின்னதாகவும் வெடிப்பு வரும். விரலிடுக்கில் வரும் வெடிப்பில் அரிப்பும் சேர்ந்து வரும். மழைநீரில் நீண்டநேரம் வேலை செய்யும்போது, ஒருவித காளான் (Fungus) காரணமாகவும் கால்களில் வெடிப்புகள் உண்டாகுகின்றன. பாதங்கள் மற்றும் விரல் இடுக்குகளில் ஏற்படும் பித்த வெடிப்பினை எளிதாக குணப்படுத்தி விடலாம்.

அதிகளவு நீரில் நின்று பலமணி நேரம் வேலை செய்யும்போது, கால் மற்றும் விரல்களுக்கு உள்ளே தண்ணீர் செல்லாதவாறு நன்றாக மூடி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வேலை முடிந்ததும் கால்களைச் சுத்தமான நீரில் நன்றாக கழுவி ஈரம் போகத் துடைக்க வேண்டும். விரல்களுக்கு நடுவில் கொஞ்சமும் ஈரப்பதம் இருக்கக்கூடாது. காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னங்காலிலும் விரல்களுக்கு நடுவிலும் Clotrimazole என்ற பவுடர் போட்டால் இந்தப் பகுதிகளில் வியர்வை மற்றும் நீர் தங்காது. இன்ஃபெக்ஷனையும் தடுக்க முடியும். பின்னங்கால் பித்த வெடிப்பில் சோற்றுக் கற்றாழையும், வைட்டமின் இயும் அடங்கிய க்ரீமை தடவிவர குணமாகும்.

கேப்ஸ்யூல்

அடிபட்டு ரத்தம் வருகிற இடத்தில் பவுடர், காபித்தூள் வைப்பது சரியா?பொதுநல மருத்துவர் சுப்பையாமிகவும் தவறா னது. பவுடர், காபித் தூள் மட்டுமில்லாமல் சிலர் சந்தனம் கூட வைப்பார்கள். தோல் கிழிந்து ரத்தம் வெளியாகும்போது இவற்றை வைக்கும்போது ரத்தம் வெளியாகிற இடத்தின் வழியே கிருமித் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதன் காரணமாக அந்த இடத்தில் சீழ் பிடித்து விடும்.

எப்போதுமே அடிபட்டு ரத்தம் வருகிற நிலையில் அந்த இடத்தை பஞ்சு மூலம் சுத்தம் செய்து ஆயின்மென்டுகளை தடவி கட்டுப் போடுவதே நல்லது. காபித் தூள், சந்தனம் ஆகியவற்றை வைத்து கிருமித்தொற்று ஏற்பட்டால் ஆன்டிபயாடிக் மருந்துகளின் மூலம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.